Search This Blog

Tuesday, April 19, 2011

காஷ்மீர் புதைக்கப்பட்ட பள்ளத்தாக்கு




இந்தியாவின் சுவிட்சர்லாந்து என வர்ணிக்கப்பட்ட காஷ்மீர், இயற்கை எழில் சூழ்ந்த உலகின் மிக அழகான நிலப்பரப்புகளின் பட்டியலில் முதன்மையாகத் திகழ்ந்தது.ஆனால் இன்று, காஷ்மீர் பள்ளத்தாக்கு காணும் இடமெல்லாம் மரணப் புதைகுழிகளால் நிரம்பி யுள்ளது. ஈழத்தில் நடைபெறும் இலங்கை அரசின் இனப்படுகொலைக்கு மவுனசாட்சியாக

இந்திய அரசு இருப்பதன் காரணம், அது தன்னளவில் அதே இனப்படுகொலையை தன் நாட்டு மக்கள் மீதே நடத்திக் கொண்டிருப்பதுதான் என்பது வெட்டவெளிச்சமாகியுள்ளது. உலகின் மிகக் கொடூரமான ராணுவ அடக்குமுறையின் மூலம், காஷ்மீரில் ஓர் இனப்படுகொலையை இந்திய ராணுவம் நிகழ்த்தி வருகிறது. இவற்றையெல்லாம் அரசு மூடி மறைத்து வந்தாலும், அங்கு புதைக்கப்பட்டுள்ள ஒவ்வொரு சடலமும் தன் கதையை இந்த உலகுக்கு அறிவிக்க துடித்துக் கொண்டிருக்கிறது.

"தாயின் முன்பு மகளை வன்புணர்வுக்கு உட்படுத்த வேண்டும். இதுதான் அந்த ராணுவ வீரனின் ஆசை. "வேண்டாம் எங்கள் இருவரையும் விட்டுவிடுங்கள்' என அந்தத் தாய் ராணுவ வீரனின் மிதியடிகளைப் பிடித்து மன்றாடுகிறார், கதறுகிறார். "என்னால் இதை நிச்சயம் காண இயலாது, என்னை வேறு அறைக்கு அழைத்துச் செல்லுங்கள் அல்லது கொன்று விடுங்கள் என்கிறார் அவர். அந்த ராணுவ வீரன் வன்புணர்வுக்கு ஆயத்தம் ஆகும் வகையில் தன் உடைகளைக் களைந்து கொண்டே, உன் ஆசைப்படியே நடக்கட்டும் என அவருடைய நெற்றியில் தானியங்கி துப்பாக்கியை வைத்து சில சுற்றுகள் தோட்டாக்களை செலுத்துகிறான். தன் காரியத்தை தொடர்கிறான்.''

துபோன்ற ஓராயிரம் கதைகளை, காஷ்மீர் சென்று வந்துள்ள    மனித உரிமைக் குழுக்கள் பதிவு செய்துள்ளன. இந்த சம்பவம் கொடுங்கோல் ஆட்சி நடக்கின்ற தேசத்திலோ, ராணுவ சர்வாதிகார ஆட்சி நடக்கின்ற நாட்டிலோ நடைபெறவில்லை. மாறாக, வளர்ந்து வரும் வல்லரசு, உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு என செல்லமாய் உலக ஊடகங்களால் வர்ணிக்கப்படும் இந்தியாவில்நடைபெற்ற ஒரு நிகழ்வே. இந்திய ராணுவமும் அதன் துணைப் படைகளும் நாள்தோறும் காஷ்மீரிலும், வடகிழக்கிலும் வாடிக்கையாக நடத்தும் அட்டூழியங்களில் ஒன்றே. 1989 2009 வரையிலான காலப்பகுதியில் மட்டும் காஷ்மீரில் 8,000 பேரை காணவில்லை. 70 ஆயிரம் பேர் போலி மோதல் சாவுகளிலும் அரசின் பாதுகாவலிலும் கொல்லப்பட்டுள்ளனர். இவர்களைப் பற்றிய தகவல்களை அறிய 1990 முதல் மட்டும் 15,000 மனுக்களை வழக்குரைஞர்கள் நீதிமன்றங்களில் பதிவு செய்துள்ளனர். இந்த மரண எண்ணிக்கை கூட, மிகக் குறைந்த அளவில்தான் கணக்கிடப்பட்டுள்ளது.

செயற்கைக் கோள் மூலம் எடுக்கப்பட்ட காஷ்மீர் பள்ளதாக்கு

இவ்வாறு சட்ட விரோதமாகக் கொல்லப்படுபவர்களை ராணுவம், துணை ராணுவப் படைகள், ஜம்மு காஷ்மீர் காவல் துறை என அனைவரும் ஒரே முறையில்தான் அப்புறப்படுத்தி வருகிறார்கள். இவ்வாறு கொல்லப்படுபவர்களின் சடலங்களை ஏதேனும் ஒரு கிராமத்தில் அல்லது சிறு நகரத்தில் உடனே புதைத்து விடுவது என்பதை வழக்கமாக மாற்றிவிட்டிருக்கின்றனர். அண்மையில் காஷ்மீரில் (இந்தியா நிர்வகித்து வரும் காஷ்மீர் பகுதியில்) பல கும்பல் புதைகுழிகளை "உலக மனித உரிமைகள் மற்றும் நீதிக்கான தீர்ப்பாயம்' கண்டுபிடித்துள்ளது. இந்த அமைப்பைச் சேர்ந்த அங்கனா சாட்டர்ஜி, பர்வேஸ் இம்ரோஸ், கவுதம் நவ்லகா, ஜாகிர்உத்தின், மீகிர் தேசாய், குர்ரம் பர்வேஸ் ஆகியோர் மேற்கொண்ட மிகத் தீவிரமான ஆய்வுப் பணிகளின் விளைவாக "புதையுண்ட சாட்சியம்' என்று தலைப்பிடப்பட்ட அறிக்கை நவம்பர் 2009இல் வெளியிடப்பட்டது. உலக மனித உரிமைகள் மற்றும் நீதிக்கான தீர்ப்பாயத்தைச் சேர்ந்த மனித உரிமை ஆர்வலர்களுடன், "காணாமல் போனவர்களின் பெற்றோர் அமைப்பும்' இந்த ஆய்வை மேற்கொள்வதில் உறுதுணையாக இருந்தது. பாந்திபூரா, பாராமுல்லா, குப்வாரா பகுதி மக்களும் இந்த ஆய்வறிக்கை முழு வடிவம் பெற ஊக்கமளித்தனர்.

காஷ்மீரின் குப்வாரா, பாராமுல்லா, பாந்திபூரா மாவட்டங்களில் மட்டும் 2,700 கும்பல் புதைகுழிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இவை எல்லாம் எங்கோ ரகசியமாக உள்ள புதைகுழிகள் அல்ல. பள்ளிக் கூடங்கள், நகர சதுக்கங்கள், வழிபாட்டு மைதானங்கள், காடுகள், வயல்வெளிகள் என மக்களின் வாழ்விடங்களெங்கும் இது போன்ற திடீர்புதை குழிகள் அரும்பியுள்ளன. அலங்கரிக்கப்படாத, பெயரிடப்படாத, குறிக்கப்படாத மயானங்களாக இவை அங்கே முளைத்துள்ளன. இவற்றை மக்கள் தங்களின் அன்றாட பணிகளின் ஊடாக கவனித்து வருகின்றனர். அவர்களின் நினைவுகளில் இந்தப் புதை குழிகள் அசைக்க முடியாத இடத்தை ஆக்கிரமித்துள்ளன. ஆனால், இதைப் பற்றி அங்கு யாரும் அடுத்தவர்களிடமோ, தங்கள் குடும்பத்தாரிடமோ கூட பகிர்ந்து கொள்வதில்லை. உள்ளிருந்தே கொதிக்கும் நினைவு களாக, அடக்குமுறையின் உறைந்த படிமங்களாக அவை உள்ளன.

அடையாளம் காணப்பட்ட 2,700 புதைகுழிகளில் 2,943 சடலங்கள் இருந்தன. இதில் பெரும் பகுதியானவை ஆண் சடலங்கள். 154 புதைகுழிகளில் இரண்டுக்கும் மேற்பட்ட சடலங்கள் இருந்தன. இந்த சடலங்கள் எல்லாம் பெரும்பாலும் இரவு நேரங்களில் கொண்டு வரப்பட்டு புதைக்கப்பட்டுள்ளன. பொதுவாக, இங்குள்ள கிராமப் பெரியவர்களுக்கு மாலையில் பிணங்கள் வருகின்றன என்ற தகவல் மட்டுமே ராணுவத்தினரிடமிருந்து வரும். இந்த சட்ட விரோதமான காரியத்தை செய்ய மறுத்தால், அடுத்த நாளே நீங்கள் எங்காவது அருகில் உள்ள மாவட்டத்தில் புதைக்கப்படும் பிணங்களின் குவியலில் இடம் பெறக்கூடும்.

பிறகு ஊர் பெரியவர்கள் ஆட்களை தயார் செய்து, குழிகளை வெட்டிவிட்டு கடும் குளிரில் காத்திருக்க வேண்டும். ராணுவ வாகனம் இரவில் மரண ஊர்தியாக வந்து சேரும். பெரும் பகுதியான சடலங்களில் வன்கொடுமைக்கான தடயங்கள், தீக்காயங்கள், தோட்டாக்கள் துளைத்த அடையாளங்கள் தான் இருக்கும் என புதைத்தவர்கள் தெரிவிக்கின்றனர். இந்த வேலைகளில் ஈடுபடும் எவருக்கும் எந்த ஊதியமும் வழங்கப்படுவதில்லை. பொதுவாக, புதைக்கப்படுபவர்களைப் பற்றிய தகவல்களை ஆவணப்படுத்தும் நடைமுறைகள் எதுவும்பின்பற்றப்படுவதில்லை.

பாராமுல்லா மாவட்டத்தில் உள்ள ஹமாம் மார்க்கோட் என்ற இடத்தில் உள்ள புதைக்குழிகள்

இருப்பினும் ராணுவத்தின் வாய்மொழியான அல்லது எழுதப்படாத ஒரே விளக்கம் இதுவே: "இவர்கள் அனைவரும் வெளிநாட்டுத் தீவிரவாதிகள். இவர்கள் நம் நாட்டு எல்லைக்குள் நுழைய முயன்றனர் அல்லது வெளியே தப்பிக்க முயன்றனர்.'' இத்தனை அடக்குமுறைகளையும் கடந்து மக்களிடையே இந்த சடலங்களைப் பற்றி துல்லியமான விவரணைகள் நாட்டார் வழக்காறு போல, இந்த கிராமங்களில் இருளில் மிதக்கும் இரவு பனி மீது ஏறி தன் பயணத்தைத் தொடங்கும். இந்த அடையாளங்களை பெண்கள், ஆண்கள் தங்கள் சங்கேதக் குறியீடுகளின் மூலம் பகிர்ந்து கொள்வர். பல நேரங்களில் மாவட்டங்களை கடந்தும் கூட தொலைவிலிருந்து முதியவர்கள், பெண்கள் இங்கு வந்து இன்னும் தெளிவாகக் குறிப்புகளை கேட்டுச் செல்வார்கள். சில நேரங்களில் அவர்கள் தங்களின் பிள்ளையை, கணவரை மீட்டும் சென்றுள்ளனர். மீண்டும் தோண்டி எடுத்து அடையாளத்தை தக்க சான்றுகள் மூலம் நிரூபித்து, தங்களின் சொந்த கிராமத்திற்கு எடுத்துச் சென்று அடக்கம்செய்துள்ளனர்.

பாராமுல்லா மாவட்டத்தில் மட்டும் 1,122 புதைகுழிகள் காணப்பட்டுள்ளன. குப்வாரா மாவட்டத்தில் 1,453 புதைகுழிகளும், பாந்திபோரா மாவட்டத்தில்125 புதைகுழிகளும் இருக்கின்றன. மூன்று மாவட்டங்களில் மட்டும் 2,943 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. "உலக மனித உரிமைகள் மற்றும் நீதிக்கான தீர்ப்பாய'த்தின் ஒருங்கிணைப்பாளரான டாக்டர் அங்கனா சாட்டர்ஜி, "இத்தகைய மரணக் குழிகள், இனப்படுகொலை அல்லது போர்க் குற்றங்கள் மற்றும் மனித நேயத்திற்கு எதிரான குற்றங்களிலிருந்து அரசு தப்பிக்க முடியாது. இந்திய ராணுவத்தினரும் துணை ராணுவத்தினரும் தண்டனை மற்றும் விசாரணையிலிருந்து தப்பித்துக் கொள்ளவே, இத்தகைய மரணக் குழிகளை உருவாக்கி இருக்கலாம்'' என்கிறார்.

பாராமுல்லா மாவட்டத்தில் உள்ள கிச்சாமா கிராமத்தில் இரு மரணப் புதைகுழிகள் வெவ்வேறு இடங்களில் காணப்பட்டன. முதல் பகுதியில் 105 மரணக் குழிகள் இருந்தன. அதன் அருகில் 60 மரணக் குழிகள் இருந்தன. அந்தக் கிராமத்தில் உள்ள சமூகப் பெரியவர், தாங்கள் இது வரை 230 சடலங்களை அடக்கம் செய்ததாகத் தெரிவிக்கிறார். கட்டுப்பாட்டு எல்லைப் பகுதிக்குள் நுழைய முயன்ற வெளிநாட்டுத் தீவிரவாதிகள் தான் இவர்கள் என ராணுவத்தினர் தெரிவித்துள்ளனர். சில மரணக் குழிகளின் மீது மண்ணை குவியலாக குவித்தும், கற்களை குவித்தும் அடையாளப்படுத்தியிருக்கிறார்கள்.

அந்த கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் கூறும் பொழுது, "ஒரு முறை மூன்று பேருடைய எலும்புகள் மட்டுமே இங்கு கொண்டு வரப்பட்டன. தீவிரவாதிகளாகக் கருதப்பட்ட இந்த மூவரின் உடல்களும் முற்றாக எரிக்கப்பட்டிருந்தன. பாராமுல்லா வில் நடந்த தாக்குதல்களில் ஒரு வீட்டில் வைத்து இவர்கள் கொல்லப்பட்டதாக அவர்கள் தெரிவித்தார்கள். நாங்கள் ஒரே புதைகுழியில் அந்த மூவரின் எலும்புகளையும் புதைத்தோம். அவர்களின் உடைகளை அருகில் இருந்த மரத்தில் கட்டினோம். அந்த உடைகளில் இருந்த லேபிள்கள் அகற்றப்பட்டிருந்தன. அவர்களின் உடைமைகளிலிருந்த தாயத்துகளையும் மரத்தில் கட்டிவிட்டோம்'' என்கிறார்.

அதே கிராமத்தைச் சேர்ந்த வேறு ஒருவர் திடுக்கிடும் மற்றொரு செய்தியை தெரிவிக்கிறார்: "பல சமயங்களில் இந்திய ராணு வம் என்னை கைது செய்து சித்திரவதை செய்துள்ளது. நான் தீவிரவாதத்திற்கு உடன்படுவதாக அவர்கள் குற்றம் சாட்டினர். இங்குள்ள பல மரணப் புதைகுழிகளை நான் பாகிஸ்தானியர்களிடம் பணம் பெற்றுக் கொண்டு புதைத்ததாக அவர்கள் கூறினார்கள். அதுவும் சடலத்திற்கு 35,000 ரூபாயை நான் பெற்றதாகக் குற்றம் சாட்டினர். என்னைத் தொடர்ந்து எங்கள் கிராமத்தில் பலரையும் ராணுவத்தினர் அழைத்துச் சென்று சித்திரவதை செய்தனர். அதன் பிறகு எங்கள் கிராமமே கூட இனி, இது போல் பெயரிடப்படாத அடையாளமற்ற பிரேதங்களைப் புதைப்பதில்லை என முடிவெடுத்தோம். ஏறக்குறைய 2002 முதல் எங்கள் கிராமத்தில் யார் இறந்தாலும் இங்கு புதைக்காமல் அருகில் இருக்கும் சேஹால் கிராமத்தில்தான் புதைத்து வருகிறோம்'' என்கிறார்.

உலக மனித உரிமைகள் மற்றும் நீதிக்கான தீர்ப்பாயம் தனது அறிக்கையில் பட்டியலிட்டுள்ள 2,943 பிரேதங்களும் தங்களுள் ஒரு மிகப்பெரிய வரலாற்றை சுமக்கின்றன. அந்த சடலங்களின் பின்புலத்தில் தாய்மார்கள் மாரடித்து அழும் ஓலக்குரல், கேட்கும் எவர் மனதையும் கனக்கச் செய்யும். கடந்த 30 ஆண்டுகளாக இம்மக்கள் சந்தித்து வரும் அலைக்கழிப்பான வாழ்க்கை பெரும் சலிப்பையும், வாழ்வின் மீது பற்றற்ற நிலையையும் ஏற்படுத்தியுள்ளது. எல்லா குடும்பங்களிலும் யாரேனும் ஒருவர் இருவர் இல்லாத ஊனம் பெரும் மவுனமாய் உலவுகிறது. காஷ்மீரில் உள்ள ஒரே ஒரு மனநல மருத்துவமனையில் மட்டும் இதுவரை 68 ஆயிரம் பேர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். சமூக, பொருளாதார, நிலைகளின் சீர்குலைவு, பதற்றம் தரும் மன அழுத்தம் என அன்றாட வாழ்வே பெரும் துன்பம்தான். அரசுகளின் தோல்விக்கு மக்கள் மிகப் பெரும் விலையை கொடுத்து வருகின்றனர். ஒடுக்குமுறை, பலாத்காரம், சித்திரவதை, சுயநிர்ணய உரிமைக்கான போராட்டங்களை ஒடுக்குதல், சர்வதேச அழுத்தங்களை மதிக்காத போக்கு என காஷ்மீரில் துயரத்தின் புதிய அத்தியாயத்தை நடைமுறைப்படுத்துவதில் ராணுவமும் அரசும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

இவர்களுக்கு வலு சேர்க்கும் வகையில், எல்.கே. அத்வானி இங்கு அடிப்படைவாத சூத்திரத்தை மீண்டும் மீண்டும் ஒப்பித்து வருகிறார். அத்வானியின் புனைவுப்படி, ஜம்முவை சேர்ந்த பண்டிதர்கள் தேசபக்தர்கள் என்றும், காஷ்மீர் முஸ்லிம்கள் தேச விரோதிகள் என்றும் தொடர்ந்து கூறி வருகிறார். அமர்நாத் யாத்திரைக்கு மெல்ல மெல்ல காவிச் சாயம் பூசிவிட்டது இந்த கும்பல். 1989 இல் 20 ஆயிரம் பேர் மட்டுமே அமர்நாத் யாத்திரையில் பங்குபெற்றனர். கடந்த ஆண்டு அது 5 லட்சத்தை எட்டி நிற்கிறது. இந்தப் பயணத்தை அண்மைக் கால இந்தியாவின் பெரும் தொழில் நிறுவனங்கள் வழங்கி வருவது கவனத்துடன் பார்க்கப்பட வேண்டிய ஒரு செய்தி. 100 ஏக்கர் நிலத்தை அமர்நாத் வாரியத்திற்கு வழங்கி அரசாங்கம் மீண்டும் அந்தப் பள்ளத்தாக்கு சந்தித்திராத சூழலை உருவாக்கி மேலும் பதற்றத்தை அதிகரித்தது. இத்தனை பெரும் எண்ணிக்கையில் ஆட்கள் கூடினாலே அந்த லிங்கம் கரைந்து விடும் என திணையியல் அறிஞர்கள் கூறி வருவது குறிப்பிடத்தக்கது.

அய்ந்து லட்சம் பயணிகளுக்கு அனைத்து வசதிகளையும் முஸ்லிம்கள் தான் செய்து வருகின்றனர். அங்கு சென்று வந்த அனைவரும் அந்த உபசரிப்பில் லயித்து வந்த தங்கள் பயண அனுபவங்களை கூறி வருவதை, பல செய்திகளின் வாயிலாகவும் தெரிந்து கொள்ள முடியும். ஆனால் இந்தப் பயணிகளின் எண்ணிக்கை, அண்மைக்காலமாக அதிகரித்து வருவதற்குப் பின்னால் பல ரகசிய திட்டங்கள் இருப்பதை நம்மால் உறுதியாகக் கூற முடியும். இந்த 100 ஏக்கர் நிலம் அமர்நாத் வாரியத்திற்கு சுமூகமாக கைமாற்றப்பட்டு எந்த சர்ச்சையும் ஏற்படாமல் அமைதி நிலவியிருந்தால், மெல்ல மெல்ல அங்கு இஸ்ரேல் பாணியிலான குடியிருப்புகளை நிறுவும் மறைமுகத் திட்டம் ஒன்று இந்து வலதுசாரிகள் வசம் இருந்தது.

இத்தகைய விஷமமான திட்டங்கள் அனைத்தும் அந்தப் பள்ளத்தாக்கின் அமை தியை மேலும் சீரழிக்கவே உறுதுணை புரி யும். இந்த யாத்திரைகளைப் பின்புலமாக வைத்து அங்கு அமைதி நிலவி வருவதாக அரசு உலக நாடுகளுக்கு அறிவித்து வருகிறது. அண்மைக்கால அறிக்கைகளில் காஷ்மீரை விவரிக்கும் பொழுது, அதனை 'கலவரம் நடந்து முடிந்த பகுதியாக' அழைத்து வருகிறது. இது, உலக சுற்றுலா பயணிகளை கவருவதற்கான திட்டமே. இருப்பினும் உலகின் பல முக்கிய நாடுகள் தங்கள் குடிமக்களை காஷ்மீருக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்துகின்றன.

கலவரம் நடந்து முடிந்த பகுதி என அரசு அழைக்க விரும்பினால், முதலில் அந்த சமூகத்துடன் உரையாடலைத் தொடங்கி, பதற்றங்களைத் தணித்து, மக்களின் பங்களிப்பை அதிகரித்து, அமைதியை சென்றடையும் வழிமுறைகளை அல்லவா கண்டறிய வேண்டும்!

காஷ்மீர் பிரச்சனையை புரிந்து கொள்வதற்கு அதன் வரலாற்றை அறிந்து கொள்வதுதான் தீர்வை அடைவதற்கான முதல் நடவடிக்கை. காஷ்மீர், வடகிழக்கு ஆகிய இந்தியாவின் இரு மாநிலங்களிலும் கடந்த 40 ஆண்டுகளாக பெரும் பதற்றமும், வன்முறையும் நிலவி வருகிறது. 1947இல் இந்தியா சுதந்திரம் பெற்று தனி நாடாக உருவானது முதல் இன்று வரை, அடுத்தடுத்து ஆட்சியில் உள்ள அரசுகளின் குளறுபடியான முடிவுகள், ஆட்சியாளர்களின் குறுகிய நலன்களின் அடிப்படையிலான செயல்திட்டங்கள், மத்திய அரசின் வெளியுறவுக் கொள்கைகள் என எல்லாம் ஒருங்கிணைந்து, அந்தப் பகுதிகளின் நிரந்தர சீர்குலைவிற்கு வழிவகுத்துள்ளன. பிரிவினையை மூலதனமாகக் கொண்டு செயல்படும் மதவாத சக்திகளும் தங்களின் தீவிர பிரச்சாரத்தால் ஒட்டுமொத்த சூழலை மேலும் இறுக்கமாக்கியுள் ளன.இது அங்கு ஓர் உரையாடலுக்கான சாத்தியத்தை நிராகரித்து, மேலும் தவறான புரிதல்களுக்கே வழிவகுத்துள்ளது.

காஷ்மீர் பற்றி அரசும் ஊடகங்களும் இடையறாது செய்து வரும் அவதூறான பரப்புரையால், காஷ்மீரை தவிர்த்த இந்தியாவிற்கு இவர்களின் புனைவு சார்ந்த சித்திரம்தான் மனதில் தங்கியுள்ளது. இது ஏதோ அப்பாவி காஷ்மீர் பண்டிதர்களுக்கும், எந்நேரமும் ஆயுதம் ஏந்தி நிற்கும் காஷ்மீர் முஸ்லிம்களுக்குமான பகையாகவே சித்தரிக்கப்படுகிறது. இதில் மெய் எது பொய் எது என்பதை எடுத்துக் கூற வேண்டிய ஊடகங்களும், அறிவுஜீவிகளும் தோல்வியை தழுவி நிற்கின்றனர்.

அன்றைய பிரதமர் ஜவகர்லால் நேரு முதல் பின்னர் அங்கு ஆளுநராகப் பதவி வகித்த ஜக்மோகன் வரை, தாங்கள் ஏதோ ராஜதந்திரத்தின் மூலம் ஒரு பெரிய சாதனையை செய்யப் போவதாக கற்பனை செய்து கொண்டு, மென்மேலும் காஷ்மீர் மக்களின் வாழ்வை சீர்குலைத்ததுதான் மிச்சம். புவி அரசியலில் ஈடுபட்டு அந்தப் பகுதியின் "பெரிய அண்ணனாக' உருவெடுக்க முயன்ற இந்தியாவுக்கு, இன்று நிரந்தர தலைவலியான காஷ்மீர் பிரச்சனை, அந்தப் பகுதி மக்களின் வாழ்வை மட்டும் சீர்குலைக்க வில்லை; இந்திய அரசின் நிதிநிலையையும் அது ஆண்டுதோறும் கடு மையாக பாதிக்கிறது. இத்தனை லட்சம் கோடிகள் வீணாக்கப்பட்ட பிறகும் கூட, இந்தியா வசம் உள்ள காஷ்மீரின் வரைபடத்தை வெளியிட அரசு இன்று வரை தயாராக இல்லை. காஷ்மீர் வரைபடம் என நாம் நம்பும் ஒரு வரைபடம் முற்றிலும் கற்பனையானது. அதனை கல்விக் கூடங்கள், ஊடகங்களின் வாயிலாக மக்களின் மனங்களில் பதிய வைத்து மொத்த சமூகத்தை யும் மூளைச் சலவை செய்கிறது.

புதைக்கப்பட்ட சாட்சியங்கள் : உண்மையறியும் குழுவின் ஆவணம்

காஷ்மீர் பண்டிதர்களை அரசு பள்ளத்தாக்கிலிருந்து வெளியேற்றியது பெரும் முட்டாள்தனம் என்பதை பல்வேறு நிகழ்வுகள் எடுத்துரைக்கின்றன. ஜனநாயக வழியிலான எந்த செயல்பாட்டுக்கும் அங்கு சாத்தியம் இல்லை என உணர்ந்த பிறகுதான் இளைஞர்கள் வேறு வழிகளை நோக்கிச் சென்றனர். சகோதரர்களாக வரலாறு நெடுகிலும் வாழ்ந்து வந்த பண்டிதர்களையும் முஸ்லிம்களையும் எதிர் எதிராக நிறுத்த முடிவு செய்த இந்திய அரசின் நிலைப்பாடு கண்டனத்திற்குரியது. பண்டிதர்களை அவர்களின் விருப்பத்திற்கு மாறாகவே அரசு வெளியேற்றியது. காஷ்மீர் பண்டிதர்களின் வீடுகள் அனைத்தையும் இந்திய ராணுவப் படையினர் தங்கள் அலுவலகங்களா கவும், முகாம்களாகவும் மாற்றிக் கொண்டன. அங்கிருந்து வெளியேற்றப்பட்ட காஷ்மீர் பண்டிதர்களின் குடும்பங்களுக்கு, அதன் உறுப்பினர்களின் எண்ணிக்கை யைப் பொறுத்து நிவாரணமும், அவர்களின் வீடுகளுக்கு பெரும் தொகையை வாடகையாகவும் மத்திய அரசு வழங்கி வருகிறது. இவர்களைப் போல் இந்திய அரசு வேறு எந்த இனக்குழுவிற்கோ, பாதிக்கப்பட்டவர் களுக்கோ நிவாரணம் வழங்கியதில்லை. பார்ப்பன அதிகார வர்க்கம்தான் நம்மை ஆண்டு வருகிறது என்பதற்கு வேறு சான்றுகள் வேண்டுமா?

உலகின் மிகக் கொடூரமான மனித உரிமை மீறலை அமெரிக்கா ஈராக்கிலும், ஆப்கானிஸ்தானிலும் நிகழ்த்தி வருவது நம் காலத்து வரலாறு. பிற நாடுகளை ஆக்கிரமித்துள்ள அமெரிக்கா ஈராக்கில் ஒரு லட்சத்து 65 ஆயிரம் படையினரையும், ஆப்கானிஸ்தானில் 67 ஆயிரம் அமெரிக்க படையினரையும் நிறுத்தியுள்ளது. ஆனால், கடந்த 30 ஆண்டுகளில் தனது படை பலத்தை காஷ்மீர் பள்ளத்தாக்கில் பெருக்கியுள்ள இந்திய அரசு, இன்றைய தேதியில் மட்டும் 6 லட்சத்து 67 ஆயிரம் ராணுவ வீரர்களை அங்கு நிறுத்தியுள்ளது. இது நமக்கு பல உண்மைகளை எடுத்துரைக்கிறது. உலக அளவில் ஒரு நிலப்பரப்பில் மட்டும் இத்தனை அடர்த்தியான ராணுவ இருப்பு எப்பொழுதும் இருந்ததில்லை.

காஷ்மீர் மக்களின் விருப்பமெல்லாம் அவர்களின் இனக்குழு தன்மையைப் பாதுகாப்பதும், இந்திய அரசின் இணைப்பு ஒப்பந்தப்படி காஷ்மீரின் தற்சார்பைப் பேணுவதும்தான். 2000இல் "அவுட்லுக்' ஆங்கில ஏடு நடத்திய கருத்துக் கணிப்பை இங்கே நினைவுபடுத்துவது பொருத்தமானது. அது இவ்வாறு கூறுகிறது : 74 சதவிகித மக்கள் தங்களின் காஷ்மீரி அடையாளத்துடனேயே வாழ விரும்புகின்றனர்; 16 சதவிகித மக்கள் காஷ்மீருக்கு கூடுதல் அதிகாரங்களுடன் கூடிய தற்சார்புவேண்டும் என்கின்றனர்; 2 சதவிகிதத்தினர் பாகிஸ்தானுடன் இணைய விரும்புகின்றனர். 37 சதவிகிதத்தினர் இந்திய அரசியல் அமைப்புக்கு உட்பட்டுத் தீர்வு காணவே விரும்புகின்றனர். காஷ்மீரிகளின் உண்மை மனநிலையை மிகத் துல்லியமாக வெளிக்கொணர்ந்த கருத்துக் கணிப்பு இது. ஆனால் இந்த 2 சதவிகித பிரிவினை மனநிலை உள்ளவர்களுக்காக இந்திய அரசு மொத்த பள்ளத்தாக்கையே ஆயுதக் கிடங்காக மாற்றி, மக்களை சித்திரவதை செய்வது எப்படி நியாயமாகும்?

அரசமைப்புச் சட்டத்திற்கு உட்பட்டு தீர்வு காண்பதைத் தவிர்த்து, காஷ்மீர் மக்களை போருக்கு மத்தியில் வாழ நிர்பந்தித்து வருகிறது இந்திய அரசு. காஷ்மீர் இந்தியாவின் ராணுவ சோதனைக்கூடமாகவே உள்ளது என்றால் அது மிகையல்ல. அங்கே நீங்கள் யாரை வேண்டுமானாலும் வீடு புகுந்து கைது செய்யலாம், பள்ளிக்குச் செல்லும் மாணவியை வீதியில் வைத்து சுடலாம், பேருந்து நிலையத்தில் காத்திருப்பவரை கைது செய்து என்ன குற்றச்சாட்டை வேண்டுமானாலும் சுமத்தலாம், பெண்களை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தலாம், ஆயுதத்தை சோதித்துப் பார்க்க சிலரை கொல்லலாம். இன்னும், இன்னும்... எது வேண்டுமானாலும் செய்யலாம். ஆயுதப்படைகள் சிறப்பு அதிகாரச் சட்டம் 1958, பதற்றப் பகுதிச் சட்டம் 1976, ஜம்மு காஷ்மீர் பொது மக்கள் பாதுகாப்பு சட்டம் 1978, தீவிரவாத மற்றும் சீர்குலைவு நடவடிக்கைச் சட்டம் 1985, பொடா 2002... "இந்தப் படை போதுமா, இன்னும் கொஞ்சம் வேண்டுமா' என தேசபக்தர்களின் முழக்கங்கள் காதில் கேட்கின்றன.

உங்களுக்கு தேவையானது எல்லாம் நீங்கள் இந்திய ராணுவத்தின் உடையை அணிந்திருக்க வேண்டும். இப்படி நீங்கள் செய்யப்போகும் "தேசபக்த காரிய'ங்களுக்கு ஏற்ப இந்திய அரசியல் சாசனத்தை வளைத்து, நிமிர்த்தி, திருத்தி நாள்தோறும் ஒரு சட்டத்தை உருவாக்கி தேச பக்தராக அறிவித்துக் கொண்டேயிருக்கும். தேசத்தின் பெயரால் அரசு வன்முறையை நியாயப்படுத்தும் ராணுவத்தினருக்கு, ஒவ்வொரு குடியரசு நாள் விழாவிலும் பதக்கங்கள் வழங்கிப் போற்றும் சிந்தனையில் மாற்றம் ஏற்படாதவரை, காஷ்மீரில் மாற்றம் என்பதற்கு சாத்தியமில்லை.

காஷ்மீரில் மட்டும் கடந்த 20 ஆண்டுகளில் ஒரு லட்சம் பேர் ராணுவத்தால் அனாதைகளாக ஆக்கப்பட்டுள்ளனர். காணாமல் போனவர்களின் மனைவிகளுக்கு விதவை ஓய்வூதியத்தை தர மறுக்கிறது அரசு. இவர்கள் "அரை விதவைகள்'. இவர்களின் கணவர்கள் இறந்து விட்டதற்கான ஆதாரம் இருந்தால் மட்டுமே ஓய்வூதியம்வழங்க முடியும் என்கிறது அரசு. மறுபுறம் ராணுவ வீரர்களின்தற்கொலை விகிதம் ஏறுமுகத்தில் உள்ளது. 2002 2009க்குள் மட்டுமே 169 ராணுவத்தினர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

கடந்த 50 ஆண்டுகளாக காஷ்மீரில் நடைபெற்று வரும் சூழலை கூர்ந்து கவனித்தால், ஒன்று மட்டும் தெளிவாகப் புரிகிறது. இந்தியா, பாகிஸ்தான் ஆகிய இரு நாட்டு மக்களும் இணக்கமான நல்லுறவையே விரும்புகின்றனர். இருநாட்டு எல்லை நெடுகிலும் உள்ள மக்களிடையே பண்பாட்டு ரீதியிலான ஒத்திசைவும் பரிமாற்றமும் இன்றளவும் நிலவுகின்றன. ஆனால் இரு நாட்டு அரசுகளும் இருபுறமும் பதற்றம் நிலைப்பெறவே விரும்புகின்றனர். மக்களின் கோரிக்கைகள் முன்னிலை பெறும்போதும், மக்களுக்கு எதிரான சட்டங்கள் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் பொழுதும் காஷ்மீர் பிரச்சனை இயல்பாகவே ஊடகங்களில் தலைப்புச் செய்தியாக இடம்பெறுவது, திட்டமிட்ட ஒன்றாகவே தோன்றுகிறது.

இந்த மரணப் புதைகுழிகளை, சடலங்களை மேலும் சிதைக்காமல் பாதுகாத்து, வெளிப்படையான ஒரு விசாரணைக்கு அரசு உத்தரவிட்டு, குற்றம் நிரூபணமாகும் தருணத்தில் கடும் நடவடிக்கைகளை எடுக்கபட வேண்டும். கொடூரமான இந்த சட்டங்களை அரசு திரும்பப் பெற்றால் தான் அங்கு மக்கள் ஜனநாயக வழியிலான தங்கள் உரிமைகளை முன்வைத்துப் போராடி, தங்கள் சுயநிர்ணய உரிமையைப் பெற இயலும். இல்லை எனில், பாராமுல்லாவில் ஒரு கிராமப் பெரியவர் கூறியது போல்தான் எதிர்காலத்தில் நடக்கும் :

"குழந்தைகள் எங்களிடம் இந்த புதைகுழிகளைப் பற்றி கேட்கிறார்கள். ஏன் இங்கே இத்தனை ராணுவத்தினர் உள்ளனர் என்பதைப் பற்றியும் மீண்டும் மீண்டும் கேட்கிறார்கள். வன்முறையில் இறப்பது இயற்கையானது தான் என்கிற புரிதலை அவர்கள் வளரும் போதே ஏற்படுத்திக் கொள்கிறார்கள்'' இந்தப் பெரியவரின் வரிகளுக்கு பதில் சொல்ல முடியாமல் மொத்த தேசமும் இந்த கணத்தில் தலை குனிந்துதான் நின்றாக வேண்டும்.

எங்கிருக்கிறது கார்கில்?

கார்கில் என்றவுடன் இந்திய ராணுவம் வெற்றிக் கொடி நாட்டியதுதான் நம் மனங்களில் வந்து கம்பீரமாய் நிற்கும்! ஆனால், கார்கில் காஷ்மீரில் எங்கு உள்ளது என்பதை நீங்கள் யாராவது வரைபடத்தை எடுத்துப் பார்த்திருக்கின்றீர்களா? பார்த்தால் பெரும் அதிர்ச்சி மட்டுமே மிஞ்சும். நம் மனங்களில் பதிந்துள்ள ஜம்மு காஷ்மீர் வரைபடத்தின் எல்லைக் கோடு நெடுகிலும் தேடினாலும் கார்கில் எங்கும் கிடைக்காது. கார்கில், மிகச்சரியாக காஷ்மீர் வரைபடத்தின் மய்யத்தில் இருக்கிறது. மய்யத்தில் இருக்கும் கார்கிலை ராணுவம் யாருடன் போரிட்டு மீட்டது?

அதன் பிறகு, பல காஷ்மீர் வரைபடங்களை எடுத்துப் பார்த்த போதுதான் உண்மை விளங்கியது. காஷ்மீரின் ஒரு பகுதி சீனா வசம் உள்ளது. அதனை அக்சாய் சீன் என்று அழைக்கிறார்கள். அடுத்து வடக்கே உள்ள காஷ்மீரின் பெரும் பகுதி பாகிஸ்தான் வசம் உள் ளது. அதனை "பாகிஸ்தான் ஆக்கிரமித்த காஷ்மீர்' என்றும் ஆசாத் ஜம்மு காஷ்மீர் என்றும் இரு சாரரும் அவர்களது வசதிக்கேற்ப அழைக்கிறார்கள். இது தவிர்த்து இரு தேசங்களிலிருந்தும் தங்களை விடுவித்துக் கொண்டுள்ள ஒரு பெரும் நிலப்பரப்பு உள்ளது, அது "ஆசாத் காஷ்மீர்' (விடுதலையடைந்த காஷ்மீர்) என்று அழைக்கப்படுகிறது.

எஞ்சியுள்ள பகுதி மட்டும்தான் இந்தியா வசம் உள்ளது. அதனை நாம் ஜம்மு காஷ்மீர் என்றும், பிறர் இந்தியா நிர்வகிக்கும் காஷ்மீர் என்றும் அழைக்கின்றனர்.இந்தப் பகுதிகளை எல்லாம் பிணைக்கும் கோடுதான் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு (Line ofControl) என்று அழைக்கப்படுகிறது. 

'உடனடி விசாரணை தேவை' - அம்னஸ்டி

சிறீநகரில் இருந்து செயல்படும் "காணாமல் போனவர்   களின் பெற்றோர் அமைப்பு' மார்ச் 29, 2008 அன்று தனது ஆய்வறிக்கையை வெளியிட்டது. அதன்படி, உரி மாவட்டத்தின் 18 கிராமங்களில் மட்டும் இதுவரை 940 சடலங்கள் பல கும்பல் புதைகுழிகளிலிருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது தெரிய வந்தது. 2006 முதல் அவர்கள் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில் இந்த தகவல்கள் சேகரிக்கப்பட்டன. உலக மனித உரிமைஅமைப்பான "அம்னஸ்டி இன்டர்நேஷனல்' இந்த தகவல்களின் அடிப்படையில், இந்திய அரசு உடனே விசாரணையை நடத்த வேண்டும் என கண்டிப்பான குரலில் தெரிவித்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களுக்கு முழு நிவாரண உதவிகள் வழங்கப்பட வேண்டும். குற்றம் புரிந்தவர்கள் மீது முறையான விசாரணை மேற்கொள்ளப்பட்டு, சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் "அம்னஸ்டி' கேட்டுக் கொண்டது.

Courtesy: International People's Tribunal of Human Rights and Justice in India Administered Kashmir. 'Buried Evidence : Unkown, Unmarked, and Mass Graves in India Adminisrered Kashmir' by Angana P.Chatterji, Parvez Imroz, Gautam Navalakha, Zahir Parez Imron, Gauam Navlakha, Zahir Ud-Din, Mithir Desai, Khurram Parvez

-அ.முத்துக்கிருஷ்ணன்

Keetru
 
__,_._,___

Wednesday, February 02, 2011

பாபர் மஸ்ஜித் தொடர்பான அலகாபாத் உயர் நீதி மன்றத்தின் கட்ட பஞ்சாயத்து

 

துளசிதாசர் கண்டுபிடிக்காததை லக்னோ நீதிமன்றம் கண்டுபிடித்திருக்கின்றது!

பாபர் மஸ்ஜித் தொடர்பான அலகாபாத் உயர் நீதி மன்றத்தின் கட்ட பஞ்சாயத்து தீர்ப்பை கண்டித்து சமூக அக்கறையாளர்கள் தெரிவித்த கருத்துக்களின் தொகுப்பு உங்கள் பார்வைக்கு.

மதசார்பின்மையில் ஒட்டையை ஏற்படுத்தியுள்ள தீர்ப்பு!-ராஜேந்தர் சச்சார் (ஒய்வுப் பெற்ற டெல்லி உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி)
இந்தத் தீர்ப்பு பல விஷயங்களைப் பாதிக்கச் செய்திருப்பதுடன், இந்தியாவின் மதச்சார்பற்ற தன்மையிலேயே ஒட்டையை ஏற்படுத்திவிட்டது. 'பள்ளிவாசலை உடைத்து அழியுங்கள்…!' என்று கூறுவதைப் போல இந்த தீர்ப்பு அமைந்துள்ளது. சர்ச்சைக்குரிய நிலத்தில் மூன்றில் இரண்டு பங்கு இந்துக்களிடம் வழங்கப்பட்டிருக்கிறது. நீதிமன்றத்தின் முடிவை எட்டுவதற்கு நம்பிக்கை ஒர் அடிப்படையாக இருக்கக்கூடாது.
இந்த விஷயத்தில் நடந்ததை மறந்துவிட்டு அடுத்த கட்டத்திற்குச் செல்லுங்கள் என்று ஊடகங்கள் கூறுகின்றன. நாம் எங்குச் செல்வது? எதை நோக்கிச் செல்வது?  ஒரு குற்றத்தை யாரும் மறந்து விடக்கூடாது. ஒரு குற்றத்தைச் செய்து விட்டு எவரும் தப்பி ஒடவிடாமல் இருப்பதை உறுதி செய்வது தான் நீதிமன்றத்தின் கடமை. முஸ்லிம்களின் சொத்துக்கள் மீது அவர்களுக்குள்ள உரிமை பறிக்கப்பட்டிருக்கிறது. பொதுவான சட்டம் சொலவது என்னவென்றால் ஒரு மகன் தந்தையைக் கொன்றால், தந்தையின் சொத்துக்களைப் பெறும் உரிமை அவனுக்கு இல்லை என்பது தான்! ஆனால் இங்கோ பாபர் பள்ளிவாசலை இடித்த குண்டர்கள் தாங்கள் விரும்பியதைப்  பெற்றிருக்கிறார்கள்.


இந்தக் கட்டப் பஞ்சாயத்துத் தீர்ப்புக்குச் சட்ட அடிப்படை எதுவும் கிடையாது-ராஜீவ் தவான் (மூத்த வழக்குறைஞர்)
பிரச்னையில் சம்பந்தப்பட்ட இரு பிரிவினருக்கும் சரி சமமாகக் கூட நிலம் பிரித்துத் தரப்படவில்லை. இஸ்லாமியருக்குச் சொந்தமான நிலத்தில் மூன்றில் ஒரு பங்கு அவர்களுக்கும், இரு பங்கு இந்துக்களுக்கும் வழங்கப்பட்டிருக்கிறது. இந்தக் கட்டப் பஞ்சாயத்துத் தீர்ப்புக்குச் சட்ட அடிப்படை எதுவும் கிடையாது. தார்மீக நீதியும் கிடையாது. அது மட்டுமின்றி இத்தீர்ப்பு நிலத்திற்கு உரிமை கோரிய ஒரு பிரிவினருக்கு இழைக்கப்பட்ட அவமதிப்பாகும்.
இந்த தீர்ப்பு ஏராளமான குறைகளைக் கொண்டிருக்கிறது. இதிலுள்ள தவறுகள் சரிசெய்யப்படாவிட்டால் வரலாறே தவறாகிவிடும்.  இந்தியாவில் பாபர் பள்ளிவாசல் இடிக்கப்பட்டதை ஆப்கானிஸ்தானில் பாமியன் சிலைகளைத் தாலிபான்கள் சிதைத்ததுடன் வெளிநாட்டவர்கள் ஒப்பிடுகின்றனர். பாபர் பள்ளிவாசல் இடிக்கப்பட்டதற்கும் முஸ்லிம்களுக்கு உரிய நிலம் அவர்களுக்கு மறுக்கப்படுவதற்கும் நீதி வழங்க மதச்சார்பற்ற நிர்வாகத்தால் முடியவில்லை. இந்தியாவில் உள்ள சிறுபான்மையினர் கண்ணியத்துடன் நடத்தப்படுவதையும் அவர்களுக்குரிய மரியாதை வழங்கப்படுவதையும் உறுதிசெய்ய வேண்டியது இந்திய ஜனநாயகத்தின் தேவையாகும்.

நீதி பரிபாலனத்தின் சாதாரண நெறிமுறைக்கு முரணான தீர்ப்பு-அந்தி அர்ஜூனா (மூத்த வழக்குறைஞர், உச்சநீதிமன்றம்)
 பாபர் பள்ளிவாசல் தகர்க்கப்படாமல் இருந்திருந்தால் அது நின்ற இடத்தை இப்போது தீர்ப்பில் கூறப்பட்டிருப்பது போல் பிரிப்பதற்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருக்குமா? அலஹாபாத் உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் மிக தெளிவாக விடப்பட்டுள்ள அம்சம் டிசம்பர் 6, 1992ல் பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்ட சண்டித்தனத்தை கண்டிக்காதது தான்.  சர்ச்சைக்குரிய 2.72 ஏக்கர் நிலம் காலியான இடம் என்பது போல் நீதிபதிகள் கருதியுள்ளார்கள்…1992 பள்ளிவாசல் இடிப்பை இந்த தீர்ப்பு நியாயபடுத்தி அதற்கு சட்ட அங்கீகாரம் வழங்கியுள்ளது. வழக்கில் தொடர்புடைய இரு தரப்புகளில் ஒன்று வழக்கு தொடுக்கும் போது இருந்த நிலையை தனது வசதிக்கேற்ப சட்டத்தை தன் கையில் எடுத்து கொண்டு மாற்றிவிட்டால் (இந்த வழக்கில் இந்துத் தரப்பு), நீதிமன்றம் அந்த வன்செயலுக்கு முன்பிருந்த நிலையை ஏற்படுத்த வேண்டும் என்பது தான் நீதிமன்றங்களில் நிலவும் சாதாரண நீதி பரிபாலன முறையாகும். ஆனால் அவ்வாறு செய்வது இந்த வழக்கில் உள்ள நிலையை போல் சாத்தியமில்லை என்றால் சட்டத்தை தன் கையில் எடுத்துச் செயல்பட்டவர்களுக்கு எவ்வித நன்மையும் ஏற்படும் வகையில் எந்த நீதிமன்றமும் செயல்படாது. அலஹாபாத் உயர்நீதிமன்றம் நீதி பரிபாலனத்தின் இந்த அடிப்படையை கூட உணராது தீர்ப்பு அளித்துள்ளது

தர்க்க ரீதியாகவும் அறிவு ரீதியாகவும் ஏற்கத் தக்கதாக இல்லை இந்த தீர்ப்பு(பி.எஸ். அப்பு (முன்னாள் தலைமைச் செயலாளர் பீகார்)
மூன்று நீதிபதிகளும் பள்ளிவாசலை முஸ்லிம்கள் பயன்படுத்தினர் என்றும் பள்ளிவாசலுக்கு வெளியில் 100 எட்டு தூரத்தில் உள்ள ராம் சபூட்ரா (திண்ணையை) இந்துக்கள் பயன்படுத்தினர் என்றும் கருதியுள்ளனர். எனவே இந்த விவாகாரத்தில் பள்ளிவாசல் இருந்த இடத்தை முஸ்லிம்களிடமும், ராம் சபூட்ரா மற்றும் சீதா கி ரோசி (சீதையின் சமையல்கட்டு) இருந்த இடத்தை  இந்துக்களிடம் ஒப்படைப்பதும் தான் நியாயமான, சாத்தியமான, நீதியான தீர்ப்பாக இருக்கும். திரேட்டா யூகத்தின் மிகப் பெரும் கதாநாயகனான ராமர், 8 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு நீரில் சமாதியான ராமர், பள்ளிவாசலின் கும்பத்தின் கீழ் தான் பிறந்தார் என்று சொல்வது தர்க்க ரீதியாகவும் அறிவு ரீதியாகவும் ஏற்கத் தக்கதாக இல்லை. நமது நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்தின் மாண்புகளை காத்து சட்டத்தின் கண்ணியத்தை காக்கும் வகையில் உச்சநீதிமன்றம் அனைத்து அம்சங்களையும் கவனத்தில் கொண்டு இறுதி தீர்ப்பு வழங்கும் என்று எதிர்பார்ப்போம்.

வரலாற்றுக்கு அவமானம் கற்பிக்கும் தீர்ப்பு-டி.என்.ஜா (வரலாற்றாசிரியர்)
வரலாற்று சான்றுகளை புறந்தள்ளும் வகையில் நம்பிக்கைகளை அனுமதிக்க கூடாது. என்ன நடந்துள்ளது என்றால் நம்பிக்கை பகுத்தறிவை வென்று விட்டதாக தோன்றுகிறது. வரலாற்றை ஒன்றுமில்லாமல் செய்து விட்டது நம்பிக்கை. இந்தத் தீர்ப்பு உண்மைக்கும், வரலாற்றுச் சான்றுகளுக்கும், வரலாறு எழுதியலுக்கும் இழைக்கப்பட்டுள்ள ஒரு அவமானம். தலைநகர் டெல்லியில் அனுமான் கோயில்களின் எண்ணிக்கை திடுதிடுப்பென அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. உரிமை இல்லாத நிலங்களில் கட்டப்படும் இந்த எண்ணற்ற அனுமன் கோயில்களால் எழும் பிரச்னைகளையும் ராமர் கோயில் பிரச்சினையோடு சேர்த்துத் தீர்க்கும்  பொறுப்புக்கு அரசம் நீதிமன்றங்களும் எதிர்காலத்தில் ஆளாகப் போகின்றன.

ஜனநாயகத்திற்கான தகுதிகளை இழந்து நிற்கிறோம்-நானி பால்கிவாலா
(பாபரி பள்ளிவாசல் இருந்த இடத்தில் ராமர் பிறந்தாரா அங்கிருந்த கோயில் இடிக்கப்பட்டு பள்ளிவாசல் கட்டப்பட்டதா என்பது குறித்து உச்சநீதிமன்றத்திடம் 1994ல் நரசிம்மராவ் அரசு கருத்துக் கேட்டப் போது எழுதியது)
நம்பிக்கைகள், வரலாறு, புராணம் மற்றும் உடனடி அரசியல் பிரச்சினைகளில் முடிவெடுக்க நீதிமன்றத்தை நாடுவதற்கு விரும்புகின்ற நிலை ஏற்பட்டுள்ளது மட்டுமின்றி இது குறித்து மிக்க ஆவலுடன் இருக்க நேர்ந்துள்ள நிலை உருவாகியுள்ளது (ஜனநாயகத்திற்கான) எல்லா தகுதிகளையும், நேர்மையையும் நாம் இழந்து நிற்பதையே காட்டுகிறது.


முஸ்லிம்களை போல இந்துக்கள் அமைதியாக இருப்பார்களா?-குல்தீப் நய்யார் (அரசியல் விமர்சகர்)
பாப்ரி பள்ளிவாசல் தீர்ப்புக்குப் பிறகு நாட்டில் சாந்தியும், சமாதானமும் நிலவுகிறது என்பதில் சந்தேகமே இல்லை. எங்கும் எவ்வித அசம்பாவிதமும் நிகழவில்லை. இதன் பெருமை  முழுக்க முஸ்லிம்களுக்கே போய் சேரும். இதற்காக பாராட்டப்பட வேண்டியவர்களும் அவர்களே. அதற்குக் காரணம் உள்ளது.
பொதுவாக, தாங்கள் ஏமாற்றப்பட்டதாக அவர்கள் எண்ணியபோதும், நீதிமன்றத் தீர்ப்பை ஏற்றுக்கொள்வதாகவும், அத்தீர்ப்பில் திருப்தி அடையாவிட்டால் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்போவதாகவும் ஏற்கனவே அறிவித்திருந்தனர். அந்த வாக்குறுதியை அவர்கள் சரியாகவே நிறைவேற்றியுள்ளனர். அந்த அடிப்படையில், இப்போது மேல் முறையீடு செய்யவிருப்பதாகவும் அறிவித்துள்ளனர்.
ஒருவேளை, இத்தீர்ப்பு இந்துத்துவ சக்திகளுக்கு எதிராக வந்திருக்குமானால் என்ன நடந்திருக்கும் என்பதை சற்று ஊகித்துப் பாருங்கள். அவர்கள் முஸ்லிம்களைப் போல் அமைதியாக இருந்திருப்பார்களா? தீர்ப்பு அவர்களுக்கு முழு அளவில் சாதகமாக இல்லாதிருந்தும்கூட தாங்கள் வெற்றி பெற்று விட்டதாக கூப்பாடு போடுகிறார்கள். எனவே, இத்தீர்ப்பை அவர்கள் தன்னடக்கத்தோடு ஏற்றுக்கொண்டனர் என்றோ, அதனால் முஸ்லிம்களின் அச்சம் குறைக்கப்பட்டிருக்கிறது என்றோ கருதுவதற்கு இடமில்லை. தீர்ப்பை ஏற்றுக்கொள்ளும் விஷயத்தில் இரு தரப்பினரும் கையாண்ட அணுகுமுறை முற்றிலும் வித்தியாசமானது என்பதை அனைவரும் அறிவர்.
சிறுபான்மை சமூகத்தினர், சட்டத்தை மதித்து, அதற்குக் கட்டுப்பட்டு நடப்பதாகக் கூறும் போது பெரும்பான்மை இந்து சமுதாயம் அப்படி ஏதும் உறுதி கூற முன்வரவில்லை என்பது இங்கு கூர்ந்து கவனிக்கத்தக்கது. 1992ல் பாப்ரி மஸ்ஜித் இடிக்கப்பட்டது சட்டத்திற்குப் புறம்பான காரியமாகும்.

தற்கால அரசியலை நியாயப்படுத்துவதற்காக நாம் கடந்த காலத்தை மாற்றிவிட இயலாது-ரொமீலா தாப்பர் (வரலாற்று ஆசிரியர்)
இந்த தீர்ப்பு ஒரு தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த தீர்ப்பின் அடிப்படையில் எந்த ஒரு குழுவும் தங்கள் கடவுள் இந்த இடத்தில் பிறந்தார் என்று கூறி தாங்கள் ஒரு பெரும் மதநம்பிக்கையாளர்களின் பிரதிநிதிகள் என்று சொல்லிக்கொண்டு (அதாவது ராமர் பிறந்த இடம் குறித்து சங்பரிவார் ஒட்டுமொத்த ஹிந்துக்களின் பிரதிநிதிகள் என்று சொன்னது போல்) பிறருக்குச் சொந்தமான சொத்துக்களைக் கோருவதற்கு வழிவகுக்கப்பட்டுள்ளது. இனி தேவையான சொத்துக்களை சுட்டிக்காட்டி சண்டையை ஏற்படுத்துவதற்காக இது போல பல ஜன்மஸ்தானங்கள் உருவாக்கப்படும். திட்டமிட்டு வரலாற்றுச் சின்னம் (பாபரி பள்ளிவாசல்) இடிக்கப்பட்டது கண்டிக்கப்படாத நிலையில் இது போன்ற இடிப்புச் செயல்களை எப்படி தடுத்து நிறுத்த இயலும்?
வரலாற்றில் நடந்தது நடந்தது தான். அதனை மாற்ற இயலாது. ஆனால் என்ன நடந்தது என்பதை முழுமையாக எப்படி புரிந்துக்கொள்ள வேண்டும் என்பதை நாம் கற்க இயலும். நம்பத்தகுந்த ஆதாரங்களின் அடிப்படையில் நாம் அதில் பாடங்களை கற்க இயலும். தற்கால அரசியலை நியாயப்படுத்துவதற்காக நாம் கடந்த காலத்தை மாற்றிவிட இயலாது. இந்த தீர்ப்பு வரலாற்றின் மீதான மரியாதையை சிதைத்துள்ளது. வரலாற்றின் இடத்தில் மதநம்பிக்கையைப் புகுத்தியுள்ளது. இந்த நாட்டின் சட்ட பரிபாலனம் மதநம்பிக்கைகளின் அடிப்படையில் மட்டுமில்லாமல் சான்றுகளின் அடிப்படையிலும் அமைந்துள்ளது என்ற நம்பிக்கை மக்களிடையே ஏற்படும் போதுதான் உண்மையான நல்லிணக்கம் ஏற்படும்.


அநீதியின் வெளிப்பாடு-ஹர்ஷ் மந்தர் (முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி சமூக சேவகர்)
இந்த தீர்ப்பு நடுநிலையானது என்றும் நேர்மையானது என்றும் சில விமர்சகர்கள் கூறுவது எனக்கு வினோதமாக இருக்கின்றது. நாம் இனி பழையவற்றை மறந்து முன் செல்ல வேண்டும் என்று அவர்கள் பரிந்துரைக்கிறார்கள். நீதிக் கிடைப்பதை அனுபவிக்காத வரையில் பிரச்னையை முடிவுக்கு கொண்டு வர இயலாது என்பதை அவர்கள் ஒத்துக் கொள்ள மறுக்கிறார்கள். இந்த வழக்கு குற்றவியல் ரீதியாக யார் தவறு செய்தார்கள் என்பதை நிர்ணயிக்கும் வழக்கு அல்ல என்பது உண்மை தான். அனால் இந்த வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பு ராமர் கோயில் கட்டும் இயக்கத்தின்; முக்கிய அடிப்படைகள் அனைத்தையும் கொள்கையளவில் ஏற்கும் வகையில் அமைந்துள்ளது….ராமர் கோயில் இயக்கத்தின் போர் பரணியாக 'அந்த இடத்தில் தான் ராமர் கோயில் கட்டுவோம்' என்பதே. நம்பதகாத வரலாறு மற்றும் விசுவாசத்தின் அடிப்படையிலும், ஏமாற்று மற்றும் அடக்குமுறையின் அடிப்படையிலும் ஆக்கிரமிக்கப்பட்ட இடத்தில் ராமர் கோயில் கட்டுவதற்கு நீதிபதிகள் தீர்ப்பு வழங்கியுள்ளனர். இந்த தீர்ப்பின் மூலம் இந்தியாவின் மதசார்பற்ற அரசியல் சாசனச் சட்டத்திற்கு சவால் விட்டு நூற்றுக்கணக்கான உயிர்களை பறித்த, அச்சத்தையும் வெறுப்பையும் விதைத்த ஒரு இயக்கம் வெற்றிப் பெற்றுள்ளது.

துளசிதாசர் கண்டுபிடிக்காததை லக்னோ நீதிமன்றம் கண்டுபிடித்திருக்கின்றது!-சித்தார்த் வரதராஜன் (தி ஹிந்து நாளிதழின் துணை ஆசிரியர்)
16வது நூற்றாண்டில் அயோத்தியில் தான் துளசிதாசர் ராம் சரித் மனாஸ் நூலை எழுதினார். எனினும் அதில் ராமர் பிறந்த இடம் பற்றி எதுவுமே குறிப்பிடவில்லை. ஆனால் அதன் பின் ஐந்து நூற்றாண்டுகள் கழித்து இப்போது ராமர் பிறந்த இடத்தை லக்னோ நீதிமன்றம் இவ்வளவு துல்லியமாக கண்டுபிடித்திருக்கின்றது!
இந்தியாவில் அனைத்துச் சமுதாயத்தினருக்கும் அனைத்து வகையான நம்பிக்கைகளும் இருக்கலாம். ஆனால் சட்டத்தில் எது தவறு எது சரி என்பதைத் தீர்மானிப்பதற்கான நடுவராக அந்த நம்பிக்கை மாறிவிடக்கூடாது. அதே போல், வரலாற்றுத் தவறுகளைத் திருத்துவதும், நீதி வழங்குவதற்கான அடிப்படையாக இருக்கக்கூடாது.



இன்ஷா அல்லாஹ், அலகாபாத் உயர் நீதிமன்ற தீர்ப்பை கண்டித்தும், உச்சநீதிமன்றம் தானாக முன்வந்து இவ்வழக்கை மறுவிசாரணைக்கு உட்படுத்த கோரியும், ஜனவரி 4, 2011 அன்று தமிழகம் தழுவிய அளவில் சென்னையிலும், மதுரையிலும் மாபெரும்  கண்டன ஆர்ப்பாட்டம் ,இன்னமும் 28  நாட்களே உள்ளன. குடும்பத்துடன் அலைகடலென திரண்டு வாருங்கள் என அன்புடன் அழைக்கிறது, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டம்.

                                           

Thursday, January 20, 2011

காஷ்மீரில் கொடி ஏற்றும் உரிமை

 

காஷ்மீர்: தலித் குடும்பத்திற்கு பெண் கொடுக்காதவன் தேசத் துரோகி ! - Vianavu

no-india-no-pakistan-we-want-free-kashmir

இந்திய அரசு, இராணுவத்தின் அடக்குமுறைக்கு எதிராக காஷ்மீரில் நாளொரு மேனி பொழுதொரு வண்ணம் மக்கள் போராட்டம் தீவிரமடைந்து வருகிறது. துப்பாக்கி தோட்டக்களை வெறும் கற்களால் எதிர் கொண்டு சிறுவர் முதல் பெண்கள் வரை அங்கே உயிரைத் துச்சமென மதித்து போராடி வருகின்றனர். கடந்த மதங்களில் பல பத்து காஷ்மீர் மக்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர்.

இந்த அநீதியை எதிர்த்து அருந்ததிராய் குரல் கொடுத்ததால் அவரையே கைது செய்வதாக மிரட்டியது இந்திய அரசு. "காஷ்மீரின் விடுதலைக்கு குரல் கொடுத்த குற்றத்திற்காக என்னைக் கைது செய்ய வேண்டுமென்றால் இந்த குற்றத்தை இலட்சக்கணக்கான காஷ்மீர் மக்கள் அன்றாடம் தெருக்களில் செய்து வருகிறார்கள், முடிந்தால் அவர்களை கைது செய்து பாருங்கள்" என்று நெற்றியடி அடித்தார் அருந்ததி ராய். அதன் பிறகு தேசபக்தி குஞ்சுகள் ஒன்றும் சவுண்டு விடக் காணோம்.

ஆனால் தற்போது பா.ஜ.க என்ற பண்டாரங்களது கட்சி பெரியதாக ஒரு சவுண்டு விட்டிருக்கிறது. அதாவது வரும் ஜனவரி 26 குடியரசு நாளில் ஸ்ரீநகர் லால் சவுக்கில் இவர்கள் இந்தியாவின் மூவர்ணக் கொடியை ஏற்றப் போகிறார்களாம். "இந்திய அடக்குமுறையாளர்களே காஷ்மீரை விட்டு வெளியேறுங்கள்" என்று உரக்க குரல் கொடுக்கும் மக்களை வெறுப்பேற்றுவதற்கு பா.ஜ.க விற்கு கிடைத்திருக்கும் ஒரு ஆயுதம்தான் இந்த கொடியேற்று தேசபக்தி.

ஆயிரக்கணக்கான உறவுகளை பலிகொடுத்து விட்டு வீட்டை விட்டு தெருவில் இறங்கினால் துப்பாக்கிகளின் அடக்குமுறையில் வாழ்க்கையை கழிக்கும் அந்த மக்களின் போராட்டத்தை ஆதரிக்க வில்லை என்றாலும் இப்படி குரூரமாக குத்திக் கிழிக்க வேண்டிய அவசியம் என்ன?

ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணியின் தலைவர் யாசின் மாலிக் இந்த அயோக்கியத்தனத்தை எதிர்த்து அறிக்கை விட்டிருக்கிறார். பா.ஜ.க அப்படி கொடியேற்றும் முயற்சியை செய்தால் இந்தியத் துணைக் கண்டமே தீப்பிடித்து எரியும் என்று அவர் அதை கண்டித்திருக்கிறார். மேலும் பா.ஜ.க மத்தியில் ஆண்டபோது கூட அவர்கள் இதை செய்யவில்லை என்பதையும் சுட்டிக் காட்டுகிறார். உண்மைதான். இதிலிருந்து தேசபக்தி என்பது கூட எதிர்க்கட்சி அரசியல் நடவடிக்கைகளின்போது மட்டுமே பொங்கி வழியும் என்றாகிறது. இருக்கட்டும்.

உடனே நமது தேசபக்திக் குஞ்சுகள் " இந்தியாவின் தேசியக் கொடியை எங்கு வேண்டுமானலும் ஏற்றலாமே.. அது உரிமை, அதை எதிர்ப்பது தேச துரோகம்" என்று பொங்குவார்கள்.

அந்த கூ முட்டைகளுக்கு ஒன்றை புரியும் விதத்தில் சொல்வோம். தேசம் என்பது அந்த தேசத்தில் வாழும் மக்களைக் குறிக்கிறது. அப்படிப் பார்த்தால் இந்தியாவின் பெரும்பான்மை மக்கள் ஏழைகள் என்ற விதத்தில் வாழ்வைக் கழிக்க போராடுபவர்கள் யாரும் காஷ்மீர் மக்களின் நியாயமான கோரிக்கையை ஆதரிக்கத்தான் செய்வார்கள். ஏனெனில் இவர்களுக்கு இந்தியா என்ற நாடு எந்த வாழ்க்கையையும், விடுதலையையும் தந்துவிடவில்லை. இப்படி பெரும்பான்மை மக்களை அடக்கி ஆளும் மேட்டுக் குடி கும்பல்தான் இந்தியா என்பதை பட்டாப் போட்ட அவர்களது அப்பன் வீட்டு சொத்து போல ஆட்டம் போடுகிறது.

சரி, அவர்களது வாதப்படியே பார்ப்போம். இந்தியக் குடிமகன் என்ற "உரிமையில்" அவர்கள் ஸ்ரீநகரில் கொடி ஏற்றட்டும். அதே போல நாமும் வரும் ஜனவரி 26 அன்று இந்தியக் குடிமகன் என்ற "உரிமையில்"  கீழ்க்கண்ட சமத்துவ தேசபக்தி நடவடிக்கைகளில் ஈடுபடலாம்.

1.       கன்னியாகுமரியிலுள்ள மீனவர்கள் தங்களது உணவான மீனை எடுத்துக் கொண்டு விவேகானந்த கேந்திரத்திற்கு சென்று சமைத்து சாப்பிடுவார்கள். ஒரு இந்தியக் குடிமகன் தனது உணவை இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் எடுத்து சென்று சாப்பிடலாம். விவேகானந்தா கேந்திராவில் அசைவம் சாப்பிடக் கூடாது என்று எவனாவது தேச துரோகம் புரிந்தால் செருப்பு கிழியும்.

2.       நெல்லை மாவட்டம் கொடியங்குளம் கிராமத்தை சேர்ந்த ஒரு தலித் பக்தர் திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலுக்கு சென்று கருவறையில் நுழைந்து அப்பனை பூஜை செய்வார். ஒரு இந்தியன் இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் சென்று நுழைந்து பூஜை செய்வதற்கு உரிமை உண்டு. மறுப்பவர்களை உடண்டியாக தூக்கில் போட வேண்டும். கருணை மனு வெங்காயங்கள் எல்லாம் கிடையாது.

3.       ஜனவரி 26 அன்று இந்தியர்களின் உரிமையை நிலைநாட்டும் பொருட்டு மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த பெண்கள் சபரி மலைக்கு சென்று ஐயப்பன் கோவிலில் வழிபாடு செய்வார்கள். எந்தக் கபோதியாவது தடுத்தால் துடப்பக்கட்டை பிஞ்சு போகும்.

4.       26 அன்று பிற்படுத்தப்பட்ட சாதியைச் சேர்ந்த விவசாயிகள் அருப்புக் கோட்டையில் ஏக்கர் கணக்கில் நிலம் வைத்திருக்கும் நாயுடுகளிடமிருந்து நிலத்தை தேசபக்த்தியோடு கைப்பற்றி  இந்தியனாகப் பிறந்த எவருக்கும் இந்தியாவில் நிலம் இருக்க வேண்டும் என்ற உரிமையை நிலைநாட்டுவார்கள். இல்லை என்று சொன்னால் இரட்டை ஆயுள் தண்டனை.

5.       இந்த பொன்னாளில் திருச்சி ஸ்ரீரங்கத்தில் இருக்கும் அய்யங்கார் அக்ரகாரத்திற்கு பெண் கேட்டு சமயபுரத்தை சேர்ந்த பறையர்களாக இருக்கும் தலித்துகள் செல்வார்கள். இந்தியாவில் பிறக்கும் எவரும் எவரையும் மணப்பதற்கு உரிமை உண்டு. அதன்படி தலித்துக்களின் மண உரிமையை யாராவது மறுத்தால் அவர்களை பாக்கிஸ்தானுக்கு நாடு கடத்த வேண்டும்.

6.       கோயம்புத்தூர் கொங்கு வேளாளக் கவுண்டர்களது மாளிகைகளுக்கு ஜனவரி 26 அன்று அருந்ததி இளைஞர்கள் பெண் பார்த்து மணம் முடிப்பதற்கு வருவார்கள். கூட வரும் நகர சுத்தி வேலை செய்யும் அவர்களது பெற்றோர்கள் முறைப்படி பேசுவார்கள். " பீ அள்ளுற சக்கிலிப் பயலுக்கு கவுண்டன் பொண்ணு கேக்குதா" என்று எவனாவது சவுண்டு விட்டால் அவனது நாக்கை அங்கேயே அறுப்போம். இல்லையேல் இந்தியாவில் சமத்துவ உரிமை இல்லை என்றாகிவிடும். என்ன இருந்தாலும் இந்திய தேசபக்தி முக்கியமில்லையா!

7.       நமது சிவனடியார் ஆறுமுகசாமியை சங்கர மடத்தில் சங்கராச்சாரி ஆக்குவதற்கு இதே 26 அன்று பெரும் ஊர்வலத்துடன் காஞ்சிபுரம் வருவோம். எங்கள் சாமியாரின் அர்ப்பணிப்பும், பக்தியும் அந்த பன்னாடை ஜெயேந்திரனது பொம்பிளை பொறுக்கித்தனங்களோடு ஒப்பிட முடியாது. எனவே இந்தியாவில் பிறந்த எவரும் சங்கரமடத்தில் சங்கராச்சாரியாக ஆக முடியும் என்ற உரிமையை நிலை நாட்ட அன்றைக்கு வந்தே தீருவோம். இதை சங்கரசாச்சாரி மறுத்தால் அவரை மடத்தோடு சேர்த்து இந்திய அரசு சொந்த செலவில் புல்டோசர் வைத்து இடித்து தரைமட்டமாக்க வேண்டும் !

8.       இந்தியா குடியரசாக மலர்ந்த இந்த திருநாளில் சென்னை பழைய மகாபலிபுரம் சாலையில் இருக்கும் செம்மஞ்சேரி மக்கள் தமது இருப்பிடத்தைக்காலி செய்து விட்டு மேற்கு மாம்பலம் பார்ப்பனர்கள் வீட்டில் குடியேற வேண்டும். பதிலுக்கு மேற்கு மாம்பலம் பார்ப்பனர்களை சைதாப்பேட்டை கூவத்தின் கரையில் குடிசைகளை போட்டு குடியேற வைக்க வேண்டும். இந்த எக்ஸ்சேன்ஞ் மேளா மூலம்தான் உண்மையான சமத்துவத்தை இந்தியாவில் படைக்க முடியும். மறுப்பவர்களை காஷ்மீரிலோ அல்லது மணிப்பூருக்கோ நாடு கடத்த வேண்டும்.

9.       இந்த உன்னதமான நாளில் இந்தியாவிலேயே பணக்கார வசதிகளோடு வாழும் காஷ்மீர் பண்டிட் அகதிகளை டெல்லியிலிருந்து காலி செய்து கும்மிடிப்பூண்டி முகாமில் உள்ள ஈழ முகாமிற்கு அனுப்ப வேண்டும். அதே போல அந்த முகாமில் உள்ள அகதிகளை டெல்லியில் உள்ள ஹடெக் பண்டிட்களின் குடியிருப்புக்கு அனுப்ப வேண்டும். இப்படித்தான் இந்தியாவில் உள்ள அகதிகளின் உரிமையில் கூட  நாம் சமத்துவத்தை கொண்டு வரமுடியும். மறுப்பவர்கள் ராமேஸ்வரம் கடலில் இறக்கிவிட வேண்டும் அதற்கு மேல் ராஜபக்சேவின் சிங்கள கடற்படை உரிமையோடு பார்த்துகொள்ளும்.

10.   பெங்களூருவில் உள்ள விஜய் மல்லையாவின் கிங் பிஷர் ஆலையை இனிமேல் அதே ஊரில் உள்ள ஒரு செருப்பு தைக்கும் தொழிலாளி எடுத்து நடத்துவார். பதிலுக்கு மல்லையா இனி செருப்பு தைத்து தனது வாழ்க்கையை ஓட்ட வேண்டும். இந்தியாவில் உள்ள எல்லாரும் எல்லாத் தொழில்களையும் பாகுபாடு இல்லாமல் செய்யும் உரிமையை இதன் மூலம் நிரூபிக்கமுடியும்.

இதையெல்லாம் செய்வதற்கு துப்பிருந்தால் காஷ்மீரில் கொடி ஏற்றும் உரிமையை பற்றி பேசு !

Wednesday, January 19, 2011

பரிணாமவியல் - அறிவியலாளர்களிடம் ஏன் இவ்வளவு கருத்து வேறுபாடுகள்?


 
 
 

 
 

பரிணாமவியல் - அறிவியலாளர்களிடம் ஏன் இவ்வளவு கருத்து வேறுபாடுகள்?






அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பர காத்துஹு...


உங்கள் அனைவர் மீதும் எல்லாம் வல்ல இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...ஆமின்..

பரிணாம வளர்ச்சி கோட்பாடு முன்வைக்கப்பட்ட காலத்திலிருந்தே அது மிகப் பெரிய சர்ச்சையை உருவாக்கி வந்திருக்கிறது.

கடவுள் தான் அனைத்து உயிரினங்களையும் படைத்தார் என்று கூறுபவர்கள் முன் வைக்கும் வாதங்களுக்கு சரியான பதிலை, பரிணாமவியலை ஆதரிக்கும் அறிவியலாளர்கள் எடுத்து வைக்கவில்லை என்பது, இது ஏற்றுக்கொள்ளப் படாததற்கு ஒரு காரணம்.

மற்றொரு காரணம், இது சம்பந்தமாக அறிவியலாளர்களிடம் ஒருமித்த கருத்து இல்லை என்பது.

சென்ற ஆண்டு செப்டம்பர் மாதம், பிரிட்டனின் பிரபல தினசரியான "தி டெய்லி டெலிகிராப்" ஒரு சுவாரசியமான கட்டுரையை தன் இணைய தளத்தில் வெளியிட்டிருந்தது.

பரிணாமவியலை ஆதரிப்பவர்கள், தாங்கள் அதை ஆதரிப்பதற்கு மிக முக்கிய ஐந்து காரணங்களாக என்ன சொல்கிறார்கள்?, அது போல, பரிணாமவியலை எதிர்ப்பவர்கள் தாங்கள் அதை எதிர்ப்பதற்கு என்ன காரணங்களை சொல்லுகிறார்கள் என்று அந்த கட்டுரையில் பட்டியலிட்டு இருந்தார்கள்.



பரிணாமவியலை எதிர்ப்பவர்கள், அதனை எதிர்ப்பதற்கு முக்கிய காரணங்களில் முதன்மையானது என்று சொல்லி, அவர்கள் கூறியிருந்த தகவல் என்னை கவனிக்க வைத்தது. 

"பரிணாமத்திற்கு ஒரு ஆதாரமும் இல்லை, அப்படி அது நடந்திருந்தால் நமக்கு நிறைய உயிரினப்படிவங்கள் (Transitional Fossils) கிடைத்திருக்கும். ஆனால் இது வரை ஒன்று கூட கிடைக்கவில்லை.
அதாவது, அறிவியலாளர்களால், இதுவரை கிடைத்த உயிரினப்படிவங்களை வைத்து, மீன்கள் நிலநீர்வாழ் உயிரினங்ளாக மாறின; அல்லது அந்த நிலநீர்வாழ் உயிரினங்கள், ஊரும் பிராணிகளாக மாறின; அல்லது அந்த ஊரும் பிராணிகள், பறவைகளாகவும் பாலூட்டிகளாகவும் மாறின என்று நிரூபிக்க முடியாது" --- British Daily "THE DAILY TELEGRAPH", dated 9th Sep, 2009.
"There is no evidence that evolution has occurred because no transitional forms exist in fossils i.e. scientists cannot prove with fossils that fish evolved into amphibians or that amphibians evolved into reptiles, or that reptiles evolved into birds and mammals " --- British Daily "THE DAILY TELEGRAPH", dated 9th Sep, 2009.



இதை குறிப்பிட்டுவிட்டு அவர்கள் சொன்ன தகவல் தான் கவனிக்கப்பட வேண்டியது, 

"இது போன்று ஆதாரங்கள் இல்லையென்பதால் தான், ஆச்சர்யமளிக்கும் வகையில், தற்காலத்திய அறிவியலாளர்களில் குறிப்பிடதக்கவர்கள் "படைப்பு கோட்பாடை (Creation Theory)" நம்புகின்றனர்" 
"Perhaps becuase of this a surprising number of contemporary scientists support the Creation theory "
என்று கூறி அந்த அறிவியலாளர்கள் யார், யார் என்பதற்கு ஒரு சுட்டியை கொடுத்திருந்தனர். 

அந்த அறிவியலாளர்களில் மிக அதிகமானோர்,  
  • Biology, 
  • Molecular Biology, 
  • Microbiology, 
  • Bio-chemistry, 
  • Organic Chemistry, 
  • Genetics, 
  • Archaelogy and Palaeontology, or 
  • Reproductive Physiology
என்று பரிணாமவியல் சார்ந்த துறைகளில் தனித்துவம் (Specialist) பெற்றவர்கள்.  

   
அவர்களின் பட்டியல் இதோ,        
  1. Dr. Paul Ackerman, Psychologist
  2. Dr. E. Theo Agard, Medical Physics
  3. Dr. James Allan, Geneticist
  4. Dr. Steve Austin, Geologist
  5. Dr. S.E. Aw, Biochemist
  6. Dr. Thomas Barnes, Physicist
  7. Dr. Geoff Barnard, Immunologist
  8. Dr. Don, Batten, B.Sc.Agr. (Hons 1), Ph.D.,--Plant Physiology, Expert in environmental adaptation of tropical fruit
  9. Dr. Donald Baumann, Solid State Physics, Professor of Biology and Chemistry, Cedarville University
  10. Dr. John Baumgardner, Electrical Engineering, Space Physicist, Geophysicist, expert in supercomputer modeling of plate tectonics
  11. Dr. Jerry Bergman, Psychologist
  12. Dr. Kimberly Berrine, Microbiology & Immunology
  13. Prof. Vladimir Betina, Microbiology, Biochemistry & Biology
  14. Dr. Raymond G. Bohlin, Biologist
  15. Dr. Andrew Bosanquet, Biology, Microbiology
  16. Edward A. Boudreaux, Theoretical Chemistry
  17. Dr. David Boylan, Chemical Engineer
  18. Prof. Stuart Burgess, Engineering and Biomimetics, Professor of Design & Nature, Head of Department of Mechanical Engineering, University of Bristol (UK)
  19. Prof. Linn E. Carothers, Associate Professor of Statistics
  20. Dr. Robert W. Carter, PhD Marine Biology
  21. Dr. David Catchpoole, Plant Physiologist (read his testimony)
  22. Prof. Sung-Do Cha, Physics
  23. Dr. Eugene F. Chaffin, Professor of Physics
  24. Dr. Choong-Kuk Chang, Genetic Engineering
  25. Prof. Jeun-Sik Chang, Aeronautical Engineering
  26. Dr. Donald Chittick, Physical Chemist
  27. Prof. Chung-Il Cho, Biology Education
  28. Dr. John M. Cimbala, Mechanical Engineering
  29. Dr. Harold Coffin, Palaeontologist
  30. Dr. Bob Compton, DVM
  31. Dr. Ken Cumming, Biologist
  32. Dr. Jack W. Cuozzo, Dentist
  33. Dr. William M. Curtis, III, Th.D., Th.M., M.S. Aeronautics & Nuclear Physics
  34. Dr. Malcolm Cutchins, Aerospace Engineering
  35. Dr. Lionel Dahmer, Analytical Chemist
  36. Dr. Raymond V., M.D. Damadian, Pioneer of magnetic resonance imaging
  37. Dr. Chris Darnbrough, Biochemist
  38. Dr. Nancy M. Darrall, Botany
  39. Dr. Bryan Dawson, Mathematics
  40. Dr. Douglas Dean, Biological Chemistry
  41. Prof. Stephen W. Deckard, Assistant Professor of Education
  42. Dr. David A. DeWitt, Biology, Biochemistry, Neuroscience
  43. Dr. Don DeYoung, Astronomy, atmospheric physics, M.Div
  44. Dr. David Down, Field Archaeologist
  45. Dr. Geoff Downes, Plant Physiologist
  46. Dr. Ted Driggers, Operations research
  47. Robert H. Eckel, Medical Research
  48. Dr. André Eggen, Geneticist
  49. Dr. Leroy Eimers, Atmospheric Science, Professor of Physics and Mathematics, Cedarville University
  50. Dudley Eirich, Ph.D. molecular biologist, industrial genetic research
  51. Prof. Dennis L. Englin, Professor of Geophysics
  52. Prof. Danny Faulkner, Astronomy
  53. Dr. Dennis Flentge, Ph.D. Physical Chemistry, Professor of Chemistry and Chair of the Department of Science and Mathematics, Cedarville University
  54. Prof. Carl B. Fliermans, Biology
  55. Prof. Dwain L. Ford, Organic Chemistry
  56. Prof. Robert H. Franks, Associate Professor of Biology
  57. Dr. Alan Galbraith, Watershed Science
  58. Dr. Paul Giem, Medical Research
  59. Dr. Maciej Giertych, Geneticist
  60. Dr. Duane Gish, Biochemist
  61. Dr. Werner Gitt, Information Scientist
  62. Dr. Steven Gollmer, Atmospheric Science, Professor of Physics
  63. Dr. D.B. Gower, Biochemistry
  64. Dr. Robin Greer, Chemist, History
  65. Dr. Dianne Grocott, Psychiatrist
  66. Dr. Stephen Grocott, Industrial Chemist
  67. Dr. Donald Hamann, Food Scientist
  68. Dr. Barry Harker, Philosopher
  69. Dr. Charles W. Harrison, Applied Physicist, Electromagnetics
  70. Dr. John Hartnett, Physicist and Cosmologist
  71. Dr. Mark Harwood, Satellite Communications
  72. Dr. Joe Havel, Botanist, Silviculturist, Ecophysiologist
  73. Dr. George Hawke, Environmental Scientist
  74. Dr. Margaret Helder, Science Editor, Botanist
  75. Dr. Larry Helmick, Organic Chemistry, Professor of Chemistry
  76. Dr. Harold R. Henry, Engineer
  77. Dr. Jonathan Henry, Astronomy
  78. Dr. Joseph Henson, Entomologist
  79. Dr. Robert A. Herrmann, Professor of Mathematics, US Naval Academy
  80. Dr. Andrew Hodge, Head of the Cardiothoracic Surgical Service
  81. Dr. Kelly Hollowell, Molecular and Cellular Pharmacologist
  82. Dr. Ed Holroyd, III, Atmospheric Science
  83. Dr. Bob Hosken, Biochemistry
  84. Dr. George F. Howe, Botany
  85. Dr. Neil Huber, Physical Anthropologist
  86. Dr. Russell Humphreys, Physicist
  87. Dr. James A. Huggins, Professor and Chair, Department of Biology
  88. Evan Jamieson, Hydrometallurgy
  89. George T. Javor, Biochemistry
  90. Dr. Pierre Jerlström, Creationist Molecular Biologist
  91. Dr. Arthur Jones, Biology
  92. Dr. Jonathan W. Jones, Plastic Surgeon
  93. Dr. Raymond Jones, Agricultural Scientist
  94. Dr. Valery Karpounin, Mathematical Sciences, Logics, Formal Logics
  95. Dr. Dean Kenyon, Biologist
  96. Prof. Gi-Tai Kim, Biology
  97. Prof. Harriet Kim, Biochemistry
  98. Prof. Jong-Bai Kim, Biochemistry
  99. Prof. Jung-Han Kim, Biochemistry
  100. Prof. Jung-Wook Kim, Environmental Science
  101. Prof. Kyoung-Rai Kim, Analytical Chemistry
  102. Prof. Kyoung-Tai Kim, Genetic Engineering
  103. Prof. Young-Gil Kim, Materials Science
  104. Prof. Young In Kim, Engineering
  105. Dr. John W. Klotz, Biologist
  106. Dr. Vladimir F. Kondalenko, Cytology/Cell Pathology
  107. Dr. Felix Konotey-Ahulu, Physician, leading expert on sickle-cell anemia
  108. Dr. Leonid Korochkin, M.D., Genetics, Molecular Biology, Neurobiology
  109. Dr. John K.G. Kramer, Biochemistry
  110. Dr. Johan Kruger, Zoology
  111. Dr. Wolfgang Kuhn, biologist and lecturer
  112. Dr. Heather Kuruvilla, Plant Physiology, Senior Professor of Biology, Cedarville University
  113. Prof. Jin-Hyouk Kwon, Physics
  114. Prof. Myung-Sang Kwon, Immunology
  115. Dr. John Leslie, Biochemist
  116. Prof. Lane P. Lester, Biologist, Genetics
  117. Dr. Jean Lightner, Agriculture, Veterinary science
  118. Dr. Jason Lisle, Astrophysicist
  119. Raúl E López, meteorologist
  120. Dr. Alan Love, Chemist
  121. Dr. Ian Macreadie, Molecular Biologist and Microbiologist
  122. Dr. John Marcus, Molecular Biologist
  123. Dr. George Marshall, Eye Disease Researcher
  124. Dr. Ralph Matthews, Radiation Chemistry
  125. Dr. Mark McClain, Inorganic Chemistry, Associate Professor of Chemistry
  126. Dr. John McEwan, Organic Chemistry
  127. Prof. Andy McIntosh, Combustion theory, aerodynamics
  128. Dr. David Menton, Anatomist
  129. Dr. Angela Meyer, Creationist Plant Physiologist
  130. Dr. John Meyer, Physiologist
  131. Dr. Douglas Miller, Professor of Chemistry
  132. Dr. Albert Mills, Reproductive Physiologist, Embryologist
  133. Robert T. Mitchell, specialist in Internal Medicine and active speaker on creation
  134. Colin W. Mitchell, Geography
  135. Dr. John N. Moore, Science Educator
  136. Dr. John W. Moreland, Mechanical Engineer and Dentist
  137. Dr. Henry M. Morris, Hydrologist
  138. Dr. John D. Morris, Geologist
  139. Dr. Len Morris, Physiologist
  140. Dr. Graeme Mortimer, Geologist
  141. Stanley A. Mumma, Architectural Engineering
  142. Prof. Hee-Choon No, Nuclear Engineering
  143. Dr. Eric Norman, Biomedical researcher
  144. Dr. David Oderberg, Philosopher
  145. Prof. John Oller, Linguistics
  146. Prof. Chris D. Osborne, Assistant Professor of Biology
  147. Dr. John Osgood, Medical Practitioner
  148. Dr. Charles Pallaghy, Botanist
  149. Dr. Gary E. Parker, Biologist, Cognate in Geology (Paleontology)
  150. Dr. David Pennington, Plastic Surgeon
  151. Dr. Mathew Piercy, anaesthetist
  152. Dr. Terry Phipps, Professor of Biology
  153. Dr. Jules H. Poirier, Aeronautics, Electronics
  154. Prof. Richard Porter--World authority on the human spine
  155. Dr. Georgia Purdom, Molecular Genetics
  156. Dr. John Rankin, Cosmologist
  157. Dr. A.S. Reece, M.D.
  158. Prof. J. Rendle-Short, Pediatrics
  159. Dr. Jung-Goo Roe, Biology
  160. Dr. David Rosevear, Chemist
  161. Dr. Ariel A. Roth, Biology
  162. Dr. Ron Samec, Astronomy
  163. Dr. Jonathan D. Sarfati, Physical chemist / spectroscopist
  164. Dr. Joachim Scheven, Palaeontologist
  165. Dr. Ian Scott, Educator
  166. Dr. Saami Shaibani, Forensic Physicist
  167. Dr. Young-Gi Shim, Chemistry
  168. Prof. Hyun-Kil Shin, Food Science
  169. Dr. Mikhail Shulgin, Physics
  170. Dr. Emil Silvestru, Geologist/karstologist
  171. Dr. Roger Simpson, Engineer
  172. Dr. Harold Slusher, Geophysicist
  173. Dr. E. Norbert Smith, Zoologist
  174. Dr. Andrew Snelling, Geologist
  175. Prof. Man-Suk Song, Computer Science
  176. Dr. Timothy G. Standish, Biology
  177. Prof. James Stark, Assistant Professor of Science Education
  178. Prof. Brian Stone, Engineer
  179. Dr. Esther Su, Biochemistry
  180. Dr. Dennis Sullivan, Biology, surgery, chemistry, Professor of Biology, Cedarville University
  181. Charles Taylor, MA., Ph.D., PGCE, LRAM, FIL., Cert. Theol., Linguist & Theologian
  182. Dr. Stephen Taylor, Electrical Engineering
  183. Dr. Ker C. Thomson, Geophysics
  184. Dr. Michael Todhunter, Forest Genetics
  185. Dr. Lyudmila Tonkonog, Chemistry/Biochemistry
  186. Dr. Royal Truman, Organic Chemist
  187. Dr. Larry Vardiman, Atmospheric Science
  188. Prof. Walter Veith, Zoologist
  189. Dr. Joachim Vetter, Biologist
  190. Dr. Tas Walker, Mechanical Engineer and Geologist
  191. Dr. Jeremy Walter, Mechanical Engineer
  192. Dr. Keith Wanser, Physicist
  193. Dr. Noel Weeks, Ancient Historian (also has B.S. in Zoology)
  194. Dr. A.J. Monty White, Chemistry/Gas Kinetics
  195. Dr. John Whitmore, Geologist/Paleontologist
  196. Dr. Carl Wieland, MD
  197. Dr. Lara Wieland, MD
  198. Arthur E. Wilder-Smith--Three science doctorates; a creation science pioneer
  199. Dr. Alexander Williams, Botanist
  200. Dr. Clifford Wilson, Psycholinguist and Archaeologist
  201. Dr. Kurt Wise, Palaeontologist
  202. Dr. Bryant Wood, Creationist Archaeologist
  203. Prof. Seoung-Hoon Yang, Physics
  204. Dr. Thomas (Tong Y.) Yi, Ph.D., Creationist Aerospace & Mechanical Engineering
  205. Dr. Ick-Dong Yoo, Genetics
  206. Dr. Sung-Hee Yoon, Biology
  207. Dr. Patrick Young, Chemist and Materials Scientist
  208. Prof. Keun Bae Yu, Geography
  209. Dr. Henry Zuill, Biology
இது, ஒரு அமைப்பிலிருந்து எடுக்கப்பட்ட பட்டியல் தானாம். அதுமட்டுமல்லாமல், குறிப்பிடத்தக்க அறிவியலாளர்கள், தாங்கள் படைப்பு கோட்பாடை நம்புகிறோம் என்று ஒப்புக்கொள்ள அச்சப்படுகிறார்களாம். ஏனென்றால், அப்படி தாங்கள் செய்தால் அதிக விமர்சனங்களை, அல்லது அதை விட மோசமான பின் விளைவுகளை சந்திக்க வேண்டி வரும் என்று நினைக்கிறார்களாம்.

இந்த அறிவியலாளர்கள் இருக்கட்டும், மற்ற அறிவியலாளர்களிடமாவது பரிணாமவியல் குறித்து கருத்து ஒற்றுமை இருக்கிறதாயென்றால், அதுவும் இல்லை. அவர்களும் Neo-Darwism, Punctuated Equilibrium மற்றும் Intelligent Design என்று பிரிந்து கிடக்கிறார்கள். ஒருவர் கருத்தை மற்றவர்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்.  

ஒரு கோட்பாடு உண்மையென்றால், ஏன் அறிவியலாளர்கள் இப்படி பிரிந்து கிடக்க வேண்டும்?

மொத்தத்தில், அறிவியலாளர்களிடம் இருக்கும் இந்த கருத்து வேற்றுமை, பரிணாமவியல் பற்றிய சர்ச்சைகளை மேலும் அதிகமாக்குகிறது.   

ஒரு ஆச்சர்யமுமில்லை, ஏன் இந்த கோட்பாடு இவ்வளவு விவாதங்களை சந்திக்கிறது என்பதற்கு....  


Second Picture taken from:
1. Atlas of Creation - Volume 1, Page No.757

My Sincere thanks to:
1. The Daily Telegraph. wwwdottelegraph.co.uk  

References:
1. Creation film sparks evolution arguments - The DailyTelegraph, dated 9th September, 2009.
2. Do any qualified scientists support the creation theory? - Answers.com
3. Punctuated Equilibrium - pbs.org
4. Intelligent Design - New World Encyclopedia. 
5. Intelligent Design - Wikipedia.
6. What is the theory of Intelligent design - Discovery.org


உங்கள் சகோதரன், 
ஆஷிக் அஹ்மத் அ
aashiq.ahamed.14@gmail.com
 

ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதம்! அசீமானாந்தாவின் ஆதாரம்!!

 
ஒரு ஊரில் நல்ல கொழுத்த ஆடுகளைக் கொண்ட மந்தை ஒன்று இருந்தது. அம்மந்தைக்குக் காவலாய் ஒரு வேட்டை நாயும் இருந்தது. கொழுத்த ஆடுகளைக் கண்ட ஓநாய் ஒன்றுக்கு வாயில் எச்சில் ஊறியது. ஆடுகளை ஒவ்வொன்றாய்த் தின்ன தந்திரம் ஒன்றைச் செய்தது. அதன்படி, அது ஆட்டைப் போலவே தோற்றமளிக்கும் சட்டை ஒன்றைப் போட்டுக் கொண்டு மந்தைக்குள் ஊடுறுவியது. பின் தினமும் ஒரு ஆடாகத் தின்று வந்தது. மந்தையில் ஆடுகள் குறைந்து வருவதைக் கண்ட மேய்ப்பனுக்கு ஒன்றும் விளங்கவில்லை. ஒரு நாள், எல்லா ஆடுகளும் போய் கடைசியாக ஆட்டுச் சட்டை போட்ட ஓநாய் மட்டுமே மிஞ்சியது. இதுவாவது மிஞ்சியதே என்று ஆறுதல் பட்டுக் கொண்ட மேய்ப்பன் அதை மட்டுமாவது பாதுகாத்துக் கொள்ளலாம் என்று எண்ணி கையில் எடுத்தானாம். அப்போது பார்த்து சட்டை நழுவிக் கீழே விழுது உள்ளே பதுங்கியிருந்த ஓநாய் அம்பலப்பட்டதாம்

மேலே சொன்ன அம்புலிமாமாக் கதையின் வில்லனான ஓநாயின் இருபத்தோராம் நூற்றாண்டுப்  பதிப்பு தான் ஆர்.எஸ்.எஸ். இதில் ஒரு சிறப்பான விசயமென்னவென்றால்,  ஆர்.எஸ்.எஸ் ஓநாய் எந்தக் காலத்திலும் மனிதச் சட்டை எதையும் அணிந்து கொள்ளவில்லை. அப்பட்டமாகத் தனது இந்து பாசிச செயல் திட்டத்தை பகிரங்கமாக வெளிப்படுத்திக் கொண்டே அப்படியொரு சட்டையை அணிந்து கொண்டிருப்பதாக நம்மிடம் சொல்லியது. தாம் தேசபக்தர்கள் என்றும் நல்லவர்களென்றும் தம்மைத் தாமே அறிவித்துக் கொண்டார்கள். அதை மக்கள் நம்பினார்களோ இல்லையோ, இந்த அரசும் ஆளும் வர்க்கமும் மனதார நம்பியதோடு பரப்பவும் செய்தார்கள். கூடவே அது காட்டிய திசையிலெல்லாம் பாய்ந்து ஒநாயின் குற்றங்களுக்காக அப்பாவி ஆடுகளைப் பிடித்து ஓநாய் என்று அறிவித்ததோடு சிறையிலும் அடைத்திருக்கிறார்கள்.

2006ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் மகராஷ்ட்டிர மாநிலம் மாலேகான் நகரின் முசுலீம்கள் அடர்த்தியாய் வாழும் பகுதியில் நான்கு குண்டுகள் வெடித்தது. 2007ஆம் ஆண்டு மே மாதத்தில் ஆந்திரத் தலைநகர் ஹைதராபாத் மெக்கா மசூதியில் குண்டு வெடித்தது. அதேயாண்டு பிப்ரவரி மாதம் இந்தியா பாக்கிஸ்தான் இடையே ஓடும் சம்ஜவ்தா எக்ஸ்ப்ரஸ் இரயிலில் குண்டுகள் வெடித்தன. அதே ஆண்டு ராஜஸ்தான் மாநிலம் ஆஜ்மீர் ஷெரீப் தர்காவிலும் குண்டுகள் வெடித்தன. மேலே குறிப்பிட்ட குண்டு வெடிப்புகளில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டார்கள்; நூற்றுக்கணக்கானவர்கள் படுகாயம் அடைந்தார்கள்.

ஒவ்வொரு முறை குண்டுகள் வெடிக்கும் போதும் பார்ப்பன இந்துமதவெறி தலைக்கேறிய முதலாளித்துவ ஊடகங்கள் எந்த யோசனையுமின்றி இசுலாமிய

யோகி ஆதித்யநாத்
சமூகத்தை நோக்கி விரலை நீட்டின. அரசு தனது குண்டாந்தடிகளான போலீசு இராணுவத்தைக் கொண்டு இசுலாமியர்களின் குடியிருப்புப் பகுதிகளைச் சுற்றிவளைத்தது. அதிகாரப்பூர்வமான முறையிலும் அதிகாரப்பூர்வமற்ற முறையிலும் சட்ட ரீதியிலும் சட்டத்திற்கு விரோதமான முறைகளிலும் நூற்றுக்கணக்கான முசுலீம் இளைஞர்கள் கைது செய்யப்பட்டார்கள். கைது செய்யப்பட்டவர்கள் கடுமையான சித்தரவதைகளுக்கும் ஆளாக்கப்பட்டார்கள். அவர்களின் குடும்பங்கள் அலைக்கழிக்கப்பட்டன.

2006ஆம் ஆண்டு நடந்த மாலேகான் குண்டு வெடிப்பைத் தொடர்ந்து, மகாராஷ்டிர தீவிரவாதத் தடுப்புப் பிரிவு முதலில் அவசரகதியில் விசாரணை நடத்தி சிமி அமைப்பைச் சேர்ந்த ஒன்பது முசுலீம் இளைஞர்களைக் கைது செய்தது. மூன்று பேர் தேடப்படுவோர் பட்டியலில் இருந்தனர். தமது சொந்தங்களைப் பறிகொடுத்ததோடு மட்டுமின்றி பழியையும் சுமக்கும் அநீதியைக் கண்டு கொதித்தெழுந்த முசுலீம்கள் நடத்திய போராட்டங்களைத் தொடர்ந்து மகராஷ்டிர அரசு இதன் விசாரணையை சி.பி.ஐ வசம் ஒப்படைத்தது.

2007ஆம் ஆண்டு நடந்த சம்ஜவ்தா எக்ஸ்ப்ரஸ் குண்டு வெடிப்பில் 68 பேர் கொல்லப்பட்டார்கள்; 50 பேர் படுகாயம் அடைந்தார்கள். அது பாகிஸ்தானின் வெளியுறவுத் துறை அமைச்சர் குர்ஷித் கஸூரி அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த இந்தியா வந்திருந்த நேரமாகும். குண்டு வெடிப்பில் கொல்லப்பட்டவர்களை

சுனில் ஜோஷி
அடக்கம் செய்வதற்குள் பார்ப்பன-முதலாளித்துவ ஊடகங்கள் விசாரணையை நடத்தி தீர்ப்பையும் எழுதி விட்டன. ஒட்டு மொத்தமாக பத்திரிகைகள் "இது பாகிஸ்தான் சதி" என்று முன்மொழிய, அமெரிக்காவும் ஆமாம் இது ஹூஜி மற்றும் லஸ்கர் இ தொய்பாவின் சதி என்று வழி மொழிந்தது.

சம்ஜவ்தா குண்டு வெடிப்பைத் தொடர்ந்து அதில் பயன்படுத்தப்பட்ட ஆர்.டி.எக்ஸ் ரக வெடி பொருள்,  முன்னாள் இராணுவ அதிகாரி புரோஹித் கள்ளத்தனமாக

தயாநந்த் பாண்டே
ஜம்முவில் இருந்து வாங்கிக் கொடுத்ததாக இருக்கும் சாத்தியங்களைச் சுட்டி சில துப்புகள் கிடைத்தன. அதே போல் 2008ஆம் ஆண்டு நடந்த மலேகான் குண்டு வெடிப்பில், குண்டுகளை வெடிக்கச் செய்ய உதவிய மோட்டார் சைக்கிள் ஒன்று ஆர்.எஸ்.எஸ்ஸின் பரிவாரத்தைச் சேர்ந்த அபிநவ் பாரத் எனும் அமைப்பின் பிரக்யா சிங் தாக்கூர் எனும் பெண் சாமியாருக்குச் சொந்தமானது என்கிற துப்பும் கிடைத்தது.

இப்படிக் கிடைத்த ஆதாரங்களைக் கண்டு கொள்ளாமல் தான் போலீசு அவசர கதியில் முசுலீம்கள் மேல் ஆரம்பத்தில் பழியைப் போட்டு பல அப்பாவி இளைஞர்களைக் கைது செய்து சித்திரவதைக்குள்ளாக்கியது. இதில் ஒரு படி மேலே போன ஹைதரபாத் போலீசு, அவசர கோலத்தில் தான் கைது செய்த இளைஞர்கள் மேலான குற்றச்சாட்டுகளை உறுதிப்படுத்திக் கொள்ள போதுமான ஆதாரங்கள் இல்லாத நிலையிலும் அவர்களை வெளியில் விட மனமில்லாமல் வேறு பொய்க் கேசுகளைப் போட்டு உள்ளேயே வைத்துது.

இந்நிலையில் வழக்குகள் மத்திய புலனாய்வுத் துறைக்குச் சென்று இந்த குண்டு வெடிப்புகளில் பார்ப்பன பயங்கரவாதிகளின் தொடர்பு விரிவாக அலசப்படுகிறது. சென்ற வருடம் நவம்பர் 19ஆம் தேதி சுவாமி அசீமானந்தா எனப்படும் நாப குமார் சர்க்கார் எனும் ஆர்.எஸ்.எஸ் முழுநேர ஊழியர் (பிரச்சாரக்) கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறார். சரியாக ஒரு மாதம் கழித்து டிசம்பர் 18ஆம் தேதி தில்லி திஸ் ஹஸாரி மாஜிஸ்டிரேட் கோர்ட்டில் ஒப்புதல் வாக்குமூலம்

சந்தீர்ப டாங்கே
அளிக்கிறார். அந்த வாக்குமூலம் ஆர்.எஸ்.எஸ் அணிந்திருந்த ஓட்டைக் கோவணத்தையும் உருவியெறிந்து அம்மணமாய் நிறுத்தியுள்ளது.

அசீமானந்திற்கு இந்த மனமாற்றம் எப்படி நேர்ந்திருக்கும்? சாதாரணமாக ஒரு முழு நேர ஊழியரை ஆர்.எஸ்.எஸ் உருவாக்குவதற்கு, அல் காயிதா போன்ற தீவிரவாத அமைப்புகள் மனித வெடிகுண்டுகளைத் தயார் செய்யும் வழிமுறைகளைக் காட்டிலும் கச்சிதமான – கறாரான – உத்திரவாதமான வழிமுறைகளையே பின்பற்றுகின்றனர். கழுத்தை அறுத்தாலும் உண்மை வெளியாகிவிடாது என்பதை உறுதி செய்து கொண்ட பின்னரே இது போன்ற நாசவேலைகளுக்கு ப்ரச்சாரக்குகளைப் பயன்படுத்துவர்.

அசீமானந்தின் இந்த மனமாற்றம் அத்தனை லேசில் ஏற்பட்டிருக்க வாய்ப்பில்லை.

நீதிமன்றக்காவலின் இடையில் சில நாட்கள் ஹைதரபாத் சன்ச்சல்குடா சிறையில் அசீமானந் அடைக்கப்பட்டுள்ளார். அங்கே அவருக்குத் தேவையான பணிவிடைகள் செய்ததும் ஆறுதலாய் இருந்ததும் கலீம் எனும் முசுலீம் இளைஞன். தனது கூட்டாளிகள் இல்லாமல் தனித்து விடப்பட்ட 59 வயதான அசீமனந்தாவிற்கு தண்ணீர் எடுத்துக் கொடுப்பது, நாளிதழ்கள் கொண்டு வந்து கொடுப்பது போன்ற பல்வேறு சேவைகளை அந்த இளைஞன் தான் செய்துள்ளான். ஒரு சந்தர்பத்தில், தானும் தனது கூட்டாளிகளும் சதித்திட்டம் தீட்டி நிறைவேற்றிய ஹைதரபாத் குண்டு வெடிப்பிற்காகக் கைது செய்யப்பட்ட நூற்றுக்கணக்கான அப்பாவி முசுலீம் இளைஞர்களில் இந்த இளைஞனும் ஒருவன் எனும் உண்மை அசீமானந்திற்குத் தெரியவருகிறது.

இது அவருக்குள் கடுமையான மனவுளைச்சலையும் குற்ற உணர்ச்சியையும் ஏற்படுத்தியிருக்கிறது. அதற்குப்  பிராயச்சித்தம் செய்யும் விதமாகவே உண்மைகளை

ராம்ஜி
பகிரங்கமாக ஒப்புக் கொள்வதாக மாஜிஸ்டிரேட் முன்பாக அசீமானந் ஒப்புக்கொண்டுள்ளார். இது ஒரு காரணமாக இருக்கலாம் – ஆனால், இதுமட்டுமே முழுமையான காரணமாக இருக்கும் வாய்ப்புகள் குறைவு.

ஏனெனில், ஆர். எஸ். எஸ் ஒருவனுக்கு அளிக்கும் ஆரம்ப கட்டப் பயிற்சியே அவனது மனசாட்சியைக் கொன்று விட்டு மாஃபியா கும்பலின் பாணியில் உத்தரவுக்குக் கீழ்படியும் குணத்தை ஏற்படுத்தும் விதமாகத் தான் திட்டமிடப்பட்டுகிறது.  ஆர்.எஸ்.எஸில் புதிதாக சேரும் எவரும் ஷாகா எனப்படும் அவர்களது தினசரி ஒருமணி நேர பயிற்சி வகுப்புகளுக்குச் செல்ல வேண்டியது கட்டாயமாகும். எங்காவது இரகசிய மைதானங்களிலோ அல்லது ஆள் நடமாட்டம் குறைவான கோயில்களிலோ கூடும் அவர்கள், முதலில் உடற்பயிற்சி செய்வார்கள். பின்னர் இந்துத்வ பாசிசக்கதைகளை பேசி பயிற்சி கொடுப்பார்கள்.

ஆர்.எஸ்.எஸ்இன் இந்த ஷாகா பயிற்சியானது பொதுவில் கேள்விக்கிடமற்ற கட்டுபாட்டையும், அடிமைத்தன சிந்தனையையும் உருவாக்குவதில் முக்கியபங்காற்றுகிறது. மேலும் ஜனநாயகத்தின் வாசம் கூட இல்லாத ஆர்.எஸ்.எஸ் இயக்க நடைமுறைகள் இந்த அடிமைத்தன உளவியலை மேலும் வலுவாக்குகிறது.

ஆர். எஸ்.எஸ்ஸின் பயிற்சி முறைகள் நேரடியாக இத்தாலி பாசிஸ்ட் கட்சியிலிருந்து பெறப்பட்டது. இதற்காகவே பி.எஸ். மூஞ்சே எனும் உயர்மட்ட ஆர்.எஸ்.எஸ் தலைவர் 1930களில் இத்தாலிக்குப் பயணித்து முசோலினியைச் சந்தித்துள்ளார். அங்கு இருந்த பாசிஸ்டு பயிற்சி முகாம்களை நேரடியாக கவனித்து அதன் அடிப்படையிலிருந்தே ஆர்.எஸ்.எஸ்ஸின் ஷாகா வகுப்புகள் வடிவமைக்கப்பட்டது. இந்துத்துவ இயக்கங்களுக்கு பெனிட்டோ முசோலினியின் பாசிஸ்ட் கட்சியோடிருந்த தொடர்புகள் பற்றிய மார்ஸியா கஸோலரி என்பரின் விரிவான ஆய்வுகளும் வேறு பல ஆய்வாளர்களின் ஆய்வுக் கட்டுரைகளும் இணையத்தில்

புரோஹித்
வாசிக்கக் கிடைக்கிறது. ஆர்.எஸ்.எஸ்இன் இரண்டாவது தலைவரான கோல்வல்கர் ஹிட்லரை ஆதர்ச நாயகனாகவே வழிபட்டுள்ளார். இது குறித்த அவரது புத்தகம் இன்றும் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தால் விற்பனை செய்யப்படுகிறது.

புதிதாக சேரும் சாதாரண உறுப்பினர்களையே இந்தளவுக்குத் தயாரிக்கிறார்கள் எனில் முழு நேர ஊழியர்களான ப்ரச்சாரக்குகளை எந்தளவுக்குத் தீவிரமான பயிற்சிகளுக்கு உள்ளாக்கியிருப்பார்கள் என்பதை எவரும் புரிந்து கொள்ள முடியும். தானும் தனது கூட்டாளிகளும் வைத்த குண்டுகளால் கொல்லப்பட்ட நூற்றுக்கணக்கான அப்பாவிகளின் உயிரற்ற உடல்கள் ஏற்படுத்தாத குற்ற உணர்ச்சியை, அதனால் நாடெங்கும் கோடிக்கணக்கான அப்பாவி முசுலீம்கள் சுற்றிவளைக்கப்பட்டு மனவுளைச்சலுக்கு ஆளாக்கப்பட்ட போது ஏற்படாத குற்ற உணர்ச்சியை, பாதிக்கப்பட்ட ஒரு முசுலீம் இளைஞனின் நற்செயல்கள் ஏற்படுத்தியதென்று அசீமானந்த் குறிப்பிடுகிறார்.

இது உண்மையாகவும் இருக்கலாம். ஆனால், அந்த உண்மையை முழுமையாக்கும் முக்கியமான விஷயங்கள் சன்ச்சல்குடா சிறைச்சாலைக்கு வெளியேயும் இருந்திருப்பதற்கான வாய்ப்புகளை நாம் குறைத்து மதிப்பிட்டு விடமுடியாது. தற்போது தன்னோடு சதியில் ஈடுபட்டவர்கள் என்று ஆர்.எஸ்.எஸ் மத்தியக் கமிட்டி உறுப்பினர் இந்திரேஷ் குமார், மத்திய பிரதேச மாநில பிரச்சாரக்கான சுனில் ஜோஷி, இந்தூர் மாநகர பிரச்சாரக்கான சந்தீப் டாங்கே, மூத்த ப்ரச்சாரக் ராம்ஜி, மேல் மட்ட உறுப்பினர் சிவம் தாக்கத், முன்னாள் இராணுவ அதிகாரி புரோஹித், பிரச்சாரக் தேவேந்திர குப்தா, பிஜேபி எம்.பி யோகி ஆதித்யானந், குஜராத் விவேகானந்த சேவா கேந்திரத்தின் பாரத்பாய், மாநில அமைப்பாளர் டாக்டர் அசோக், இன்னொரு முக்கிய பிரமுகர் லோகேஷ் சர்மா, ராஜேஷ் மிஸ்ரா, சாமியார் தயானந் பாண்டே  ஆகிய பெயர்களை உதிர்த்திருக்கிறார்.

தேவேந்திர குப்தா
இதில் ஆர்.எஸ்.எஸ் மத்திய கமிட்டி உறுப்பினரான இந்திரேஷ் குமார் தான் குண்டு வெடிப்புகளைத் திட்டமிட்ட சதிக்குழுவுக்கு வழிகாட்டும் தலைவராக செயல்பட்டுள்ளார். திட்டங்களை நிறைவேற்றிய கீழ் மட்ட பயங்கரவாத அலகுகளுக்குத் தொடர்பாளராக சுனில் ஜோஷி இருந்துள்ளார். குறிப்பாக குஜராத் -  பரோடா – பெஸ்ட் பேக்கரி வழக்கில் சம்பந்தப்பட்ட இரண்டு பேரை சுனில் ஜோஷி தனது பொறுப்பில் வைத்து பாதுகாத்து வந்துள்ளார். ஒரு கட்டத்தில், அவர்கள் மாட்டிக் கொண்டால் இந்திரேஷ் குமாரும் மாட்டிக் கொள்ளும் வாய்ப்பு இருப்பதால் அவர்களைக் கொன்று போடும் படி அசீமானந்த் ஜோஷியிடம் சொல்லியிருக்கிறார்.

அதற்கு சில தினங்களுக்குள் டிசம்பர் 2007ஆம் ஆண்டு ஜோஷி தனது சக ஆர்.எஸ்.எஸ் குண்டர்களாலேயே கொல்லப்பட்டுள்ளார். இந்த வழக்கில் இது வரை ஆறு ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். விவகாரம் பெரியளவில் வெடித்து வருவதும், புலனாய்வுத் துறையினரின் விசாரணை ஒரு சங்கிலி போல் கீழ்மட்டத்தில் தொடங்கி மேல் மட்டம் வரை நீண்டு வருவதையும் யூகித்துக் கொண்ட ஆர்.எஸ்.எஸ் தலைமை தனது சொந்த உறுப்பினர்களையே கொல்வதற்கான உத்தரவைப் பிறப்பித்திருக்கக் கூடும்.

அசீமானந்தின் ஒப்புதல் வாக்குமூலத்திற்கு அப்பாவி கலீமின் நன்னடத்தை ஏற்படுத்திய குற்ற உணர்ச்சி ஒரு காரணமென்றால், ஜோஷியின் படுகொலை ஏற்படுத்தியிருக்கக் கூடிய மனக்கிலேசமும் முக்கியமான பங்காற்றியிருக்க வேண்டும். அசீமானந்தின் ஷாப்ரிதம் ஆஷ்ரமிற்கு ஆர்.எஸ்.எஸ்ஸின் முன்னாள் தலைவர் சுதர்சன் தொடங்கி இன்னாள் தலைவர் மோகன் பாகவத் வரை பல்வேறு உயர் மட்டத் தலைவர்கள் வருகை புரிந்துள்ளனர்.

தெட்டத் தெளிவாக ஆர்.எஸ்.எஸ் ஒரு பயங்கரவாத அமைப்பு என்பதற்கான ஆதாரங்களும், சாட்சியங்களும் இப்போது கிடைத்துள்ள நிலையிலும் இது வரை இந்த அரசு அதன் மேல் ஒரு சின்னத் துரும்பைக் கூட கிள்ளிப் போடவில்லை. ஒருவேளை ஏதேனும் நடவடிக்கை எடுக்கப்படுமானால், அது பாரதிய ஜனதா ஸ்பெக்ட்ரம்,

லோகேஷ் சர்மா
ஆதர்ஷ், காமென்வெல்த் உள்ளிட்ட ஊழல்களைக் குறித்து எழுப்பும் கூச்சலின் அளவைப் பொருத்து வாயை அடைப்பதற்கு மட்டும் பயன்படும்.

ஆனால், இந்த பயங்கரவாதிகள் மீதான நடவடிக்கைகளை காங்கிரசின் கைகளில் கொடுத்து விட்டு மக்கள் வெறுமனே வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது இக்கட்டுரையின் முதல் பத்தியில் சொல்லப்பட்டிருக்கும் அப்பாவி ஆடுகளின் வெகுளித்தனத்திற்கு ஒப்பானதாயிருக்கும். அந்த மந்தையின் மேப்பன் வேண்டுமானால் ஓநாய் புகுந்திருப்பதைப் புரிந்து கொள்ள முடியாத மூடனாயிருக்கலாம் – ஆனால், காங்கிரசு அப்பாவியும் அல்ல மூடனும் அல்ல. தேசத்தை ஏகாதிபத்தியங்களுக்குக் காட்டிக் கொடுக்கும் தனது லட்சியத்திற்கும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு அதன் வளங்களைத் திறந்து விடும் நடைமுறைக்கும் பாரதிய ஜனதாவாவும் வெகுவாக உதவுகிறதுஎன்பதால் பார்ப்பன பயங்கரவாதிகளின் எந்தச் செயலும் மன்னிக்கப்பட்டு விடும்.

இத்தனை நாட்களாக தேசத்தில் நிகழ்ந்த பல்வேறு குண்டு வெடிப்புச் சம்பவங்களை ஒட்டி பஜ்ரங் தள், ஏ.பி.வி.பி, சனாதன் சன்ஸ்தான், அபினவ் பாரத், வனவாசி கல்யாண் ஆஷ்ரம், விஷ்வ ஹிந்து பரிஷத் போன்ற பரிவார அமைப்புகளின் பெயர்கள் அம்பலப்பட்ட போதும், குருடர்கள் சேர்ந்து யானையைத் தடவிப் பார்த்து புரிந்து கொண்டதைப் போல இந்த பெயர்களைத் தனித் தனியே உச்சரித்து வந்தன முதலாளித்துவ ஊடகங்கள். ஆனால், ஆக்டோபஸின் கரங்கள் தனித்தனியே இயங்கினாலும் அதன் மூளை ஒன்றாக இருப்பதை போல, இந்த அமைப்புகளின் மூளையாகவும், மைய்யமாகவும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பே இருந்துள்ளது இப்போது அம்பலமாகியுள்ளது.

சாதாரணமாக குண்டுவெடிப்புகள் என்றால் உடனே அப்பாவி இசுலாமிய மக்கள் கைது செய்யப்படுவதும், பாக் சதி என்று ஊடகங்கள் கதை பின்னுவதுமான நாட்டில் இந்து பயங்கரவாதிகளின் குண்டு வெடிப்புகள் இத்தனை ஆதரங்களோடு வெளிப்பட்ட பிறகும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதிகளை தடை செய்ய வேண்டுமென்றோ, அவர்களது செயல்பாடுகள் முடக்கப்படவேண்டுமென்றோ யாரும் பேசுவதைக்கூட நாம் கேட்க முடிவதில்லை. காரணம் இந்து மதவெறி பயங்கரவாதம் என்பது இந்த நாட்டின் அமைப்பு முறையின் ஆசிர்வாதத்தோடு செயல்படுகிறது என்பதால் அதை எவரும் கண்டு கொள்வதில்லை.

ஆர்.எஸ்.எஸ் இந்த தேசத்து மக்களின் மேல் கட்டவிழ்த்து விட்டுள்ள பயங்கரவாதத்தை வெறும் சட்ட ரீதியிலான நடவடிக்கைகளின் மூலம் மட்டுமே எதிர் கொண்டு வெல்ல முடியாது. ஜனநாயகத்திலும், மதச்சார்பின்மையிலும் நம்பிக்கை கொண்டவர்கள் இதை மக்களிடம் எடுத்துச் செல்ல வேண்டும். அவர்களின் கணக்குகள் தெருவில் வைத்துத் தீர்க்கப்பட வேண்டும். இடையில் காக்கி டவுசரோடும் கையில் குண்டாந் தடியோடும் தெருவில் நடமாடும் ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதிகளுக்கு மக்கள் தெருவிலேயே பாடம் புகட்டும் நாளில் தான் இந்த நச்சுப் பாம்புகளின் கொட்டம் அடங்கும்.

http://www.tehelka.com/story_main48.asp?filename=Ne150111Coverstory.asp

Six C's of Character - Yasir Fazaga