Search This Blog

Showing posts with label tamil article. Show all posts
Showing posts with label tamil article. Show all posts

Thursday, August 12, 2010

நபிகள் நாயகம் பற்றி கூறும் பைபிள்--02


எமது முதல் தொடரில் "ஜே" தொடர்பான எழுத்து மாராட்டங்கள், பெயர்களை தங்கள் விருப்பம் போல் மாற்றுவது தொடர்பான செய்திகள்வெளீயிடப்பட்டிருந்தன,                                                                                                                                     அதன் அடுத்த தொடரை இங்கு வாசிக்கலாம்                                                                                                                                                                                                                                                    
                                                   யேசு அந்நாளில் எழுப்பப்படும் போது இவ்வுலகில் அவரின் பெயரைக்கொண்டு தங்களது காரியங்களைச் செய்தவர்களைப்பார்த்து அவர் கூறுவார், என்னை விட்டு அகன்று போங்கள், என்னை விட்டு ஒதுங்கிக்கொள்ளுங்கள்....
இந்த நடத்தையை, காட்சியை பைபிள் படம்பிடித்துக் காட்டுகின்றது
                                                                                "இறுதி நாளன்று பலர் என்னிடம் "நீரேஎங்கள் கர்த்தர்உம்மைப் போற்றினோம்அசுத்த ஆவிகளை உம் பெயரால்விரட்டினோம்அற்புதங்கள் பல செய்தோம் என்று கூறுவார்கள்அவர்களிடம் நான்'என்னை விட்டு விலகுங்கள்தவறு செய்தவர்கள் நீங்கள்உங்களை எனக்குத்தெரியாதுஎன்று வெளிப்படையாகவே சொல்வேன்.      (மத்தேயு 7 : 22-23)

இந்த வார்த்தைகள் எந்த ஒரு முஸ்லிமுக்குக்கோ, இந்துவுக்கோ அல்லது ஏனைய மதத்தவர்களுக்கு பொருந்தாது, ஆனால் கிறிஸ்தவர்களை மட்டுமே குறித்துச் சொல்லுவதாக அமையும்,
இன்று பகிரங்க மேடைகள் போட்டு, இயேசு கிறிஸ்துவின் நாமத்தால் என்று அவரது பெயரைக்கொண்டு அற்புதங்களை நிகழ்த்துவர்களை, மக்களை அதிகமாக,  ஏமாற்றுபவர்களை பரவலாக காணமுடிகிறது.

இப்படிப்பட்டவர்களுக்குத் தான் இந்த இயேசு கிறிஸ்துவின் முன்னெச்சரிக்கைகளாகும் என்பதை கிறிஸ்தவ நண்பர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.
அந்த நாளில் ஈஸா (அலை) அவர்களைப் பார்த்ததும் ஜீசஸ், ஜீசஸ் என்று கிறிஸ்தவர்களெல்லாம் கூடி அழைத்தால் அவர் யார் ஜீஸ்ஸ் என்று திரும்பிப் பார்க்கும் நிலை வரும்.
அந்தளவுக்கு பெயர் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது.
அதுபோல் தான் பீட்டர் என்பதும், அவரது வாழ்க்கையில் ஒருநாளும் அவரை அல்லது அவராகவே தன்னை பீட்டர் என்று அறிமுகப்படுத்தியிருக்கமாட்டார். அவரது உண்மையான பெயர் 'சைமன் கீபஸ்'
இவ்வாறு பெயர்களை மாற்றியதனால் உண்மையான பெயர்கள் இல்லாது போய்விட்டன.
மசாயா ஜீசஸாக மாறிவிட்ட்து, அந்த பெயரை அல்குர் ஆன் ஈஸா அலை என்றே அறிமுகப்படுத்துகின்றது.
முஹம்மத் (ஸல்) அவர்களின் வருகையை முன்னைய வேதங்களில் முன்னறிவிப்பு செய்த்தாக அல்லாஹ் அல் குர்ஆனில் எமக்கு ஞாபகமூட்டுகின்றான்.

وَإِذْ قَالَ عِيسَى ابْنُ مَرْيَمَ يَا بَنِي إِسْرَائِيلَ إِنِّي رَسُولُ اللَّهِ إِلَيْكُم مُّصَدِّقاً لِّمَا بَيْنَ يَدَيَّ مِنَ التَّوْرَاةِ وَمُبَشِّراً بِرَسُولٍ يَأْتِي مِن بَعْدِي اسْمُهُ أَحْمَدُ فَلَمَّا جَاءهُم بِالْبَيِّنَاتِ قَالُوا هَذَا سِحْرٌ مُّبِينٌ [الصف : 6
"இஸ்ராயீலின் மக்களே! நான் உங்களுக்கு (அனுப்பப்பட்ட) அல்லாஹ்வின் தூதர். எனக்கு முன்சென்ற தவ்ராத்தை உண்மைப்படுத்துபவன். எனக்குப் பின்னர் வரவுள்ள அஹ்மத் என்ற பெயருடைய தூதரைப் பற்றி நற்செய்தி கூறுபவன்"என்று மர்யமின் மகன் ஈஸா கூறியதை நினைவூட்டுவீராக! அவர்களிடம் தெளிவான சான்றுகளைக் கொண்டு வந்த போது "இது தெளிவான சூனியம்" எனக் கூறினர்"                                               (அல்குர் ஆன் 61 – 6)
முஹம்மத்  மற்றும் அஹமத் ஆகிய இரண்டும் ஒரே பெயர்கலாகும்.
ஆனால் இன்றைய கிறிஸ்துவ பைபிள் மொழிபெயர்ப்புக்களில் 'முஹம்மதோ அஹம்மதோ'காணக்கிடைப்பதில்லை.
ஆனால் அதனை பைபிள் வேரு ஒரு இடத்தில் உறுதிப்படுத்துகின்றது:
                                                                                                                 "நான் உண்மையைச் சொல்லிக்கொண்டிருகிறேன். நான் போவது உங்களுக்கு நன்மையைத் தரும். ஏனென்றால் நான் போனால், உதவியாளரை அனுப்புவேன். நான் போகாவிட்டால் அந்த உதவியாளர் வரமாட்டார். அவர் வரும்போது இவற்றைப்பற்றி உண்மைகளையெல்லாம் உலகிலுள்ள மக்களுக்கு நிரூபிப்பார். அதோடு பாவத்தின் குற்றம் பற்றியும், நியாயத்தீர்ப்பு பற்றியும் விலக்குவார்."   (யோவான் 16 : 7 - 8)

 இயேசு கிறிஸ்து என்கின்ற ஈசா (அலை) அவர்கள் இங்கு சொல்லுகிற அந்த தீர்க்கதரசி, அல்லது தேற்றரவாளன் முஹம்மது (ஸல்) அவர்கள் மாத்திரமே.
ஆனால் அந்த தீர்க்கதரசி பரிசுத்த ஆவி தான் என்று கிறிஸ்துவ அறிஞர்கள் சொல்லுகிறரகள், ஆனால் பைபிளின் மூலப் பிரதியைப் பார்த்தால்  பரிசுத்த ஆவி என்பதற்கு இந்த சொல் பாவிக்கப்படுவதாக எங்கும் காணக்கிடைப்பதில்லை.

ஆனால் கிறிஸ்தவர்களின் வாதப்படி அது பரிசுத்த ஆவிதான் என்றால், இங்கு பாருங்கள்; மேலே சொன்ன வசனத்தின் படி: "ஏனென்றால் நான் போனால், உதவியாளரை அனுப்புவேன். நான் போகாவிட்டால் அந்த உதவியாளர் வரமாட்டார்."  நான் போனால்தான் அவர் வருவார், நான் போகாவிட்டால் அவர் வர மாட்டார். என்று சொல்லும் போது எப்படி பரிசுத்த ஆவி அந்த வாக்குக்கு சம்பந்தப்படுத்த முடியும்? பைபிளில் இடம்பெருகின்ற பரிசுத்த ஆவியுடைய வரலாற்றை ஆராய்கின்ற போது பரிசுத்த ஆவி இயேசுவுடைய பிறப்புக்கு  முன்னர் இருந்திருக்கிறது. இயேசுவுடனும் இருந்திருக்கிறது, அப்படி இருக்கும் போது எப்படி இந்த வசனத்திற்கு பரிசுத்த ஆவிதான் வரப்போதும் தேற்றரவாளன் என்று சொல்ல முடியும்?                                                                                    

****இது ஒரு changesdo.com யின் படைப்பு****                                                                          

தொடரும்.........

http://changesdo.blogspot.com/2010/08/02.html                                                                                
 

Monday, July 26, 2010

பராஅத் இரவு என்ற பெயரில்..

பராஅத் இரவு என்ற பெயரில்..

எழுதியவர்/பதிந்தவர்/உரை மௌலவி இம்தியாஸ் ஸலஃபி

- இம்தியாஸ் ஸலபி

இஸ்லாத்தின் பெயரால் முஸ்லிம்கள் கடை பிடிக்கும் அமல்கள் (செயற்பாடுகள்) ஏராளம். அல்லாஹ்வும், அல்லாஹ்வுடைய தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்களும் காட்டித் தந்த அமல்கள், இபாதத்கள் ஒரு புறமிருக்க, முஸ்லிம்கள் கண்டுபிடித்த அமல்கள், மறுபுறம் மலையாய் குவிந்து நிற்கின்றன.

அமல்களை நிர்ணயிப்பது அல்லாஹ்வும் அவனுடைய தூதர் முஹம்மது (ஸல்) அவர்களுமே தவிர முஸ்லிம்களோ, முஸ்லிம்களுடைய வழித் தோன்றல்களோ அல்ல! துர திஷ்டவசமாக இன்று இந்நிலை பரவலாக காணமுடிகிறது.

மார்க்கத்தில் எல்லை மீறி செல்கின்ற போது தனி மனித வழிபாடும், மூட நம்பிக்கைகளும், வழிகேடுகளும் தோற்றம் பெறுகின்றன. இறுதியில் கைசேதப்பட்டவனாக மனிதன் நரகில் நுழைகிறான். இந்த அபா யத்திலிருந்து பாதுகாப்பதற்காகத்தான் நபியவர்கள் "மார்க்கத்தில் எல்லை மீறி செல்வதை உங்களுக்கு எச்சரிக்கிறேன்" (நூல் முஸ்லிம்) என்றும் "எங்களுடைய கட்டளையில்லாமல் எவர் ஒரு செயலை (அமலை) செய்கிறாரோ அது நிராகரிக்கப்படும் (நூல்: முஸ்லிம்) என்றும் கண்டித்துள்ளார்கள்.

எனவே எந்த ஒரு அமலை செய்வதானாலும் அதற்கு நபிவழியில் ஆதாரமுண்டா? என்று பார்க்க வேண்டும். இருந்தால் செய்ய வேண்டும். இல்லாவிட்டால் ஒதுங்கி விட வேண்டும். இதுவே சுன்னாவை கடைபிடிக்கும் ஒழுங்கு முறையாகும்.

இன்று பராஅத் இரவு என்ற பெயரில் முஸ்லிம்களால் ஒரு இரவு விசேடமாக கொண்டாடப்படுகிறது. அன்றைய இரவில் நின்று வணங்கியும், நோன்பு நோற்றும் மூன்று வகையான பிரார்த்தனைகளை (1. உணவு விஸ்தீரணம், 2. நீண்ட ஆயுள், 3. எல்லாவித துன்பங்களை விட்டும் நீங்கியிருத்தல் போன்ற துஆக் களை) கேட்டும், மூன்று யாசீன் ஒதியும் விஷேடமான தொழுகைகளை நடாத்தியும் இன்னும் இது போன்ற செயல்களையும் செய்கிறார்கள். பள்ளிவாசல்களிலும் விசேடமான நிகழ்ச்சிகளும் ஒழுங்கு செய்யப்படுகின்றன. இதற்கான ஆதாரங்கள் உண்டா? என்பதை நாம் அறிந்து கொள்ளுதல் அவசியமாகும்.

سنن ابن ماجه – (ج 4 / ص 301)
1378 – حَدَّثَنَا الْحَسَنُ بْنُ عَلِيٍّ الْخَلَّالُ حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ أَنْبَأَنَا ابْنُ أَبِي سَبْرَةَ عَنْ إِبْرَاهِيمَ بْنِ مُحَمَّدٍ عَنْ مُعَاوِيَةَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ جَعْفَرٍ عَنْ أَبِيهِ عَنْ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ قَالَ

قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا كَانَتْ لَيْلَةُ النِّصْفِ مِنْ شَعْبَانَ فَقُومُوا لَيْلَهَا وَصُومُوا نَهَارَهَا فَإِنَّ اللَّهَ يَنْزِلُ فِيهَا لِغُرُوبِ الشَّمْسِ إِلَى سَمَاءِ الدُّنْيَا فَيَقُولُ أَلَا مِنْ مُسْتَغْفِرٍ لِي فَأَغْفِرَ لَهُ أَلَا مُسْتَرْزِقٌ فَأَرْزُقَهُ أَلَا مُبْتَلًى فَأُعَافِيَهُ أَلَا كَذَا أَلَا كَذَا حَتَّى يَطْلُعَ الْفَجْرُ

سنن ابن ماجه بحاشية السندي – (ج 3 / ص 178)
1378 – قَوْله ( فَقُومُوا لَيْلهَا )
وَفِي الزَّوَائِد إِسْنَاده ضَعِيف لِضَعْفِ اِبْن أَبِي بُسْرَة وَاسْمه أَبُو بَكْر بْن عَبْد اللَّه بْن مُحَمَّد أَبِي بُسْرَة قَالَ فِيهِ أَحْمَد بْن حَنْبَل وَابْن مُعِين يَضَع الْحَدِيث .

"ஷஃபான் மாதத்தின் பதினைந்தாம் இரவு வந்துவிட்டால் அவ்விரவில் நின்று வணங்குங்கள். பகலில் நோன்பு பிடியுங்கள். அன்றைய நாளில் சூரியன் மறைந்த பின் அல்லாஹ் கடைசி வானத்திற்கு இறங்கி வந்து "என்னிடம் பாவமன்னிப்பு கோருபவர் உண்டா? நான் அவருக்க மன்னிப்பு வழங்குகிறேன். என்னிடம் உணவு கேட்பவர் உண்டா? நான் அவருக்கு உணவளிக்கி றேன். சோதனைக்கு ஆளாவனவர் உண்டா? அவருக்கு நிவாரணம் வழங்குகிறேன் என்று சுபுஹ் நேரம் வரை கேட்கிறான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அலி (ரழி) அறிவிக்கிறார்கள். இந்தச் செய்தி இப்னு மாஜாவில் பதிவாகியுள்ளது.
இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் வரிசை யில் 'இப்னு அபீசப்ரா' என்பவர் இடம்பெறு கிறார். இவர் பலஹீனமாவர். இவர் பொய் யான ஹதீஸ்களை இட்டுக் கட்டக் கூடிய வர் என இமாம் அஹ்மத் (ரஹ்), இப்னு ஹன்பல் (ரஹ்) இமாம் இப்னு முயீன் (ரஹ்) குறிப் பிடுகிறார். எனவே இந்த ஹதீஸைக் கொண்டு செயல்பட முடியாது.

سنن الترمذي – (ج 3 / ص 193)
670 – حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مَنِيعٍ حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ أَخْبَرَنَا الْحَجَّاجُ بْنُ أَرْطَاةَ عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ عَنْ عُرْوَةَ عَنْ عَائِشَةَ قَالَتْ
فَقَدْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَيْلَةً فَخَرَجْتُ فَإِذَا هُوَ بِالْبَقِيعِ فَقَالَ أَكُنْتِ تَخَافِينَ أَنْ يَحِيفَ اللَّهُ عَلَيْكِ وَرَسُولُهُ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ إِنِّي ظَنَنْتُ أَنَّكَ أَتَيْتَ بَعْضَ نِسَائِكَ فَقَالَ إِنَّ اللَّهَ عَزَّ وَجَلَّ يَنْزِلُ لَيْلَةَ النِّصْفِ مِنْ شَعْبَانَ إِلَى السَّمَاءِ الدُّنْيَا فَيَغْفِرُ لِأَكْثَرَ مِنْ عَدَدِ شَعْرِ غَنَمِ كَلْبٍ

وَفِي الْبَاب عَنْ أَبِي بَكرٍ الصِّدِّيقِ قَالَ أَبُو عِيسَى حَدِيثُ عَائِشَةَ لَا نَعْرِفُهُ إِلَّا مِنْ هَذَا الْوَجْهِ مِنْ حَدِيثِ الْحَجَّاجِ و سَمِعْت مُحَمَّدًا يُضَعِّفُ هَذَا الْحَدِيثَ و قَالَ يَحْيَى بْنُ أَبِي كَثِيرٍ لَمْ يَسْمَعْ مِنْ عُرْوَةَ وَالْحَجَّاجُ بْنُ أَرْطَاةَ لَمْ يَسْمَعْ مِنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ

ஆயிஷா (ரழி) அறிவிக்கிறார்: "நான் (ஸல்) அவர்களை இரவில் படுக்கையில் காணாததால் அவர்களைத் தேடி வெளியில் சென்றேன். அப்போது அவர்கள் 'பகீய்' மையவாடியில் இருந்தார்கள். அப்போது ஷஃபான் மாதத்தின் நடுப்பகுதி இரவில் அல் லாஹ் கடைசி வானத்திற்க இறங்கி ஆட்டின் உரோமத்தின் எண்ணிக்கையை விட அதிகமாக பாவமன்னிப்பு வழங்குகிறான் என்று நபி (ஸல்) கூறினார்கள் என்று ஆயிஷா (ரழி) அறிவிக்கும் செய்தி திர்மிதியில் பதிவாகியுள்ளது.

இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் வரிசையில் 'ஹஜ்ஜாஜ் இப்னு அர்தாத்' என்பவர் இடம்பெறுகிறார். இவர் மற்ற அறிவிப்பாளரான யஹ்யா இப்னு அபூ கஸீல் என்பவரிடம் எதையும் செவியுற்றதில்லை. இது பலஹீனமான செய்தி என்று இமாம் புகாரி (ரஹ்) விமர்சனம் செய்கிறார்கள் என இமாம் திர்மிதி (ரஹ்) குறிப்பிடுகிறார்க்ள. எனவே இந்த ஹதீஸை அடிப்படையாகக் கொண்டும் செயல்பட முடியாது.

سنن ابن ماجه – (ج 4 / ص 303)
1380 – حَدَّثَنَا رَاشِدُ بْنُ سَعِيدِ بْنِ رَاشِدٍ الرَّمْلِيُّ حَدَّثَنَا الْوَلِيدُ عَنْ ابْنِ لَهِيعَةَ عَنْ الضَّحَّاكِ بْنِ أَيْمَنَ عَنْ الضَّحَّاكِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَرْزَبٍ عَنْ أَبِي مُوسَى الْأَشْعَرِيِّ
عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ إِنَّ اللَّهَ لَيَطَّلِعُ فِي لَيْلَةِ النِّصْفِ مِنْ شَعْبَانَ فَيَغْفِرُ لِجَمِيعِ خَلْقِهِ إِلَّا لِمُشْرِكٍ أَوْ مُشَاحِنٍ

سنن ابن ماجه بحاشية السندي – (ج 3 / ص 180)
وَفِي الزَّوَائِد إِسْنَاده ضَعِيف لِضَعْفِ عَبْد اللَّه بْن لَهِيعَة وَتَدْلِيس الْوَلِيد بْن مُسْلِم وَاَللَّه أَعْلَم

"ஷஃபான் மாதத்தின் பதினைந்தாம் இரவில் இணைவைப்பவனுக்கும் குரோதம் பாரட்டுபவனையும் தவிர அல்லாஹ் தன்னுடைய எல்லா படைப்பினங்களுக்கும் மன்னிப்பு வழங்குகிறான்.. என நபி (ஸல்) கூறினார்கள்.(இப்னுமாஜா)

இந்த செய்தியின் அறிவிப்பாளர் வரிசையில் இடம் பெறும் இப்னு லஹீஆ என்பவர் பலஹீனமானவர் என்றும் வலீத் இப்னு முஸ்லிம் செய்திகளை இருட்டடிப்பு செய்பவர் என்றும் ஹதீஸ் துறை அறிஞர்கள் விமர்சனம் செய்கிறார்கள்.

எனவே ஷஃபான் பதினைந்தாம் இரவின் சிறப்பு மற்றும் நோன்பு பற்றி வரக்கூடிய எந்தச் செய்தியும் ஸஹீஹானதாக இல்லை என்று ஹதீஸ் கலை இமாம்களே தெளிவுப்படுத்துகிறார்கள். உண்மை இவ்வாறு இருக்கும்போது பலஹீனமான செய்திகளைக் கொண்டு எப்படி அமல் செய்ய முடியும் என்பதை சிந்திக்க வேண்டும்.

அதுமட்டுமல்ல 'பராஅத் இரவு' என்று குறிப்பிட்டுஎந்த ஒரு ஹதீஸும் வரவில்லை. இதற்கு எப்படி இந்த பெயரை சூட்டினார்கள் என்பதும் மர்மமாகவே இருக்கிறது.

'இந்த இரவில் நோன்பு நோற்றால் தப்பில்லையே அதுவும் நன்மைதானே என்று மேலேயுள்ள விபரங்களை தெரிந்த பின் சில நேரம் கேட்கலாம்.

'தப்பில்லையே! நன்மை தானே, என்று நாமாக சமாதானம் கூறிக் கொள்ளவோ ஆறுதல் அடையவோ எமக்கு எந்த அதிகார முமில்லை. எதை எப்படி எந்த நேரத்தில் எந்த இடத்தில் எந்த முறையில் செய்ய வேண்டும் என்பதை தெளிவுபடுத்திக் கூறுவதற்குதான் அல்லாஹ் இறைத்தூதரை அனுப்பி வைத்தான்.இறைத்தூதர் (ஸல்) அவர்கள் காட்டித்தராத எந்த செயலும் தள்ளுபடி செய்யப்படும் என்பதை மேலேயுள்ள ஹதீஸ் தெரிவிக்கின்றது.

இமாம் நவவீ (ரஹ்) அவர்கள்: ரஜப் மாதத்திலும், ஷஃபான் மாதத்திலும் விசேடமான தொழும் தொழுகை மோசமான நிராகரிக்கக் கூடிய பித்அத்கள். (இதற்கு மார்க்கத்தில் அனுமதியில்லை) என்று கூறுகிறார்கள். நூல்: அஸ்ஸுனனு வல்முப்த திஆது) இது தவிர ஸஹீஹான ஹதீஸ்கள் மூலம் நிரூபனமாகும் சுன்னத்தான நோன்புகளை நோற்க பழகிக் கொள்ள வேண்டும். எனவே உண்மையைஅறிந்து கொண்ட பின் அதனடிப்படையில் செயல்பட அல்லாஹ் எமக்கு அருள் புரிவானாக.

تفسير القرآن العظيم لابن كثير – (ج 7 / ص 246)

وقد ذكرنا الأحاديث (1) الواردة في ذلك في 'سورة البقرة' بما أغنى عن إعادته.
ومن قال: إنها ليلة النصف من شعبان -كما روي عن عكرمة-فقد أبعد النَّجْعَة فإن نص القرآن أنها في رمضان. والحديث الذي رواه عبد الله بن صالح، عن الليث، عن عقيل عن الزهري: أخبرني عثمان بن محمد بن المغيرة بن الأخنس أن رسول الله صلى الله عليه وسلم قال: 'تقطع الآجال من شعبان إلى شعبان، حتى إن الرجل لينكح ويولد له، وقد أخرج اسمه في الموتى' (2) فهو حديث مرسل، ومثله لا يعارض به النصوص

Wednesday, July 21, 2010

இந்திய சுதந்திர போராட்டத்தில் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள இஸ்லாமியர்களின் பங்கு – ஓர் ஆய்வு

 

இந்திய சுதந்திர போராட்டத்தில் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள இஸ்லாமியர்களின் பங்குஓர் ஆய்வு

( டாக்டர் ஏ. அக்பர் ஹுசைன், வரலாற்றுத்துறை விரிவுரையாளர் )
 
 

இந்தியாவின் விடுதலைப் போரில் இஸ்லாமியரின் பங்கு மகத்தானது. நாடெங்கிலும் நடந்த ஆங்கிலேயரின் அடக்குமுறையில் ஆயிரக் கணக்கான இஸ்லாமியர்கள் அல்லுற்றனர்.

  காந்தி அடிகளின் அறைகூவலை ஏற்று சுதந்திர வேள்வியில் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் தம்மை ஈடுபடுத்திக் கொண்ட இஸ்லாமியர்கள் ஏராளம். 17.08.1920-ல் காந்தியடிகள் மெளலானா சவுகத் அலியுடன் கிலாபத் இயக்கப் பிரச்சாரத்திற்காக இந்நகருக்கு வருகை தந்தார். இம்மாவட்டத்தின் கிலாபத் இயக்கத்தின் செயலாளர் வி.எஸ். முகம்மது இப்ராஹீம் தமிழிலும், டாக்டர் அப்துல் கபான் இந்துஸ்தானியிலும் வரவேற்புப் பத்திரம் படித்து அளித்தனர்.

  மெளலவி சையத் முர்த்துஸா சாகிப், மதுரை வழக்கறிஞர் ஜார்ஜ் ஜோசப் ஆகியோர் உடனிருந்தார்கள். கூட்டம் முடிந்து அன்று நள்ளிரவு காந்தியடிகளும், சவுக்கத்தலியும் திருச்சிராப்பள்ளி புகைவண்டி நிலையத்திற்குச் சென்றபோது 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இந்துக்களும், முஸ்லீம்களும், அல்லாஹூ அக்பர், வந்தே மாதரம் என்று முழக்கமிட்டு அவர்களை வழியனுப்பி வைத்தனர். இந்த நிகழ்ச்சியினால் காங்கிரஸ் கட்சிக்கு இஸ்லாமியர்களிடையே பெரும் ஆதரவு பெருகியது.

  கி.பி. 1921-ஆம் ஆண்டில் ஆங்கிலேயர்களை எதிர்த்துக் கிளர்ச்சி செய்த கேரளா மாப்பிள்ளை முஸ்லீம்களைக் கைது செய்த ஆங்கிலேய அரசு அவர்களைக் காற்றுப்புகாதவண்ணம் சரக்குப் புகைவண்டியில் அடைத்து கோயமுத்தூர் மற்றும் திருச்சிராப்பள்ளிச் சிறைகளுக்கு அனுப்பியது. இதில் பலர் மரணமடைந்தனர். இறந்தவர்களின் உடல்களை இஸ்லாமிய மார்க்க அடிப்படையில் அடக்கம் செய்த சையத் முர்த்துஸா சாகிப் அவர்கள் தலைமையில் அன்ஜூமனே ஹிமாயத்தே இஸ்லாம் என்ற பெயரில் ஒரு அமைப்பை உடனடியாக ஏற்படுத்திக் காஜாமலை அடிவாரத்தில் உள்ள இடுகாட்டில் (கபர்ஸ்தான்) நல்லடக்கம் செய்தார்.

  விடுதலைப் போராட்டத்தில் பங்கு பெற்ற திருச்சிராப்பள்ளி இஸ்லாமியர்களில் முக்கிய தலைவர்களின் தியாக வாழ்வைக் காண்போம்.

  திருச்சிராப்பள்ளி மாவட்ட இஸ்லாமிய பிரமுகர்களை கீழ்காண்போம்.

            வள்ளல் ந.மு. காஜாமியான் ராவுத்தர்

  திருச்சி மாநகரில் இஸ்லாமியர்கள் அதிகமாக இருக்கும் பாலக்கரையில் ந.முகமது மியான் ராவுத்தர் அவர்களின் மகனாக 1880 ஆம் ஆண்டில் பிறந்தார். .மு.காஜாமியான் அவர்கள். அறிவுத்திறமை, உழைக்கும் ஆற்றல், கருணைத்தன்மை, மார்க்கப்பற்று, நாட்டுப்பற்று கொண்டவராக விளங்கிய இவர்கள் தந்தையார் செய்து வந்த தோல் பதனிடும் தொழிலையே கற்று அதில் தனது முழுத்திறனையும் பயன் படுத்தி உலக நாடுகளே அதிசயிக்கும் வண்ணம் பல புதுமைகளைப் புகுத்திப் பெருமை பெற்றவர்.

  ஆட்டுத்தோலைப் பாடம் செய்யும்போதே செயற்கை வண்ணங்களைச் சேர்த்து அதை, இயற்கை வண்ணம் போல் மாற்றி, தோல் அழிந்தாலும், இறுதிவரை வண்ணம் குன்றாத ஒரு தனி ரக உற்பத்தியை இந்தியாவிலேயே முதன்முதலாகக் கண்டுபிடித்த நிபுணராக இவர் புகழ் பெற்றார்.

  இளமையிலேயே தேச சுதந்திரத்தில் ஆர்வம் கொண்டு கதர் உடுத்துபவராகவும், காந்தியடிகளின் வேண்டுகோளை ஏற்று அக்காலத்தில் ரூ.50 ஆயிரம் செலவில் கதர் ஆலையைத் தோற்றுவித்து அதனால் ஏற்பட்ட மாபெரும் நஷ்டத்தையும் பொருட்படுத்தாமல் தேசப் பணியாற்றினார்.

  பல தேச பக்தர்களும் இவரது உதவியைப் பெற்றுள்ளார்கள். இவரது வள்ளல் தன்மைக்குப் பல எடுத்துக்காட்டுகள் உள்ளன. சேஷாயி மின் உற்பத்திக் கம்பெனியைத் திருச்சிராப்பள்ளியில் தொடங்க முதன் முதலில் 50 ஆயிரம் ரூபாய்க்கு பங்கு வாங்கிய பெருமை இவரையே சாரும்.

  நகரின் கல்வி வளர்ச்சிக்குப் பெருமை சேர்த்து வரும் ஜமால் முகமது கல்லூரி அமைந்துள்ள 120 ஏக்கர் நிலப்பரப்பு அனைத்தும் பெருமைக்குரிய ந.மு. அவர்களின் நன்கொடையே.

  தமிழ் இலக்கியத்தில் மிகவும் ஆர்வம் பெற்றவராகவும் விளங்கியுள்ளார். இஸ்லாமிய மார்க்கப் பிரச்சாரத்திற்கு உதவியாக இஸ்லாமிய அச்சகம் தோற்றுவித்தார். தமிழ் மொழியில் திருக்குர் ஆனை மொழி பெயர்க்க மெளலானா ஆ.கா. அப்துல் ஹமீது பாகவி அவர்களுக்கு உதவினார்.

  சுதந்திரப் போராட்டவாதி, இலக்கியவாதி, தொழில் மேதை, வள்ளல் ந.மு. காஜாமியான் ராவுத்தர் அவர்கள் 1954 நவம்பர் மாதம் 14 –ந் தேதி மரணமடைந்தார்.

               சையத் முர்துஜா ஹஸ்ரத்

  சையத் முர்துஜா ஹஸ்ரத் அவர்களின் பூர்வீகம் புகாரா (புகாரஸட்ரஷ்யா) ஆகும். ஹஸ்ரத் அவர்கள் பிறந்தது, வளர்ந்தது திருச்சிராப்பள்ளியில் தான். இவர் பி.. வரை படித்து தேர்வு பெற்று, திருச்சி ஜில்லா மாவட்ட ஆட்சியர் காரியாலயத்தில் தலைமைக் குமாஸ்தா பதவியை ஏற்றார்கள். கல்வியில் இஸ்லாமியர்கள் சிறக்க வேண்டும் என்பதால் "இஸ்லாமிய உயர்நிலைப்பள்ளி" என்ற பள்ளியைத் தோற்றிவித்தார். இப்போது இதன் பெயர் "சையத் முர்துஜா அரசு உயர்நிலைப்பள்ளி" என்று மாற்றப்பட்டுள்ளது.

  ஹஸ்ரத் அவர்கள் சமுதாய கல்வி வளர்ச்சிக்காகப் பாடுபட்ட அதே நேரத்தில் அரசியலிலும் பங்கெடுத்துத் தேசத்திற்காகவும் சேவை செய்து வந்தார்கள். கி.பி. 1912- ல் மதராஸ் சட்டக்கவுன்ஸில் அங்கத்தினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அச்சமயம் இந்தியாவை ஆண்டு வந்த ஐந்தாம் ஜார்ஜ் அவர்கள் ஹஸ்ரத்தை அழைத்து ஹானரபிள் என்ற பட்டம் வழங்கினார். ஆனால் இந்தப் பட்டத்தை  தூக்கியெறிந்து விட்டு பிரிட்டிஷாரின் பகையை ஏற்படுத்திக் கொண்டார்கள். கி.பி. 1919 –க்குப் பின் கிலாபத் இயக்கத்தில் தீவிர பங்கு கொண்டு, காங்கிரஸ் உடன் சேர்ந்து ஒத்துழையாமை இயக்கத்திலும் கலந்து கொண்டார்கள்.

  மெளலானா ஷவுகத் அலி, காந்திஜீ ஆகிய இரு பெருந்தலைவர்கள் திருச்சி வந்தபொழுது இந்திய விடுதலைப் போராட்டத்திற்காக ரூ.20 ஆயிரம் நிதி திரட்டிக் கொடுத்தார்கள். இதனால் ஹஸ்ரத் அவர்களின் புகழ் இந்தியாவின் எண்திசைகளிலும் பரவக் காரணமாகியது. கி.பி. 1923-ஆம் ஆண்டில் டத்திய சட்டசபை (தற்போதைய பாராளுமன்றத் தேர்தல் போன்றது) தேர்தல் நடந்தபொழுது, சென்னை மாநிலத்தின் பதினொரு ஜில்லாக்களின் சார்பில் நடைபெற்ற தேர்தலில் ஹஸ்ரத் அவர்கள் திருச்சி ஜில்லாவில் நின்று வெற்றி வாகை சூடினார். இவர் 24 வருடங்கள் தொடர்ந்து மத்திய சட்டசபையில் இருந்து வந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு நீண்ட காலத்திற்கு ஹஸ்ரத் அவர்கள் மத்திய சட்டசபையில் சேவை செய்து வந்ததால் இந்தியாவில் அனைத்துத் தலைவர்களுக்கும் ஹஸ்ரத் அறிமுகமானவராக இருந்தார்.

  பாகிஸ்தான் ஏற்படுவதை எதிர்த்த குறைந்த முஸ்லீம் தலைவர்களில் ஹஸ்ரத் அவர்களும் ஒருவராக இருந்தார்கள். இதனால் திருச்சி மக்கள் அனைவரும் இவரை "படே ஹஸ்ரத்" (பெரிய ஹஸ்ரத்) என்றே அன்புடன் அழைத்தனர். இவர் கி.பி. 1940 –ம் ஆண்டு நவம்பர் மாதம் 6 –ம் தேதி மறைந்தார்கள்.

                  எஸ்.எம். சுல்தான் பக்தாதி

  எஸ்.எம். சுல்தான் பக்தாதி கி.பி. 1898 –ல் இராமநாதபுரம் மாவட்டத்தைச் சார்ந்த திருப்பத்தூரில் பிறந்தார். இவரது தந்தையார் இலங்கையில் பெரும் வணிகராக இருந்தார். எனவே பக்தாதி தமது ஆரம்பக் கல்வியை இலங்கையிலேயே பூர்த்தி செய்து விட்டு, மதுரை அமெரிக்கன் கல்லூரியில் பட்டப் படிப்பைப் பயின்றார். இவருக்கு ஈராக் நாட்டில் தபால் துறையில் வேலை கிடைத்தது. (மூன்று ஆண்டுகள் அங்கு வேலை செய்து திரும்பியதால் இவரின் பெயருக்கு பின்னால் "பக்தாதி" எனும் சிறப்புப் பெயரும் சேர்ந்து கொண்டது). பின்னர் விடுமுறையைக் கழிக்கத் தாயகம் வந்த பக்தாதி காந்தியடிகளின்  சொற்பொழிவைக் கேட்டுத் தனது வேலையை ராஜினாமா செய்து விட்டு விடுதலைப் போராட்டத்தில் கலந்து கொண்டார். இவர் 1923ல் நடந்த கிலாபத் கிளர்ச்சியில் மிகத் தீவிரமாக பாடுபட்டார். மதுரையில் நடந்த சுதந்திரப் போராட்டத்தில் அன்னிய நாட்டுப் பொருட்களை விலக்குதல், சுதேசி உடைகளை அணிதல், வெள்ளையரை எதிர்த்தல் போன்ற கிளர்ச்சிகளில் ஈடுபட்டதன் காரணமாக 19 நபர்கள் கைதானார்கள். இப்படி கைதான அனைவருக்கும் சுல்தான் பக்தாதி அவர்கள் தலைமை தாங்கினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தியாகிகளைப் பல்லாரி சிறைக்குக் கொண்டு போகும் ரயில் நிலையங்களில் மக்கள் திரளாக வந்து அவர்களைக் கண்டு வாழ்த்தினர். ஒரு சந்தர்ப்பத்தில் இவர் சிறையில் உண்ணாவிரதம் இருந்தபொழுது சிறை அதிகாரிகள் அவரிடம் உன் தந்தை பெயர் என்ன? என்று கேட்டனர். அதற்கு அவர், மகாத்மா காந்தி என்றார். தாயார் பெயர் என்ன? என்று கேட்டனர். அதற்கு பாரத மாதா என்றார். சாப்பிட என்ன வேண்டும்? என்று கேட்டனர். இந்தியாவின் சுதந்திரம் என்றார். இதனால் இவரை சிறை அதிகாரிகள் அடித்துத் துன்புறுத்தினர்.     

  சிறையில் இருந்து வெளியே வந்து திருச்சியில் நடந்து வந்த சமரசம் என்ற பத்திரிக்கையின் ஆசிரியர் பொறுப்பை 1937- ல் ஏற்று அதனை வார இதழாகவும் பிறகு தினசரி பத்திரிக்கையாகவும் நடத்தி வந்தார். இதில் ஆங்கில அரசின் அடக்குமுறையை எதிர்த்து வந்தார். இதனால் ஆங்கிலேயர்கள் இவரைக் கண்காணித்து வந்தனர். வாழ்நாள் முழுவதும் நாட்டிற்காகவும், சமுதாயத்திற்காகவும் தியாகம் செய்து விட்டு 15.03.1977 ல் மறைந்தார்.

          பள்ளபட்டி கலிலூர் ரஹ்மான் ஹலரத்

  மிகுந்த நாட்டுப்பற்றும், பேச்சாற்றலும், மணிமொழி மெளலானா என்னும் பட்டம் பெற்றவருமான இவர் 1905-ம் ஆண்டு ஜனவரி 29-ம் நாள் பள்ளப்பட்டியில் பிறந்தார். இவர் மாணவப் பருவத்திலேயே தேசிய உணர்வு மிக்கவராக இருந்தார். 1919-ம் ஆண்டு வேலூர் மதரஸாவில் படித்த பொழுது சக மாணவர்களை வைத்து இவர் அந்நியத் துணிகளையும், அங்கு ஆசிரியப்பணி செய்து வந்த கமானி ஹலரத் அவர்களின் திருமண உடைகளையும் (அவை அந்நிய நாட்டு துணிகளாகும்) மதரஸா அருகில் தீயிட்டுக் கொளுத்தினார். இதனால் இவர் அங்கிருந்து விரட்டியடிக்கப்பட்டார். 1927 –ல் ஜமால் முஹம்மது ராவுத்தரின் மகள் ஸபுரா பீவியை மணமுடித்தார்.

  திருமணத்திற்குப் பின் பள்ளப்பட்டி அரசாங்கப் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றிய இவர் பின்னர் பெங்களூர் சென்று அங்கும் பள்ளியொன்றில் 1929 முதல் 1939 வரை பேஷ் இமாமாகப் பணிபுரிந்தார். இக்காலத்தில் இவர் முஸ்லீம் லீக்கின் பிரதம ஊழியராகவும் செயலாற்றினார். நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்கள் டோக்கியோ செல்லும் வழியில் சைகோனில் தங்கியிருந்த காலமெல்லாம் அவரின் நெருங்கிய சகாவாகவும் இவரே இருந்தார். நேதாஜி இவரை எப்பொழுதும் "மெளலவி சாகிப்" என்றே அன்போடு அழைப்பார். இரண்டாம் உலகப் போரில் ஜப்பான் சரணடைந்த பின் நேதாஜிக்கும், தமக்கும் உள்ள தொடர்பு பற்றிய ஆதாரங்களை எல்லாம் அழித்து விட்டு இவர் தாய்லாந்தில் அடைக்கலம் புகுந்தார். பாங்காங்கில் தம்பி சாகிப் மரைக்காயரின் வணிக நிலையத்தில் தங்கிய இவரை, பிரிட்டிஷ் உளவாளிகள் மோப்பம் பிடித்துக் கைது செய்து டில்லி செங்கோட்டையில் ஐ.என்.. விசாரணை முடியும் வரை தங்களின் கண்காணிப்பில் வைத்திருந்தனர். இந்திய விடுதலையைத் தவிர ஜப்பானியருக்கு உதவி செய்யும் எந்த நோக்கமும் இவரிடம் இல்லாததால் தாயகம் திரும்ப இவருக்கு பாஸ்போர்ட் வழங்கினர் பிரிட்டிஷார்.

  1946 –ல் இந்தியா திரும்பிய இவர் பின்னர் சிங்கப்பூர் சென்று 'மலேசியா நண்பன்' என்ற பத்திரிக்கையில் இக்பாலின் கவிதைகளை ஒவ்வொரு நாளும் மொழி பெயர்த்து வெளியிட்டு வந்தார். பின்னர் இலங்கை சென்று ஹனபி மஸ்ஜிதில் பேஷ் இமாமாகப் பணியாற்றினார். கி.பி. 1960ல் இவர் தாயகம் திரும்பி சமூக, அரசியல் பணிகளில் ஈடுபட்டு இருந்துவிட்டு கி.பி. 1969 ஜூன் 12 ம் நாள் இவ்வுலகை விட்டு மறைந்தார். பள்ளப்பட்டி (ஊர்) மக்கள் இவரை சிறப்பிக்கும் விதமாக இவரின் கல்லறையைப் பள்ளப்பட்டி ஜும்மா பள்ளிவாசலின் உள்ளேயே அமைத்து (அடக்கம் செய்து) உள்ளனர்.

                         ஜே. நன்னா சாயபு  

  இவர் கி.பி. 1903 –ம் வருடம் கரூரில் பிறந்தார். இவர் தந்தையின் பெயர் ஜமீன் சாகிப் என்பதாகும். இவர் இளம் வயதிலேயே விடுதலை இயக்கத்தில் சேர்ந்தார். கி.பி. 1920 முதல் கி.பி. 1940 வரை அனைத்து இயக்கங்களிலும் பங்கு கொண்டார். கி.பி. 1930 –ல் இந்திய விடுதலை இயக்கத்தைப் பற்றியும், ஆங்கிலேயரின் கொடுமையான ஆட்சியைப் பற்றியும் மக்களிடம் தெருமுனைப் பிரச்சாரம் செய்ததால் ஆங்கில அரசு இ.பி.கோ. 145 பிரிவின்கீழ் இவருக்கு 6 மாதம் சிறைத்தண்டனை விதித்தது. கி.பி. 1942 –ம் ஆண்டு கரூரில் நடந்த 'வெள்ளையனே வெளியேறு' போராட்டத்தில் கலந்து கொண்டு அலிபுரம் சிறையில் அடைக்கப்பட்டார். கி.பி. 1943 –ல் இந்திய பாதுகாப்பு விதிகளின் கீழ் கைது செய்யப்பட்டு வேலூர், தஞ்சாவூர் சிறைகளில் 1 வருடம் 2 மாதம், 25 நாட்கள் அரசியல் கைதியாகக் காவலில் வைக்கப்பட்டார். இந்தியா விடுதலை பெற்ற பின் கரூர் நகராட்சித் துணைத் தலைவராகவும், கரூர் நகரக் காங்கிரஸ் கமிட்டித் தலைவராகவும் இருந்து 19.01.1963-ல் காலமானார். இவரது கல்லறையில் தேசியக் கொடி பொறிக்கப்பட்டு உள்ளது. இவரது குடும்பத்தாரை இன்றும் "தியாகி குடும்பத்தார்கள்" என்று மக்கள் அன்புடன் அழைக்கின்றனர்.  

                         நா. பியாரி பீபீ

   இவர் திண்டுக்கலில் காவல்துறை அதிகாரியாக இருந்த சையத் இஸ்மாயிலுக்கு 1922-ல் மகளாகப் பிறந்தார். இவருக்கு விடுதலைப் போராட்ட வீரர் கரூர் நன்னா சாகிபு அவர்களுடன் திருமணம் நடைபெற்றது. அது முதல் இவரும் சுதந்திரப் போராட்டத்தில் பங்கு கொண்டார். கி.பி. 1941-ல் இந்திய பாதுகாப்பு விதியின் கீழ் கைது செய்யப்பட்டு 5 மாதம் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டார். விடுதலைப் போராட்டத்தில் கலந்து கொண்டு சிறை சென்ற ஒரு முஸ்லீம் பெண்மணி இவரே என்பது குறிப்பிடத்தக்கது. முஸ்லீம் பெண்ணான இவர் விடுதலைப் போராட்டத்தில் பங்கு கொண்டு சிறை சென்றதற்கு கரூர் நகர முஸ்லீம் மக்கள் மிகப் பெரிய எதிர்ப்பைத் தெரிவித்தனர். ஜமாத்தில் இருந்த இவரது குடும்பத்தையே சிறிது காலம் ஒதுக்கி வைத்தனர்.

  இவர் கைது செய்யப்பட்டு வேலூர் பெண்கள் சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்ட போது ஒவ்வொரு புகைவண்டி நிலையத்திலும் ஏராளமான முஸ்லீம்கள் இவர் மீது கல் எறிந்து தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்தனர். மேலும் இவர் சிறை செல்லும் பொழுது ஐந்து மாத கர்ப்பவதியாக இருந்தார். பின்பு அங்கேயே கருக்கலைப்பும் ஏற்பட்டுவிட்டது. இதனால் இவரை இரு வாரங்கள் அரசு மருத்துவமனையில் வைத்திருந்து பின்பு விடுதலை செய்தனர். இன்றும் இவர் கதர் ஆடைகளையே அணிந்து வருகிறார். இவரை இந்திராகாந்தி, ராஜீவ் காந்தி ஆகிய பிரதமர்கள் டெல்லிக்கு வரவழைத்து வெள்ளித்தட்டு பரிசாகக் கொடுத்து சிறப்பித்தனர்.

  மேலும் உறையூரைச் சேர்ந்த ஆர்மோனியம் டி.எம்.காதர் பாட்ஷா நாட்டு விடுதலைக்காக மேடைகளில் தேச பக்திப் பாடல்களைப் பாடி மக்களைத் தட்டி எழுப்பினார்.

  வேலாயுதம்பாளையம் எம்.எம். பாஜான் தனது பள்ளிப் பருவத்திலேயே ஆங்கில அரசர் எட்வர்டு மன்னருக்கு வாழ்த்துக் கூறும் பாடலைப் பாட மறுத்தவர். வேலாயுதம்பாளையத்தில் நேரு வாலிபர் சங்கம் என்ற அமைப்பை நிறுவி விடுதலைக்கும், கதர் பிரச்சாரத்திலும் தீவிரமாக ஈடுபட்டார்.

  இந்நகரின் பெரும் தானிய வணிகர் பிச்சை ராவுத்தரின் புதல்வர் முகம்மது இப்ராஹீம் கலிபுல்லாகான் கிலாபத் இயக்கத்தில் பெரும் பங்காற்றி நகர் மன்றத் தலைவராகவும், சென்னை மாகாண சட்டசபை உறுப்பினராகவும், புதுக்கோட்டை திவானாகவும் மிகச் சிறப்பாகப் பணியாற்றி உள்ளார். காந்தியடிகளுடனும், அலி சகோதரர்களுடனும் தமிழகம் எங்கும் இவர் சுற்றுப்பயணம் செய்துள்ளார்.

  திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் எஸ்..எஸ். முகம்மது சாகிப், உறையூர் எம்.சேக் பாபா, பெரிய செளராஷ்டிரா தெரு அப்துல் அஜீஸ், அப்துல் கரீம், அப்துல் காதர், பாலக்கரை அப்துல் ரஹ்மான், பெல்லாரி சிறையில் வாடிய அரியலூரைச் சேர்ந்த குலாம் காதர், கே.எம். ஹமீர் கான், தங்கமீரான் ராவுத்தர், முர்ஷா ராவுத்தர், ஷேக் தாவூத் சாகிப், வரகனேரி ஷேக் தாவூத் மகன் முகம்மது சுல்தான் நேதாஜியின் இந்திய தேசீய இராணுவத்தில் 219 கொரில்லா பிரிவு 61625 எண் யூனிட்டில் சிப்பாயாக பணியாற்றிய இவர் போன்ற பல இஸ்லாமிய தியாகிகள் தேச விடுதலைக்காகப் பெரும்பங்கு ஆற்றியுள்ளனர்.

                           முடிவுரை

  வரலாற்றில் ஒரு சிலரை மட்டுமே இந்திய சுதந்திரத்திற்காகப் பாடு பட்டவர்களாகச் சித்தரித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் பெரும் தலைவர்கள் கூறிய வார்த்தைகளை தெய்வவாக்காகக் கொண்டு தெருவில் இறங்கி ஆங்கிலேயே ஏகாதிபத்தியத்தை எதிர்த்த லட்சக் கணக்கான தொண்டர்களை இந்த நாட்டு மக்களும் அரசும் மறந்து விட்டது. எங்கேயோ வாழ்ந்து இறந்த விடுதலைப் போராட்ட தலைவர்களைப் பற்றிப் பேசி மகிழ்பவர்கள், தங்கள் வசிக்கும் உள்ளூரிலேயே இருக்கும் விடுதலை போராட்ட வீரர்களைப் பற்றியும் அவர்கள் பட்ட துன்பத்தையும் அவர்கள் செய்த தியாகத்தையும் அறியாமல் இருக்கின்றனர். அப்படிப்பட்ட இவர்களை மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

 

நன்றி : தி ஜமால் 2006 – 2007

( திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரியின் ஆண்டு மலர் )
--

Saturday, July 03, 2010

முஸ்லிம்களுக்கு ஏன் இவ்வளவு பெருமை என்று வியந்தேன்...

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgJCqsiAN-v3Fwgf_e78Un_hhvCm3DoTVCIcnM1Fq_SHUlWV2vZRzMepTh_TCmAOs0SHZgIBoRhsyO-Zqk9x_AT6Q13sdtoJvEHy4ZO-0V0p0GHJD6T3FXoACPfSqjZihk8UD8H/s320/Bismillah_2.JPG

முஸ்லிம்களுக்கு ஏன் இவ்வளவு பெருமை என்று வியந்தேன்...

 

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)...

உங்கள் அனைவர் மீதும் எல்லாம் வல்ல இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...ஆமின்..


இஸ்லாத்தை வாழ்வியல் நெறியாக புதிதாய் ஏற்றுக்கொள்ளும் சகோதர/சகோதரிகள் சந்திக்கக்  கூடிய சவால்கள் சொல்லிமாளாதது.

சமீபத்தில், ஹங்கேரியைச் சேர்ந்த ஆயிஷா என்ற சகோதரி Reading Islam இணையதளத்திற்கு அனுப்பிய மின்னஞ்சல் அந்த தளத்தில் வெளியாகி இருந்தது. இஸ்லாத்தை இளவயதில் ஏற்றுக்கொள்ளக்கூடியவர்கள் சந்திக்கக்கூடிய சவால்களை அழகாக வெளிப்படுத்தியது அந்த கடிதம். அந்த மின்னஞ்சல் உங்கள் பார்வைக்காக...
      
"என் பெயர் ஆயிஷா. ஹங்கேரியின் வடக்கு பகுதியைச் சேர்ந்தவள். நான் இஸ்லாத்தைப் பற்றி என் மேல்நிலை வகுப்பில் படித்திருக்கிறேன், ஏனென்றால் ஹங்கேரி சுமார் 150 ஆண்டுகள் துருக்கியின் ஆக்கிரமைப்பில் இருந்த நாடு.

பிறகு, பல்கலை கழகத்தில் மூலக்கூறு உயிரியல் (Molecular Biology) வகுப்பில் சேர்ந்த போது நிறைய வெளிநாட்டு முஸ்லிம் மாணவர்களை சந்தித்தேன்.  

ஏன் முஸ்லிம்கள், தங்களை முஸ்லிம்கள் என்று கூறிக்கொள்வதில் இவ்வளவு பெருமை கொள்கின்றனர் என்பதை அறிய எப்போதுமே மிகுந்த ஆவல்.

நான் கத்தோலிக்க பின்னணியை கொண்டவள், நல்ல மதம்தான், ஆனால் எப்போதுமே என் மதத்தை பற்றி மனதில் கேள்விகள் கேட்டுக்கொண்டிருந்தேன், அதுமட்டுமல்லாமல் ஒரு சில விசயங்களை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. உதாரணத்துக்கு, எப்படி கடவுளுக்கு மகன் இருக்க முடியும், அதுபோல திருத்துவ கொள்கையை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

ஒருமுறை, என் நண்பர்களுடன் இரவு உணவு உட்கொண்டிருந்தபோது, பாங்கு ஆரம்பித்தது. ஒரு நண்பர் அதனை நிறுத்துமாறு கூறினார், நான் முடியாது என்று சொல்லிவிட்டேன். அது என்னை மிகவும் கவர்ந்தது, நிச்சயமாக அதில் ஏதோ ஒன்று என் இதயத்தை தொடுவதாக உணர்ந்தேன்.    

பிறகு, கோடைக்காலத்தில், நான் ஏன் இணையத்தளத்திலிருந்து குரான் சம்பந்தபட்ட ஒரு பதிவை பதிவிறக்கம் (Download) செய்தேனோ தெரியவில்லை. அதனை நான் அரபியில் கேட்டுக்கொண்டே ஆங்கிலத்தில் படித்தேன். பிறகு, நான் இஸ்லாமை பற்றி நிறைய சிந்திக்க துவங்கிவிட்டேன், அதுமட்டுமல்லாமல் இஸ்லாம் தொடர்பான நிறைய நூல்களை படித்தேன்.     

இரண்டு மாத தீவிர யோசனைக்கு பிறகு இறுதியாக இஸ்லாத்தை தேர்ந்தெடுத்துக் கொண்டேன். என் இரு நண்பர்கள் முன்பாக ஷஹாதா கூறினேன்...

"வணக்கத்துக்குரியவன் இறைவன் ஒருவனே என்றும், முஹம்மது (ஸல்) அவர்கள் அவன் தூதரென்றும் சாட்சியம் கூறுகிறேன்"  

நான் என் கலாச்சாரத்துக்கு எதிராகவும் என் குடும்பத்திற்கு எதிராகவும் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டேன், குறிப்பாக என் தாயாருக்கு இதில் சுத்தமாக உடன்பாடு இல்லை.   

 

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjtdvFsa_hifNCcf-BCWRCTTUhb0s2TYjE5KKPLNHEe4he1FTmns-n-3VRhb1TvszQGhhd2xSz3Ta9LnULghV7_mwvaswSyHLU6AEfUrWY_ukrG9yScvgZY5ui3O-zs4y7Y6ZwM/s400/Satellite.jpg


நான் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட சில நாட்களில் ரமலான் மாதம் வந்தது. இஸ்லாத்தில் என்னுடைய புது வாழ்வை ரமலான் மாதத்தில் இருந்து தொடங்குவதென முடிவெடுத்தேன். அல்ஹம்துலில்லாஹ்...ரமலான் மாதத்தை வெற்றிகரமாக கடந்தேன்.      

 

ஆகஸ்ட் மாதம் நான்காம் தேதியிலிருந்து தொழ ஆரம்பித்தேன். துவக்கத்தில் எனக்கு மிக கடினமாக இருந்தது, ஏனென்றால் என்னை சுற்றி இருந்த முஸ்லிம்கள் யாரும் இஸ்லாத்தை சரிவர பின்பற்றவில்லை, அதனால் நான் யாரிடமும் கேட்கவில்லை. 

 

எப்படி தானாக தொழுவது என்று இணையதளங்களில் இருந்து கற்றுக்கொண்டேன், ஏனென்றால், யாரும் எனக்கு எப்படி தொழ வேண்டும் என்றோ அல்லது உளு எப்படி செய்ய வேண்டும் என்றோ அல்லது இஸ்லாத்தின் சட்டத்திட்டங்களையோ சொல்லித்தரவில்லை. 

 

ஒருமுறை என் நண்பர் ஒருவர் சொன்னது என்னை மிகவும் வேதனைக்குள்ளாக்கியது  . அவர் கூறினார், உன்னால் நிச்சயமாக இஸ்லாத்தை புரிந்து கொள்ள முடியாது, ஏனென்றால் நீ முஸ்லிமாக பிறக்கவில்லை என்று".

இப்படி சொன்ன அந்த சகோதரர் மட்டும் என் கையில் சிக்கினார்......இறைவன் அவருக்கு நல்லறிவை அளிப்பானாக...ஆமின்    

 

"நான் ரமலானில் நோன்பு நோற்க விருப்பப்படுகிறேன் என்று நான் அவரிடம் கூறியபோது, அவர் கூறினார், ரமலான் என்பது பசியோடு இருப்பது மட்டும் அல்ல என்று. இது நடந்தபோது நான் இஸ்லாத்திற்கு மிக புதியவள், இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டு ஒரு மாதம் தான் ஆகியிருந்தது. 

 

அப்போது நான் மிகவும் பயந்துவிட்டேன்

  • என்னால் அரபியில் தொழ முடியாமலேயே  போய்விட்டால் என்ன செய்வது?
  • என்னால் சரியாக தொழ முடியாவிட்டால் என்ன செய்வது? 


அதுமட்டுமல்லாமல் என்னிடம் ஹிஜாபோ, தொழுகை விரிப்போ கூட இல்லை, உதவி செய்யவும் யாருவில்லை. மிகவும் பயந்துவிட்டேன்...

 

ஆனால், நான் தொழ ஆரம்பித்தபோது, இறைவன் நிச்சயமாக இப்போது என்னைப் பார்த்து புன்னகைத்து கொண்டிருப்பான் என்றே நினைத்தேன்.

ஏனென்றால்,சூராக்களையும் தொழும் முறைகளையும் ஒரு தாளில் எழுதிக்கொள்வேன், பின்னர் அந்த தாளை என் வலது கையில் வைத்துக்கொண்டு சத்தமாக படிப்பேன், பிறகு ருக்கூ செய்வேன், அப்படியே படிப்பேன்...இப்படியே தொடரும்... நிச்சயமாக நான் செய்வது வேடிக்கையாய் இருக்கிறதென்று எனக்கு தெரியும். 

பிறகு வெற்றிகரமாக சூராக்களை அரபியில் மனப்பாடம் செய்துக்கொண்டேன், அதன் பிறகு பிரச்சனை இல்லை. 

 

பிறகு facebook வந்தேன், நிறைய நண்பர்களும், சகோதரிகளும் கிடைத்தார்கள். அந்த சகோதரிகளிடமிருந்து நிறைய அன்பையும் துணிவையும் பெற்றேன். பிறகு முஸ்லிம் ஒருவர் என்னை திருமணம் செய்து கொள்ள விருப்பம் தெரிவித்தார். அவர்தான் எனக்கு ஹிஜாபும், தொழுகை விரிப்பும், ஒரு இஸ்லாமிய நூலையும் பெற்றுத் தந்தார்.

அதுமட்டுமல்லாமல், ஜோர்டானிலிருந்து என் முதல் அரபி குரானை தபால் மூலம் பெற்றேன், ஏனென்றால் இங்கு அதை வாங்கமுடியாது. இப்போது சுமார் ஒரு வருடமாக நான் ஹிஜாப் அணிகிறேன். 

 

என் தாயுடன் மிக கஷ்ட காலங்களை கடந்து வந்தேன். அவர் என்னிடம் கூறுவார், நீ தீவிரவாதி ஆகிவிடுவாய் என்று. எப்படி என் பழைய மதத்தை விட்டு விலகி வந்தேனோ, அதுபோல என் தாயாரையும், என் நாட்டையும் விட்டு விலகிவிட எண்ணினேன். அவர் எல்லா பன்றி இறைச்சிகளையும் குளிர் சாதன பெட்டியில் வைத்துவிடுவார், நான் அவற்றை உண்ண மறுப்பேன், பிறகு அது அவருக்கும் எனக்குமிடையே பெரும் வாக்குவாதமாக மாறிவிடும். 

 

அவரால் நான் தொழுவதையோ, ஹிஜாப் அணிந்திருப்பதையோ பொறுத்துக்கொள்ள முடியாது. அதனால் நான் மாடியில் என் அறையில் தொழுதுக் கொள்வேன். நான் ஹிஜாப் அணிந்திருக்கும்போது என்னை திரும்பிக்கூட பார்க்கமாட்டார், அப்போது கூறுவார் "நான் ஒரு கிருத்துவ மகளைத் தான் பெற்றெடுத்தேன், ஹிஜாப் அணிந்த முஸ்லிமை அல்ல" என்று... 

 

ஆக, எங்களுக்குள் கடுமையான பிரச்சனைகள். ஆனால் நான் எப்பொழுதும் என் தாயாரிடம் முரட்டுத்தனமாக நடந்து கொண்டதில்லை. அல்ஹம்துலில்லாஹ்.... இப்பொழுது என் தாயார் அமைதியாகிவிட்டார், நான் இஸ்லாத்தை தழுவியதையும் ஏற்றுக்கொண்டு விட்டார். அதற்காக நான் அல்லாஹ்விற்கு நன்றி சொல்கிறேன். இப்போதெல்லாம் நான் ஹிஜாபுடனே வெளியே செல்கிறேன், என் தாயாரும் ஒன்றும் சொல்லுவது இல்லை. 

 

என் தந்தையுடன் நான் என் வாழ்நாளில் பேசியதே இல்லை, அவரும் என்னைப் பார்க்க விரும்பியதில்லை. ஆனால் இப்போதோ, இஸ்லாமினால், நான் அவரிடம் நெருங்க ஆரம்பித்திருக்கிறேன், அதனால் இப்போதெல்லாம் அவர் எங்களை அடிக்கடி வந்து பார்க்கிறார். 

 

ஆம், என் வாழ்க்கை ஒரு மிகப்பெரிய சோதனை, ஆனால் அதற்காக நான் இறைவனுக்கு நன்றி சொல்லுகிறேன், அதுமட்டுமல்லாமல் எனக்கு பொறுமையும் நம்பிக்கையும் இருக்கிறது. கியாமத் நாளில் நான் அவர்களுக்கு நன்றி உடையவளாய் இருப்பேன். 

 

நான் மென்மேலும் என்னை தூய்மைப்படுத்திக்கொள்ளவும், என் மார்க்கத்தை பற்றி  அறிந்துகொள்ளவும் முயற்சி செய்கிறேன்.     

 

அல்லாஹ் என் மீது என்ன விதித்திருக்கிறானோ அதுதான் நடக்கும். அதனால் இறைவன் எனக்கு அளித்த இந்த வாழ்வை அழகான முறையில் வாழவே விரும்புகிறேன்.   


நான் இப்போது டெப்ரசென்னில் (Debrecen, the second largest city in Hungary) மற்றவர்களுக்கு உதவிக் கொண்டிருக்கிறேன். சமீபத்தில் நான் ஒரு பணி திட்டத்தை துவங்கியுள்ளேன், அது, மக்களிடமிருந்து, ஏற்கனவே பயன்படுத்திய உடைகளை சேகரித்து இங்குள்ள அகதிகள் முகாமில் இருக்கும் மக்களுக்கு கொடுப்பதாகும். யுத்தங்களினால் வீடில்லாத நிறைய முஸ்லீம்களும் இங்கு இருக்கின்றனர். அதனால், உடைகளை சேகரித்து அங்கு சென்று அவர்களுக்கு கொடுத்தோம். அங்கு உள்ள பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பாகிஸ்தானி ரொட்டிகள் தயாரித்து கொடுத்தேன், என்னுடைய இந்த செயல் அவர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது, அதனை பார்க்கும்போது எனக்கு மிகவும் சந்தோஷமாய் இருந்தது.

முன்பெல்லாம் எனக்கு தொந்தரவு தரும் வகையில் யாராவது பேசினால் மிகவும் கோபப்படுவேன், ஆனால் இப்போதோ, நான் போகுமிடமெல்லாம் மற்றவர்களுக்கு ஒரு உதாரணமாய் இருக்க விரும்புகிறேன்.

அதுமட்டுமல்லாமல், இஸ்லாத்தை ஏற்க விரும்புகிறவர்களுக்கும், புதிதாய் ஏற்றவர்களுக்கும் வழிகாட்ட முயற்சிக்கிறேன். ஒருநாள் இங்கு, புதிதாய் இஸ்லாத்தை தழுவிய இரண்டு ஹங்கேரிய சகோதரிகளை சந்தித்தேன். அவர்களுக்கு இஸ்லாமிய புத்தகங்களையும், என்னுடைய தொழுகை விரிப்புகளையும், குரானையும் கொடுத்தேன். அல்ஹம்துலில்லாஹ், நாங்கள் மூவரும் சேர்ந்தே தொழுதோம், அவர்களுக்கு மிகவும் மகிழ்ச்சி.

முஸ்லிம்களாகிய நாங்கள் அருமையானவர்கள், நட்பானவர்கள், நல்ல இதயத்தை உடையவர்கள் என்ற பிம்பத்தை விட்டுச் செல்லவே முயற்சிக்கிறேன்.

நான் இஸ்லாத்தை தழுவி ஒன்றரை ஆண்டுகள் ஆகின்றன. நான் இப்போது, குரானை ஓதுவதற்காக அரபி கற்றுக் கொண்டிருக்கிறேன். தற்போது குரானை ஹங்கேரி மொழியில் படிக்கிறேன், தொழுகைகளை தவறாமல் நிறைவேற்றுகிறேன், குரானையும் சுன்னாவையும் சரியாக பின்பற்ற முயற்சிக்கிறேன், இஸ்லாத்தை மெம்மேலும் புரிந்து கொள்ள நிறைய நூல்களை படிக்கிறேன்......

அஸ்ஸலாமு அலைக்கும்.....

ஆயிஷா"

சுப்ஹானல்லாஹ்...

 

சகோதரி ஆயிஷா அவர்களுக்கு இறைவன் அழகான எதிர்காலத்தையும், சோதனைகளை எதிர்த்துப்  போராடும் வல்லமையையும் கொடுப்பானாக...ஆமின்...  

                       

சகோதரி ஆயிஷாவின் இந்த கதையைப் படிக்கும் போது எனக்கு மற்றுமொரு சகோதரர் நினைவுக்கு வருகிறார். பல மாதங்களுக்கு முன் படித்தது என்பதால் அவரது பெயர், நாடு போன்ற விபரங்கள் மறந்துவிட்டன. ஆனால் அவர் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட விதம் மட்டும் பசுமையாக நினைவில் நிற்கிறது.

அவர் குரானை அங்கும் இங்குமாக படித்திருக்கிறார், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களது வாழ்க்கை வரலாற்றை அறிந்திருக்கிறார். மேலும் பல இஸ்லாமிய நூல்களையும் படித்திருக்கிறார்.

இஸ்லாம் தான் சரியான மார்க்கம் என்பது அவருக்கு உறுதியாக தெரிகிறது. ஆனால் ஏதோ ஒன்று தடுக்கிறது (இப்படி நம்மைச் சுற்றி பலபேர் உண்டு, கண்டுக்கொள்ளுங்கள் )....

ஒருநாள் இரவில், அவரது வீட்டில், ஜன்னல் அருகே உட்கார்ந்து கொண்டு வெளியே பார்த்துக் கொண்டே,

"இறைவா, நிச்சயமாக நீ இருக்கிறாய் என்று எனக்கு விளங்குகிறது, முஹம்மது (ஸல்) அவர்கள் உன் தூதர் என்பதிலும் எனக்கு சந்தேகமில்லை. ஆனால் ஏதோ ஒன்று என்னை தடுக்கிறது. என் சந்தேகம் தீர எனக்கு நீ ஒரேயொரு அத்தாட்சியை காட்டிவிடு, ஒன்றே ஒன்று,  இதோ நான் வெளியில் தான் பார்த்துக் கொண்டிருக்கிறேன், எனக்கு ஏதாவது ஒன்றை காட்டிவிடு, நான் உன்னிடம் வந்துவிடுகிறேன், தயவு செய்து உதவி செய்..."

இப்படியாக துஆ செய்துக் கொண்டு வெளியிலேயே பார்த்து கொண்டிருக்கிறார், நிமிடங்கள் சென்றன, சில மணி நேரங்களும் சென்றன......ஒன்றுமில்லை...

சகோதரர் சோர்ந்து விட்டார். இதற்கு மேலும் எதிர்ப்பார்க்க முடியாமல் படுக்கைக்கு சென்றார். படுக்கும் முன் குரானை திறந்து பார்ப்பது அவரது சில நாள் வழக்கம்.

அன்றும், அதுபோல குரானைத் திறந்தார்...பார்த்தார்...படிக்கிறார்...அவரது கண்களில் கண்ணீர் பெருகுகிறது...உணர்ச்சிவசப்படுகிறார்...

ஆம், அவர் தோராயமாக திறந்த அந்த பக்கத்தில், குரான் வசனங்கள் அத்தாட்சிகளை பற்றி பேசின....அவ்வளவுதான்....மிகுந்த உணர்ச்சிவசப்பட்டவராய்...  

"இறைவா, நீ அத்தாட்சியை காண்பித்து விட்டாய். உன்னுடைய அத்தாட்சிகள் என்னுள்ளேயே இருக்கின்றன,என்னை சுற்றியுள்ள ஒவ்வொன்றிலும் இருக்கின்றன..."

அவரால் அவரது உணர்ச்சிகளை கட்டுப்படுத்த முடியவில்லை. அந்த கனத்திலேயே இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார். மறுநாள் பக்கத்திலிருந்த பள்ளிக்கு சென்று மறுபடியும் சஹாதா கூறினார்.              

இதனைப்  படிக்கும் போது நானும் சிறிது உணர்ச்சிவசப்பட்டுவிட்டேன். நிச்சயமாக இறைவன் தான் நாடுவோரை நேர்வழியில் செலுத்துகிறான்...  


இறைவன் நம்மை என்றென்றும் இஸ்லாத்தில் நிலைத்திருக்க செய்வானாக...ஆமின்..

அல்லாஹ்வே எல்லாம் அறிந்தவன்...

My Sincere thanks to:
1. Reading Islam website - http://www.readingislam.com

 

Reference:
1. I wondered why Muslims are so proud - by Sister.Aysha, readingislamdotcom

உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹ்மத் அ aashiq.ahamed.14@gmail.com

Tuesday, June 29, 2010

யூசுப் எஸ்டஸ்...

 
----- Original Message -----
From: Gulam
Sent: Wednesday, March 10, 2010 10:04 AM
Subject: யூசுப் எஸ்டஸ்...

 

 

 

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

உங்கள் அனைவர் மீதும் எல்லாம் வல்ல இறைவனின் சாந்தியும் சாமாதானமும் நிலவுவதாக...ஆமின்...

 

யூசுப் எஸ்டஸ் (Yusuf Estes), நம் தலைமுறையின் மிகச் சிறந்த இஸ்லாமிய மார்க்க அறிர்களில் ஒருவர். மிக நகைச்சுவையாக பேசுபவர், அதே சமயம் கண்கலங்கவும் வைத்து விடுவார்.

 

மிக அழகிய முறையில் இஸ்லாத்தை எடுத்துச் சொல்வதில் வல்லவர். இவரால் இஸ்லாத்தை தழுவியோர் ஏராளமானோர். அல்ஹம்துலில்லாஹ்...  

 

இவர் இஸ்லாத்தை தழுவிய விதம் பற்றி இவர் சொல்ல நான் கேட்ட சில தகவல்களை இந்த பதிவில் உங்களுடன் பகிர்ந்து கொள்ளவிருக்கிறேன்...இன்ஷா அல்லாஹ் 

 

யூசுப் எஸ்டஸ் அவர்கள் அமெரிக்காவின் டெக்சஸ் (Texas) மாகாணத்தை சேர்ந்தவர் (ஜார்ஜ் புஷ்சும் இந்த மாகாணத்தை சேர்ந்தவர் தான்). கிருத்துவ மத போதகராக இருந்தவர் (Preacher).

 

இவர் வாழ்வின் முக்கியமான மாற்றத்தை ஏற்ப்படுத்திய அந்த ஆண்டு 1991. யூசுப் எஸ்டஸ் அவர்கள் செல்வ செழிப்பான குடும்ப பின்னணியைக் கொண்டவர். இவரும் இவரது தந்தையும் பல தொழில்களை வெற்றிகரமாக நடத்திவந்தவர்கள். தொழிலை கவனித்துக்கொண்டே கிருத்துவத்தையும் போதித்து வந்தார். இறைபக்தி அதிகம் உடையவர்.       

 

1991 ஆம் ஆண்டு, ஒரு வியாபார விஷயமாக எகிப்திலிருந்து வரும் முஹம்மது என்பரை சந்திக்க வேண்டிய நிர்பந்தம். அதுதான் அவர் வாழ்வை திருப்பிப்போட்ட சமயமும் கூட.

 

அப்போது வரை யூசுப் எஸ்டஸ் அவர்கள் இஸ்லாத்தை பற்றி எண்ணியிருந்தது ...

 

"முஸ்லிம்கள் என்றாலே தீவிரவாதிகள், கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள், பாலைவனத்தில் இருக்கும் ஒரு கருப்பு வடிவத்தை வணங்குபவர்கள், தினமும் ஐந்து முறை தரையை முத்தமிடுபவர்கள்...இது தான் இஸ்லாத்தை பற்றி நான் அறிந்திருந்தது"

 

"1991 ஆம் ஆண்டின் முற்பகுதி, எகிப்திலிருந்து வரும் முஹம்மது என்பவருடன் தாம் வியாபார ஒப்பந்தம் செய்யப்  போவதாக என் தந்தை என்னிடம் கூறினார். என்ன முஸ்லிமுடனா?, நான் மறுத்து விட்டேன். ஆனால் என் தந்தை வேறு வழி இல்லையென்று திட்டவட்டமாக கூறிவிட்டார்.    

 

இது வியாபாரம் என்பதால் என்னால் முஹம்மதை நிராகரிக்க முடியவில்லை. சரி அவருடன் சேர்ந்து பணியாற்றுவோம். உண்மையான என்னுடைய மார்க்கத்தையும் அவருக்கு போதிப்போம். இதுதான் நான் முதலில் நினைத்தது... 

 

நான் அவரை சந்திக்க தயாரானேன். ஏசு என் கடவுள் (Jesus is my Lord) என்று எழுதப்பட்டிருந்த ஒரு தொப்பியை அணிந்துக்கொண்டு, கழுத்தில் ஒரு பெரிய சிலுவையை அணிந்து கொண்டு, கையில் பைபிளை வைத்துக்கொண்டு அவரை வரவேற்க காத்திருந்தேன்.    

 

முஹம்மதும் வந்தார். நான் அதிக நேரம் வீணாக்கவில்லை...

 

உங்களுக்கு கடவுள் நம்பிக்கை இருக்கிறதா?



ஆம்...

 

ஆச்சர்யமான பதில். நான் தொடர்ந்தேன். இப்ராகிம்(அலை), இசாக்(அலை), இஸ்மாயில்(அலை) என்று பைபிளில் இருக்கும் நபிமார்களிடம் இருந்து ஆரம்பித்தேன். அதன் பிறகு நான் பலமுறை அவருடன் என் மார்க்கத்தை பற்றி பேசியிருக்கிறேன், விவாதித்திருக்கிறேன். அப்போதெல்லாம் நான் தான் வென்றதாக நினைப்பேன். ஆனால் இன்றோ, அதைப் பற்றியெல்லாம் நினைக்கும் போது, உண்மையில் முஹம்மது தான் வென்றார் என்பது புரிகிறது.                 

 

முஹம்மதின் பண்புகள் என்னை மிகவும் கவர்ந்தன. முஹம்மதை அவர் வழியில் விட்டுவிடுமாறு என் தந்தை என்னிடம் கூறினார். என்ன, இப்படி ஒரு பண்புள்ளவர் ஒரு  தவறான கொள்கையில் இருப்பதா? இல்லை.. இவரை எப்படியாவது என் மதத்திற்கு அழைத்து வருவேன். 

 

  

இதற்கு நான் முதலில் செய்தது, அவரை என் வீட்டிலேயே குறைந்த வாடகைக்கு தங்க வருமாறு அழைத்தது. பணம் முக்கியமல்ல, அவருக்கு நான் கொடுக்கக் கூடிய போதனை தான் முக்கியம். முஹம்மதும் எங்களுடன் தங்க ஒப்புக்கொண்டார்.

 

இது நடந்து கொண்டிருந்த அதே வேலையில், என்னுடைய நண்பரான மதகுரு ஒருவர்(Priest, father) மாரடைப்பு காரணமாக மருத்துவமைனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை தினமும் சென்று சந்தித்து வருவேன். அப்போது அந்த அறையில் தங்கிருந்த பாதர் பீட்டர் ஜகோப்ஸ் (Father Peter Jacobs) அவர்கள் எனக்கு நன்கு பழக்கமானார். அவரும் மாரடைப்பு காரணமாக தான் அந்த மருத்துவமனயில் அனுமதிக்கப்பட்டிருந்தார். 

 

நலமாகி வந்தவுடன் அவரை என்னுடன் வந்து வசிக்குமாறு கேட்டுக்கொண்டேன். அவரும் எங்களுடன் வசிக்க சம்மதித்தார்.

 

இதுதான் நான் எதிர்பாத்த நேரம். மாட்டினார் முஹம்மது. இப்போது ஒரே வீட்டில் நான், என் மனைவி, என் தந்தை மற்றும் பாதர் பீட்டர் ஜகோப்ஸ், எல்லோரும் கிருத்துவத்தை பற்றி நன்கு அறிந்தவர்கள். இனி முஹம்மதை எங்கள் வழிக்கு கொண்டு வந்து விடவேண்டியதுதான். 

 

ஒவ்வொரு நாளும், இரவு உணவின் போது நாங்கள் அனைவரும் முஹம்மதை சுற்றி அமர்ந்து கொள்வோம். கேள்விகளை தொடுப்போம். 

 

பல கேள்விகள்...

 

நாங்கள் அனைவரும் ஒவ்வொரு விதமான பைபிளை வைத்திருப்போம், உதாரணத்துக்கு நான் RSV (Revised Standard version) பைபிள், என் தந்தை கிங் ஜேம்ஸ் பதிப்பு (King James version) பைபிள் என்று பல பைபிள்கள்"

 

கிருத்துவத்தை பற்றி தெரியாதவர்களுக்கு, இங்கு ஒரு தகவல். கத்தோலிக்க கிருத்துவர்களின் பைபிள் 73 புத்தகங்களை கொண்டது. protestant கிருத்துவர்களின் பைபிள் 66 புத்தகங்களை கொண்டது.   

 

"ஆனால் முஹம்மதோ ஒரே ஒரு புத்தகத்தை கொண்டு வந்து வைத்தார். அது கடவுளிடமிருந்து வந்தது என்றும், அன்றிலிருந்து இன்றுவரை மாற்றமடையாதது என்றும் கூறினார். இது எனக்கு ஆச்சர்யமான தகவல்கள். 

 

பிறகு ஒருமுறை திரித்துவத்தை (Trinity, it is nothing but a christian belief that teaches the unity of Father, Son, and Holy Spirit as three persons in one Godhead). பற்றி விவாதம் திரும்பியது. முஹம்மது, திருத்துவத்தை லாஜிக்காக நிரூபியுங்கள் என்று கேட்டார்...

 

என்ன லாஜிக்கா? மதம் என்பது நம்பிக்கை சம்பந்தப்பட்டது, இங்கு லாஜிக்கெல்லாம் பார்க்ககூடாது...

 

எங்கள் மார்க்கத்தில் இரண்டும் உண்டு....

 

இது போன்ற பதில்கள் தான் எங்களை திக்குமுக்காட செய்தன... நான் வீம்புக்காக அவருடன் வாதம் செய்துகொண்டிருந்தேன், ஆனால் அவருடைய பதில்களில்தான் அதிகம் அர்த்தமிருந்தது...இப்படியே சில நாட்கள் சென்றன..

 

ஒருமுறை பாதர் பீட்டர் ஜகோப்ஸ் அவர்கள், முஹம்மதிடம், தன்னை மசூதிக்கு அழைத்து செல்லுமாறு கேட்டுக்கொண்டார். சென்று வந்த அவரிடம்... 

 

பாதர்...அவர்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள்? பலி கொடுத்து இறைவனை வணங்கி கொண்டிருந்தார்களா? 

 

இல்லை..அப்படியெல்லாம் ஒன்றுமில்லை...வந்தார்கள், தொழுதார்கள், சென்றுவிட்டார்கள்...

 

என்ன அவ்வளவுதானா....எந்த மாதிரி பாடல்களை பாடினார்கள்? எந்த மாதிரி இசைக்கருவிகளை வைத்திருந்தார்கள்? 

 

அப்படியெல்லாம் ஒன்றுமில்லை?

 

என்ன இசைக்கருவிகள் இல்லாமல் கடவுள் வழிப்பாடா? 

 

இவையெல்லாம் எனக்கு வியப்பை தரும் தகவல்கள். முஸ்லிம்களின் கடவுள் வழிபாடு என்பது மிகவும் எளிதான, வலிமையான ஒன்று என்பதை புரிந்துக்கொண்டேன். 

 

இஸ்லாம் என்னை நெருங்கி வந்துக்கொண்டே இருந்தது. இப்போது என் மதத்தில் பல கேள்விகளை கேட்க ஆரம்பித்தேன்...

 

சில தினங்களுக்கு பிறகு, பாதர் பீட்டர் ஜகோப்ஸ் அவர்கள் மறுபடியும் முகம்மதுடன் மசூதிக்கு சென்றார். அவருக்காக நான் காத்திருந்தேன். இந்த முறை என்ன புது செய்தி கொண்டுவருவார் என்று பார்ப்பதற்காக.                

 

கார் வந்தது, இருவர் இறங்கினார்கள். ஒருவர் முஹம்மது, அது எனக்கு நன்றாகவே தெரிந்தது, யார் அந்த மற்றொருவர்?, நீண்ட ஆடையுடன், தலையில் குல்லா அணிந்துக்கொண்டு, யாரவர்?...

 

உற்று கவனித்தேன்....என்னால் நம்பமுடியவில்லை...பாதர் பீட்டர் ஜகோப்ஸ்சா அது? ஆம் அவரேதான்...என்ன, அவர் இப்போது முஸ்லிமா? அமெரிக்கா, மெக்ஸிகோ என்று நாடு நாடாக சென்று கிருத்துவத்தை போதித்தாரே, அவரா இவர்? அதிர்ச்சியில் உறைந்தேன். 

 

 

 

பாதர் பீட்டர் ஜகோப்ஸ் அவர்கள் என்னிடம் வந்தார், 

 

நிச்சயமாக இறைவன் ஒருவனே என்றும், முஹம்மது (ஸல்) அவர்கள் அவனது தூதரென்றும் நான் சாட்சியம் கூறுகிறேன்...   

 

நான் இன்னும் அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை. என்னிடத்தில் பெரும் பாதிப்பை ஏற்ப்படுத்தியது அது. 

 

மாடியில் இருந்த என் மனைவியிடம் சென்றேன்.

 

கவனித்தாயா?, இப்போது பாதர் பீட்டர் ஜகோப்ஸ் ஒரு முஸ்லிம். இஸ்லாமிய மார்க்கம் நான் நினைத்தது போல் இல்லை, அது எனக்கு நல்ல மார்க்கமாகவே படுகிறது.

 

எனக்கு உங்களிடமிருந்து விவாகரத்து வேண்டும்...

 

ஹேய்... இரு..................இரு..................நான் சொன்னதை தவறாக எடுத்துக்கொண்டாயா? நான் முஸ்லிமாகவில்லை, அவர்தான் முஸ்லிம். நான் இன்னும் கிருத்துவன் தான். அப்படியே நான் முஸ்லிமாகினாலும் நீ என்னுடன் தாராளமாக வாழலாம், ஏனென்றால் ஒருமுறை முஹம்மது சொல்ல கேட்டிருக்கிறேன், இஸ்லாமில் ஒரு முஸ்லிம் ஆண் ஒரு கிருத்துவ பெண்ணை திருமணம் செய்யலாம். ஆனால் ஒரு முஸ்லிம் பெண்தான் கிருத்துவ ஆணை திருமணம் செய்யக்கூடாது...

 

அதனால் தான் கேட்கிறேன் எனக்கு விவாகரத்து வேண்டுமென்று...

 

என்ன? 

 

ஆம், முஸ்லிம் பெண்ணாகிய என்னால் கிருத்துவ ஆணாகிய உங்களுடன் வாழ முடியாது...                           

 

அதிர்ச்சி மேல் அதிர்ச்சி...நான் நிதானத்திலேயே இல்லை...சிறிது நேரத்தில் சுதாரித்துக்கொண்டேன்...

 

இரு...அவரசப்படாதே, உன்னிடம் ஒன்றை நான் சொல்ல வேண்டும். இஸ்லாம் எப்போதோ என் மனதில் வந்து விட்டது. நானும் முஸ்லிம்தான்.. 

 

என் மனைவி என்னை நம்பவில்லை. 

 

ஏன் இப்படி மாற்றி மாற்றி பேசுகிறீர்கள், தயவு செய்து இங்கிருந்து வெளியேறிவிடுங்கள்...

 

நான் வெளியே வந்து விட்டேன். ஒன்றும் புரியவில்லை. ஒரே குழப்பம். தூக்கம் சரிவர வரவில்லை. எழுந்து சென்று முஹம்மதை எழுப்பி வெளியே அழைத்து சென்றேன். ஏதேதோ பேசுகிறேன் அவரிடம், ஒன்றும் புரியாமல்... இப்போதும் அவர் பொறுமையாகவே பேசினார், விளக்கினார். 

 

சுப்ஹு நேரம் நெருங்கி விட்டது, முகம்மதுடன் நானும் பள்ளிக்கு சென்றேன். அந்த பிளைவூட் தரையில் சஜிதா செய்தேன். 

 

இறைவா எனக்கு நல்வழி காட்டு....

 

இருவரும் வீட்டிற்கு வந்தோம். முஹம்மது மற்றும் பீட்டர் ஜகோப்ஸ் அவர்கள் முன்னிலையில் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டேன். நான் சஹாதா சொன்ன சிறிது நேரத்தில் என் மனைவியும் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார். சுபானல்லாஹ்...

 

என் தந்தையிடம் விஷயத்தை சொன்னேன். 

 

நான்தான் அப்போதே கூறினேனே இஸ்லாம் ஒரு அழகிய மார்க்கமென்று. எனக்கு நீ இஸ்லாத்தில் இணைந்தது மகிழ்ச்சிதான். 

 

dad,..... அப்போ நீங்கள்? 

 

இந்த கேள்விக்கு அவரிடமிருந்து பதில் வரவில்லை. மாதங்கள் சென்றன. எப்போதும் என்னை மசூதியில் விட வரும் என் தந்தை சில நாட்களாக என்னுடன் சேர்ந்து தொழ ஆரம்பித்தார்.

 

பலரும் என்னிடம் வந்து கேட்க ஆரம்பித்தனர்...

 

எப்பொழுது உங்கள் தந்தை இஸ்லாத்தை தழுவினார்? 

 

நான் விளக்கமளித்தேன். ஒரு சமயத்தில் இந்த கேள்விகள் அதிகமாகவே, நான் அவர்களிடம், 

 

நீங்கள் ஏன் அவரிடமே இந்த கேள்வியை கேட்கக்கூடாது? 

 

அவர்கள் அவரிடம் சென்று அந்த கேள்வியை கேட்டனர்... 

 

அவர் கூறினார் "கடந்த ஒரு வருடமாக...."

 

சுபானல்லாஹ்...நான் இப்போது, நடந்ததையெல்லாம் திரும்பி பார்க்கிறேன். ஆம் முஹம்மது வென்றுவிட்டார். ஆனால் நானும் வென்றுவிட்டேன். இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டதினால்..."

 

யூசுப் எஸ்டஸ் அவர்களுடைய இந்த வரலாற்றை அவர் சொல்ல நீங்கள் கேட்க வேண்டும். மிகுந்த நகைச்சுவையுடனும், அதே சமயம் உணர்ச்சிபூர்வமாகவும் சொல்லுபவர். 

 

இப்போது யூசுப் எஸ்ட்ஸ் அவர்கள் பல்வேறு நாடுகளுக்கும் சென்று பலரையும் இஸ்லாத்தில்பால் அழைத்து வருகிறார். சென்னைக்கும் ஒருமுறை வந்திருக்கிறார். பல இணையதளங்களை நடத்திவருகிறார்.

 

இறைவன் இவருக்கு தொடர்ந்து நல்ல உடல் நலத்தையும், மன நலத்தையும் கொடுப்பானாக...ஆமின்

 

இவருக்கு ஒரு செல்லப்பெயர் உண்டு...அது "ATHEIST KILLER" என்பது...ஏன்? இவரது சில வீடியோக்களை பார்த்தால் தெரியும்...

 

இறைவன் நம் எல்லோருக்கும் நல்வழி காட்டுவானாக...ஆமின்...


அல்லாஹ்வே எல்லாம் அறிந்தவன்...

References:
1. Sheikh Yusuf Estes talk on "priests and Preachers Coming to Islam" - for Islam today.
2. Sheikh Yusuf Estes interview on "How he came to Islam" with eddie - for thedeenshow.  
3. Sheikh Yusuf Estes "How Yusuf estes came to Islam" - Islamtomorrowdotcom/yusuf_story.htm

உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹ்மத் அ
aashiq.ahamed.14@gmail.com

Six C's of Character - Yasir Fazaga