உ.பி. குண்டுவெடிப்பு: 2 தீவிரவாதிகள் கைதுசனிக்கிழமை, டிசம்பர் 22, 2007
லக்னெள: உத்தரப் பிரதேச மாநிலத்தில் கடந்த மாதம் நடந்த தொடர் குண்டுவெடிப்புச் சம்பவம் தொடர்பா ஹர்கத் உல் ஜிஹாதி அல் இஸ்லாமி தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த 2 தீவிரவாதிகளை உ.பி. போலீஸார் இன்று கைது செய்தனர்.கடந்த மாதம் 23ம் தேதி உ.பி. மாநிலத் தலைநகர் லக்னோ, வாரணாசி, பைசலாபாத் ஆகிய நகரங்களில் உள்ள நீதிமன்ற வளாகங்களில் தொடர் குண்டுவெடிப்புச் சம்பவங்கள் நடந்தன. இதில் 13 பேர் கொல்லப்பட்டனர். 70க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.தீவிரவாதிகள் சைக்கிள்களில் வைத்த குண்டுகள் வெடித்ததில் இந்த அசம்பாவிதம் நடந்தது. இந்த சம்பவத்தில் ஹர்கத் அல் ஜிஹாதி அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதிகளுக்குத் தொடர்பு இருப்பது விசாரணையில் தெரிய வந்தது.இதையடுத்து கம்ப்யூட்டரில் வரையப்பட்ட தீவிரவாதிகளின் படங்களை வைத்து போலீஸார் அவர்களைத் தேடி வந்தனர்.இந்த நிலையில் இந்த சம்பவத்தில் தொடர்புடைய அஸம்கர் மாவட்டத்தைச் சேர்ந்த தாரிக் மற்றும் ஜன்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த காலித் முகம்மது ஆகிய இருவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.இவர்களில் தாரிக் யுனானி டாக்டர் ஆவார். ஹர்கத் உல் ஜிஹாதி அமைப்புடன் நெருங்கிய தொடர்புடையவர். காலித், மதரசா ஒன்றில் ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார்.உ.பி. தொடர் குண்டு வெடிப்பில் காலித்தான் முக்கிய சதிகாரராக செயல்பட்டுள்ளார் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. பாரபங்கி ரயில் நிலையத்தில் வைத்து இவர்கள் இருவரையும் இன்று அதிகாலை சிறப்பு அதிரடிப்படை போலீஸார் கைது செய்தனர்.கைது செய்யப்பட்ட இருவரிடமிருந்தும் ஒரு கிலோ ஆர்.டி.எக்ஸ், வெடிபொருள், டெட்டனேட்டர்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.இவர்களுக்கும், மே 23ம் தேதி மாயாவதி முதல்வராகப் பதவியேற்ற சில மணி நேரங்கலில் நடந்த சைக்கிள் குண்டுவெடிப்புச் சம்பவத்திற்கும் தொடர்பு உள்ளதாகவும் போலீஸார் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment