ஒளரங்கசீப்: கண்காட்சி பெயரால் மதவெறி.
ஒளரங்கசீப் இந்துக்களை கொடுமைப்படுத்துவது போல
கடந்த வாரம் சென்னையில், முகலாயப் பேரரசர் ஒளரங்கசீப் பற்றிய கண்காட்சி ஒன்று மத்திய அரசின் "லலித் கலா அகாடமி கண்காட்சி அரங்கில்' நடத்தப்பட இருப்பதாக பிரபல தின இதழ்களில் விளம்பரங்கள் வெளியாகி இருந்தன.இதையடுத்து நாமும், மாணவர்களுக்கும் வரலாற்று பிரியர்களுக்கும் உதவியாக இருக்கும் என்ற அடிப்படையில் நமது "மக்கள் உரிமை' இதழில் கண்காட்சி தொடர்பான செய்தியை வெளியிட்டு இருந்தோம்.பின்னர் புதன்கிழமை 05.03.2008 அன்று கண்காட்சியை பார்வையிடலாம் என மக்கள் உரிமை ஆசிரியரும் மாநில செயலாளருமான அன்சாரியும், உதவி அசிரியரும் வழக்கறிஞருமான காஞ்சி ஜைனுல் ஆபிதீன் ஆகிய இருவரும் சுமார் 6:30 மணியளவில் சென்றனர்.உள்ளே ஒளரங்கசீப் பற்றிய படங்கள் அவர் உத்தரவிட்டதாக கூறப்படும் ஆணைகள் ஆகியவை ஒவியங்களாக வரையப்பட்டு காட்சிக்கு வைக்கப் பட்டிருந்தன. முதல் ஒவியத்தை பார்த்தவுடன் தூக்கி வாரிப்போட்டது.முதல் ஒவியமே, இந்துக் கோயில் ஒன்றை இடிக்கச் சொல்லி ஒளரங்கசீப் ஆணையிட்டதாக ஒரு கடிதத்தை மாட்டியிருந்தனர்.அரங்கில் இருந்த அனைத்து ஒவியங்களும் ஒளரங்கசீப் இந்துக்களை கொடுமைப்படுத்துவது போலவும்அவர்களை மதம் மாற்றச் சொல்லி ஆணையிடுவதாகவும்இந்துக் கோயில்களை இடித்துவிட்டு அங்கு பள்ளிவாசல்களை கட்டுவது போலவும் தனது தம்பி தாராஹிகோவின் தலையை துண்டித்து அதை பார்வையிட்டு மகிழ்வது போலவும்,சீக்கிய குருமார்களைக் கொன்று ரசிப்பது போலவும்இவ்வாறாக ஒளரங்கசீப்பை பற்றி மட்டுமல்ல, பொதுவாக முஸ்லிம்கள் மீது வெறுப்புணர்வை தூண்டுவதாகவும்மத அடிப்படையில் மக்களிடையே பிரிவினையை எற்படுத்துவதாகவும்அனைத்து ஒவியங்களும் இருக்க வெகுண்டெழுந்த இருவரும் கண்காட்சி அரங்கில் இருந்த ஏற்பாட்டாளர் இருவரிடம் தங்கள் கண்டனத்தை தெரிவித்தனர்.ஏற்பாட்டாளர்கள் ஏதேதோ சொல்லி சமாளிக்க அங்கிருந்த பார்வையாளர் பதிவு புத்தகத்தில் தங்கள் கண்டனங்களை பதிவு செய்தனர்.பின்னர் நேராக லலித் கலா அகாடமியின் கண்காணிப்பாளர் அவர்களை சந்தித்து, அரசு கட்டடத்தில் இதுபோன்ற கண்காட்சியை எப்படி அனுமதித்தீர்கள் என்று கேட்டதுடன் தமிழகத்தில் நிலவும் சமூக நல்லிணக்கத்துக்கும் ஒற்றுமைக்கும் வேட்டு வைக்கும் இந்த கண்காட்சியை உடனே அகற்ற வேண்டும் என்று கோரிக்கை மனுவையும் அளித்தனர்.அதைப் பெற்றுக் கொண்ட கண்காணிப் பாளர் நாளைக்குள் (06.03.2008) கண்காட்சியை அகற்றுவதாக உறுதி அளித்தார். கண்காட்சி அகற்றப்பட வில்லையென்றால் மக்களை திரட்டி போராட்டம் நடத்தப்படும் என்று எச்சரித்து விட்டு புறப்பட்டனர். அங்கே முதல் எதிர்ப்பை தமுமுக தான் தொடங்கியது.உடனடியாக மார்க்ஸ் உள்ளிட்ட பாசிச எதிர்ப்பு முன்னணியின் தோழர்களுக்கும் தகவல் சொல்லப்பட்டு போன் மூலமும்... பேக்ஸ் மூலமும் கண்டனங்கள் பறந்தன.மக்கள் உரிமை சார்பில் செய்தியாளர் அத்தேஷும், ராபியும் அதை ரத்து செய்யக்கோரி பேக்ஸ் அனுப்பினர். இதனிடையே அடுத்த நாள், கண்காட்சியை அகற்ற எற்பாட்டாளர்களிடம் அகாடமியின் நிர்வாகிகள் கோரினர். ஆனால் ஒவியங்கள் அனைத்தும் பல லட்சம் மதிப்புள்ளவை அதனால் ஒரு நாளில் இவற்றை யெல்லாம் மாற்ற முடியாது என்பதால் ஒரு நாள் அவகாசம் கேட்டனர். அதனால் வியாழக்கிழமை வரை அவகாசம் கொடுக்கப்பட்டது.
இந்துக் கோயில்களை இடித்து விட்டு அங்கு பள்ளிவாசல்களை கட்டுவது போல-இதனிடையே கண்காட்சி தொடர்பான விவரங்கள் தமுமுகவினருக்கு எஸ்.எம். எஸ்.கள் மூலமாக பரவ வியாழனன்று தமுமுக மாநில துணைச் செயலாளர் பேரா.ஹாஜாகனி லலித் கலா அகாடமிக்குச் சென்றார். அவருடன் பேரா. ஹிதாயத்துல்லாஹ் உள்ளிட்ட நண்பர்கள் சென்றனர்.ஒவியக் கண்காட்சி பொறுப்பாளர்களிடம் வரலாற்றுத் திரிபு செய்யும் ஒவியங்களை அகற்ற வேண்டும் என வலியுறுத்தினார்.கண்காட்சி நிர்வாகிகள் வாக்குவாதம் செய்து கொண்டிருந்த பொழுது முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரியும் சுப்பிரமணிய சுவாமிக்கு மிக நெருக்க மானவருமான சந்திரலேகா மிகுந்த ஆவேசத்தோடு, இவரிடம் ஏன் விளக்கம் சொல்கிறீர்கள் என்று ஏற்பாட்டாளர்களிடம் எகிறினார். இதனால் வாக்கு வாதம் மேலும் முற்றியது.தமுமுக பொதுச் செயலாளர் செ. ஹைதர் அலியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு சம்பவத்தை விளக்கி காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொண்டார்.காவல்துறை உடனடியாக களமிறங்கியது. உதவி ஆணையர் முரளி தலைமையில் காவலர்கள் கண்காட்சியை மூடியதுடன், பயந்து எங்கே உடைத்து விடுவார்களோ என்று பத்திரமாக எடுத்துச் சென்றனர்.இதனால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.கண்காட்சியில் சர்ச்சைகள் எற்பட்டவுடன் தான் தெரிந்தது. இதற்கு எற்பாடு செய்தது முழுக்க முழுக்க சங்பரிவார கும்பல் என்று. பிரான்கோயிஸ் கௌத்தியர் (?) என்ற பிரெஞ்சு ஆய்வாளர் (?) ஒருவரின் தலைமையில் சங் கும்பல் குஜராத், புனே, பெங்களூர் போன்ற இடங்களில் இக்கண்காட்சியை நடத்தியுள்ளனர்.தீவிரவாதத்திற் கெதிரான தொடர் போராட்ட குழு என்ற பெயரில் இந்த கண்காட்சிகளை இவர்கள் நடத்தி வருகின்றனர்.கண்காட்சிக்கு எதிர்ப்பு என்று தெரிந்தவுடன் ராமகோபாலன், சந்திர லேகா போன்றவர்கள் கண்காட்சியை தொடர்ந்து நடத்த வேண்டும் என கத்தினர்.சென்னை அரசு கவின் கல்லூரி முதல்வர் உட்பட சில ஒவியர்கள் கருத்துரிமை பாதிக்கப்படுவதாக குரலெழுப்பினர்.பொய் வரலாற்றின் அடிப்படையில் புனையப்பட்ட இவ்வரலாற்று திரிபு கண்காட்சியை தடை செய்வது சரியே என பல்வேறு அமைப்புகளும், சமூக நல ஆர்வலர்களும் கூறியதால் தொடர்ந்து கண்காட்சி நடக்க லலித்கலா அகாடமியும், காவல்துறையும் அனுமதி மறுத்து விட்டன.தமுமுகவின் தலையீட்டால் தமிழகத் தில் சமூக நல்லிணகத்தை கெடுக்க நினைத்த சக்திகள் அடையாளம் காட்டப்பட்டுள்ளன என்று பல்வேறு தரப்பினரும் பாராட்டுக்கள் தெரிவித்தனர். இதுபோன்ற கண்காட்சிகளை வேறு இடங்களில் நடக்க, விடாமல் காவல்துறை கண்காணிக்க வேண்டும்.பல்வேறு பெயர்களில் கலை கண்காட்சி என்ற பெயரில் ஊடுருவ நினைக்கும் சங்பரிவார சக்திகளை அடையாளம் கண்டு தமிழக மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்.நல்ல எண்ணத்தில் செய்தி வெளியிட்டோம்கண்காட்சியை பார்வையிட்ட தொலைக்காட்சி நிகழ்ச்சி தயாரிப்பாளர் சி.எம்.என் சலீம் உள்ளிட்ட பலர் தமுமுக தலைவர்களை தொடர்புக் கொண்டு கண்காட்சியின் விபரீதத்தை கூறினர்.கண்காட்சிக்கு எதிராக தமுமுக உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் களப்பணி செய்ததை சன்நியூஸ், மக்கள் தொலைக்காட்சி, தமிழ் ஒசை, டெக்கான் க்ரானிக்கல் போன்ற செய்தி ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.சென்ற வார மக்கள் உரிமையில், நாளிதழ்களில் வந்த விளம்பரத்தைப் பார்த்தே ஒரு செய்தியாக ஒளரங்கசீப் கண்காட்சியை வெளியிட்டிருந்தோம்.ஒளரங்கசீப் பற்றிய வரலாற்று நிகழ்ச்சி என்றே நாம் நம்பினோம். அனால் அதற்கு பின்னே ஆரிய சூழ்ச்சி இருப்பதை பிறகுதான் உணர்ந்தோம். அந்த பிழைக்காக வருந்துகிறோம்.யார் பொறுக்கி?ஒளரங்கசீப் கண்காட்சியை நடத்திய பிரான்ஸ் காயிஸ் கவுத்தியர் 10.03.2008 அன்று நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளேட்டில் வெறித்தனமாக ஒரு கட்டுரையை எழுதியிருக்கிறார். அந்தக் கட்டுரையை அவர் தான் எழுதினாரா அல்லது அருண் சோரி எழுதி அவர் பெயரில் வெளியிடப்பட்டதா? என்று தெரியவில்லை.ஆற்காடு ஆளவரசர் நவாப் முஹம்மது அலி கண்காட்சியை பார்த்து சென்ற பிறகு அவர் தான் தமுமுக மற்றும் மனித நீதி பாசறைகளைச் சேர்ந்த பொறுக்கிகளை (Goons) தூண்டி விட்டார் என்றும்,அவர்கள் அங்கு வந்த நல்ல குடும்பத்து பெண்களிடம் வாக்குவாதம் செய்தார்கள் என்றும் எழுதியிருக்கிறார். அதாவது மதவெறியை எதிர்த்த நம்மை பொறுக்கிகள் என்று எழுதியிருக்கிறார்.யார் பொறுக்கி? வரலாற்றைத் திரித்தவர்களா? அதை வைத்து ஆதாயம் பெறுபவர்களா? அல்லது நல்லிணகத்திற்காக குரல் கொடுப்பவர்களா?இதை நியூ எக்ஸ்பிரஸ் நாளேடு தெளிவுபடுத்த வேண்டும்.--இப்பி பக்கீர்
No comments:
Post a Comment