கோடை வெயில் சுட்டெரிக்கத் தொடங்கிவிட்டது. இந்நிலையில் குழந்தைகளை எவ்வகையான நோய்கள் பாதிக்கும்? அதில் இருந்து குழந்தைகளை காப்பாற்றிக் கொள்வது எப்படி? என்பது பற்றி இக்கட்டுரையில் விளக்கியுள்ளேன். படியுங்கள்! பயன்பெறுங்கள்! கோடை வெயில் பாதிப்பில் இருந்து குழந்தைகளை பாதுகாப்பது எப்படி? குழந்தைகளின் வெப்பம் தாங்கும் தன்மை பெரியவர்களை விட குறைவு. குழந்தைகளின் வியர்வை சுரக்கும் தன்மையும் குறைவு. குழந்தைகளின் உடம்பு பரப்பளவு அதிகமாதலால் அதிகமான வெப்பத்தை ஈர்க்கும் தன்மை உண்டு. மேற் சொன்ன காரணங்களால் கடுமையான வெயிலால் பல பாதிப்புகள் ஏற்படலாம். 1. வெப்பத்தினால் கெண்டைக்கால் இழுத்துப் பிடித்தல் இதற்கு உலக சுகாதார உப்பு சர்க்கரை கரைசல் நீர் (ஓ.ஆர்.எஸ். திரவம்) மெதுவாக காலை நீட்டி மடக்குதல் முதலுதவி சிகிச்சை ஆகும். 2. வெப்பத்தால் மயக்கம், தலை சுற்றல் - நீண்ட நேர பயிற்சியால் இது ஏற்படலாம். இதற்கு நீராகாரம் குடித்தல், குளிர்ச்சியான சுற்றுச்சூழலில் படுக்க வைத்தல் ஆகியவை முதலுதவி சிகிச்சை ஆகும். 3. வெப்பத்தால் நீர் கட்டுதல் இதன் அறிகுறி - வெப்பத்தில் இருக்கும்போது கை, கால் வீக்கம் வருதல் குளிர்ச்சியான சுற்றுச்சூழல் இதற்கு சிறந்ததாகும். 4. மிதமான வெப்பம் தாக்கல் (99 டிகிரி - 104 டிகிரி பாரன்ஹீட் அளவு): இதற்கு தலைவலி, வாந்தி, தலைசுற்றல், வலுவிழத்தல், மயிர்கூச்செரிதல் போன்ற அறிகுறி ஏற்படும். குளிர்ச்சியான சுற்றுச் சூழலில் வைத்தல், காற்றாடி அல்லது குளிர்சாதனம் செய்யப்பட்ட அறையில் வைத்தல், அதிகப்படியான உடைகளை அகற்றுதல், உலக சுகாதார உப்பு சர்க்கரை கரைசல் நீர் (ஓ.ஆர்.எஸ்) கொடுப்பது இதற்கு சிகிச்சை முறையாகும். உடனடியாக மருத்தவரை அணுகுவது நல்லது. கடுமையான கோடை வெப்ப தாக்குதலை தடுக்கும் முறைகள்: குழந்தைகள் விளையாடும் நேரம் அல்லது வெளியில் செல்லும் நேரத்தை காலை அல்லது மாலை நேரங்களில் வைத்துக்கொள்ளலாம். உடம்பில் குறைந்த நீர்சத்தை சமன் செய்ய போதிய அளவு நீர் உலக சுகாதார உப்பு சர்க்கரை நீர்: இளநீர் பழச்சாறு போன்றவைகளை விளையாடும்போது அல்லது பயிற்சி செய்யும் முன்பும் மற்றும் பின்பும் குடித்தல், குளிர்ச்சியான நீர் அல்லது சுற்றுசூழல் பருத்தி துணிகளை அணிதல் சிறந்தது. கோடை காலத்தில் குழந்தைகளை பாதிக்கும் நோய்கள் எவை? கோடையில் வரும் நோய்: 1. வாந்தி மற்றும் வயிற்றுப் போக்கு வாந்தி - வயிற்றுப்போக்கு வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு வர முதல் காரணம் சுத்தப்படுத்தப்படாத நீரைக் குடித்தல், ஈ மொய்க்கும் பண்டங்கள் மற்றும் சுகாதாரமற்ற உணவுகளை உட்கொள்ளுதல் காரணமாகும். நீர் சத்து குறைதலின் அறிகுறிகள் படபடப்புடன் இருத்தல், அதிகப்படியான தாகம், சிறுநீர் குறைதல், சோர்வு, குழி விழுந்த கண்கள், வாய் உலர்ந்து இருத்தல், குழந்தையின் எடை குறைதல், இருதய துடிப்பு அதிகமாதல் ஆகிய அறிகுறிகள் தெரிய வரும். வயிற்றுப்போக்குடன் நீர்ச்சத்து குறையாமல் இருந்தால் தொடர்ந்து உணவு கொடுக்க வேண்டும். ஒவ்வொரு முறைவயிற்று போக்கின் போது ஈடுசெய்ய வழக்கமாக கொடுப்பவற்றைவிட அதிகப்படியான நீர் ஆகாரம் கொடுக்க வேண்டும். அதிகப்படியான நீர் ஆகாரம் என்பது உலக சுகாதார அமைப்பு சர்க்கரை கரைசல் நீர், சாதாரண தண்ணீர், அரிசி கஞ்சி, தயிர். இரண்டு வயதுக்கு குறைவாக 50-100 மி.லி. (ஒவ்வொரு வயிற்றுப்போக்கின் போதும் ) கொடுக்க வேண்டும். இரண்டு வயதுக்கு மேல் இருந்தால் 100-200 மி.லி. (ஒவ்வொரு வயிற்றுப் போக்கின் போதும்) கொடுக்க வேண்டும். மேலும் மருத்துவரை அணுகுவது நல்லது. நீர்சத்து குறைந்தால் வயிற்றுப்போக்குடன் மிதமான நீர்ச்சத்து குறைந்தால் மேற்சொன்ன முறையை கடைப்பிடிக்க வேண்டும். வயிற்றுப் போக்குடன் அதிகமா நீர்ச்சத்து குறைந்தாலும் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். அதுவரை மேற்சொன்ன முறைகளை கடைப்பிடிக்க வேண்டும். சின்னம்மை சின்னம்மை என்றால் என்ன? வரிசெல்லா ஜோஸ்டர் வைரஸ் (விஜெட்வி) எனும் கிருமிகள் முதன் முதலாக வெளிப்படுத்தப்படுவதால் ஏற்படும் ஒரு வைரஸ் நோய் இது. உடல் முழுவதும் வரும் கொப்புளங்கள் மற்றும் காய்ச்சல் மூலம் இந்நோயை கண்டுபிடிக்கலாம். சின்னம்மையின் அறிகுறிகள் என்ன? பொதுவான அறிகுறிகள் ஜூரம், குளிர் நடுக்கம், குமட்டல் மற்றும் வாந்தி ஆகும். வெளிப்படையாக இது தெரியும். நன்கு அறியப்பட்ட அறிகுறி ரணமாக மற்றும் அதிக அரிப்பு உள்ள கொப்புளங்களாக தோன்றும். பெரும்பாலான குழந்தைகளுக்கு 200-300 காயங்கள் இருக்கும். பின்னர் இது பொருக்காக மாறுகிறது. சின்னம்மை பரவக்கூடியதா? ஆம். பரவக்கூடியது. கொப்புளங்கள் வெளி வந்த சில தினங்களுக்கு முன்பு எல்லா காயங்கள் மீதும் பொருக்குத் தட்டும் வரை சின்னம்மை மிகவும் தொற்றிப் பரவும் நோய். அதாவது அவைகள் உலரும் வரை இது வழக்கமாக கொப்புளங்கள், வெளிவர ஆரம்பித்து ஒரு வாரத்திற்குள் ஏற்படும். பொதுவாக இந்த வைரஸ் கிருமிகள் காற்றினால் எடுத்து செல்லப்படும் நீர்த்துளிகளால் ஒருவரிடமிருந்து மற்றவருக்கு பரவுகிறது. தொற்று பாதிக்கப்பட்டவர் சுற்றி இருக்கும் காற்றில் இருமினாலோ அல்லது தும்மினாலோ மற்றும் திரவங்களை வெளியிடுவதன் மூலம் இது நேரிடுகிறது. மேலும், சின்னம்மை அல்லது ஹர்பிஸ் உள்ளவர்களுடன் நேரடி தொடர்பினாலும் இது பரவலாம். ஏனெனில் ஈரமாக உள்ள காயங்களில் தொற்று பாதிக்கப்பட்ட கர்ப்பமாக உள்ள தாயிடமிருந்து கர்ப்பத்தில் இருக்கும் உஅல்லது பிறந்த குழந்தைக்கும் பரவக்கூடும். இந்த வைரஸ் கிருமி யாரை அதிகம் பாதிக்கும்? சின்னம்மை குழந்தைகள் மற்றும் பெரியோர்கள் ஆண், பெண் என பாதிக்ககூடியது. பெரும்பாலானவர்க்கு சிறு பிராயத்தில் அல்லது எப்போதாவது சின்னம்மை வருகிறது. ஆனால் முன்பே பாதிக்கப்படாத சின்னம்மை உள்ளவருடன் தொடர்பு கொள்ளும்போது தொற்று பாதிக்கப்பட்டு குழந்தைகளை பாதிப்பபதால் ஆசிரியர்கள் மற்றும் குழந்தை பராமரிப்பு மையங்களை நடத்துபவர்கள் போன்று குழந்தைகளுடன் அதிக நேரம் செலவழிப்பவர்களை சின்னம்மை பாதிக்கும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. அத்துடன் ஆரோக்கிய பராமரிப்பு அளிப்பவர்கள் (மருத்துவர்கள், நர்ஸ், மருத்துவமனை ஊழியர்கள்) தொற்று பாதிக்கப்படும் அபாயம் அதிகம் உள்ளது. ஏனெனில் அவர்கள் தங்கள் வேலையை செய்யும்போது பாதிக்கபட்டவர்களுடன் தொடர்பு கொள்ளலாம். குழந்தை பிராயத்தில் சின்னம்மை வராத பெரியவர்களுக்கு இப்போது அது வந்தால் மிகவும் கடுமையாக விளங்கக்கூடும். குழந்தைகளுக்கு வரும் சின்னம்மையில் இருந்து பெரியவர்களுக்கு வரும் சின்னம்மை வேறுபட்டதா? குழந்தைகளுக்கு வரும் சின்னம்மையில் இருந்து பெரியவர்களுக்கும் வரும் சின்னம்மை கடுமையாக இருக்கும். ஜூரம் அதிகமாகவும், நீண்ட காலத்திற்கும் இருக்கும். கொப்புளங்கள் அதிகமாகவும், ஆழமாகவும், அதிக தழும்புடனும் இருக்கும். வாழ்க்கைமயின் பிற்காலத்தில் சின்னம்மை வந்தால் சிக்கல்கள் மற்றும் உயிருக்கு அபாயம் இருக்கும். தடுப்பது எப்படி? சின்னம்மை வருவதை எவ்வாறு தடுப்பது? தொற்று பாதிக்கப்பட்டவர்களை பள்ளி அல்லது வேலை இடங்களில் தனித்து வைப்பதன் மூலம் இந்த வரைஸ் நுண் கிருமி பரவுவதை குறைக்க உதவும். சின்னம்மையால் அவதிப்படுவதை தவிர்க்க தடுப்பூசி திறன் மிக்க வழியாகும். தடுப்பூசி போட்டபின் சின்னம்மை வர வாய்ப்பு உள்ளதா? தற்போது கிடைக்கும் வரிசெல்லா தடுப்பூசிகளின் மருத்துவ ஆய்வுகள் அவை சாதாரண சின்னம்மைக்கு எதிராக கிட்டத்தட்ட 100 சதவீதம் பயனுள்ளதாகவும், நல்ல சகிப்பு தன்மை உடையதாகவும் காட்டுகிறது. ஆனால் தடுப்பூசி பெற்றவர்களின் 1-4 சதவீதத்தினருக்கு தீவிரமற்ற இந்நோய் வரும் அறிகுறிகள் வந்திருப்பதாக இந்த தடுப்பூசியின் நீண்ட கால பாலோ அப் தெரிவிக்கிறது. சுருக்கமாக சொன்னால் அந்தந்த வயதுகளில் தடுப்பூசிகளை கண்டிப்பாக போட வேண்டும். பாதுகாக்கப்ப்ட்ட குடிநீர் மற்றும சுகாதாரமான வகையில் உணவுகளை உட்கொள்ள வேண்டும். கடுமையான வெயிலில் குழந்தைகளை விளையாட மற்றும் வெளியில் கூட்டச் செல்லக்கூடாது. மேற்சொன்ன முறைகளை கையாண்டால் கோடை காலத்தை இனிமையாகக் கழிக்கலாம் நன்றி |
No comments:
Post a Comment