இரு தாரகைகள்
இமாம் ஹஸனுல் பன்னா மற்றும் மௌலானா மௌதூதி ஆகியோர் குறித்த வாசிப்பு
(கடந்த இதழின் தொடர்ச்சி...)
எம்.எச்.எம். நாளிர்
"நாங்கள் இவ்விரு இமாம்களிடமிருந்தும் இஸ்லாத்தை ஒரு மார்க்கமாகவும், நாட்டை நிர்வாகிப்பதற்கான அரசியல் கொள்கையாகவும் பொருளாதார நடவடிக்கைகளை வழிப்படுத்தும் பொருளியல் திட்டமாகவும் வாழ்க்கைக்கேற்ற கலாசார வழிமுறையாகவும் கற்றுக் கொண்டோம். அந்த வகையில் நாங்கள் இவ்விரு இமாம்களிடமிருந்தும் இஸ்லாம் மனித வாழ்வின் எல்லா பகுதிகளுக்கும் வழிகாட்டுகின்ற கொள்கை என்பதை விளங்கிக் கொண்டோம்."
- தூனீசிய சீர்திருத்தவாதி ராஷித் அல் கன்னூஷி
நான் ஒரு புதுமை வாதியல்ல. மேல்பூச்சு அலங்கார வேலைகளை மட்டும் செய்துவிட்டுப் போகலா மென்று கருதுபவனுமல்ல. மாறாக உண்மையான மறுமலர்ச்சியை உண் டாக்கவே விரும்புகின்றேன். மனித வாழ்வு என்ற பழைய கட்டிடத்தை இடித்துத் தள்ளிவிட்டு அந்த இடத் தில் புதுமாளிகை கட்டவே நான் விரும்புகிறேன். தூய இஸ்லாமிய நெறியை அடித்தளமாகக் கொண்டு அதன் மேல், வாழ்வின் அனைத்துப் பாகங்களிலும் ஒரே விதமான கட்டு மானப் பணிகளைச் செய்வே நான் விரும்புகிறேன். (தர்ஜுமதுல் குர் ஆன் மார்ச் 1939) என்று மௌலானா கூறினார்.
இதே கருத்தில்தான் ஷெய்க் பன்னா அவர்களும் இருந்திருக் கிறார்கள் என்பதை கீழ்வரும் கூற்றுக்கள் எடுத்துக் காட்டுகின்றன. "பன்னாவின் செயற்பாடு இப்னு தைமிய்யா, முஹம்மத் இப்னு அப்துல் வஹ்ஹாப், முஹம்மத் அப்துஹு போன்றோரின் சீர்திருத் தங்களை ஒத்ததல்ல. அவை அகீதா வில் ஏற்பட்ட பித்அத்கள், பிழை யான நம்பிக்கைகள் என்பவற்றுடன் சுருங்கியவை. ஆனால், பன்னா தனது சீர்திருத்தத்தில் நபி (ஸல்) அவர்களின் வழிமுறையைத் தான் முழுமையாகப் பின்பற்றினார்.
மார்க்கமும் உலகமும், தனி மனிதனும் சமூகம், அரசியலும் அரசாங்கமும் என அனைத்தையும் சீர்திருத்துவது பற்றித்தான் பேசி னார். இஸ்லாத்தை அதற்கே உரிய வடிவத்தில் விளக்கிய, சீர்திருத்தப் பணியில் சரியான பாதையில் வழி நடத்திய முதல் சீர்திருத்தவாதியாக அவரை அடையாளப்படுத்த முடி யும். (இமாம் அஷ்ஷஹீத் ஹஸனுல் பன்னா: பக். 19-20)
அவர் இஸ்லாத்தின்பால் முழு மையாக மீளுமாறும் இஸ்லாமிய ஷரீஆவை நடைமுறைப்படுத்து மாறும் மன்னர் பானூக்குக்கு வேண்டு கோள் விடுத்தார். அந்நிய சட்டங்க ளையும் கலாசாரத்தையும் உதறி விட்டு இஸ்லாத்தின் தனித்துவத் தைப் பேணுமாறு அழைப்பு விடுத் தார்.
ஷெய்க், தனது தஃவாவை இவ் வாறு விளக்கினார். "இது முன் னோர்-சான்றோர்களின் கொள்கை, தூய இஸ்லாமிய முறையில் அமைந்த தஸவ்வுப்-வழியிலான நடைமுறை, இஸ்லாமிய அரசியல் அமைப்பு, ஒரு பயிற்சிப் பாசறை, கலை கலாசார அமைப்பு, பொரு ளாதாரக் கூட்டமைப்பு, சமூக நலன் களை இலட்சியமாகக் கொண்ட ஒரு நிறுவனம். (குர்ஆனிய மனிதர்: பக். 06) எமது தஃவா எல்லா மனிதர் களுக்குமானது. சில குறிப்பிட்ட குழுக்களுக்கானதல்ல. இஸ்லாத்துக் காக உழைக்க விரும்பும் எவரும்- அவரது கல்வித் தகைமை எவ்வா றாக இருப்பினும் சரி இதில் இணைந்து பயிற்சி பெறலாம்." (இமாம் அஷ்ஷஹீத் ஹஸனுல் பன்னா: பக். 37)
இதே கருத்தை மௌலானா இப்படிக் கூறுகிறார். முஸ்லிமான எந்தத் தனிமனிதனுக்கும் இஸ்லாம் ஏவியிருக்கும் அனைத்துக் கட்டளை களையும் தன்னந்தனியாக நின்று முழுமையாக நிறைவேற்ற முடி யாது. அதற்காக ஒரு கூட்டு முயற்சி அவசியமாகும். இஸ்லாத்தில் மிகக் குறைந்த சில பகுதிகள் மட்டுமே தனிமனித வாழ்வோடு தொடர்பு டையனவாக உள்ளன. அவற்றை மாத்திரம் கடைப்பிடித்தால் முழு 'தீனை'யும் நிலைநாட்டியதாக அமையாது.
சமூக சூழலில் எங்கு பார்த்தா லும் நிராகரிக்கும் (குப்ர்) போக்கே ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருப் பதால் தனிமனித வாழ்வில்கூட தீனின் அந்த குறைந்தபட்ச பகுதி யையும் நிலைநிறுத்த முடியாதுள் ளது. சமூக சூழலின் தாக்குதலால் தனிப்பட்ட இஸ்லாமிய வாழ்வின் வரம்புகள்கூட நாளுக்கு நாள் சுருங் கிக் கொண்டே போகும்.
எனவே, இஸ்லாத்தை முழுமை யாக நிலைநாட்டுவதற்கு அதனு டைய சாட்சியத்தை உலகின் முன் சமர்ப்பிப்பதற்கு கூட்டாக முயற்சி செய்தே ஆகவேண்டும். தான் முஸ்லிமாக இருப்பதால் தன்மீது சுமத்தப்பட்ட கடமைகளை நன்கு ணர்ந்தவராக- அதனை நிறைவேற்ற வேண்டு மென்ற துடிப்பு மிக்கவராக இருக்கும் ஒவ்வொரு முஸ்லிமும் ஒருவருக்கொருவர் ஒன்றுபட்டு கைகொடுத்தே ஆகவேண்டும். (இந் தியாவில் இஸ்லாமிய இயக்கம்: பக். 45-46)
ஒருமைப்பாடு:
சமூகப் புனரமைப்புப் பணிக் காக ஷஹீத் ஹஸனுல் பன்னா அவர் களால் உருவாக்கப்பட்ட 'இஹ்வா னுல் முஸ்லிமீன்' என்ற இயக்கமும் மௌலானா அபுல் அஃலா மௌ தூதி அவர்களால் உருவாக்கப்பட்ட 'ஜமாஅத்தே இஸ்லாமி' என்ற இயக்கமும் ஏறத்தாழ சமகாலத்தில் ஒரே நோக்கத்தோடு உருவாக்கப் பட்ட இயக்கங்களாகக் கொள்ள லாம். இதனால்தான், "நீங்கள் இந்திய உபகண்டத்தில் இஹ்வா னுல் முஸ்லிமீன். நாங்கள் அறேபிய தீபகற்பத்தில் ஜமாஅத்தே இஸ் லாமி" என கலாநிதி யூஸுப் அல் கர்ளாவி தனக்கே உரிய பாணியில் ஒப்பிட்டுக் காட்டினார்.
இதனை ஷஹீத் ஸெய்யித் குத்ப் அவர்கள் விளக்கும் பான்மையை அவதானியுங்கள். 1966 ஆம் ஆண்டு அவரை இராணுவ நீதிமன்றத்தின் முன் நிறுத்தியபோது,
நீதிபதி: நீர் 'மஆலிம் பித்தரீக்' (மைல் கற்கள்) எனும் நூலை எழுதியதன் மூலம் இந்நாட்டு மக்களை அரசுக்கெதிராகப் புரட்சி செய்யத் தூண்டியுள்ளீர். இந்நூலில் நீர் தெரிவித்த கருத் துக்கள் மௌதூதியின் எழுத்துக் களிலிருந்து பிரதி செய்யப்பட வில்லையா?
குத்ப்: நான் மௌலானாவின் நூல் களிலிருந்து நிறைய பயனடைந் துள்ளேன்.
நீதிபதி: உம்முடைய அழைப்புக்கும் மௌதூதியின் அழைப்புக்கு மிடையில் எத்தகைய வேறுபாடு உண்டு?
குத்ப்: எந்த வேறுபாடுமில்லை.
(மஆலிம் பித்தரீக்-உருதுமொழி பெயர்ப்பின் முன்னுரை)
"இவ்விரு இயக்கங்களும் பெயர ளவில் வேறுபட்டாலும் இஸ் லாத்தை அதன் மூல உருவில் நவீன காலத்தில் மனித வாழ்வின் சகல துறைகளிலும் செயல்படுத்தி மனித சமுதாயத்தின் விமோசனத்திற்கு வழிகாட்டி அல்லாஹ்வின் அன் பைப் பெற வேண்டுமென்ற உன்ன தமான இலட்சியத்தில் கடந்த பல தசாப்தங்களாக செயலாற்றி வரு கின்றன" என்று மௌலவி ஏ.எல். எம். இப்றாஹீம் அவர்கள் (அல்குர் ஆனிய மனிதர்: பக். 04) குறிப்பிடு கின்றார்கள்.
இக்கருத்தை ராஷித் அல் கன் னூஷி என்ற தூனீசிய சீர்திருத்தவாதி பின்வருமாறு விளக்குகிறார்: "நாங் கள் இவ்விரு இமாம்களிடமிருந்தும் இஸ்லாத்தை ஒரு மார்க்கமாகவும், நாட்டை நிர்வாகிப்பதற்கான அரசி யல் கொள்கையாகவும் பொருளா தார நடவடிக்கைகளை வழிப்படுத் தும் பொருளியல் திட்டமாகவும் வாழ்க்கைக்கேற்ற கலாசார வழி முறையாகவும் கற்றுக் கொண் டோம். அந்த வகையில் நாங்கள் இவ்விரு இமாம்களிடமிருந்தும் இஸ்லாம் மனித வாழ்வின் எல்லா பகுதிகளுக்கும் வழிகாட்டுகின்ற கொள்கை என்பதை விளங்கிக் கொண்டோம்." (அல்ஹஸனாத் டிசம்பர் 2008)
கலாநிதி ஸஃதுல் கதாதினி, "இஸ்லாமிய அழைப்புப் பணியை மேற்கொள்வதிலும் இஸ்லாத்தின் நடுநிலையான சிந்தனையை சமூ கத்தின் சிந்தனையாக மாற்றுவ திலும் சீர்திருத்தப் பணியை மேற் கொள்வதிலும் இருவரும் தமது முழு ஆயுளையும் அர்ப்பணித்தார் கள்" என்று இருவரதும் பணியை சுருக்கமாக சொல்லிக் காட்டுகிறார்.
வேறுபாடு-காரணம்
இரண்டு தாரகைகளும் வெவ் வேறு திசைகளில் உதித்தமையால் கொள்கையில் ஒன்றுபட்டாலும் செயற்படுத்துவதில் வேறுபட்டார் கள். காலம், சூழல் நோக்கி தஃவா செய்வது நபி (ஸல்) அவர்களின் வழிமுறையல்லவா?
ஷெய்க் அவர்கள் அறபு மொழி யைத் தாய்மொழியாகக் கொண்ட வர்கள். அறபு மொழி பேசக் கூடிய மக்களிடையே தமது கருத்துக்களை முன்வைத்தார்கள். தாம் வாழ்ந்த பிரதேசத்தை மையப்படுத்தி தமது வழிமுறைகளை வகுத்துத் தந்தார் கள். கற்றதும் அறபுமொழியில், கற்பித்ததும் அறபு மொழியில் தான். ஆதலால் அவரது நடைமுறைகள் அந்தப் பின்னணியில் அமைந்தது. அவர் பாடசாலை ஆசிரியராக அமர்ந்து சமூகத்தை மதிப்பிட்டார். பத்திரிகை ஆசிரியராகவும் நின்று வழிப்படுத்தினார்.
ஆனால், மௌலானா அவர்கள் உருது மொழியைத் தாய்மொழியா கக் கொண்டவர்கள். உருது மொழி யைப் பேசக் கூடிய மக்கள் மத்தியில் தமது கருத்துக்களை முன்வைத் தார்கள்.
எகிப்தில் எல்லோரும் அறபி யைத் தாய்மொழியாகக் கொண்டது போல இந்தியாவில் எல்லா முஸ்லிம் களும் உருதுவை தாய்மொழியாகக் கொள்வில்லை. இஸ்லாத்தின் மூலங் கள் அறபு மொழியிலிருந்தன. எனி னும் வெவ்வேறு மொழிகளில் இஸ்லாத்தை முன்வைக்க வேண்டிய தேவை அவருக்கிருந்தது. எனவே, அவர் உருது, அறபு, ஆங்கிலம் முத லான பல மொழிகளில் தேர்ச்சி பெற்றார். பத்திரிகை ஆசிரியராக அமர்ந்து தனது பணியை ஆரம்பித் தார்.
ஷெய்க் ஹஸனுல் பன்னா அவர் கள் 1906-1949 வரையிலான காலகட் டத்தில் 43 வருடங்களே உயிர்வாழ்ந் தார்கள். மௌலானா மௌதூதி அவர்களோ 1903-1979 வரையிலான 76 வருடங்கள் உயிர்வாழ்ந்தார்கள். ஆதலால் ஷெய்க் அவர்கள் தமது குறுகிய காலத்தில் சமூகப் புனர மைப்பைச் செய்ய வேண்டியிருந் தது. 22 ஆவது வயதிலேயே இஹ்வா னுல் முஸ்லிமீன் இயக்கத்தை ஆரம்பித்தார். மௌலானா அவர்கள் ஜமாஅத்தே இஸ்லாமியை தமது 38 ஆவது வயதில் ஸ்தாபித்தார்கள்.
எகிப்து; இனத்தில் அரேபியரும், சமயத்தில் முஸ்லிம்களும் வாழ்ந்த பிரதேசமாக இருந்தமையால் அவர் களின் கலாசா ரத்தில் ஒருமைப்பாடு காணப்பட்டது. ஆதலால், அவர்களின் பிரச்சினைகளை இனங்காண்பது இலகுவாக இருந்திருக்கும். ஆனால், இந்தியா பல இனங்களையும் பல மொழிகளையும் பல சமயங்களை யும் உள்ளடக்கிய ஒரு நாடாக இருந் தமையால் அவர்களது கலாசாரத்தில் பன் முகத்தன்மை காணப்படும். இத னால் பிரச்சினைகளை இனங்காண் பதற்கு காலதாமதம் ஏற்படும்.
எனவேதான், மௌலானா 38 வயது வரை காத்திருக்க வேண்டிய தேவை ஏற்பட்டிருக்கும். அல்லாஹ், ஷெய்க் அவர்களை விரைவில் எடுத்துக் கொள்ள இருந்ததால் அவரி டம் விரைவாக வேலை செய்வித் தான் எனவும் மௌலானாவுக்கு நீண்ட ஆயுளை வைத்திருந்ததால் அவரது பணியைத் தாமதமாக ஆரம் பிக்க வைத்தான் எனவும் கொள்வ தில் தவறு இருக்க முடியாது.
ஷெய்க் அவர்களின் ஆக்கங்கள்; உயிர்வாழும் போது அறபு மொழி யில் மட்டுமே வெளியாகின. அவர் கள் அதிக நூல்களை எழுதவில்லை. இது பற்றிக் கேட்கப்பட்டபோது, நூல் எழுதுபவர்களை உருவாக்குகி றேன் என்றார்கள். அவர் கூறியது போன்றே அவர் உருவாக்கிய இஹ் வான்கள் காத்திரமான ஆக்கங்களை வெளியிட்டார்கள். இன்னும் எழு திக் கொண்டிருக்கிறார்கள். அவை ஏனைய மொழிகளிலும் பெயர்க்கப் பட்டு வெளியாகின்றன.
ஆனால், மௌலானா உயிர் வாழும் போதே அவரது ஆக்கங்கள் வெளியாகின. சில, சமகாலத்தி லேயே தேசிய, பிரதேச மொழிக ளில் பெயர்க்கப்பட்டு வெளியி டப்பட்டன. இதற்கு இந்திய முஸ் லிம்கள் பல்வேறு மொழிகளைப் பேசியமையும் எகிப்திய முஸ்லிம் கள் அறபு மொழியை மட்டும் பேசியமையும் காரணமாக இருக்க முடியும். எனவேதான் மௌலானா வின் சிந்தனைகள் மொழி பெயர்ப்பு நூல்கள் வாயிலாக அதிகமாகப் பரவின. இருவரதும் இயக்க உறுப் பினர்கள் அவர்களின் சிந்தனை களையும், செயற்பாடுகளையும் உயிரூட்டி வருகிறார்கள்.
எல்லாத் தாரகைகளும் விண் ணில் தான் மின்னுகின்றன. மண் ணில் வாழும் மக்களுக்குத் திசை காட்டுகின்றன. அவ்வாறு அமா வாசையில் ஒளியூட்டிய இரு தாரகை களாக அஷ்ஷஹீத் ஷெய்க் ஹஸ னுல் பன்னா அவர்களையும், மௌலானா அபுல் அஃலா மௌதூதி அவர்களையும் காண்கிறோம். மஹ்தி (அலை) ஈஸா (அலை) என்ற பௌர் ணமி வரும்வரை அவை எமக்கு வழி காட்டுகின்றன என்பதை மறைக்க முடியாது.
துணை நின்றவை:
* அல்குர்ஆனிய மனிதர் ஹஸனுல் பன்னா, (மௌலவி ஏ.எல். எம். இப்றாஹீம்)
* இந்தியாவில் இஸ்லாமிய இயக்கம், (ஷெய்க் முஹம்மத் காரக்குன்று)
* இமாம் ஷஹீத் ஹஸனுல் பன்னா, சில வாழ்க்கைக் குறிப்பு கள் (தாருத் தர்ஜுமா வத்தஃலீப்)
* அல்ஹஸனாத் (டிசம்பர் 2008)
No comments:
Post a Comment