Search This Blog

Monday, June 22, 2009

ஜிஸியா வரி

 


Tuesday, April 1, 2008

வாஞ்ஜுர்

வாஞ்ஜுர்

அவுரங்கசீப்.... ? !!!
-ஹமீது ஜாஃபர்
அறுபது வருடங்களுக்குள்ளாக அறுபது லட்சம் யூதர்களைப் படுகொலைகளை செய்திருந்தால் இன்று இஸ்ரேல் என்ற ஒரு நாடு உலக வரைப் படத்தில் இருந்திருக்கமுடியாது என்பது ஒரு சாமானியருக்குக்கூட தெரியாத விஷயமல்ல.

மாறாக இப்போது இருப்பதோ இஸ்ரேலுக்குள் கோவணத்துணிப் போல் இரண்டு பாலஸ்தீனத் துண்டுக்கள். ஆயிரக்கணக்கான குழந்தைகள் முதல் வயோதிகர் வரையிலான பாலஸ்தீன மக்களின்(இதில் கிறுஸ்துவர்களும் அடங்கும்) இரத்தத்தைக் குடித்துவிட்டு எதோ போனால் போகட்டும் என்று பிச்சையாக கொடுக்கப்பட்டது.

ஜெர்மன் நாட்டுப் பொருளாதாரத்தைக் கபாளீகரம் செய்துக்கொண்டிருந்த யூதர்களை ஹிட்லர் என்ற தாலிபானிஸ்ட் cum இடதுசாரி cum லெனினிஸ்ட் cum பின்லாடினிஸ்ட் cum etc., etc., கொன்று குவிக்கத் தொடங்கியவுடன் துண்டைக் காணோம் துணியைக் காணோம் என்று ஓடிய யூதர்களைக் கண்டு தங்கள் நாட்டையும் கெடுத்துவிடுவார்களோ என்று பயந்து அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் சில குட்டி ஐரோப்பிய நாடுகள் ஒன்று சேர்ந்து பாலஸ்தீனர்களை அடித்து விரட்டிவிட்டு 1948 ல் இஸ்ரேலை உருவாக்கிக் கொடுத்ததும், அன்று முதல் இன்று வரை எத்தனையோ பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளதும், எத்தனை எத்தனைக் குடும்பங்கள் தங்கள் உடமைகளை இழந்து நிற்பதும், எத்தனை எத்தனைபேர் நாடோடிகளாக இருப்பதும் எங்கே தெரியப்போகிறது ?

இந்திய வரலாற்றினை குறிப்பாக இஸ்லாத்திற்கு எதிராக முதன் முதலில் பிள்ளையார் சுழிப்போட்டு எழுதியவர் சர் எலியட். அதை தொடர்ந்து அக்பரைப் பற்றி ஆஹா ஓஹோ என்றும், Akbar the Great என்றும், மத நல்லிணக்கம், சகிப்புத் தன்மை, சமயச் சார்பின்மை ஆகியவற்றிற்கான ஒரு குறியீடு போல சில வரலாற்றாசிரியர்கள் மிகைப்படுத்திச் சொன்னார்களோ,

அதைப்போல ஒளரங்கசீப் பற்றி மதவெறி பிடித்தவர்; இந்துக்களுக்கு எதிரானவர், கொடுமைப் படுத்தியவர்; கோவில்களை இடித்தார் என்பதைப் போன்ற ஒரு கருத்தை நிர்மாணிக்கவும் அவர்கள், குறிப்பாக ஐரோப்பியர், முயன்று அதில் வெற்றியும் கண்டுள்ளனர்.

ஆகவே ஆதாரங்களை ஆராய்ந்து உண்மை என்னதான் எடுத்துரைத்தாலும் எடுபடபோவதில்லை. அப்படி சொல்பவர்கள் இடதுசாரிகளாக இருக்கிறார்கள் .

இறுகிப்போன இதயங்களை இளகவைக்க முடியாது. எனவே வாசகர்கள் தெரிந்துக்கொள்வதற்காகத் தொடருகிறேன்.

இன்றளவும் ஒளரங்கசீப் என்னும் தனி மனிதரை ஒரு வட்டத்துக்குள் அடக்கி முத்தாய்ப்பாக விளக்க முடியவில்லை என்று பல வரலாற்று ஆசிரியர்கள் ஒப்புக்கொள்கின்றனர்.

இருந்தபோதும் சரி, இறந்தபிறகும் சரி ஒரு புரிபடாத விடுவிக்கமுடியாத பெரும் புதிராகவே விளங்கினார். பாதுஷாவின் குறைகளை மட்டும் வரிசைப் படுத்தி 'மிக மோசமானதொரு அரசர் ' என்று முத்திரைக் குத்தும் சரித்திர ஆசிரியர்கள் உண்டு.

'இவைரை மிஞ்சிய சிறந்த ஆட்சியாளர் எவருமில்லை ' என்று புகழ்பாடுபவர்களும் உண்டு. (வந்தார்கள் வென்றார்கள் - மதன் P.167)

தந்தையை வீட்டுச்சிறை வைத்தும் சகோதரர்களைக் கொன்றும் பதவிக்கு வந்தார் என்பதை வைத்துக்கொண்டு அவர் மோசமானவர் என்று தீர்மானித்துவிட முடியாது.

இப்போது கூட மன்னாராட்சி நடக்கும் சில நாடுகளில் இது நடக்கிறது என்று சொல்வதைவிட தனக்கு வேண்டியவர்களை பதவியில் வைக்கும் அமெரிக்காவின் கொள்கை அதைவிட மோசமானது என்பதை ஒப்புக்கொள்ளாமல் இருக்கமுடியாது.

உதாரணம்: ஆப்கானிஸ்தான், ஈராக் அடுத்தது ஈரான்(வியூகம் வகுக்கப்படுகிறது). இதை வைத்து அமெரிக்கா ஒரு மோசமான நாடு என்று தீர்மானிப்பது எப்படி முட்டாள்தனமானதோ அப்படி!

வரலாற்று ஆசிரியர்கள் சிலர் சொல்வதை மட்டும் வைத்துக்கொண்டு வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் சொல்வதை தூக்கி எறிந்துவிட்டு அவர்களெல்லாம் இடதுசாரிகள் என்ற பட்டத்தையும் கொடுத்து நியாயப்படுத்தும் வக்கிரமமாகத்தான் தோன்றும்.

'ஆட்சிப் பொறுப்பேற்ற புதிதில் ஒளரங்கசீப் தீவிர இஸ்லாமிய நெறியைக் கடைபிடிக்கும் மாமன்னராக தோற்றமளித்தாலும், மெல்ல மெல்ல தன்னுடைய போக்கில் மாற்றத்தை ஏற்படுத்திக்கொண்டு பிடிவாதம் காட்டாமல் சூழ்நிலைக்கேற்ப நாட்டிலுள்ள பெரும்பான்மை மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கக் கூடிய பண்பாளராகத் தன்னை மாற்றிக்கொண்டார்.

உதாரணமாக பனராஸ், பிருந்தாவன் போன்ற இடங்களில் இருந்த இந்துக் கோயில்களைப் புதுப்பிக்கும் முயற்சிக்குத் தானோ, தனது உள்ளூர் அதிகாரிகளோ எவ்வித இடையூறுகளும் செய்யப்போவதில்லை என்ற உத்திரவாதத்தை அரசு ஆணையாக (Farmans) வெளியிட்டு அவர்கள் அச்சத்தைப் போக்கினார்; கொடுத்த வாக்குறுதியை அப்படியே காப்பாற்றினார்.

இதற்கு மாறாக 'இந்துக் கோயில்களையெல்லாம் ஒளரங்கசீப் இடித்துத் தள்ளினார் ' என்று குற்றம் சாட்டினால் அது தவறானது என்பதற்கு அவர் ஆட்சி காலத்திலிருந்து இன்று வரை நிலைத்து நிற்கின்ற எண்ணற்ற கோயில்கள், குருத்துவாராக்கள், கிறுஸ்துவ ஆலயங்கள் போன்றவற்றை ஆதாரங்களாக நாம் காட்ட முடியும். ' (முஸ்லிம் மன்னராட்சியில் இந்தியாவின் முன்னேற்றம் - கரைகண்டம் கி. நெடுஞ்செழியன். பக்கம்: 224)

ஒளரங்கசீப்ப்பைப் பற்றி மற்ற நூல்கள் என்ன கூறுகின்றன என்று பார்ப்போம்.

மேவாரின் ராணா ராஜ்சிங்கிற்கு இவர் அனுப்பிய 'நிஷான்'கள் எனப்படும் உத்தரவுக் கடிதங்கள் ஒன்றில், தீர்க்கமான தொனியில், தம்முடைய முன்னோர்கள் கடைப்பிடித்த மதக்கோட்பாட்டையே தாமும் பின்பற்றப் போவதாக வாக்குறுதியளித்து,

'எந்த ஒரு மன்னன் மற்றவர் பின்பற்றுகின்ற மதத்தைச் சகிக்கவில்லையோ, அவன் இறைவனுக்கே எதிரியான கலகக்காரனாவான் ' என்றும் ஆணித்தரமாய்க் கூறி இருக்கிறார்.

ஒளரங்கசீப் பல கோயில்களுக்கு ஜாகீர்கள் வழங்கியுள்ளார்.

இந்தியாவை ஐம்பது ஆண்டுகள் தொடர்ந்து இவர் ஆண்டுள்ள இந்த நீண்ட காலத்தில், தமது சாம்ராஜ்ஜியத்தை விரிவு படுத்துவதற்காக, தமது கொள்கைகளில் அவ்வப்போது தேவைப்படும் மாற்றங்களை இவர் செய்து கொண்டிருந்தார்.

அவரது ஆட்சியின் கடைசிக் காலத்தில், முன்னெப்போதும் இருந்ததைவிட அதிகமான அளவில் இந்துக்கள் பணி புரிந்தனர்.

ஜெய்சிங் என்பவர் தக்காணாத்தின் அரசப் பிரதி நிதியாக 1665ல் நியமிக்கப்பட்டார். முகலாயப் பேரரசில் இருந்த மிக உயர்ந்த பதவிகளில் இதுவும் ஒன்று என்பது குறிப்பிடத் தக்கது.

ஜஸ்வந்த் சிங் என்பவர் இரண்டு முறை குஜராத்தின் ஆளுனராக நியமிக்கப் பட்டுள்ளார்.

ஷாஜஹான் ஆட்சியில் 24 விழுக்காடாக இருந்த இந்துக்கள், ஒளரங்கசீப்பின் ஆட்சியில் 33 விழுக்காடாக உயர்ந்திருந்தனர்.

கோயில்களைச் சீரமைப்பதிலும் பழுது பார்ப்பதிலும் இவர் காலத்தில் பெரிய அளவில் முயற்சிகள் நடந்தன.

வட இந்தியாவின் பல கோயில்களையும் குருத்துவார்களையும் ஒளரங்கசீப் ஆதரித்ததற்கான அரசாணைகள் இடம் பெற்றிருந்ததை, உஜ்ஜயினில் உள்ள மகா காவேஷ்வர் கோயில், சித்ரகூடத்தின் பாலாஜி கோயில், கெளஹாத்தியில் உள்ள உமா நந்த் கோயில் போன்ற கோயில்களிலிருந்து கிடைத்த நீதிமன்ற ஆணைகளின் தொகுப்பிலிருந்து அறியமுடிகிறது என்று அந்த ஆணைகளைத் தொகுத்த பிரபல சரித்திர ஆராய்ச்சியாளர் பி.என்.பாண்டே கூறுகிறார்.

மேற்கூரிய விபரங்கள் எல்லாம் 'வரலாறுகளும் முன்முடிவுகளும் ' என்ற தலைப்பில் ராம் புனியானி என்பவர் எழுதிய கட்டுரையிலிருந்தும் (தமிழாக்கம், எம்.எஸ். மறுபதிப்பு, சிந்தனைச் சரம், செப்டம்பர் 2002),

'வீர் வினோத் ', 'அதெபெ ஆலம்கீரி ' போன்ற ஒளரங்கசீப் பற்றிய ஆதாரப்பூர்வமான நூல்களில் இருந்தும், எம். அத்தர் அலியின் 'அவுரங்கசீபின் ஆட்சியில் முகலாய பிரபு குலம் ' என்ற நூலிலும் காணக்கிடைக்கின்றன.

ஜஸ்யா வரி கொடுத்துக் கொடுத்து ஹிந்து குலமே போண்டியாகிவிட்டதுபோல் நீலிக்கண்ணீர் வடிப்பவர்களுக்கு விளக்கம் சொல்வதும் வீண்.

ஜஸ்யா வரி ஏன் ஏற்பட்டது என்று சிறு விளக்கம்.

ஆனால் முஸ்லிம்கள் மீதுள்ள 'ஜக்காத் ' பற்றி குறிப்பிடவில்லை. அதை இங்கே சொல்வது நலம் என்று நினைக்கிறேன்.

முஸ்லிம்கள்மீது இஸ்லாமும் அதன் ஆட்சியாளர்களும் 'ஜகாத் ' எனும் ஏழைவரியைக் கடமையாக விதித்திருந்தனர்.

முஸ்லிம்கள் தங்களிடமுள்ள தங்கம், வெள்ளி, மற்றும் கரன்சிகள், வியாபாரப் பொருட்கள், ஆடு, மாடு, ஒட்டகம் போன்ற கால் நடைகள், தானியங்கள், பயறு வகைகள் ஆகிய அனைத்திலிருந்தும் 'ஜகாத் ' செலுத்த வேண்டியவர்களாக இருந்தனர்.

தங்கம், வெள்ளி மற்றும் கரன்சிகளில் இரண்டரை சதவிகிதமும், நீர் பாய்ச்சி விளைவிக்கப்படும் பொருட்களில் ஐந்து சதவிகிதமும்,

இயற்கையாக விளையும் பொருட்களில் பத்து சதவிகிதமும் முஸ்லிம்கள் 'ஜகாத் ' எனும் வரியாகச் செலுத்தியாகவேண்டும்.

இது எவ்வளவு கணிசமான வரி என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

விரும்பினால் செய்யலாம், விரும்பாவிட்டால் தவிர்க்கலாம் என்ற அடிப்படையில் அமைந்த தர்மமல்ல இது.

விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் கொடுத்தாக வேண்டிய கட்டாய கடமையாகும் இது.

எனவே 'ஜகாத் ' என்ற பெயரில் கணிசமான தொகையை அரசுக்கு செலுத்த இஸ்லாமிய சமுதாயம் கடமைப்பட்டிருந்தது.

ஏழைகள், கடன் பட்டிருப்பவர்கள், அடிமைகளாக இருந்தவர்கள், போரில் தங்களை அர்ப்பணித்துக் கொண்ட ராணுவ வீரர்கள் ஆகியோருக்காக இந்த வரிப்பணத்தை அரசாங்கம் செலவு செய்தது.

குடிமக்கள் அனைவரும் சமம் என்ற அளவில், முஸ்லிம்கள் மட்டும் வரி செலுத்தியபோது, மற்றவர்கள் எப்படி செலுத்தாமல் இருக்க முடியும் ? அது எப்படி நியாயமாகும் ?

ஆனால் முஸ்லிம் அல்லாதவர்கள் மீது 'ஜகாத் 'தை விதிக்க முடியாது.

ஒரு மார்க்கத்தின் சட்டத்தை இன்னொரு மார்க்கத்தின் மீது திணிப்பது இஸ்லாத்தின் அடிப்படைக்கே முரணானது.

ஏனெனில் இஸ்லாமிய மார்க்கத்தில் நிர்ப்பந்தம் இல்லை என்பது இறைவன் வகுத்த விதியாகும்.

வரி ஏதும் வாங்காமல் விட்டால், அந்த அரசாங்கத்தில் அவர்களுக்கு எந்த உரிமையும் இல்லை என்பதாக அர்த்தமாகும்.

அவர்களுடைய பாதுகாப்புக்கு அரசு எப்படி பொறுப்பு எடுத்துக் கொள்ள முடியும் ?

எனவேதான் 'ஜிஸ்யா ' வந்தது.

இந்த வரி விதிக்கும்போது கூட, பெண்கள், சிறுவர்கள், உழைக்க முடியாத வயோதிகர்கள், நோய்வாய்ப்பட்டவர்கள், மனோ நிலை பாதிக்கப்பட்டவர்கள் ஆகியோருக்கு இந்த வரியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டது.

திடகாத்திரமான ஆண்கள்மீது மட்டுமே இந்த வரி விதிக்கப்பட்டிருந்தது.

சரி எவ்வளவு வரி விதிக்கப்பட்டது ?

சகட்டு மேனிக்கு எல்லாரும் ஒரு குறிப்பிட்ட தொகையைச் செலுத்தி ஆகவேண்டும் என்று சொல்லாமல், மக்களின் பொருளாதார வசதியின் அடிப்படையில் 'ஜஸியா ' விதிக்கப்பட்டது.

தனி நபர் வருவாய் அதிகமாக உள்ள சிரியா வாசிகள் மீது தலைக்கு ஆண்டுக்கு நான்கு தீனார்கள் என்றும்,

வருவாய்க் குறைவாக உள்ள எமன் வாசிகளுக்கு, தலைக்கு ஒரு தீனார் என்றும் பெருமானாரால் ஜஸியா விதிக்கப்பட்டது.

இந்த ஒரு தீனார் என்பது ஒரு சாதாரண இந்தியக் குடிமகன் இந்தியாவில் செலுத்தும் வரியைவிட பலமடங்கு குறைவானதே.

சொத்துவரி, விற்பனை வரி, சாலைவரி, வீட்டு வரி என்று நேரடியாகவும் மறைமுகமாகவும் பத்து பைசா தீப்பெட்டி முதல் பத்தாயிரம் ரூபாய் தொலைக்காட்சிப் பெட்டிவரை இந்தியன் இன்றுவரி செலுத்துகிறான்.

இந்த வரியை விட பலமடங்கு குறைவானதே இஸ்லாம் விதித்த 'ஜஸியா '.

இந்த அற்பமான வரியைச் செலுத்துவதன் மூலம், இஸ்லாமியக் குடியரசில், முஸ்லிம்கள் பெற்ற அத்தனை உரிமைகளையும் சலுகைகளையும் மற்றவரும் பெற முடிந்தது.

அவர்களின் வழிபாட்டு உரிமைககள் காக்கப்பட்டன.

அவர்களுடைய ஆலயங்கள் பாதுகாக்கப்பட்டன. சொத்துரிமை பேணப்பட்டது.

T.W. ஆர்னால்டு தனது The Preaching of Islam என்ற நூலில் பின்வருமாறு கூறுகிறார் :

'ஜஸியா என்பது சிலர் நினைப்பது போல, இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ளாததற்காக விதிக்கப்பட்ட வரியல்ல.

ஆனால் முஸ்லிமல்லாதோர், இஸ்லாமிய ஆட்சியில் இருந்த ராணுவத்தில் பணிபுரிவதை தங்களுடைய மத நம்பிக்கைகளின்படி விரும்பவில்லையென்றால், இஸ்லாமிய ஆட்சி அவர்களுடைய உயிருக்கும் உடமைகளுக்கும், எதிரிகள் மற்றும் முஸ்லிம்களிடமிருந்து அபாயம் வராமல் பாதுகாப்பதற்காகக் கொடுக்கப் பட்டதே ஆகும்.

' ராணுவத்தில் கிறிஸ்தவர்கள் பணியாற்றியபோது அவர்களுக்கு இந்த வரியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத் தக்கது ( பக்கம் 228).

கரைகண்டம் நெடுஞ்செழியன் பேசுகிறார்.

'பொதுமக்களின் வருவாயில் ஆட்சி செய்யும் இன்றைய ஜனநாயகத் தலைவர்களுக்குப் பல செய்திகளையும், பாடங்களையும் தமது செயல்கள் மூலம் விட்டுச் சென்றிருக்கிறார் பாதுஷா ஒளரங்கசீப் ஆலம்கீர்.

பொதுவாக ஆனால் தவறாக முஸ்லிம் ஆட்சியாளர் என்று கருதப்பட்ட இவர் தன் குடிமக்கள் மீது எவ்வளவு அன்பு வைத்திருந்தார் -

அந்த அன்பு எப்படி மதங்களுக்கெல்லாம் அப்பாற்பட்டிருந்தது என்பது தெளிவாகப் புலனாகின்றது.

புனித மக்கா நகரத்தின் ஷெரிப் இரு முறை தமது தூதர்கள் மூலம் ஒளரங்கசீப்பிடம் தமது நகர மக்களுக்குப் பெரும் பொருள் அனுப்புமாறு வேண்டிக்கொண்டார்.

அதற்கு ஒளரங்கசீப், 'எனது தேசத்தில் உள்ள ஏழை எளிய மக்களுக்கு அந்தப் பணத்தை வினியோகிக்கக் கூடாதா ? '
என்று வினவி வெறுமே திருப்பி அனுப்பினார்.

இதிலிருந்து அவர் ஒரு முஸ்லிம் மதப்பற்றாளர் என்பதை விடவும் தம் குடிம்மக்களின் நலனில் அக்கறைக் கொண்ட பாதுஷா என்பது வெளிப்படையாகத் தெரிகிறது.
(முஸ்லிம் மன்னராட்சியில் இந்தியாவின் முன்னேற்றம் - கரைகண்டம் கி நெடுஞ்செழியன். பக்: 226)

ஒரு சமயம் வரிகட்ட முடியாமல் விவசாயிகள் சிரமப்பட, அது குறித்து பாதுஷாவின் யோசனைக் கேட்டு கவர்னர் கடிதம் எழுதினார்.

பாதுஷா பதில் - 'நிலங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டாலோ அல்லது மழையோ இல்லாமல் போனாலோ அல்லது இயற்கையின் எதிர்பாராத சதியாலோ விவசாயம் ஒட்டுமொத்தமாக பாதிக்கப்பட்டாலோ, அதற்காக விவசாய மக்களைப் பிரச்சினைக்குள்ளாக்க வேண்டாம்.

வரியைத் தள்ளுபடி செய்துவிடவும். கூடவே வரிகட்ட முடியாமலிருப்பது உண்மைதானா என்பதை நன்கு விசாரிக்க வேண்டும் ' என்றும் எச்சரிக்கையுடன் குறிப்பிடுகிறார் பாதுஷா. ' (வந்தார்கள் வென்றார்கள் - மதன். பக்: 169)

ராஜாங்க விஷயங்களிலும் ஆஸ்தான சபையிலும் மரபுகளும் சம்பிரதாயங்களும் சட்டத்திட்டங்களும் மீறப்படக்கூடாது என்பதில் மிகவும் கண்டிப்பானவர் ஆலம்கீர்.

பாதுஷாவின் காலத்தில் வாழ்ந்த ஒரு வரலாற்று குறிப்பாளர் விவரிக்கிறார்....

'பாதுஷா ஆஸ்தான மண்டபத்தில் அமர்ந்திருக்கும்போது சபையில் ஒரு கெளரவமான அமைதி நிலவும். யாரும் தப்பும் தவறுமாகப் பேசி நான் பார்த்ததில்லை. சபையில் இல்லாத ஒருவரைப் பற்றி கேலியாகப் பேசுவது பெரும் குற்றமாக கருதப்பட்டது.

யாராக இருந்தாலும் சரி மிகவும் மரியாதையான, அடக்கமான வார்த்தைகளையே பேச்சில் உபயோகிக்கவேண்டும். சொல்வதைத் தெளிவாக, தீர்க்கமாகச் சொல்லவேண்டும்.

தினமும் இரண்டு அல்லது மூன்று முறை ஆஸ்தான மண்டபத்தில் அமர்ந்து மக்கள் குறைகளைக் கேட்பார் ஒளரங்கசீப்.

அப்போது யார் வேண்டுமானாலும் நேரடியாகத் தங்கள் பிரச்சினைகளை மன்னரிடம் கூறலாம். சாமானியராக இருந்தாலும் அவர் சொல்வதை சக்கரவர்த்தி மிகுந்த கவனத்துடன் கேட்டு உடனே தீர்ப்பு வழங்குவார்.

'உடல் நலம் கருதி ஆலம்கீர் சற்று ஓய்வு எடுக்கவேண்டும்.... ' என்று ஒரு தளபதி பாதுஷாவுக்கு கடிதம் எழுதியதற்கு

'இறைவன் கருணையால் நான் நாடாள அனுப்பப்பட்டிருக்கிறேன். கடைசிவரை உழைக்க வேண்டியது என் கடமை. எனக்காக அல்ல, குடிமக்கள் நலனுக்காக. மக்கள் மகிழ்ச்சியில் பின்னிப் பிணைந்தால் ஒழிய எனக்கு என்று தனிப்பட்ட மகிழ்ச்சி எதுவும் கிடையாது.... ' என்று ஒளரங்கசீப்பிடமிருந்து பதில் போனது. (வந்தார்கள் வென்றார்கள் - மதன் பக்: 167-168)

தன் இரண்டாவது மகனுக்குக் கடிதம் மூலமாக சொல்லிய அறிவுரை....

'ஓய்வு எடுப்பது, உல்லாசமாக விடுமுறை எடுப்பது... இதிலெல்லாம் ஆளப்பிறந்தவர்கள் நாட்டம் செலுத்தக்கூடாது. மக்களுக்காகத் தொடர்ந்து உழைப்பது ஒன்றே ஆட்சியாளர்களின் கடமை. அரசரும் சரி, தண்ணீரும் சரி.. ஒரே இடத்தில் தேங்கக்கூடாது. தேங்கினால் தண்ணீர் கெட்டுப்போய்விடும், அரசரும் மதிப்பிழந்து போய்விடுவார்...!

'....வேண்டுமானால் நாட்டைப் பிரித்துக்கொள்ளுங்கள் தலைகள் உருள வேண்டாம், ரத்த ஆறு ஓட வழி வகுக்காதீர்கள்... ' என்று தன் மகன்களுக்கு கடைசி காலத்தில் கெஞ்சல் கடிதம் எழுதிய அரசர்தான் மக்களை குறிப்பாக இந்துக்களைக் கொடுமைப் படுத்தினான், மதவெறிப் பிடித்தவன்... ?

மூளைக்கு சிறிது வேலை கொடுங்கள். சிந்தனை என்ற ஒரு இயக்கம் உள்ளே இருக்கிறது.

அழுக்காறு மனம் படைத்தவர்களுக்கு சமத்துவமும் தெரியாது, சகோதரத்துவமும் தெரியாது. நல்லிணக்கத்தின் இலக்கணம் எங்கே தெரியப்போகிறது ?

காழ்ப்புணர்ச்சி கண்ணை மறைத்திருக்கும்போது நட்புணர்ச்சியின் விதையை அங்கே தூவ முடியாது!

பிரம்மாவின் உயர் படைப்பு நாங்கள்தான் என்று ஆயிரமாயிராண்டு காலமாக ஏமாற்றிக்கொண்டிருந்த இவர்களின் ராஜபோகம், சென்ற நூற்றாண்டில் அம்பேத்காரர்களாலும் பெரியார்களாலும் பரிக்கப்பட்டு விட்டன;

மக்கள் விழித்துக்கொண்டனர். அவற்றை ஜீரணிக்க முடியவில்ல. கொஞ்சநஞ்சமிருந்தது தேவதாசி, அதுவும் பறிபோய்விட்டது.

குலக்கல்வியைக் கொண்டுவந்தோம், கொடுப்பினை இல்லாமல் போய்விட்டது; சமீபத்தில் மதமாற்ற தடைச்சட்டத்தை கொண்டு வந்துப் பார்த்தோம், அதையும் புதைக்கவேண்டியதாகிவிட்டது;

முஸ்லிம்கள் குர்பானியை தடை செய்ய கோயிலில் பலி தடை என்று முன்னோடியாக வைத்துப்பார்த்தோம், அது கொண்டு வந்தவர்களையே குர்பானி(பலி) கொடுத்துவிடும் போலாகிவிட்டது. என்ன செய்வது ?

இப்படியாவது பிழைப்பை நடத்திப் பார்ப்போம், பழய குப்பையை கிளறினால் எதாவது கிடைக்காலாமல்லவா ? அதிலாவது குளிர் காயலாமல்லவா ? சங்கு சும்மாத்தானே கிடக்கிறது, ஊதுவோமே!

ஐயா! நம்மிடம் ஆயிரம் குளறுபடிகள் இருக்கின்றன, அவற்றை முதலில் சரி செய்வோம். பிறகு ஒளரங்கசீப்பைப் பார்ப்போம், அவர் எங்கேயும் போய்விடமாட்டார். என்ன சொன்னாலும் ஒளரங்கசீப், cheap ஆகிவிடமாட்டார்.
முடிவு ஒன்றுதான்,.... அது 'சத்தியமேவ ஜெயதே '!
-ஹமீது ஜாஃபர். maricar@emirates.net.ae
------------------------------------
படிக்க:>>
ஒளரங்கசீப் காசி விஸ்வநாதர் கோயிலை இடித்தாரா? கண்காட்சி பெயரால் மதவெறி!
----------------------------------------
மற்ற பதிவுகளை படிக்க:>> வாஞ்ஜுர்

No comments:

Six C's of Character - Yasir Fazaga