புனித பைபிளை பார்த்தால் "தேவனாகிய நானே இந்த புத்தகத்தை உங்களுக்கு கொடுத்தேன் என்கிற செய்தியை அல்லது அது போன்ற ஒரு செய்தியை எங்கும் எதிலும் காணமுடியாது.
அதே நேரம் புனித பைபிளை புறட்டுகின்ற போது
சான்று இரண்டு:
புனித பைபிளில் லூக்கா முதலாம் அத்தியாயம் முதலாம் இரண்டாம் முன்றாம் வசனங்களில் லூக்கா சொல்லுகின்றார் "அன்பான தெயோப்பிலுவே, நம்மிடையே நடந்த பல நிகழ்ச்சிகளின் வரலாற்றைத் தொகுத்தளிக்க பலர் முயற்சி செய்தனர், வேறுசிலர் மக்களிடமிருந்து நாம் கேட்டறிந்த செய்திகளையே அவர்கள் எழுதியிருந்தார்கள். இம்மக்கள் தொடக்கத்திலிருந்து எல்லாவற்றையும் கண்டவர்களும், தேவனுடைய நற்செய்தியை மற்றவர்களுக்குப் போதிப்பதின் மூலம் தேவனுக்குச் சேவை செய்து கொண்டிருந்தவர்களும் ஆவார்கள். மதிப்புக்குரிய தெயோப்பிலுவே, துவக்கத்திலிருந்தே எல்லாவற்றையும் நானும் கவனமாக கற்று அறிந்தேன். (it seemed good to me also) அவற்றை உங்களுக்காக எழுதவேண்டும் என்று எண்ணினேன், எனவே அவற்றை ஒரு நூலில் முறைப்படுத்தி எழுதினேன்."
எல்லோரும் எழுதுகின்றார்கள், அதனால் என்னாலும் சிலதை சொல்ல முடியும் என்பதற்காக லூக்காவும் ஒரு புத்தகத்தை எழுதியிருக்கின்றார், இவ்வாறு 40 (நாற்பது) பேர்கள் எழுதிய புத்தகங்களின் தொகுப்பே இந்த பைபிளாகும்..
அல்லாஹ் சொல்லுகின்றான்;
"தம் கைகளால் நூலை எழுதி, அதை அற்ப விலைக்கு விற்பதற்காக 'இது அல்லாஹ்விடமிருந்து வந்தது' என்று கூறுவோருக்குக் கேடு தான். அவர்களின் கைகள் எழுதியதற்காகவும் அவர்களுக்குக் கேடு உள்ளது. (அதன் மூலம்) சம்பாதித்ததற்காகவும் அவர்களுக்குக் கேடு உள்ளது." ( அல் பகறா, அத்தியாயம் 2 : 79)
சான்று மூன்று:
"கல்லறைகள் அனைத்தும் திறந்தன, தேவனுடைய மனிதர்கள் பலர் மீண்டும் மரணத்திலிருந்து உயிர்த்தெழுந்தார்கள். கல்லறையிலிருந்து எழுந்த அவர்கள் இயேசு மரணத்திலிருந்து உயிர்த்தெழுந்த பின்பு பரிசுத்த நகருக்குச் (எருசலேமுக்கு) சென்றதை மக்கள் பலரும் கண்டார்கள" (மத்தேயு : 27 – 52, 53)
இந்த காட்சியை, செய்தியை இவர் மட்டும் தான் அறிவிக்கின்றார், இப்படி ஒரு அற்புதமான செய்தியை பிறர் எவரும் காணவில்லையா?
கல்லறைகளிலிருந்து வெளியேறியவர்கள் எங்கே போனார்கள்? திரும்பி அவர்கள் கல்லறைகளுக்குள் வந்து சேர்ந்தார்களா? ஏன் அவர்கள் திரும்பி வர வேண்டும்? கல்லறைகளிலிருந்து தப்பிவற சந்தர்ப்பம் கிடைத்தால் எவரும் திரும்பி வர மாட்டார்கள்.
சான்று நான்கு:
"ஏகூத் இஸ்ரவேலரை மீட்டுக் காத்த பின்பு, மற்றொரு மனிதன் இஸ்ரவேலரைக் காத்தான், 600 பெலிஸ்தியர்களைச் சம்கர் தாற்றுக் கோலால் (Ox goad) கொன்றான்." (நியாயாதிபதிகள் 3 : 31)
எப்படி 600 பலஸ்தீனர்களை ஒரு சிறுவனால் கொல்ல முடியும்? இப்படிப்பட்ட செய்தியை சுமப்பது எப்படிபட்ட ஒரு வேத நூலாக இருக்க முடியும்?
இன்று கிறிஸ்தவர்களில் அதிகமானோருக்கு சம்கரை தெரியாது.
அல்லாஹ் புனித அல் குர்ஆனில் சொல்லுகின்றான்;
"அவர்கள் இந்தக் குர்ஆனைச் சிந்திக்க மாட்டார்களா? இது அல்லாஹ் அல்லாதவரிடமிருந்து வந்திருந்தால் இதில் ஏராளமான முரண்பாடுகளைக் கண்டிருப்பார்கள்." (அல்குர் ஆன் 4 : 82)
இந்த இறைவாக்கியத்தை இன்று வரை அதே தன்மையில் பார்க்கமுடிகின்றது, ஆனால் புனித பைபிளை காலத்திற்கு காலம் மாற்றுவதை பார்க்கமுடிகின்றது,
இதனை ஒரு நிபந்தனையாக வைத்து மொத்த்த்தில் பரிசோதித்தால், அல் குர்ஆனுக்கும் முன் வந்த புனித பைபிளில் பல முரண்பாடுகளை பார்க்கமுடியும்.
சான்று ஜந்து:
"நீர் எனக்குத் தந்தவர்களில் ஒருவனையும் நான் இழக்கவில்லை (I have lost none) என்று அவர் சொன்னது நிறைவேறும்படி இவ்வாறு நிகழ்ந்தது" (யோவான் 18 : 09)
சிவப்பு எழுத்து பைபிளில் "நீர் எனக்குத் தந்தவர்களில் ஒருவனையும் நான் இழக்கவில்லை" என்பது சிவப்பு எழுத்தில் குறிக்கப்பட்டுள்ளது.
அதே யோவானில் இன்னுமொரு இடத்தில் "நான் அவர்களோடு இருந்த போது அவர்களை பாதுகாத்து வந்தேன், நீர் எனக்குத் தந்த உமது பெயரின் வல்லமையினால் அவர்களைப் பாதுகாத்தேன், அவர்களில் ஒருவன் மட்டும் இழக்கப்பட்டான்.(யூதாஸ்) (None of them is lost except the son of perdition)" (யோவான் 17 : 12)
ஒரே புத்தகத்தில் வரக்கூடிய இரண்டு வசனங்களும் தெளிவாக முரண்படுவதை பார்க்கமுடிகின்றது. இந்த செய்தியை வேறு ஒரு சிவப்பு எழுத்து பைபிளாகிய king James version ல் பார்க்கும் போது அதில் இந்த John 18 : 9 வசனத்தில் எந்த சிவப்பு எழுத்துக்களையும் பார்க்கமுடியவில்லை.
தொடர்ந்தும்...............
(அன்பின் நண்பர்களே உங்கள் கருத்துக்களை பிவரும் லிங்கிற்கு சென்று பின்னூட்டல் இடும்படி தயவாய் வேந்துகிறோம்.)
No comments:
Post a Comment