Search This Blog

Thursday, July 22, 2010

"இறை வேதம் அல் குர் ஆனா அல்லது புனித பைபிளா?" ...05



                                               
                                                                                                        மாற்றங்கள் தேவை - சுவை 32


சான்று -13 


"கர்த்தர் யூதாவைத் தண்டிக்க ஆசிரியாவைப் பயன்படுத்துவார். ஆசிரியா வாடகைக்கு வாங்கப்பட்ட சவரக்கத்தியைப் போலிருக்கும். கர்த்தர் யூதாவை தலையிலிருந்து கால்வரை சவரம் செய்து நீக்குவது போன்றிக்கும். அது யூதாவின் தாடியை கர்த்தர் நீக்குவது போன்று இருக்கும்." (ஏசாயா 7 : 20)


கடவுள் ஒரு சிகை அலங்காரன் செய்யும் சவரத்தை விட மிக மோசமானதாக முறையில் செய்வதாக சொல்லப்படுகின்றது. இது எப்படி?


சான்று - 14



புகைபிடித்தல் இன்று சமூகத்தில் மிகப்பெரும் நோயாகும்,                     

இதற்கு காரணம் என்ன?                                                                    


இதனை எங்கிருந்து பெற்றுக்கொண்டார்கள்?

புனித பைபிள் அதை மக்களுக்கு கற்றுத்தருகின்றது.
"தேவனுடைய நாசியிலிருந்து புகையெழுந்த்து. எரியும் தழல் அவரின் வாயிலிருந்து வந்தது. எரியும் பொறிகள் அவரிடமிருந்து பறந்தன".                                              (2 சாமுவேல் 22 : 9)

கர்த்தருக்கு சிறகுகள் இருந்த்தாகவும் அதனால் பறந்துவந்ததாகவும் புனித பைபிள் சொல்லுகின்றது.
                                                                                            "கர்த்தர் ஆகாயத்தைக் கீறி கீழிறங்கி வந்தார்! அவர் கட்டியான கறுப்பு மேகத்தில் நின்றார்! அவர் பறந்துக்கொண்டிருந்தார், கேருபீன்கள் மீது பறந்து வந்தார், காற்றின் மீது பயணம் வந்தார்."           (2 சாமுவேல் 22 : 10 -11)

இந்த வார்த்தைகள் கடவுளை கேவலப்படுத்துவதாகவும் தரக்குறைவாக வர்ணிப்பதாகவும் அமைகின்றன.

?கடவுள் எப்போதாவது கெட்டவிடயங்களை ஏவுவாரா
மனித மலத்தை சாப்பிட மக்களை ஏவுவதை இங்கு பாருங்கள்;

"பாருங்கள். நான் உங்கள் சந்ததிகளைத் தண்டிப்பேன். விடுமுறையில் உங்கள் ஆசாரியர்கள் எனக்குப் பலி கொடுக்கிறார்கள். நீங்கள் மரித்த மிருகங்களின் சாணத்தையும் மற்ற பகுதிகளையும் எடுத்து வெளியே எறிகிறீர்கள். நான் அந்தச் சாணத்தை உங்கள் முகத்தில் இறைப்பேன். நீங்கள் அதனோடு வெளியே எறியப்படுவீர்கள்."                                               )மல்கியா 2 : 3)

"உனது உணவை நீயே ஒவ்வொரு நாளும் தயாரிக்கவேண்டும். நீ காய்ந்த மனித மலத்தை எரித்து ரொட்டியைச் சுடவேண்டும். இந்த ரொட்டியை நீ ஜனங்களுக்கு முன்னால் சுட்டு உண்ண வேண்டும்."          (எசேக்கியேல் 4 : 12)

அல்லாஹ் சொல்லுகின்றான் "நிச்சயமாக அல்லாஹ் 
அருவருப்பானவைகளைக்கொண்டு ஏவமாட்டான்""




சான்று - 15


ஆப்ரஹாம் அவர்களுடைய வரலாற்றை பற்றிச் சொல்லும் போது கடவுளும் இரண்டு மலக்குகளும் அவரது வீட்டுக்கு சென்றபோது அவர் விருந்து வைத்த்தாகவும் அதனை அவர்கள் மூவரும் சாப்பிட்டதாகவும் கிறிஸ்துவம் சொல்லுகின்றது.

அல் குர்ஆன் இதனை மறுத்துவிட்டு சொல்லுகின்றது. அவர்கள் மூவரும் மலக்குகள், அவர்கள் உண்ணமாட்டார்கள் மற்றும் அல்லாஹ்வும் உண்ணமாட்டான்,


அதனை அல்லாஹ் தனது திரு குர்ஆனில் இவ்வாரு சொல்லுகின்றான்,
"வானங்களையும் பூமியையும் படைத்த அல்லாஹ்வையன்றி வேறு பொறுப்பாளனை ஏற்படுத்திக்கொள்வேனாஅவனே உணவளிக்கிறான். அவன் உணவளிக்கப்படுவதில்லைஎன்று கூறுவீராக! "கட்டுப்பட்டு நடப்போரில் முதலாமவனாக இருக்குமாறு கட்டளையிடப்பட்டுள்ளேன்எனவும் கூறுவீராக! இணை கற்பித்தவராக ஒரு போதும் நீர் ஆகி விடாதீர்!    (அல் குர் ஆன் 6 : 14)

படைப்புக்களுக்கு உணவளிக்கின்ற கடவுள் அவனே உண்ணுபவனாக இருந்தால் அவன் கடவுளாக இருக்க முடியாது.

கடைசியாக "இக்குர்ஆன் போன்றதைக் கொண்டு வருவதற்காக மனிதர்களும்,ஜின்களும் ஒன்றுதிரண்டாலும் இது போன்றதைக் கொண்டு வர முடியாது. அவர்களில் ஒருவர் மற்றவருக்கு உதவியாளராக இருந்தாலும் சரியேஎன்று கூறுவீராக!"  (அல் குர்ஆன் 17 : 88) என்ற இந்த வசனத்தை ஓதியவராக இந்த சவால் உலக முடிவுவரை இருக்கும் என்று சொல்லி விடைபெற்றார் அறிஞர் அஹ்மத் தீதாத்.


No comments:

Six C's of Character - Yasir Fazaga