Search This Blog

Wednesday, June 27, 2007

ஆவியுடன் பேசினேன் பிரதீபா புது சர்ச்சை

ஆவியுடன் பேசினேன் பிரதீபா புது சர்ச்சை
ஜெய்ப்பூர், ஜூன் 27-தொடர்ந்து பல்வேறு சர்ச்சையில் சிக்கிவரும் ஜனாதிபதி வேட்பாளர் பிரதீபா பாட்டீல் தற்போது ஆவியுடன் பேசியதாக பொது மேடையில் பேசிய சர்ச்சையில் சிக்கியுள்ளார்.ஐக்கிய முற்போக்கு கூட்டணி மற்றும் இடதுசாரி கட்சிகளின் ஜனாதிபதி வேட்பாளராக பிரதீபா பாட்டீல் அறிவிக்கப்பட்ட தினத்திலிருந்து அவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. தனது கட்டுப்பாட்டை மீறிய பிரச்னைகளில் சிக்கிக் கொள்வது ஒரு புறம் இருக்க தன் வாயாலே பல சர்ச்சைகளில் பிரதீபா சிக்கி வருகிறார். முதன் முதலாக இவர் ஆரம்பித்த சர்க்கரை ஆலை ஒன்று வங்கி கடன் திருப்பி செலுத்த முடியாமல் திவாலானதாக தகவல் வெளியானது. பின்னர் இவரது தம்பி கொலைக்குற்றம் ஒன்றில் சிக்கியிருப்பதாகவும், அதிலிருந்து தம்பியை காப்பாற்ற இவர் முயன்றதாகவும் செய்திகள் வெளியாயின.இவர் தலைவராக இருந்த கூட்டுறவு வங்கியில் உறவினர்களுக்கு லட்சக்கணக்கில் கடன் கொடுத்ததாக புகார் எழுந்தது. இந்த குற்றச்சாட்டுகளில் பிரதீபாவுக்கு நேரடி தொடர்பு இல்லை என அவரது சார்பாக விளக்கம் அளிக்கப்பட்டது. இருப்பினும் தன்னுடைய பேச்சால் அவர் தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்கி வருகிறார்.வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பின்னர் ஜெய்ப்பூரில் பொது மேடையில் பேசிய பிரதீபா வடநாட்டு பெண்களுக்கு முகத்தை மூடும் பழக்கம் முகலாய ஆதிக்கத்தால் வந்தது என சர்ச்சையை எழுப்பினார். இந்தியாவில் நீண்ட காலமாகவே பெண்கள் முக்காடு போடும் பழக்கம் இருந்ததாக இஸ்லாமிய வரலாற்று ஆசிரியர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த சம்பவத்துக்கு முன்பு ராஜஸ்தான் மாநில கவர்னர் என்ற வகையில் பிரம்மகுமாரிகள் நடத்திய விழா ஒன்றில் கலந்து கொண்டு பேசுகையில், Ôபிரம்மகுமாரி இயக்கத்தை தொடங்கிய பாபா, ஆவியாக வந்து என்னிடம் பேசினார். உயர்ந்த பதவி காத்திருப்பதாக கூறினார்Õ என்றார்.இந்திய ஜனாதிபதியாவதற்கு வாய்ப்புள்ள ஒருவர் ஆவியுடன் தொடர்பு கொண்டதாக பேசியிருப்பது தற்போது புது சர்ச்சையை கிளப்பியுள்ளது. இது குறித்து பா.ஜ. செய்தி தொடர்பாளர் சுஷ்மா சுவராஜ் கூறுகையில், Ôஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பிரதீபா பாட்டீல் தான் என்ன பேசுகிறோம் என்பதை யோசித்து பேச வேண்டும்Õ என்றார்.

Six C's of Character - Yasir Fazaga