Search This Blog

Monday, June 25, 2007

புற்றுநோயை தடுக்கும் பூசணிக்காய்

புற்றுநோயை தடுக்கும் பூசணிக்காய்

பினாங், ஜுன். 24-

பூசணிக்காய்க்கு புற்று நோயை தடுக்கும் ஆற்றல் உள்ளது என்று ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மலேஷியா பல்கலைக் கழகத்தின் தொழில் நுட்பத் துறை பேராசிரியை நூர் அஜியா அப்துல் அஜீஸ் பல ஆண்டுகளாக ஆய்வு மேற் கொண்டார். புற்றுநோய் தொடர்பான அவர் மேற் கொண்ட ஆய்வு முடிவுகளில் கூறப்பட்டு இருப்பதாவது:-

பூசணிக்காய்க்கு புற்று நோயை குணமாக்கும் ஆற்றல் உள்ளது. பூசணிக்காயில் ஒருவித `ஸ்டார்ச்' உள்ளது. இந்த ஸ்டார்ச்சுகள் `புரொப்பி யோனிக்' அமிலத்தை உருவாக் கும் ஆற்றல் கொண்டவை.

இந்த அமிலம் காரணமாக பூசணிக்காயில் உள்ள `ஸ்டார்ச்' புற்றுநோயை உருவாக்கும் செல்கள் பலவீனப்படுத்து கின்றன. தீமை தரும் பாக்டீரி யாக்களும் அழிந்து விடு கின்றன.

பூசணிக்காயின் சதைப் பகுதியை மாவாக்கி உலர்த்தி யும் பயன்படுத்தலாம். இதன் மூலமும் புற்றுநோயை குண மாக்க முடியும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

பூசணிக்காயில் அதிக அளவு நார்சத்தும் உள்ளது. தாது உப்புக்களும் உள்ளன.

Six C's of Character - Yasir Fazaga