Search This Blog

Sunday, April 23, 2006

உம்ராவின் சட்டதிட்டங்கள்

உம்ராவின் சட்டதிட்டங்கள்
உம்ராஉம்ரா செய்வது ஒவ்வொரு முஸ்லிம் மீதும் வாழ்நாளில் ஒரு முறை கடைமையாகும். அல்லாஹ் கூறுகிறான்: அல்லாஹ்வுக்காக உம்ராவையும் ஹஜ்ஜையும் நீங்கள் நிறைவு செய்யுங்கள். (2:196)

உம்ரா, ஒரு முஸ்லிம் முடிந்த வரை திரும்பத் திரும்ப செய்ய வேண் டிய சிறந்த செயல்களில் ஒன்றாகும். உம்ரா செய்யக் கூடியவர் உம்ராவுடைய வணக்கங் களில் முதன் முதலில் செய்ய வேண்டியது இஹ்ராமாகும். இஹ்ராம் இஹ்ராம் என்பது ஹஜ் அல்லது உம்ரா உடைய வணக்கத்தில் பிரவேசிப்பதாகும். இஹ் ராமிலுள்ளவருக்கு அதற்கு முன்னர் ஹலாலாக இருந்த சில காரியங்கள் ஹராமாகி விடுகி ன்றன. ஏனெனில் அவர் ஒரு வணக்கத்தில் புகுந்துவிட்டார். ஹஜ் அல்லது உம்ராவை வி ரும்புகிறவர் மக்காவிற்கு வெளியில் நபி(ஸல்)அவர்கள் நிர்ணயம் செய்த எல்லைகளில் ஏதே னும் ஒரு எல்லையிலிருந்து முன்னோக்கி வருபவராக இருந்தால் இஹ்ராம் கட்டாயமாகும்.

எல்லைகள்1- துல்ஹ{லைஃபா: இது மதீனாவிற்குச் சமீபமாக உள்ள ஒரு கிராமமாகும். தற்போது இதற்கு(அப்யார் அலி)எனக் கூறப்படுகிறது. இது மதீனாவாசிகளுக்குரிய எல்லையாகும்

.2- அல்ஜஹ்ஃபா: இது ராபிஃக் என்னும் ஊருக்கு சமீபமாக உள்ள ஒரு சிறிய ஊராகும். தற்போது மக்கள் ராபிஃகிலிருந்தே இஹ்ராம் கட்டிக் கொள்கிறார்கள். இது சிரியாவாசிகளி ன் எல்லை.

3- கர்னுல் மனாஸில்: (ஸைலுல்கபீர்) இது தாயிஃபிற்குச் சமீபமான ஒரு இடம். இது நஜ்து வாசிகளின் எல்லையாகும்.

4- யலம்லம்: இது மக்காவிலிருந்து சுமார் 70 கி.மீ. தூரத்திலுள்ளது. இது யமன்வாசிகளி ன் எல்லையாகும். இந்தியாவிலிருந்து வருபவர்களுக்கும் இதுவே எல்லையாகும்.

5- தாதுல் இர்க்: இது இராக்வாசிகளின் எல்லையாகும்.இவ்வைந்து இடங்கள் மேலே குறிப்பிட்ட ஊர்காரர்களுக்கும் இவ்விடங்கள் வழியாக வருகின்றவர்களுக்கும் உரிய எல்லைகளாகும். இந்த எல்லைளுக்கு உள்ளே உள்ளவர்க ளும், ஹரமில் உள்ளவர்களும் அவர்கள் இருக்கின்ற இடங்களிலிருந்தே இஹ்ராம் கட்டிக் கொள்ள வேண்டும்.

எல்லையில் செய்ய வேண்டியவை
இஹ்ராமுக்கு முன் செய்ய வேண்டிய சுன்னத்துகள்;:
1- நகங்களை வெட்டுவது, அக்குள் முடிகளைப் பிடுங்குவது அல்லது சிரைப்பது, மீசை யைக் கத்தரிப்பது, மறைவிடத்தின் முடியைச் சிரைப்பது, குளிப்பது, உடம்புக்கு மட்டும் மணம் பூசிக் கொள்வது ஆடைகளுக்குப் பூசக்கூடாது.2- தைய்யலாடைகளைக் கழைவது, கீழாடையும் மேலாடையும் அணிதல், பெண் தன்னை மூடி மறைத்துக் கொள்வதில் கவனம் செலுத்துவதுடன் தான் விரும்பிய ஆடைகளை அணிந்து கொள்ளலாம். அழகலங்காரங்களை வெளிப்படுத்தக் கூடாது. அன்னிய ஆடவர் கள் வரும்போது முகத்தையும் முன்கைகளையும் மறைத்துக் கொள்ள வேண்டும். கையு றைகளையும் முகமூடி அணிவதையும் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.3- பள்ளிக்குச் சென்று அந்நேரம் தொழுகை நேரமாக இருந்தால் ஜமாஅத்துடன் தொழு வது அல்லது ஒலுவின் இரு ரக்அத்துகளைத் தொழுவது. அதன் பின்னர் இஹ்ராமைத் தொடங்குவது.ஆகாயத்தில் பயணம் செய்பவராக இருந்தால் எல்லையில் இஹ்ராம் கட்டிக் கொள்வது கட்டாயமாகும். எல்லையைத் தெரிந்து கொள்வது கஷ்டமாக இருந்தால் அதற்கு முன்னர் போதுமான கால அளவில் கட்டிக்கொள்ள வேண்டும். அவன் எல்லையில் செய்ய வேண்டி ய சுத்தம், மணம் பூசுதல், நகங்கள் வெட்டுதல், இஹ்ராம் ஆடை அணிதல் ஆகியவற்றை அவன் விரும்பினால் விமானத்தில் ஏறுவதற்கு முன்னரோ அல்லது விமானத்தில் வைத்தோ முழுமையாகச் செய்து கொள்ளலாம். பின்னர் எல்லையை அடைவதற்கு முன்னர் அல்லது அதை அடைந்து கொள்ளும் நேரத்தில் இஹ்ராமை நிய்யத் செய்து கொள்ளவும். இஹ்ராம் முறைலப்பைக் உம்ரதன் என்று கூறி இஹ்ராம் கட்டிக் கொள்ள வேண்டும். இஹ்ராம் கட்டிக் கொண்ட பின்னர் தல்பியாச் சொல்வதும் அதை இஹ்ராம் கட்டியதிலிருந்து கஃபத்துல்லா ஹ்வில் வலம் வருவதை ஆரம்பிக்கும் வரை திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டிருப்பதும் சுன்னத் தாகும்.தல்பியா: லப்பைக் அல்லாஹ{ம்ம லப்பைக், லப்பைக் லாஷரீக்கலக லப்பைக், இன்னல் ஹம்த வன்நிஃமத்த லக வல்முல்க் லாஷரீக்க லக். لًبّيْكَ اَللّهُمَّ لَبَّيْكَ، لَبَّيْكَ لا شَرِيْكَ لَكَ لَبَّيْكَ، إِنَّ الْحَمْدَ وَالنِّعْمَةَ لَكَ وَالْمُلْكَ لاشَرِيْكَ لَك. பொருள்: வந்துவிட்டேன் இறைவா! உன்னிடமே வந்து விட்டேன்! உன்னிடமே வந்து விட்டேன்! உனக்கு யாதொரு இணையுமில்லை. உன்னிடமே வந்து விட்டேன். நிச்சயமாக புகழும் அருட்பாக்கியங்களும் ஆட்சியும் உனக்கே உரியன. உனக்கு யாதொரு இணையுமி ல்லை.

இஹ்ராமில் தடுக்கப்பட்டவை

இஹ்ராம் கட்டிக் கொண்டவருக்கு பின் வருபவை ஹராமாகும்.1- தலை மற்றும் உடம்பின் ஏனைய பாகங்களிலுள்ள முடிகளை நீக்குவது. எனினும் தே வையின் நிமித்தம் இலேசாகத் தலையைச் சொரிவதால்(முடி விழுந்து விடுவதில்) குற்றமில்லை.2- நகங்களை வெட்டுதல். எனினும் நகம் உடைந்துவிட்டால் அல்லது அது அவனுக்குத் தொல்லை கொடுத்துக் கொண்டிருந்தால் அதை வெட்டுவது குற்றமல்ல.3- வாசனை சோப்பு போன்ற வாசனையுள்ள பொருட்களை உபயோகிப்பது. 4- உடலுறவு கொள்ளல், மனைவியை இச்சையுடன் பார்த்தல், அணைத்தல், முத்தமிடுத ல் மற்றும் திருமணம் போன்ற உடலுறவைத் தூண்டக் கூடிய காரியங்களைச் செய்தல்.5- கையுறைகள் அணிதல்.6- வேட்டைப் பிராணிகளைக் கொல்லுதல். இவ்வனைத்தும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஹராமாகும். ஆண்களுக்கு அதிகப் படியாக இன்னும் சில ஹராமாகின்றன.அ- தையல் ஆடை அணிவது. எனினும் இஹ்ராமிலுள்ளவன் பெல்ட், கண்ணாடி, வாட்ச் போன்ற தேவையுள்ள பொருட்கள் அணிவது கூடும். ஆ- தலையை ஒட்டினாற்போல ஏதேனும் கொண்டு தலையை மறைத்தல். தலையோடு ஒட்டாமல் சற்று உயரமாக வைத்து தலையை மறைப்பது குற்றமில்லை. உதாரணமாக குடை, வாகனம், கூடாரம் போன்றவற்றிற்குள் நுழைந்து கொள்வதைப் போல. இ- காலுறை அணிவது. செருப்புக் கிடைக்கவில்லையானால் பூட்ஸ் அணிந்து கொள்ள லாம். தடுக்கப்பட்ட இவற்றில் ஒன்றை யாரேனும் செய்து விட்டால் அவனுக்கு மூன்று நிலை கள் உள்ளன.1- தக்ககாரணமின்றிச் செய்பவன். இவன் பாவியாவான் அபராதமுண்டு.2- தேவைக்காகச் செய்பவன். இவன் பாவியாகமாட்டான். அபராதமுண்டு.3- தக்ககாரணத்துடன் செய்பவன். அதாவது அறியாமலோ, மறந்தோ, நிர்ப்பந்தமாகவோ செய்வது போல. இவனுக்குக் குற்றமுமில்லை. அபராதமுமில்லை. தவாஃப்(வலம் வருதல்)மஸ்ஜிதுல் ஹராமில்(கஃபத்துல்லாவில்);நுழையும் போது வலது காலை வைத்து பிஸ்;மில் லாஹி, வஸ்ஸலாத்து வஸ்ஸலாமு அலா ரசூலில்லாஹ் அல்லாஹ{ம் மக்ஃபிர்லீ துநூபி வஃப்தஹ்லீ அப்வாப ரஹ்மதிக என்று கூறுவது சுன்னத்தாகும். بِسْمِ اللّهِ وا لصَّلاَةُ والسَّلاَمُ عَلى رَسُوْلِ اللّهِ اَللّهُمَّ اغْفِرْ ليِ ذُ نُوْبِي وَا فْتَحْ لِي اَبْوَابَ رَحْمَتِكَ (பொருள்: அல்லாஹ்வின் பெயர் கூறி நுழைகிறேன். கருணையும் ஈடேற்றமும் அல்லா ஹ்வின் தூதரின் மீதும் உண்டாவதாக! இறைவா! எனது பாவங்களை மன்னித்துவிடு உனது அருள் வாயல்களை எனக்குத் திறந்துவிடு) இந்தத் துஆ எல்லாப் பள்ளிகளுக்கும் பொதுவானதாகும். பின்னர் உடனடியாக கஃபா வை வலம் வருவதற்காக அதன் பக்கம் சென்றுவிட வேண்டும். தவாஃப் என்பது அல்லா ஹ்வுக்கு வணக்கம் செய்யும் எண்ணத்தில் ஹஜருல் அஸ்வதிலிருந்து ஆரம்பித்து இடது புறமாக கஃபாவை ஏழு முறை சுற்றிவருவதாகும். முடிக்கும் போது ஹஜருல் அஸ்வதிலே யே முடிக்க வேண்டும்.

தவாஃப் செய்யும் போது ஒலுவுடன் இருக்க வேண்டும்.
தவாஃப் செய்யும் முறை

1- ஹஜருல் அஸ்வதின் பக்கம் சென்று, அதைத் தனது வலது கையால் தொட்டு, பிஸ்மில்லாஹி அல்லாஹ{ அக்பர் எனக் கூறிக் கொள்ளவேண்டும். இத்துடன் اللهم ايمانا بك وتصديقا بكتابك ووفاء بعهدك واتباعا لسنة نبيك அல்லாஹ{ம்ம ஈமானம்பிக வதஸ்தீகம் பிகிதாபிக வவஃபாஅம் பிஅஹ்திக வத்திபாஅன் லிசுன்னத்தி நபிய்யிக என்பதையும் சேர்த்து சொல்வது சிறந்ததாகும். முடிந்தால் அக்கல்லை முத்தமிட்டுக் கொள்ளவேண்டும். முத்தமிடமுடியவில்லையெனில் அதைக் கையால் தொட்டு அந்தக் கை யை முத்தமிட்டுக்கொள்ள வேண்டும். ஹஜருல் அஸ்வதைத் தொட முடியவில்லையானால் அதை முன்னோக்கி, அல்லாஹ{ அக்பர் எனக் கூறி தனது கையால் அதன் பால் சுட்டிக் காட்டிக்கொள்ள வேண்டும். தனது கையை முத்தமிடக் கூடாது. பின்னர் கஃபத்துல்லா வை தனது இடப்புறமாக்கி, தவாஃபைத் தொடங்க வேண்டும். தான் விரும்பிய துஆக்க ளைக் கேட்டுக் கொள்ளலாம் அல்லது தனக்குத் தெரிந்த குர்ஆன் வசனங்களை ஓதிக் கொள்ளலாம். தனது மொழியில் தனக்கும், தான் விரும்பியவருக்கும் துஆ செய்து கொள் ளலாம். இங்கு துஆ செய்வதற்கென குறிப்பான துஆக்கள் ஏதுமில்லை.2- ருக்னுல் யமானியை அடைந்துவிட்டால், முடிந்தால் அதைத் தொட்டு பிஸ்மில்லாஹி அல்லாஹ{ அக்பர் எனக் கூறிக் கொள்ள வேண்டும். தனது கையை முத்தமிடக்கூடாது. முடியாவிட்டால் தொடர்ந்து நடந்து கொண்டிருக்க வேண்டும். அதன் பக்கம் தனது கை யால் சுட்டிக் காட்டடுவதும், தக்பீர் சொல்வதும் கூடாது. ருக்னுல் யமானிக்கும் ஹஜருல் அஸ்வதிற்குமிடையில் رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الأخِرَةِ حَسَنَةً وَّقِنَا عَذَابَ النَّارِ ''ரப்பனா ஆதினா ஃபித்துன்யா ஹஸனதன் வஃபில் ஆகிரதி ஹஸனதன் வகினா அதா பன்நார்"" எனக் கூறிக் கொள்ள வேண்டும்.3- ஹஜருல் அஸ்வதை அடைந்துவிட்டால் வலக் கையால் தொட வேண்டும். முடியவில் லையானால் அல்லாஹ{ அக்பர் எனக் கூறி தனது கையால் சுட்டிக் காட்டிக் கொள்ள வேண்டும். இப்படிச் செய்வது கொண்டு தவாஃபின் ஏழு சுற்றுகளில் ஒரு சுற்று முடிவடைந் து விடுகிறது, மீதமுள்ள சுற்றுக்களையும் இவ்வாறே பூர்த்தி செய்யவும். 4- வலம் வருவதைத் தொடர்ந்து செய்யவேண்டும். ஏழு சுற்றுக்களைப் பூர்த்தியாக்கும் வரை முதல் சுற்றில் செய்தது போலவே செய்து கொள்ள வேண்டும். ஹஜருல் அஸ்வதை க் கடந்து செல்லும் போதெல்லாம் தக்பீர் சொல்லிக் கொள்ள வேண்டும். இது போன்றே ஏழாவது சுற்றுக்குப் பின்னரும் தக்பீர் சொல்லிக் கொள்ள வேண்டும்.முதல் மூன்று சுற்றுக்களில் தொங்கோட்டம் ஓடுவது சுன்னத்தாகும். மீதமுள்ள நான்கு சுற்றுக்களில் நடந்தே செல்ல வேண்டும். தொங்கோட்டம் என்பது கால்களை (எட்டிவைக்காமல்) சுருக்கி வைத்து சற்று வேகமாக நடப்பதாகும். மேலும் இந்த தவாஃபில் மே லாடையின் நடுப்பகுதியை வலது அக்குளுக்குக் கீழ் வழியாகக் கொண்டு வந்து ஆடையி ன் இரு ஓரங்களையும் இடது தோள் புஜத்தின் மீது போட்டு மூடிக் கொள்ள வேண்டும். வலது தோள் புஜம் மட்டும் திறந்திருக்க வேண்டும். இதுவும் சுன்னத்தாகும்.தொங்கோட்டமும் மேலாடையை இவ்வாறு போட்டுக்கொள்வதும் உம்ரா செய்யக் கூடி யவர், ஹஜ் செய்யக் கூடியவர் மக்காவுக்கு வரும்போது செய்யக் கூடிய முதல் தவாஃபில் மட்டும்தான். மேலும் இவ்விரண்டும் ஆண்களுக்கு மட்டும்தான். தவாஃபுக்குப் பின்னர் மகாம் இப்றாஹீமுக்குப் பின்னால் இரண்டு ரக்அத்துக்கள் தொ ழுவது சுன்னத்தாகும். அப்படித் தொழும்போது மகாம் அவனுக்கும் கஃபத்துல்லாவுக்குமி டையே இருக்க வேண்டும். முதல் ரக்அத்தில் ஃபாத்திஹாவும் குல்யா அய்யுஹல் காஃபிரூ னும் இரண்டாவது ரக்அத்தில் ஃபாத்திஹாவும் குல்ஹவல்லாஹ{அஹதும் ஓதிக் கொள்ள வேண்டும். கடுமையான நெருக்கடியினால் மகாம் இப்றாஹீமுக்குப் பின்னால் தொழ முடிய வில்லையானால் பள்ளியின் எந்த இடத்தில் வேண்டுமானாலும் தொழுது கொள்ளலாம். ஸம் ஸம் தண்ணீரை வயிறு புடைக்க அதாவது அதிகமாகக் குடிப்பது சுன்னத்தாகும். சயீ செய்வதுபின்னர் சயீ செய்யுமிடத்திற்குச் சென்று, ஸஃபாவின் பக்க மாகச் செல்ல வேண்டும். அதன் பக்கம் நெருங்கிவிட்டால் إن الصفا والمروة من شعائر الله''இன்னஸ் ஸஃபா வல்மர்வத்த மின் ஷஆயிரில்லாஹ்"" என்ற வசனத்தை ஓத வேண்டும். கஃபாவைக் காணுமளவிற்கு ஸஃபாவில் ஏறவேண்டும். பின்னர் கஃபாவை முன் னோக்கி தனது இரு கைகளையும் உயர்த்தி, அல்லாஹ்வைப் புகழ்ந்து தான் விரும்பிய துஆவைக் கேட்டுக் கொள்ள வேண்டும். உதாரணமாக لا إله إلا الله والله أكبر؛ لا إله إلا الله وحده لا شريك له ؛ له الملك وله الحمد يحيي ويميت وهو علي كل شىء قدير؛ لا إله إلا الله وحده أنجز وعده ونصر عبده وهزم الأحزاب وحده. லாஇலாஹ இல்லல்லாஹ{ வல்லாஹ{ அக்பர் லாஇலாஹ இல்லல்லாஹ{ வஹ்தஹ{ லாஷரீக்கலஹ{ லஹ{ல் முல்க்கு வலஹ{ல் ஹம்து யுஹ்யீ வயுமீத்து வஹ{வ அலாகுல்லி ஷையின் கதீர், லாஇலாஹ இல்லல்லாஹ{ வஹ்தா அன்ஜஸ வஃதா வநஸர அப்தா வஹ ஸமல் அஹ்ஸாப வஹ்தஹாஎன மூன்று முறை கூறிக் கொண்டு நீண்ட நேரம் துஆச் செய்ய வேண்டும். பின்னர் அதிலிருந்து இறங்கி மர்வாவின் பக்கம் செல்ல வேண்டும். பச்சைத் தூணை அடைந்தால் அடுத்த பச்சைத் தூணை அடையும் வரை முடிந்த அளவு விரைந்து செல்வது சுன்னத் தாகும். இப்படிச் செய்யும் போது யாருக்கும் தொந்தரவு கொடுக்கக் கூடாது என்பது நிப ந்தனையாகும். (விரைந்து செல்வது ஆண்களுக்கு மட்டுமே பெண்களுக்கல்ல) மர்வாவை அடைந்து விட்டால் அதில் ஏறி கிப்லாவை முன்னோக்கி, கைகளை உயர்த் தி, ஸஃபாவில் கூறியது போலக் கூறிக்கொள்ள வேண்டும். இப்படி ஒருவர் செய்து விட்டா ல் அவர் சயீக்குரிய ஏழு தடவைகளில் ஒன்றை முடித்து விட்டார். துஆவிற்குப் பின்னர் மர் வாவிலிருந்து ஸஃபாவை நோக்கிச் செல்ல வேண்டும். முந்திய தடவை செய்தது போலவே செய்து கொள்ள வேண்டும். இவ்வாறு ஏழு தடவை செய்து கொள்ள வேண்டும். ஸயீயின் இடையில் துஆவை அதிகப்படுத்திக் கொள்வது சுன்னத்தாகும்.ஸயீ செய்த பிறகு தலை முடியை முழுவதும் மழித்துக் கொள்ள வேண்டும். அல்லது முழுவதும் குறைத்துக் கொள்ள வேண்டும். என்றாலும் மழிப்பதே சிறந்தது. ஆனால் பெ ண்கள் தம் அனைத்து முடிகளிலிருந்தும் விரல் நுனி அளவிற்கு(சுமார் 3 செ.மீ.)வெட்டிக் கொள்ள வேண்டும். இதன் பிறகு உம்ராவிலிருந்து விடுபடவேண்டும். இதுவே உம்ரா செய் யும் முறை. உம்ராவின் கடமைகள்1- இஹ்ராம் 2- தவாஃப் 3- ஸயீஇவற்றில் ஏதேனும் ஒன்றை ஒருவர் விட்டுவிட்டால் அதை நிறைவு செய்யாதது வரை அவரது உம்ரா பூர்த்தியாகாது. உம்ராவின் வாஜிபுகள்(முக்கியமானவைகள்)1- எல்லையில் இஹ்ராம் செய்தல் 2- தலை முடியை மழித்தல் அல்லது குறைத்தல்.இவற்றில் ஏதேனும் ஒன்றை ஒருவர் விட்டுவிட்டால் அவர் குர்பானி கொடுக்க வேண்டும்.

ஏந்தல் நபிகளாரின் எளிய வாழ்க்கைhttp://www.iniyaislam.com

ஏந்தல் நபிகளாரின் எளிய வாழ்க்கை

அல்லாஹ்வுடைய ரஸ_லிடத்தில் நிச்சயமாக அழகிய முன்மாதிரி இருக்கிறது (அல்குர்ஆன் 33:21) என்று அருளாளன் அல்லாஹ் அருள்மறை வழியாக, பெருமானார் ஸல்லல்லாஹ{ அலைஹி வஸல்லம் அவர்களின் வாழ்க்கையின் ஒவ்வொரு அங்கமும் முழு மனித சமுதாயமும் பின்பற்றி ஒழுக வேண்டிய ஒப்பற்ற முன்மாதிரி என்பதை பறைசாற்றுகிறான். இம்மறை வசனத்தை பின்பற்றி அந்த ரஸ_ல் காட்டிய பாட்டையில் நம் பாதங்களை பதிப்போமானால் இன்று உலகத்தில் காணப்படும் இன்னல்கள் அனைத்தும் சுவடே இல்லாமல் மறைந்து போகும் என்பதில் சிறிதும் சந்தேகமில்லை. இஸ்லாமிய சாம்ராஜியத்தின் உன்னத தலைமை பதவியை அடைந்திருந்தும் பெருமானார் ஸல்லல்லாஹ{ அலைஹி வஸல்லம் அவர்கள் தங்களை தங்களின் தோழர்களை விட பெருமையாகக் கருதியதே இல்லை. நானும் இறைவனின் ஓர் அடிமையே ஆவேன். எனவே ஓர் அடிமை போன்றே உண்ணுகிறேன், அடிமை போன்றே உட்காருகிறேன் என அடிக்கடி கூறுவார்கள். மக்காவில் இருக்கும்போது எவ்வாறு ஆடம்பரமற்ற எளிய வாழ்க்கையை நடத்தினார்களோ அதேபோன்று சகல வசதிகளும் வாய்க்கப்பெற்று மதீனாவின் அரசராய் மிளிர்ந்த போதும் எவ்வித டாம்பீகமுமில்லாத சாதாரண வாழ்க்கை முறையையே கைக்கொண்டார்கள்.
ஒருமுறை அண்ணலார் கடைவீதி சென்று துணி வாங்கி வந்தார்கள். அச்சிறு துணி மூட்டையைத் தம்மிடம் கொடுக்கும்படி அபூஹ{றைறா ரழியல்லாஹ{ அன்ஹ{ அவர்கள் கேட்டார்கள். இந்த வேலையை இதற்குரியவர்தான் செய்ய வேண்டும். நீர் என்னைவிட தாழ்ந்தவர் என நான் கருத முடியவில்லையே என்று கூறி அம்மூட்டையைத் தாங்களே வீட்டிற்கு எடுத்துச் சென்றார்கள். ஒரு சமயம் பிரயாணத்தில் இருக்கும்போது வழியில் சமயல் செய்ய நேர்ந்தது. நபித்தோழர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு வேலையை ஏற்றுக் கொண்டார்கள். பெருமானார் அவர்கள் விறகு சேகரிக்கும் பொறுப்பை ஒப்புக் கொண்டார்கள். தோழர்கள் அவ்வேலையை தாங்களே செய்வதாகக் கூறியும் நபி ஸல்லல்லாஹ{ அலைஹி வஸல்லம் அவர்கள் அதனை ஒத்துக் கொள்ள வில்லை. தன்னுடனிருக்கும் சக பயணிகளைவிட தன்னை உயர்வாக நினைத்துக் கொள்ளும் அடியான் மீது அல்லாஹ் அன்பு கொள்ள மாட்டான் என பகர்ந்தார்கள் மாநபி ஸல்லல்லாஹ{ அலைஹி வஸல்லம் அவர்கள். இவ்வாறு கூறிய பின்னர் அவர்களே சென்று விறகு சேகரித்தும் வந்தார்கள். பெருமானார் ஸல்லல்லாஹ{ அலைஹி வஸல்லம் அவர்கள் தங்களின் சொந்த வேலைகளை மட்டும் செய்தார்கள் என்றில்லை. பிறருக்கும் வேலை செய்து உதவுவார்கள். யாராவது ஒரு வேலை செய்து தருமாறு கேட்டால் மறுக்காமல் அதனை மகிழ்வோடு செய்து கொடுப்பார்கள். இயலாதவர்கள், விதவைகள் போன்றோரின் தேவைகளையும் பூர்த்தி செய்வார்கள்.
நபிகளார் பச்சை மண் செங்கலினால் கட்டப்பட்ட சிறிய அறைகளிலேயே குடியிருந்தார்கள். அவற்றின் கூரைகள் பேரீச்ச ஓலைகளினால் வேயப்பட்டிருந்தன. உணவை உட்கொள்ளுமுன் அல்லாஹ்வின் திருநாமத்தை உச்சரிப்பார்கள். உண்டு முடிந்ததும் அவனுக்கு நன்றி செலுத்தும் வகையில் அல்ஹம்துலில்லாஹ் என்று கூறுவார்கள். வயிறு நிறைந்திருப்பதை விட பட்டினியால் பசித்திருப்பதையே அண்ணலார் விரும்புவார்கள். வேளை தவறாது மூன்று நாட்கள் அவர்கள் தொடர்ந்து சாப்பிடதில்லை. ஒரேநாளில் கூட இரண்டு வேளை சேர்ந்தாற் போல் அவர்கள் உணவருந்தியதில்லை.
கண்மணி நாயகம் ஸல்லல்லாஹ{ அலைஹி வஸல்லம் அவர்கள் அணிந்த ஆடைகளோ மிக சாதாரணமானவை. முரடான துணிகளையே அவர்கள் அணிவார்கள். அந்த உடைகளிலும் பல ஒட்டுக்கள் இருக்கும். அண்ணலாரின் படுக்கையும் எளிய முறையிலேயே இருந்தது. ஒருநாள் அருமைத் தோழர்கள் நாயகத்தின் திருமேனியில் படுக்கைப் பாயின் அடையாளம் பதிந்திருப்பதை கண்டு மனம் வருந்தியபோது, தோழர்களே! நான் ஒரு பிரயாணி, வழியில் ஒரு மரத்தடியில் கொஞ்சம் ஓய்வு எடுப்பதற்கு ஒப்பாகும் இவ்வுலக வாழ்வு என பதிலுறுத்தார்கள்.
மற்றொரு முறை மாநபித்தோழர் உமர் இப்னுல் கத்தாப் ரழியல்லாஹ{ அன்ஹ{ அவர்கள் நபிகளாரின் வீட்டில் ஒரு கட்டிலும், ஒரு சாதாரண தலையணையும், கோதுமை நிறைந்த ஒரு மண் பாத்திரமும், தோல் கூஜாக்களும் மட்டுமே இருப்பதைப் பார்த்து துயருற்றவர்களாய் அண்ணல் எங்கள் ஆருயிரே! நாயகமே! தாங்கள் கிஸ்ரா, கைஸர் மன்னர்களைப் போன்று வசதியாக வாழக்கூடாதா? என்று கேட்டார்கள். அதற்கு ஏந்தலார், கத்தாபுடைய மகனே! அவர்கள் உலகத்தைப் பெறவும் நான் மறுமையைப் பெறவும் உமக்கு விருப்பமில்லையா? என வினவினார்கள். அன்பின் சகோதரர்களே! சிந்தித்துப் பாருங்கள். மாநபி வாழ்வு என்ற உறைகல்லில் நம் இன்றைய வாழ்கையை உறசிப் பாருங்கள். கொஞ்சம் வசதியும் செல்வமும் நமக்கு வந்து விட்டால் எப்படியெல்லாம் வாழ வேண்டுமென நினைக்கிறோம். iகிக்கு ஒரு ஆள் காலுக்கு ஒரு ஆள் என நம்மைச் சுற்றி எப்போதும் ஆட்கள் இருக்க வேண்டும். நாம் நினைத்த காரியத்தை நினைத்த நேரத்திலேயே முடித்து விடவேண்டும். அடுத்தவர் எப்படிப் போனால் என்ன, நாம் வானாளாவ வீடு பங்களாக்கள் கட்டி ஒய்யாரமாக வாழ வேண்டும் என்றுதானே நினைக்கிறோம். திருமணம் போன்ற நிகழ்ச்சிகளில்தான் எத்தனை ஆடம்பரம்! வீண் விரயம்! நமக்கு இச்செல்வங்களையும் வசதி வாய்ப்புகளையும் வழங்கிய அல்லாஹ்வை மறந்து விடுகிறோம். நம்மை செல்வந்தனாக ஆக்கிய இறைவனுக்கு நம்மை ஏழையாக மாற்றிட எவ்வளவு நேரம் வேண்டும்? நிச்சயமாக உங்களுடைய பொருட்களும், உங்களுடைய மக்களும் உங்களுக்குச் சோதனையாகும் (அல்குர்ஆன் 64:15) என்ற இறைமறையின் வசனத்தை சிந்தனையில் இருத்த வேண்டும். அல்லாஹ் நமக்கு பொருட் செல்வத்தையும் மக்கள் செல்வத்தையும் வாரி வழங்கியிருப்பதெல்லாம் நம்மை சோதிக்கத்தான். இச்செல்வங்களினால் செருக்கேறி உலகத்தையே சதமென உவக்கிறானா அல்லது அதனை கொடுத்த இறைவனுக்கு நன்றி செலுத்தி அவன் ஏவியோருக்கு அதிலிருந்து அள்ளித் தந்து நாயனின் நல்லருளை நாடுகிறானா என்பதை சோதிப்பதற்காகத்தான் இவைகளை அவன் வழங்குகிறான். அப்படியானால் செல்வ வளத்தோடு வாழ்வது கூடாதா? என்று நீங்கள் கேட்டால், மாநபித்தோழர்கள் கலீஃபா உஃத்மான் ரழியல்லாஹ{ அன்ஹ{, அப்துர்ரஹ்மான் இப்னு அவ்ஃப் ரழியல்லாஹ{ அன்ஹ{ போன்ற பெருமக்களின் வாழ்வு நமக்கு பாடமாக அமையும். இத்தோழர்கள் அப்போதே மிகப்பெரும் செல்வந்தர்களாக வாழ்ந்திருக்கிறார்கள். ஆனால் இச்செல்வங்கள் அல்லாஹ்வால் நமக்கு வழங்கப்பட்ட சோதனைகள் என்பதை உணர்ந்தவர்கள். எனவே செல்வம் அவர்களை ஒன்றும் செய்திட முடியவில்லை. மாறாக அவர்களின் ஈமான்தான் அச்செல்வத்தை ஆட்சி செய்தது. அதனால் அல்லாஹ் மேலும் மேலும் அவர்களின் செல்வத்தை அதிகப்படுத்தினான் என்பது வரலாறு. எனவே அல்லாஹ் நமக்கு அள்ளித் தந்துள்ள அருட்கொடைகளுக்காக அவனுக்கு நன்றி செலுத்துவோம். அவன் ஆகுமாக்கியுள்ள வழியில் ஆடம்பரமின்றி சிறப்பாக வாழ்வோம்.
நம் உற்றார் சுற்றாருக்கும், ஏழை எளியோருக்கும், இஸ்லாமிய அரப்பணிகளுக்கும் அள்ளி வழங்குவோம். அவன் வழங்கிய ஒவ்வொரு காசுக்கும் மறுமையில் பதில் சொல்லியாக வேண்டும் என்பதை நினைவில் கொள்வோம். இஸ்லாமிய தூண்களில் ஒன்றான ஜகாத்தை முறைப்படி செலுத்தி விடுவோம் என இன்றே உறுதி ஏற்போம். (இன்ஷா அல்லாஹ்)-

அகிலத்தின் அருட்கொடை அண்ணல் நபி (ஸல்)

அகிலத்தின் அருட்கொடை அண்ணல் நபி (ஸல்)
நபி ஸல் அவர்கள் கி.பி.571ல் மக்கா நகரில் அப்துல்லாஹ், மீனா என்ற தம்பதிக்கு பிறந்தார்கள். இயற்பெயர் முஹம்மத். பிறப்பதற்கு முன் தந்தையையும், பிறந்த று வருடங்களில் தாயையும் இழந்து அனாதையாக பாட்டனார் அப்துல் முத்தலீப் மற்றும் பெரிய தந்தை அபூதாலிப் அவர்களின் பொறுப்பில் வளர்ந்தார்கள்.
மேலும் தமது இருபத்தி ஐந்தாவது வயதில் அன்னை கதீஜா (ரலி) என்ற விதவையை விவாகம் புரிந்தார்கள். கதீஜா (ரலி) மூலமாக நான்கு பெண் குழந்தைகளும் மூன்று ண் குழந்தைகளும் பிறந்தன. சிறு பிராயத்திலேயே மூன்று ண் குழந்தைகளும் இறந்து விட்டன. மேலும் வாலிப பருவத்திலேயே மக்களிடம் நம்பிக்கைக்குரியவர், நாணயமானவர், உண்மையாளர் என்ற நன்மதிப்பை பெற்றிருந்தார்கள்.
மேலும் சிரியா போன்ற நாடுகளுக்குச் சென்று வணிகம் செய்தார்கள். அதன் மூலம் ஏழை எளியோர், இயற்கை சீற்றத்தால் பாதிக்கப்பட்டோருக்கு உதவி செய்தார்கள். வீட்டிற்கு வரும் விருந்தினர்களை மனம் நோகாமல் வரவேற்று உபசரிப்பார்கள். அவர்களின் முப்பத்தைந்தாவது வயதில் புனித க•பா பள்ளிவாசலை சீரமைப்பதில் பங்கு கொண்டார்கள். மக்காவில் பிறந்து வளர்ந்த்தாலும் அந்த மண்ணின் மூடப்பழக்கங்கள் அவர்கள் மீது படியவில்லை. மக்களின் தீய நிலையைக் கண்டு அடிக்கடி வருந்துவார்கள். மக்கள் நல்வழியில் வாழவேண்டும் என்று விரும்புவார்கள். அதற்காக மக்கா அருகிலுள்ள ஒரு மலையிலுள்ள ஹிரா என்னும் குகையில் பல நாட்கள் தங்கி தனிமையில் சிந்திக்கலானார்கள். மக்களை சத்தியப் பாதையில் செல்லுமாறு அழைக்கும் பணி இவர்களது நாற்பதாவது வயதில் தொடங்கியது. அதாவது கி.பி.610ல் வல்ல இறைவன் அவர்களைத் தனது நபியாக - தூதராக நியமித்தான்.
அவர்களுக்குத் தனது வழிகாட்டுதலாகிய திருகுர்னையும் அருளினான். மக்காவில் அழைப்புப் பணி மேற்கொண்ட பதிமூன்று வருடங்களில் ரம்ப மூன்று வருடங்கள் நெருங்கிய உறவினர்கள் நண்பர்களுக்கு இஸ்லாத்தை எடுத்துரைத்தார்கள். அவர்களின் ரம்பகால அழைப்புப் பணியின் மூலமாக அபூபக்கர் (ரலி), பிலால் (ரலி), ஜைது பின் ஹாரிஸா (ரலி) போன்ற தோழர்கள் கிடைக்கலாயினர். பிறகு பிரச்சார பணியை பகிரங்கப்படுத்தினார்கள்.
அவர்களுக்கும் அவர்களின் தோழர்களுக்கும் எதிராக கட்டவிழ்த்துவிடப்பட்ட கொடுமைகளையும், துன்பங்களையும் சகித்தார்கள். இன்னல்கள் அதிகரித்து அவர்களை கொலை செய்யவும் மக்காவாசிகள் திட்டம் தீட்டியபோது இறைவனின் ணைப்படி மக்காவிலிருந்து முந்நூறு மைல்களுக்கு வடக்கே உள்ள மதீனா நகருக்கு சென்று அங்கு சுமார் 10ண்டுகள் சத்திய அழைப்புப் பணி செய்தார்கள். மேலும் அங்கு இஸ்லாமிய அரசையும் நிறுவி மக்களிடம் நீதத்தோடு ட்சி புரிந்தார்கள். மனித வாழ்வின் ன்மீக, உலகாயத்துறைகள் அனைத்திலும் வெற்றி கண்டார்கள். மக்கள் அனைவரையும் சிலை வணக்கத்தின்றும் விடுவித்து ஒரே இறைவனை வணங்கும் உன்னத நிலைக்கு உயர்த்தினார்கள். சூது, மது, மாது கியவற்றில் மூழ்கிக் கிடந்த அரேபிய மக்களை அவற்றினின்றும் நீக்கிப் பண்பும், இறையச்சமும் உடையோராய் மாற்றினார்கள். சட்டத்தையும் அரசையும் விரும்பாத அவர்களின் வாழ்வை ஒழுங்கும் கட்டுப்பாடும் உடைய வாழ்க்கையாக மாற்றினார்கள்.
இத்தகைய முழுமையான சமூக மாற்றத்தை உலக வரலாறு அதற்கு முன்பும் கண்டதில்லை! பின்பும் கண்டதில்லை!. அம்மாமனிதருடைய தனிப்பட்ட வாழ்வு, சமூக வாழ்வு, அவர்களுடைய சொல், செயல், அங்கீகாரம் அனைத்தும் மிகவும் நுணுக்கமாக அவர்களுடைய தோழர்களால் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவை அணுவளவும் மாற்றமின்றி இன்றும் நமக்கு கிடைக்கின்றன. வாழ்வில் பல புரட்சிகள் கண்ட அண்ணல் முஹம்மது(ஸல்) அவர்கள் தமது அறுபத்தி மூன்றாவது வயதில் கி.பி.632வது ண்டில் மரணம் அடைந்தார்கள். அவர்கள் காட்டிய வழி இன்று உலகில் நூற்றிஐம்பது கோடிக்கும் அதிகமான மக்களால் பின்பற்றப்படுகிறது என்பதை நினைவில் கொள்ள வேண்டியதாகும்.
இஸ்லாம் பற்றி மேலதிக விபரங்களுக்கு தொடர்பு கொள்ளுங்கள்:

கூட்டங்களை நிர்வகித்தல்

கூட்டங்களை நிர்வகித்தல்
கலாநிதி அலி ஹம்மாதி ( தமிழில் : யூ.கே.றமீஸ்).

1. அல்லாஹ்வை புகழ்ந்து ஆரம்பித்தல்:
“ அல்லாஹ்வை புகழ்ந்து ஆரம்பிக்கப்படாத செயற்பாடுகள் இடையில் அறுந்துவிடும்” (அறிவிப்பாளர்: அபூஹ{ரைரா (ரழி) நூல்: அபூதாவூத்). இதன்படி இறைவனை புகழ்ந்து கூட்டத்தை ஆரம்பிக்க வேண்டும்.

2. வரவேற்பும், வழிகாட்டலும்
அனைவரினதும் சிந்தனைகளை ஒருமுகப்படுத்தி, நடவடிக்கைகளை தெளிவுபடுத்தி, ஒழுங்குகளை முன்வைத்து ஒரு வழிகாட்டல் உரை நிகழ்த்தப்படல் வேண்டும். இதுதான் கூட்டம் சிறப்பாக நடப்பதற்கான தயார் நிலையை பங்கேற்பவர்களிடத்தில் ஏற்படுத்தி விடுகின்றது. அத்தோடு அவர்களது உணர்வுகளையும் தூண்டி விடுகின்றது.

3. கலந்துரையாடலுக்கான ஒழுங்குகள் பொருத்தமான சொற்களை தெரிவு செய்து பேசுதல், அடுத்தவர்களை மோசமாக விமர்சித்து காயப்படுத்தாதிருத்தல், நல்லதையும் சரியானதையுமே பேசுதல் போன்றவற்றை கலந்து கொள்பவர்களுக்கு ஞாபகப்படுத்த வேண்டும். “நபியே எதனை பேசிய போதிலும் நல்லதையே பேசுமாறு எனது அடியார்களுக்கு குறிப்பிடுங்கள்.ஏனெனில் ஷைத்தான் அவர்களுக்கிடையில் குழப்பங்களை ஏற்படுத்தி விடுவான் … ( குர்ஆன் 17:53)
“அல்லாஹ்வையும், மறுமையையும் நம்பியவர் பேசினால் நல்லதையே பேசட்டும். அல்லது மௌனமாக இருக்கட்டும். ( புஹாரி, முஸ்லிம்)
உரையாடல் சூடேறிவிட்டால், தேவையில்லாத வார்த்தைகளை பயன்படுத்த தொடங்கினால் உடனடியாக வரையறைகளை பேணுவதற்காக செயற்படுவது அவசியமாகும். இதன் கருத்து பங்கு பெறுபவர்கள் தங்களது கருத்துக்களை, கண்ணோட்டங்களை தெரிவிக்காது மௌனமாக இருக்க வேண்டும் என்பதல்ல என்பதனையும் தலைவர் தெரிவிக்க வேண்டும்.

4. நேரத்தை பேணலும் அதனை சிறப்பாக பயன்படுத்தலும்
இது கூட்டத்தலைவரின் மிக முக்கிய பணிகளுள் ஒன்றாகும். பங்கு பெறுபவர்களும் இவ்விடயத்தில் ஒத்துழைக்க வேண்டும். மிக குறைந்த நேரத்தில் கூட்டத்தின் இலக்குகள் நிறைவேறினால்தான் அது வெற்றி பெறும். ஏனெனில் நேரம்தான் வாழ்க்கையாகும்.
இறைவா! எங்கள் நேரங்கள் மீது பரகத் செய்வாயாக என உமர்(ரழி) அவர்கள் பிரார்த்திப்பவராக இருந்தார்கள். மேலும் நேரத்தை வீணடிப்பது அழிவை ஏற்படுத்தும் என்றும் கூறினார்கள். காலத்தின் மீது சத்தியம் செய்வதன் மூலம் அல்லாஹ் நமக்கு நேரத்தின் முக்கியத்துவத்தை உணர்த்துகிறான். காலம் பொன்னை விட மேலானது. தேவையற்ற விடயங்களை கூட்டத்தில் பேசக் கூடாது.
குறித்த நேரத்தில் கூட்டத்தை ஆரம்பிக்க வேண்டும். ஏனெனில் இதுவே கூட்டத்தின் நேரத்தை பேண உதவுவதுடன் தாமதித்து வருவோருக்குப் படிப்பினையாகவும் அமையும். மேலும் சரியான நேரத்தில் கூட்டத்தை ஆரம்பிக்காமல் இருப்பதன் மூலம் குறித்த நேரத்தில் வந்தவர்களை தண்டிக்கவோ, தவறான முன்மாதிரிக்கு காரணமாக அமையவோ கூடாது.

5. தலைப்பில் கவனமாக இருத்தல்
தலைப்பை விட்டு வேறு விடயங்களை பேசும் தவறு பல இடங்களில் நடைபெறுவதனை பார்க்க முடியும்.இது கூட்டத்தில் குழப்பத்தை ஏற்படுத்தும். தலைப்புக்கு அப்பாற்பட்ட விடயங்கள் பேசுவதை தலைவர் தடுக்க வேண்டும்.

6.நிகழ்ச்சி நிரலை பேணிக்கொள்ளல்
நிகழ்ச்சி நிரலில் புதிதாக எதனையும் இணைத்துக் கொள்ளக் கூடாது. ஏதேனும் ஒரு விடயம் கட்டாயம் கலந்துரையாடப்பட வேண்டும் என பங்கேற்பாளர்கள் வற்புறுத்தி விடயமும் முக்கியமானதாக இருப்பின், அவ்விடயத்தை கலந்துரையாடுவதே பொருத்தமானதாகும்.

6. கலந்துரையாடலில் முடிவு
இதுவும் பலர் செய்கின்ற ஒரு தவறாகும். கலந்துரையாடிவிட்டு முடிவொன்றை எடுக்காது அடுத்த விடயத்தை பேச முனைகின்றனர். இதன் மூலம் சக்தியையும், நேரத்தையும் வீணடிக்கின்றனர். இது அங்கத்தவர்களுக்கு நம்பிக்கையின்மையும், விரக்தியையும் ஏற்படுத்தும்.

7.ஒழுங்குகளை பேணிக் கொள்ளல்
ஒரு நேரத்தில் ஒருவரே பேச வேண்டும். ஒருவர் பேசும்போது அடுத்தவர்கள் இடையூறு செய்யக் கூடாது. அவற்றை தடுக்க வேண்டும். அதேபோல் சிலர் தங்களுக்குள் பேசிக் கொண்டிருப்பார்கள். அதனையும் அனுமதிக்க கூடாது. அனைவரும் கருத்து தெரிவிக்கும் சூழ்நிலையை ஏற்படுத்திக் கொடுப்பது தலைவரின் பொறுப்பாகும்.தலைவரின் கருத்துக்களில் தவறுகள் காணப்படின் அதனை வாபஸ் வாங்க தயங்கக் கூடாது. ஏனெனில் ஒரு கருத்தில் பிடிவாதமாக இருப்பது ஆரோக்கியமான ஒன்றல்ல.

8. செவிமடுக்கும் ஆற்றல்
கூட்டத்தின் தலைமையும்,அங்கத்தவர்களும் செவிமடுக்கும் ஆற்றலை பெற்றிருப்பது அவசியமாகும். ஒருவர் பேசும்போது வேறு குறிப்புகளை வாசித்துக் கொண்டிருப்பதும், பேசிக் கொண்டிருப்பதும், இடையூறு விளைவிப்பதும் உரையாடுபவரின் ஆர்வத்தை குறைத்து விடுகின்றன.

சிறுபான்மை உதவி அறக்கட்டளை, கோவை

சிறுபான்மை உதவி அறக்கட்டளை, கோவை

வெஞ்சிறையில் அல்லல்படும் சகோதரர்கள் மற்றும் அவர்தம் குடும்பத்தினர் துயர் துடைக்க நிதி உதவி கோரி விண்ணப்பம்
மேலும், அவ(இறைவ)ன் மீதுள்ள பிரியத்தினால் ஏழைகளுக்கும், அனாதைகளுக்கும், சிறைப்பட்டோருக்கும் உணவளிப்பார்கள். ( குர்ஆன் 76:8)
பேரன்பு மிக்க இஸ்லாமிய சகோதரர் சகோதரிகளுக்கு கோலையிலிருந்து சிறுபான்மை உதவி அறக்கட்டளை சார்பாக வரையும் விளக்க மடல்.அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)வல்லோன் அல்லாஹ்வின் பேரருள் பிரதேசம் எங்கும் நிலவட்டுமாக.! அவனுடைய சாந்தியும் சமாதானமும் அண்ணலார் பெருமானார் (ஸல்) அவர்கள் மீதும் அண்ணாரது உற்றார் உறவினர்கள் மீதும் சத்திய ஸஹாபாக்களின் மீதும் தீனை இம்மண்ணில் நிலைநாட்டிட வேண்டுனெ;று அயராது பாடுபடும் எல்லா நல்ல உள்ளங்களின் மீதும் நின்று நிலவட்டுமாக..! எட்டு ஆண்டுகளாக சிறைபட்டு முடங்கி கிடக்கும் நம் சகோதரர்களை மீட்டுவதற்குரிய பொருளாதாரத்தை இப்புனிதமிகு ரமளான் மாதத்தில் தாங்களின் துஅவையும் தான தர்மங்களையும் தந்திட வேண்டுமென்பதைக் கோரும் விளக்கமடல்
நிகழ்ந்தவை
தமிழக சூழ்நிலைகளைப் பற்றி தாங்கள் அனைவரும் நன்றாக அறிந்ததே. இஸ்லாத்தையும் முஸ்லீம்களையும் வேரடி மண்ணோடு மண்ணாக ஆக்கிட வேண்டுமென அதிதீவிரமாக செயல்பட்டு வரும் சங்பரிவார் கும்பல்களின் அடாவடித்தனங்களும் அக்கிரமங்களும் எல்லை மீறி சென்றுவிட்டன. இக்கும்பல்களின் தலையாய அக்கிரமமாக இறை இல்லாமான பாபரி மஸ்ஜித் தரைமட்டமாக்கப்பட்டது. இக்கொடூர சம்பவம் இந்திய முஸ்லிம்களின் மனதை பெருமளவில் பாதிப்படையச் செய்தது. அதிலும் குறிப்பாக தமிழக முஸ்லிம்களின் மனதை அதிகமாகப் பாதிப்படையச் செய்தது மட்டுமின்றி வெகுண்டு எழச் செய்தது. காரணம் ஏனெனில் தொடர்ந்து சங்பரிவார் கும்பல்களின் தாக்குதலாக இஸ்லாமிய ஊழியர் ஜின்னா சாஹிப் அவர்களின் படுகொலையும் அல்ஹாஜ் பழனிபாபா அவர்களின் படுகொலையும் அங்கிங்கென அவ்வப்போது அப்பாவி முஸ்லிம்களின் மீது நிகழும் தாக்குதல்களும் சிறுசிறு கலவரங்களும் இதற்குரிய பரிகார நடவடிக்கை கிடைக்காதது மட்டுமின்றி தமிழக அரசின் பாரபட்ச போக்கினை கண்;ட நம் இளைஞர்கள் ஓர் அணியாக திரள்வதை தவிர்க்க இயலாhததாகி விட்டது. 1997 நவம்பர் மாத் 29ம் தேதி சங்பரிவார் கும்பல்களும் தமிழக காவல் துறையில் பவரும் இணைந்து கோலை முஸ்லிம்களுக்கு எதிராக நடத்திட்ட கோரத்;;;தாண்டவம் முஸ்லிம்களை நிலைகுலையச் செய்தது. இக்கயவர்கள் மூட்டிய அநீதி நெருப்பில் முஸ்லிம்களின் 1000 கோடி சொத்துக்கள் கருகின, 18 முஸ்லிம் இளைஞர்களை காக்கா குருவி போன்று சுட்டுப் பொசுக்கித் தள்ளியது தமிழக காவல் துறை. பயங்கரவாத திமிர்பிடித்த இஸ்ரேல் ராணுவம் கூட முன்னெச்செரிக்கை நடவடிக்கையாக ரப்பர் குண்டுகளை பயன்படுத்துகின்றது. ஆனால் சொந்த நாட்டில் எம் சொந்த மண்ணில் எதிரிகளைச் சுட்டுக் கொல்வது போல் சுட்டுப் பொசுக்கியதைக் கண்டு பாதிப்படைந்த முஸ்லிம் இளைஞர்கள் செய்வதறியாது திகைத்து நின்றனர். அடிபட்பவர்களை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் போது குற்றுயிரும் கொலை உயிருமாக கிடந்த நம் சகோதரர்களின் மர்ம உறுப்புகள் வெட்டி எறியப்பட்ட ஈனத்தனமான செயல்களையும், அராஜகத்தால் அடிபட்டவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றவர்கள் குற்றுயிரும் கொலை உயிருமாய் திரும்பியதையும், மருத்துவமனையில் சிக்கிய சடலங்களைக் கூட விட்டு வைக்காமல் மர்ம உறுப்பக்களை வெட்டி தீக்கிரையாக்கிய இக்கொடூர செயல்களைக் கண்டு மனித நாகரிகமே வெட்கப்படுமளவிற்கு வார்த்தைகளால் விவரித்திட முடியாத ஈனத்தனமான செயல்கள் நடந்தேரியது.
நடந்து முடிந்த இவ்வக்கிரமான வன்முறையை நியாய உணர்வுள்ள எவராலும் ஜீரணித்துக் கொள்ள இயலாது. அதே சமயம் இவ்வன்முறையை எதிர்கொள்ள இன்னொரு வன்முறை என்பதும் நிச்சயமாக ஏற்றுக் கொள்ள இயலாது. வன்முறை ஒருபோதும் தீர்வாகாது. அதே சமயம் இந்த அக்கிரமத்திற்குரிய எதிர்கொள்ளலையும் தீர்வுகளையும் வழிகாட்டுதல்களையும் உரிய முறையில் விளக்கி வழிகாட்டிட வேண்டியது அறிஞர் பெருமக்கள் மற்றும் இயக்கத்தலைமைகளின் தார்மீக பொருப்பாகும். ஆனால் வெட்டி வேததாந்தம் பேசி வெறும் கண்துடைப்பு அறிக்கை வெளியிட்டு ஜால்சாப் செய்து இளைஞர்களை கோழைகளாக்கும் நிகழ்வுகள் ஒருபுறமும் இன்னொரு புறமோ ரத்தத்தைச் சூடேற்றும் வகையில் தீப்பொறி பறக்கும் அனல் பேச்சுக்களால் இளைஞர்களைத் தூண்டி உணர்ச்சி வசமாக்கிய மடத்தனமான செயல்கள். இங்கணம் நிலவி வந்த தமிழக சூழ்நிலைகளால் நம் இஞைர்களின் ஆற்றல்கள், உழைப்பு என அனைத்தும் விழலுக்கு இரைத்த நீராய் பயனற்றப்போனது. செல்லரித்துப் போன அந்நிலையினை மீளாய்வு செய்து மீட்டிட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம்.
இப்படிப்பட்ட சூழ்நிலையில் தான் 1997 நவம்பர் 29 கலவரத்தின் எதிர்வினையாக இந்தியாவையே உலுக்கிய கோவை குண்டுவெடிப்புச் சம்பவம் நடந்தது. இதை வைத்தவர் யார்..? இதைச் செய்தவர்கள் யார்..? என்பதையெல்லாம் முறையாக விசாரிக்கத்தவறிய தமிழக சிறப்பு புலனாய்வுத் துறை வீட்டில் படுத்துக் கொண்டிருந்தவர்களை, தெருவோரத்தில் தூங்கியவர்களையெல்லாம் கொத்தாகப் பற்றி வாரி வழித்து சகட்டுமேனிக்கு அனைவரையும் சிறையிpல் அடைத்தது. பலரை இப்போது விட்டு வீடுவோம் என விசாரனைக்கு அழைத்துச் சென்றவர்களை ஆண்டுகள் எட்டு கடந்து போன பிறகும்; விட்டபாடில்லை. இங்கணம் அவ்வழக்கில் 166 நபர்கள் உள்ளனர். 8 ஆண்டுகளாக சிறைவாழ்வை கழித்து வரும் இவர்களில் பெரும்பாலோர் இளைஞர்கள். இவர்களது இளமைக்காலம் முழுவதும் சிறையிலேயே கழிந்து விட்டது. வெளி உலகமே என்னவென தெரியாத சிறுவர்களும், இன்றோ நாளையோ என மரணத்தை நெருங்கிக் கொண்டிருக்கும் வயது முதிர்ந்தவர்களும் குறிப்பிடத்தக்கோர் இச்சிறைப்பட்டோரில் உள்ளனர். இந்நீண்ட சிறைவாசத்தில் உரிய சிகிச்சையின்றி சிறையிலே இறந்து போன முதியோர் தஸ்தகீர் போன்றோர் நிலை விடுதலையாவதற்குள் இன்னும் எத்தனை பேருக்கு என்பது நாம் கொள்ளும் மிகப்பெரிய கவலையாகும்.
தலைவன் இல்லாத குடும்பம்.....மகனைப் பிரிந்த பெற்றோர்கள்வயதான காலத்தில் மருத்துவ பராமரிப்பு இல்லாமல் தங்களது எஞ்சிய நாட்களை நகர்த்திக் கொண்டிருக்கும் சிறைப்பட்டவர்களின் வீட்டிலுள்ளவர்களுக்கு திடீரென ஏற்படும் உடல் நலக் குறைவுகளை, மரணம், திருமண வயதை அடைந்தும் மணமாகாகமல் காத்திருக்கும் சிறைப்பட்ட சகோதரர்களின் குடும்பத்துப் பெண்கள், தொடக்கக் கல்வி பாட சாலை பார்த்திடாத இவர்களின் குழந்தைகள், பள்ளிப்படிப்பை பாதியிலே நிறுத்திவிட்டு குடும்ப பாரத்தை சுமந்து வேலைக்கு அனுப்பப்பட்ட சிறுவர்கள், ஹிஜாபை பேணவேண்டிய குடுமம்பப் பெண்கள் வேலைக்குச் செல்ல வேண்டிய நிலை, கவலையினால் நிரந்தர நோயாளியாகிப் போன தாய் தந்தையர்களை இவர்களின் தொடர்சிறை வாசத்தைப் போல இவர்களின் குடும்பங்களின் துன்பங்களும் தொடர்பட்டியலாகவே உள்ளன
ஊவுஆ ஓர் அறிமுகம்இவ்வாறெல்லாம் துன்பங்களும் துயரங்களும் உள்ள இவர்களது வாழ்வுக்கு எந்த நிவாரணமும் உதவியும் செய்ய முன்வராத நிலை, எந்தவொரு அறிஞர்களோ, இயக்கங்களோ முயற்;;சி எடுக்காத நிலை கண்டு வேதiயிலும் வேதனையாக சிறைப்டடோரும் அவர்தம் குடும்பத்தாரும் செய்வதறியாது நிற்கையில் அல்லாஹ்வின் பேருதவியால் நல்ல மனம் படைத்த சிலரின் ஆலோசனையின் பேரில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களே ஒன்றிணைந்து 2001 ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் இவ்வறக்கட்டளை நிறுவப்பட்டன. குடும்பங்களில் நிலவிடும் பிரச்சினைகளை முழுவதும் தீர்க்க முடியாவிட்டாலும் முடிந்த அளவிற்கு பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு சிறுசிறு உதவிகளைச் செய்து வருகிறோம். (இந்த எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு பல அமைப்புகள் குரல் கொடுத்து வருவதும் பல அறிஞர் பெருமக்களின் ஆதரவுக் குரல்களும் ஓரிரு அமைப்புக்களின் சிறுசிறு பொருளாதார உதவியும் எங்களை நெகிழ்ச்சியடையச் செய்துள்ளது)
எம்பணிகளில் சிலசிறைப்பட்டோரின் குடும்பத்தாருக்கு திருமண உதவி, கல்விக்காக என்று 40 குடும்பங்களுக்கும், மருத்துவ செலவுகள் 20 குடும்பங்களுக்கும், சில குடும்பப் பெண்களுக்கு தையல் மெஷின் போன்ற சுய தொழில் முனைவுப் பொருட்கள் வழங்குதல் என உதவிப்பணிகள் செய்யப்பட்டு வருகின்றன. ஹிஜாப் பேணவேண்டிய பெண்கள் வெளியிடங்களில் வேலைக்குச் சென்று வருவதை தடுக்க ஊவுஆ ன் சார்பாக மகளிர் சுய உதவிக்குழு அமைக்கப்பட்டு அவர்களுக்கு வேலையும் கொடுத்து வருகின்றோம். இக்குழவின் சார்பாக குறைந்தது 40 குடும்பங்களுக்கு மாதா மாதம் 500 ரூபாய் குடும்ப நல உதவியாக அனுப்பப்படுகிறது. போதிய முதலீடு உதவிகளும் இல்லாததால் இப்பணி குறைவாகவே நடைவெற்று வருகின்றது. தங்களைப் போன்ற நல் உள்ளங்கள் முன்வந்தால் இப்பணியில் குடும்பங்களின் உதவித்தொகை அதிகமாகவும் கொடுக்கலாம், அன்னிய ஆடவர்கள் மத்தியில் வேலை செய்து பிழைக்கவேண்டிய அவல நிலையினைப் போக்கி சகோதரிகள் ஹிஜாப் முறையை பேணி சம்பாதிக்க உரியவகையில் எம் சமூக மக்களுக்கு உதவலாம்.
கண்ணீர் கருத்தரங்கம், மனித உரிமை கருத்தரங்கம், நீதி கோரும் கருத்தரங்கம் போன்ற கருத்தரங்கங்கள் பல சமுதாய தலைவர்களின் முன்னிலையில் நடத்தியுள்ளோம். தமிழக முஸ்லிம்களிடையே சிறைபட்டோரின் விடுதலைக்காக விழிப்புணர்வு ஏற்படுத்த மேற்கண்ட நிகழ்ச்சிகளும் ஆர்ப்பாட்டங்களும்; நடத்தியுள்ளோம். என் நிகழ்ச்சிகளில் பங்கு பெற்ற சமூக ஆர்வலர்களில் சிலர் மனித உரிமை இயக்கத் தலைவர் கண்ணபிரான், முஸ்லிம் லீக் தலைவர் பேராசிரியர் முஆ காதர்மொய்தீன் ஆPஇ மதிமுக கொள்கைப் பரப்புச் செயலாளர் நாஞ்சில் சம்பத், ஹாமித் பக்ரி, ஆபுமு நிஜாமுதீன் நுஒ ஆடுயு, வுதுஆ சலாவுதீன் ரியாஜி, தேசிய லீக் பஷீர் அஹமது, ஆ மார்கஸ் போன்றோர்.வழக்குகள் பொறுத்தவரையில் கோட்டை அமீர், போலீஸ்காரர் செல்வராஜ் கொலைவழக்குகள் போன்ற சில வழக்குகள் அல்லாஹ்வின் உதவியால் தீர்ப்பாகி விடுதலையும் கிடைத்து விட்டது. இன்னும் எம் முயற்சிகள் தொடர்கின்றன, பல வழக்குகள் உயரிநீதி மன்றத்திலும் உச்ச நீதிமன்றத்திலும் தீர்ப்பின் தருணத்தைக் காத்துக் கொண்டிருக்கின்றது. அது போல கோவை குண்டுவெடிப்பு விசாரனை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இன்னும் சில மாதங்களில வழக்குகள் முடிவடையும் நிலையில் உள்ளன. அரசு நியமித்துக் கொடுத்த போதிய அனுபவமற்ற வழக்கறிஞர்களைக் கொண்டு வழக்கு விசாரனை ஒருவழியாக முடிவடையப் போகின்றன். இன்னும் சில மாதங்களில் இறுதிக்கட்ட விசாரனை நடக்கும். அச்சமயம் திறமையான சீனியர் வழக்கறிஞர்களை நியமிப்பதற்கு உண்டான பொருளாதாரம் கிடைக்கப் பெற்றால் வழக்கின் வெற்றிக்கு வாய்ப்பாக இருக்கும். அல்லாஹ்வின் கிருபையால் இவ்வழக்கிலிருந்து நிறைள சகோதரர்களை மீட்டு விடலாம் எந்ற நம்பிக்கை நிறைய உள்ளன.
எதிர்காலத் திட்டம்ஆனால் இன்னும் நடத்திட வேண்டிய வழக்குகளும் ஏராளம்..!ஏராளம்..! மேலும் வறுமையில் வாடும் குடும்பத்தின் வாட்டத்தைப் போக்குவதும் மிகவும் இன்றியமையாததாக உள்ளன. சட்ட உதவிகள் செய்வதற்குரிய பொருளாதாரதம் இல்லாமையால் நம் சகோதரர்கள் நீண்ட காலம் சிறையில் வாடுகின்றனர் என்பதே நிஜம். முழு முயற்சி செய்து விடுதலையாகவில்லையெனில் அதைப்பற்;றி கவலைப்பட்டுக் கொண்டிருக்க வேண்டியதில்லை. அல்லாஹ்வின் நாட்டமென பொறுமை காப்போம். உரிய பொருளாதாரம் கிடைக்காமையினால் சட்ட ரீதியான உதவிகள் ஏதும் செய்ய இயலாமல் தவிக்கின்றோம். பல வழக்குகளில் குற்றம் சுமத்தப்பட்ட நம் சகோதரர்கள் பொருளாதாரமின்மையால் போதிய அனுபவமற்ற வழக்கிறிஞர்களை நியமித்து விசாரனை மேற்கொண்டதால் இன்று தமிழக சிறையில் 75 க்கும் மேற்பட்ட வெள்ளை உடை தரித்த ஆயள் தண்டனை சிறைவாசிகளாக உலா வருகின்றனர். அல்லாஹ்வின் கிருபையால் உரிய பொருளாதாரம் கிடைக்கப் பெற்றால் முழு வீச்சுடன் முயற்சிகளை மேற்கொள்ளலாம். உச்ச நீதி மன்றம் வரை உடனுக்குடன் செல்ல பொருளாதாரமே தடையாக உள்ளன.கோவை குண்டு வெடிப்பு வழக்கில் தன்டனை பெறும் சகோதரருக்கு மேல்முறையீடு செய்து விசாரிப்பதற்கு கணிசமான பொருளாதாரம் தேவைப்படும். கோவை குண்டு வெடிப்பு அல்லாத வேறு பல வழக்குகளில் தண்டனைப் பெற்ற சகோதரர்களுக்கு மேல் முறையீடு செய்வதற்கே லட்சக்கணக்கில் பொருளாதாரம் தேவைப்படுகின்றது. இவ்வாறு பல வழிகளில் பொருளாதாரத்தின் அவசியம் மிகமிக இன்றியமையாததாக உள்ளன. கோவை குண்டு வெடிப்பு வழக்கிலுள்ள 166 நபர்களில் 40 நபர்களுக்கு தமிழக முஸ்லீம் முன்னேற்றக் கழகமும், 8 நபர்களுக்கு கேரள மதானி சகாய கமிட்டியும், 115 நபர்களுக்கு சிறுபான்மை உதவி அறக்கட்டளையும் பொறுப்பெடுத்து கவனித்து வருகின்றது. ஊரிய பொருளாதாரம் கிடைக்கப் பெற்றால் தமிழகத்தின் ஏனைய சிறைகளில் சிக்குண்டு கிடக்கும் சகோதரர்களுக்கும் உதவிகள் செய்து அவர்களின் வழக்குகளையும் கவனிக்கும் என இவ்வறக்கட்டளை தாங்களின் முன் வாக்களிக்கின்றது. இனி வரும் காலங்களிலும் நம் சமூகத்தின் மீது ஏதாவது கொடுமைகள் இழைக்கப்பட்டாலும், பொய் வழக்குகள் போடப்பட்டாலும் அதனை எதிர்கொள்ள சட்ட ரீதியான அனைத்து உதவிகளையும் செய்யும், இன்ஷா அல்லாஹ்.
வேண்டுகோள்
ஆயிரம் குற்றவாளிகள் தப்பிக்கலாம் , ஆனால் ஒரு நிரபராதி தண்டிக்கப்படக் கூடாது என்பது நீதித்துறையின் தாரக மந்திரம். 8 ஆண்டுகள் நெருங்கியும் யார் குற்றவாளிகள் என நிரூபிக்காமல் வழக்குகளை தாமதப்படுத்துகின்றனர். தாமதப்படும் நீதி மறுக்கப்படும் நீதிக்கு சமமாகும் என உச்ச நீதிமன்றம் பல முறை கண்டனக்குரல் எழுப்பியும் எம் சகோதரர்களுக்கு கிடைக்க வேண்டிய நியாயமான பிணையைக் கூட மறுத்து விடுகின்றனர். சங் பரிவாரைச் சார்ந்த நாடறிந்த குற்றவாளிகள், நாட்டில் உலா வருகின்றனர். சட்டமன்றத்தில் முதல்வர் ஜெயலலிதாவால், குற்றம் செய்துள்ளார் என அறிவிக்கப்பட்டும் கூட சங்கராச்சாரியார் பிணையில் விடப்படுகின்றார். ஆனால் நம் சகோதரர்களுக்கு நீண்ட காலமாக பிணை தராமல் வெஞ்சிறையில் அடைத்து வைக்கப்படும் கொடுமை தமிழகத்தில் நடந்து வருகின்றது. இந்த அநீதிக்கு எதிராக ஒன்று திரள்வது காலத்தின் கட்டாயமாகும். நமக்கென்ன என இருப்பது நல்ல முஸ்லீம்களின் பண்பல்ல.
அண்ணல் பெருமானார் (ஸல்) கூறியிருக்கின்றார்கள்:
அநீதிக்குள்ளாக்கப்படுபவனை பார்த்துக் கொண்டு தடுக்காமல் விட்டுவிடுபவன் அல்லாஹ்வின் சாபத்தை பெற்றுக் கொள்வான். ( தபரானி)
அநீதிகளுக்கு ஆட்படுகின்ற ஒருவனுடன் அவன் அந்த அநீதியிலிருந்து விடுபடும் வரை துணை நிற்பவனின் பாதங்களை சிராத் பாலத்தில் அவன் நடக்கும் போது அல்லாஹ் பலப்படுத்தி வைக்கின்றான் ( அஸ் பஹானி)
இவர்களுக்காக குரல் கொடுப்பது, போராடுவது, பொருளாதார உதவிகள் செய்திட வேண்டியது முஸ்லீம்களாகிய நம் மீது கடமையாகும்.
ஒரு முஸ்லீம் இன்னொரு முஸ்லீமின் சகோதரராவான்;. அவன் அடுத்தவனை அமுக்கவோ, அடுத்தவனுடைய உரிமைகளை பறிக்கவோ மாட்டான். சகோதர முஸ்லிமுடைய தேவையை நிறைவேற்றுபவனுக்கு அல்லாஹ் உதவி செய்வான். சகோதர முஸ்லிமின் ஒரு துன்பத்தை அகற்றுபவனுடைய துன்பங்களில் ஒன்றை அல்லாஹ் மறுமை நாளில் அகற்றுவான். முஸ்லிம் சகோதரனின் குறையை மறைப்பவனின் குறையை அல்லாஹ் மறுமை நாளில் மறைத்து அல்லாஹ் அருள் புரிவான் ( முஸ்லிம்)
மேலும், அவ(இறைவ)ன் மீதுள்ள பிரியத்தினால் ஏழைகளுக்கும், அனாதைகளுக்கும், சிறைப்பட்டோருக்கும் உணவளிப்பார்கள். ( குர்ஆன் 76:8)
முஸ்லிம்களிடம் காணப்பட வேண்டிய பரஸ்பர அன்பு, இரக்கம், தாராளத்தன்மை ஆகியவை ஒரு உடலுக்கு உப்பாகும். இந்த உடலில் ஒரு சில பகுதிகளுக்கு வேதனை ஏற்பட்டு விட்டால் உடலின் ஏனைய பகுதிகளும் உறக்கமின்மை, காய்ச்சல் ஆகியவற்றிற்கு இலக்காகி விடுகின்றன. ( புஹாரி)
இங்கணம் பல்வேறு தேவையுடையோராகவும் குறிப்பாக வாழ்வின் அடிப்படைத் தேவைகளைக் கூட நிறைவேற்ற இயலாத வகையில் முடங்கிக் கிடக்கும் இவர்கள் உங்களின் தான தர்மங்களுக்கு தகுதியானவர்கள். ஜகாத் பெறத் தகுதியுடையோரில் இச் சிறைப்பட்டோரும் ஒரு பிரிவினர். இவர்களுக்கு உதவுவது நம் மீது கடமை என்பதை மேற்குறிப்பிட்டுள்ள குர்ஆன் வசனங்கள் மற்றும் ஹதீத்கள் மூலம் நாம் உணர முடியும். நன்மைகளை வாரி வழங்கும் ரமலான் மாதத்தில் உங்களின் தான தர்மங்களை இவர்களுக்கு வாரி வழங்குவீர். அல்லாஹ்வின் தூதர் இம் மாதத்தை அடைந்து விட்டால் வேகமாக வீசக் கூடிய காற்றை விட அதிகமாக வாரி வழங்குவார்கள். அண்ணலாரின் அடியொற்றி வாழும் நாமும் இவ்வழிமுறையை பின்பற்றி சிறைபட்டோரின் நலனுக்கு வாரி வழங்கி மறுமையில் நற்பேற்றினை அடைவோமாக. இப்தார் நேரத்தில் கேட்கும் துஆவிலும் இவர்களின் விடுதலைக்காகவும், இதற்காக பாடுபடும் நல்ல உள்ளங்களுக்காகவும் பிரார்த்திக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.
உங்கள் உதவிகளை அனுப்ப வேண்டிய முகவரி
Charitable Trust for Minorities
Reg No : 882/2001
Rahim Plastic House
Ganiyar Nagar
Saramedu, Karumpukkadai,
Coimbatore – 8
Tamilnadu, India

Phone: ++91422 2307673 / ++ 91422 5546584 / ++ 91 94436 54473


Website : www.ctmcoimbatore.com
Email : kovaithangappa@yahoo.com

இஸ்லாமிய உம்மத்தின் மகத்தான இலட்சியம்

இஸ்லாமிய உம்மத்தின் மகத்தான இலட்சியம்- இமாம் ஹஸனுல் பன்னா ஷஹீத் (றஹ்) -
எனது சமூகமே! அல்குர்னில் அல்லாஹ் அகீதாவின் அடிப்படைகளையும் சமூக நலன்களின் அடிப்படைகளையும் தெளிவுபடுத்தியுள்ளான். அதில் மனிதர்கள் கடைப்பிடிக்க வேண்டிய கட்டளைகளும் தவிர்ந்து வாழ வேண்டிய விலக்கல்களும் விரவிக் கிடக்கின்றன. முஸ்லிம்கள் அல்குர்னைப் பின்பற்றி வாழ்கிறார்களா? அதன் கட்டளைகளைத் தமது வாழ்வில் கடைப்பிடிக்கின்றனரா? அல்லாஹ் குறிப்பிடும் நம்பிக்கைக் கோட்பாட்டை (அகீதாவை) உறுதியாக ஈமான் கொள்கின்றார்களா? அல்லாஹ் அவர்களுக்குத் தெளிவுபடுத்தும் இலட்சியங்களை முஸ்லிம்கள் சரியாக விளங்கிக் கொண்டார்களா? தமது வாழ்வின் பல்வேறு நடவடிக்கைகளிலும் உயிரோட்டமுள்ள இஸ்லாமிய சட்டங்களை அவர்கள் நடைமுறைப்படுத்துகிறார்களா? இந்தக் கேள்விகளுக்கு உடன்பாடான பதில்களை நாம் கண்டால் இலட்சியத்தை நோக்கிப் பயணிக்கலாம். னால், அல்குர்னின் போதனைகளைப் புறக்கணித்து அதன் கட்டளைகளைப் பின்பற்றாதவர்களாக முஸ்லிம்கள் இருக்கும்பொழுது நமது அடிப்படைப்பணிகளும் நாம் அனைவரும் நம்மைப் பின்பற்றுவோரும் இந்த கேள்விகளை நோக்கி மீள்வதாகவே இருக்கும்.
அல்குர்ன் வாழ்வின் நோக்கத்தை வரையறுக்கின்றது. மனித வாழ்வின் மகத்தான இலட்சியத்தை தெளிவுபடுத்துகின்றது. இவ்வகையில் வாழ்க்கையில் சில மனிதர்களின் முழு முயற்சியும் உண்பதும் இன்பம் நுகர்வதுமே என்று அல்குர்ன் குறிப்பிடுகின்றது. “ நிராகரிப்பாளார்கள் அற்ப இன்பங்களை அனுபவிக்கின்றனர். கால்நடைகளைப் போன்று உண்டு களிக்கின்றனர். நரக நெருப்பே அவர்களின் தங்குமிடமாகும்.” (சூறதுல் ஹஜ்) இன்னொரு சமுகத்தின் முழு முயற்சியும் உலகப் பொருட்களைத் தேடுவதிலேயே முடிந்து விடுகின்றது. மனிதர்களுக்கு பெண்கள், வெள்ளி, தங்கத்திலான பொருட்கள் பழக்கப்பட்ட ஒட்டகம் (வாகனம்), கால்நடைகள் விளைநிலங்கள் என்பவற்றின் மீதான இச்சைகள் கவர்ச்சியாக்கப்பட்டுள்ளன. இவை உலக வாழ்வின், அழிந்துபோகின்ற அற்ப இன்பங்கள். னால் அல்லாஹ்விடமே சிறந்த நிலையான தங்குமிடம் உள்ளது. (ல இம்ரான்)
வாழ்க்கையில் இன்னொரு மக்கள் கூட்டத்தினரின் முயற்சி பற்றியும் அல்குர்ன் குறிப்பிடுகின்றது. பூமியில் குழப்பங்களை உண்டுபண்ணிவிடுவதே அவர்களின் நோக்கம் என அது குறிப்பிடுகின்றது. “ மக்களில் சிலரது வார்த்தைகள் உலக வாழ்வில் உங்களுக்குப் பெரும் கவர்ச்சியாக உள்ளது. னால் அவர்களின் உள்ளங்களில் இருப்பது பரம விரோதமே என்பதற்கு அல்லாஹ் சாட்சியாக இருக்கிறான். இவர்கள் பொறுப்புகளை ஏற்றால் பூமியில் விரைந்து குழப்பங்களை ஏற்படுத்துகின்றனர். விளைநிலங்களையும் சந்ததிகளையும் அழித்துவிடுகின்றனர். அல்லாஹ் இத்தகைய குழப்பக்காரர்களை விரும்புவதில்லை.”(2:204,205) இவை அல்குர்ன் குறிப்பிடும் வித்தியாசமான மனிதர்களின் வேறுபட்ட இலட்சியங்கள். அல்லாஹ் மு•மின்களை இத்தகைய அற்ப இலட்சியங்களை விட்டும் பாதுகாத்து அவற்றிலிருந்து விடுதலை அளித்துவிட்டான். மு•மின்கள் மீது அல்லாஹ் அதியுன்னதமான பணியொன்றை சுமத்தியிருக்கிறான். அதை அவர்கள் தமது தோள்கள் மீது சுமந்திருக்கின்றனர். அந்த உயர்ந்த கடமை இதுதான், மனித சமூகத்திற்கு சத்தியத்தை எடுத்தியம்பி, ஓட்டுமொத்த மனித சமூகத்தையும் நன்மையின்பால் வழிநடத்துதல். இஸ்லாம் என்ற சூரியன் மூலம் மூழு உலகத்திற்கும் ஒளியூட்டல். இதை அல்லாஹ் இப்படிச் சொல்கின்றான். “ ஈமான் கொண்டவர்களே! அல்லாஹ்வுக்கு சிரம் தாழ்த்துங்கள். சுஜுத் செய்யுங்கள். உங்கள் இரட்சகனை வணங்குங்கள். நன்மையானவற்றையே செய்யுங்கள். நீங்கள் வெற்றி பெறுவீர்கள். அல்லாஹ்வின் பாதையில் உண்மையான முறையில் போராடுங்கள். அவனே உங்களைத் தேர்ந்தெடுத்தான். அது உங்களின் தந்தை இப்ராஹிமின் மார்க்கமாகும். நீங்கள் பின்பற்றும் மார்க்கத்தில் எவ்வித கஷ்டத்தையும் நாம் ஏற்படுத்தவில்லை அவரே உங்களை இதற்கு முன்னர் முஸ்லிம்கள் என்று அழைத்தார். இவ்விஷயத்தில் இறைத்தூதர் உங்களுக்கு சாட்சியாகவும் நீங்கள் மக்களுக்கு சாட்சியாகவும் இருக்கிறீர்கள். எனவே தொழுகையை நிலைநாட்டுங்கள். ஸக்காத்தையும் கொடுத்து வாருங்கள். அல்லாஹ்வே உங்கள் பொறுப்புதாரி. உதவி செய்வதிலும் பொறுப்பாக இருப்பதிலும் அவனே மிகவும் சிறந்தவன். இதன் கருத்து அல்குர்ன் மனித குலத்தின் உபதேசகர்களாக முஸ்லிம்களை கருதுகின்றது என்பதே.
இதன் உன்னத போதனைகளை பிரச்சாரம் செய்வதற்காக உலகத்திற்கான தலைமைத்துவ அதிகாரமும் முஸ்லிம்களுக்கே வழங்கப்பட்டுள்ளது. எனவே உலகத்திற்கு வழிகாட்டும் தகுதியும் தலைமைத்துவம் அளிக்கும் உரிமையும் எங்களுக்கே உரித்தானது.
அல்லாஹ் இந்த இலட்சியப் பாதையில் மு•மின்களின் உயிர்களையும் செல்வங்களையும் விலைக்கு வாங்கிக் கொண்டதாகக் குறிப்பிடுகின்றான். “ நிச்சயமாக அல்லாஹ் விசுவாசிகளிடமிருந்து அவர்களின் உயிர்களையும், அவர்களது செல்வங்களையும் நிச்சயமாக அவர்களுக்கு சுவனம் உண்டு என்பதற்குப்பகரமாக (விலைக்கு) வாங்கிக் கொண்டான்; ” (9:111) அல்லாஹ்வின் மார்க்கத்தை மக்களின் உள்ளங்களை நோக்கி கொண்டு செல்வதற்கு இந்த தியாகமும் அர்ப்பணமும் மிகவும் முக்கியமானது. இதிலிருந்து ஒரு முஸ்லிம் தனது மறுமைக்காக உழைக்க வேண்டும் என்ற நோக்கில் உலக வாழ்வை த•வாவுக்காக அர்ப்பணம் செய்கிறான் என்பது தொளிவாகின்றது. வெற்றிவாகை சூடவிரும்பும் முஸ்லிம் நேர்வழி, அருள், இரக்கம் போன்றவற்றை அணிகலன்களாகக் கொண்டதொரு சானாக விளங்குகிறான். இதனால், இஸ்லாத்திற்குக் கிடைக்கும் வெற்றி என்பது உலக நாகரீகத்தைக் கட்டியெழுப்புவதற்கான அறிவையும் வழிகாட்டலையும் வழங்குகின்ற வெற்றியாகவே விளங்குகின்றது. இந்த இலட்சியத்தை விட்டும் முஸ்லிம்கள் எங்கிருக்கிறார்கள்?
எனது கண்ணியத்திற்குரிய சகோதரனே! அல்குர்னிலிருந்து முஸ்லிம்கள் இந்தக்கருத்தைப் புரிந்து கொண்டார்களா? இதனால் அவர்களின் உள்ளங்கள் உயர்ச்சி பெற்றதா? அவர்களது ன்மாக்கள் இழகி ஜாஹிலிய்யா சிந்தனை அடிமைத்துவத்திலிருந்து அவர்கள் தம்மை விடுவித்துக் கொண்டார்களா? மனோ இச்சைகள், சிற்றின்பங்கள் என்பவற்றிலிருந்து தம்மை தூய்மைப்படுத்திக் கொண்டனரா? அற்பப் பிரச்சினைகளிலிருந்தும் மிகத் தாழ்ந்த இலட்சியங்களிலிருந்தும் முஸ்லிம்கள் உயர்ந்து நிற்கின்றனரா? வானங்களையும் பூமியையும் படைத்த அல்லாஹ்வுக்கு அவர்கள் முழுமையாகக் கட்டுப்பட்டு வாழ்கின்றார்களா? அல்லாஹ்வின் வார்த்தையை மேலோங்கச் செய்வது அவனது பாதையில் போராடுகின்றனரா? அவனது மார்க்கத்தை பூமியில் பரப்பி அதன் ஷரீவைப் பேணுகின்றனரா?
உண்மையில் முஸ்லிம்கள் இன்று மனோயிச்சைகளின் அடிமைகளாகவும் அற்ப இன்பங்களின் கைதிகளாகவும் மாறி விட்டார்கள். சுவையான உணவும் வசதியான வாகனமும் அழகான உடையும் கவர்ந்திழுக்கும் பெண்ணும் டம்பரமும் தூக்கமும் வரட்டு கெளரவமும் போலிப்பகட்டுமே முஸ்லிம்களின் இலட்சியங்களாகி விட்டன. சின்னச் சின்ன இலட்சியங்களோடு அவர்கள் திருப்திப்பட்டுக் கொண்டார்கள். உலகைத் தேடுவதிலேயே மூழ்கிப்போனதால் பெரும் சோதனைகளுக்கு முகங்கொடுக்கிறார்கள். இதைதான் இறைதூதர் (ஸ்ல்) அவர்களின் வார்த்தை உண்மைப்படுத்துகிறது “ தீனாருக்கு அடிமைப்பட்டவன் நாசமாகட்டும். திர்ஹமுக்கு அடிமைப்பட்டவன் நாசமாகட்டும். பட்டாடைக்கு அடிமைப்பட்டவன் நாசமாகட்டும்.”
ஓர் இலட்சியம்தான் அதற்கான பாதையை நோக்கி பயணிக்கத் தூண்டுகின்றது. னால், நமது உம்மத்தில் அந்த இலட்சியம் தெளிவற்றதாகவும் குழப்பமாகவும் இருக்கும்பொழுது அதைத் தெளிவாக வகுத்துக் கொள்வது மிக அவசியமானது. இப்போது நாம் அந்தத் தெளிவைப் பெற்று விட்டோம். உலகத்திற்கு தலைமைத்துவத்தை வழங்கி முழு மனித குலத்தையும் இஸ்லாத்தின் போதனைகளால் வழிநடத்துவதே அந்த இலட்சியம் என்ற கருத்தில் நாம் ஒன்றுபட்டு விட்டோம். இஸ்லாம் அல்லாத எதன் மூலமும் மனித சமூகத்திற்கு சுபீட்சம் கிடையாது என்பதிலும் நாம் கருத்தொருமைப்படுகின்றோம். இந்த இலட்சியப் பணியை மக்களிடம் சென்றடையச் செய்யவே நாம் விரும்புகின்றோம். இஸ்லாமிய உம்மத்திற்கு இந்த இலட்சியத்தை மிகத் சரியாக விளக்குவதற்கு நாம் விழைவோம். இந்த இலட்சியப் பணியை நாம் புதிதாகக் கண்டுபிடிக்கவில்லை. இது அல்குர்னின் ஒவ்வொரு வசனத்திலும் இறைதூதரின் ஒவ்வொரு ஹதீஸிலும் மிகத் துல்லியமாக தெரியும் பணியாகும். இஸ்லாத்தை விளங்கி அதன் போதனைகளை நடைமுறைப்படுத்துவதில் முன்னுதாரணமாகத் திகழ்ந்த நபித்தோழர்களின் ஒவ்வொரு செயலிலும் பிரதிபலித்த இலட்சியமாகும். இந்தப் பணியை முஸ்லிம்கள் ஒப்புக் கொள்வதற்கு விரும்பினால் அதுவே ஈமானினதும் உண்மையான இஸ்லாத்தினதும் அத்தாட்சியாக இருக்கும்.

கிலாஃபா

இஸ்லாமிய கிலஃபா ஆட்சியால் மட்டுமே முஸ்லிம்களின் நாடுகளை பாதுகாக்க முடியும். அதனை நிலைநாட்டுவது கடமையாகும். இக்கடமையை நிலைநாட்டாது முடங்கிக்கிடப்பது ஹராமாகும். உலகில் உள்ள அனைத்து முஸ்லிம்களுக்குமான ஆட்சி ஒழுங்குதான் கிலாஃபா ஆகும்;. இதன் மூலம் இஸ்லாமிய ஷரீஆ சட்டங்கள் அமுல் செய்யப்படும். இஸ்லாமிய தஆவா முழு உலகுக்கும் சுமந்து செல்லப்படும். இது முஸ்லிம்கள் அனைவரையும் ஒன்று சேர்க்கக்கூடிய, இஸ்லாமிய நாடுகளை ஒன்றுபடுத்தக்கூடிய அரசியல் ஒழுங்காகும். இஸ்லாமிய ஷரீஆவைக் கொண்டு ஆளுகின்ற கலீஃபா ஒருவர் இருப்பது அவசியம் என நபிகள் நாயகம்(ஸல்) கட்டளையிட்டார்கள். ஸஹீஹ் முஸ்லிமில் பின்வரும் ஹதீஸ் பதியப்பட்டுள்ளது. "...அதிகமான கலீஃபாக்கள் காணப்படுவார்கள் நாயகமே அப்போது நாம் என்ன செய்யவேண்டும்?" என்றனர் சஹாபாக்கள். அதற்கு நாயகம்(ஸல்) கூறினார்கள் 'முதலாமவருக்கு உங்கள் பைஅத்(சத்தியப்பிரமாணத்தை) கொடுங்கள்' மேலும் கூறினார்கள் 'இரண்டு கலீஃபாக்களுக்கு பைஅத் கொடுக்கப்பட்டால் அவர்களுள் இரண்டாமவரை கொன்றுவிடுங்கள்'. கிலாஃபா என்பது நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் மீண்டும் வரும் என்று செய்தி கூறிச்சென்ற ஆட்சிமுறையாகும். நபிகள் நாயகம்(ஸல்) கூறினார்கள் 'பிறகு ஒரு கிலாஃபா நபியின் வழிமுறையில் தோன்றும்'.இஸ்லாமிய கிலாஃபா ஆட்சி மூலமே முஸ்லிம்கள் மீது அல்லாஹ் கடமையாக்கிய நீதி நிர்வாகம், பொருளாதாரம், சமூகவியல், கல்வி, வெளிநாட்டு அலுவல்கள் ஆகியவை தொடர்பான சகல இஸ்லாமிய ஷரீஆ சட்டங்களும் நடைமுறைபடுத்தப்படும். கிலாஃபா ஆட்சி மூலமே முஸ்லிம்கள் மீது அல்லாஹ் கடமையாக்கிய ஜிஹாத் போராட்டம் நடைமுறைபடுத்தப்படும். இந்த ஜிஹாத் இஸ்லாத்தை முழு உலகுக்கும் சுமந்து செல்வதற்காகவும், முஸ்லிம் நிலங்;களையும், உயிர், மானம், செல்வம் ஆகியவற்றையும் பாதுகாப்பதற்காகவும், மேலும் தமது ஆட்சியை ஏற்றுக்கொண்ட திம்மீக்களையும் (இஸ்லாமிய ஆட்சியில் வாழும் முஸ்லீம் அல்லாதவர்கள்) பாதுகாப்பதற்கான போராட்டமாகும்.இஸ்லாமிய கிலாஃபா என்பது அல்லாஹ்(சுபு) எந்தத் தீமைகளைவிட்டும் தவிர்த்து விலகிக்கொள்ளுமாறு முஸ்லீம்களுக்கு ஏவினானோ அவற்றை தடுக்கின்ற ஆட்சியாகும். இது சமூகத்தில் காணப்படுகின்ற தீமையின் அடையாளங்கள் அனைத்தையும் ஒழித்துக்கட்டும். இஸ்லாமிய நன்மையை பாதுகாக்கும். சகலவிதமான வழிகேடுகள் உட்செருகல்கள், அத்துமீறல்கள் அனைத்தையும் தடுக்கும். கிலாஃபா, சமூகத்தின் நாலா பக்கங்களிலும் ஈமானிய பண்பாடுகளையும் போற்றத்தக்க சுத்தத்தையும், ஒளியையும், தொலைத்தொடர்பு மூலமாகவும் கல்லூரிகள், நிறுவனங்கள் மூலமாகவும் பரப்பிவிடும். இஸ்லாமிய ஆட்சியில் வாழும் பிரஜைகள், தமது பிள்ளைகள், தீமைகள், சீர்கேடு, ஒழுக்க வீழ்ச்சி என இழுத்துச் செல்லப்படுவார்களே என அஞ்சமாட்டார்கள்.கிலாஃபா என்பது அல்லாஹ் முஸ்லிம்களுக்கு நிறைவேற்றும்படி கூறிய கட்டளையாகும். தங்களுக்கு மத்தியில் ஒற்றுமையாக இருத்தல், இனவெறி, நிறவெறி மற்றும் கோத்திற வெறிகளை விட்டும் தூரமாக இருத்தல் ஆகியவற்றையும் நிலைநாட்டும். இது ஒருசாரரின் அல்லது ஒரு துறையினரின் ஆட்சியாக இருக்காது. மாறாக இதன் பார்வை தமது பிரஜைகள் அனைவரும் ஒன்றே என்பதாகவே இருக்கும். குர்ஆனிலும் சுன்னாவிலும் காணப்படுகின்ற பலமான ஆதாரத்திற்கு ஏற்பவே இஸ்லாம் நடைமுறைபடுத்தப்படும். இது இனத்தையும் நிறத்தையும் பார்க்கின்ற ஆட்சியாக இருக்காது. அஜமியைவிட அரபிக்கு எந்த சிறப்பும் இருக்காது. கறுப்பரைவிட வெள்ளையருக்கு எந்த சிறப்புமிருக்காது. தக்வாவைக்கொண்டே சிறப்பு கணிக்கப்படும்.ஒவ்வொரு முஸ்லிமும் இஸ்;லாமிய சட்டங்கள் சகலத்தையும் நிறைவேற்றும்படியே ஏவப்பட்டுள்ளனர். இதன் கருத்து உலகிலுள்ள முஸ்லிம்கள் அனைவரும் சமம் என்பதே. எனவே அவர்கள் அனைவரையும் கவனத்தில் கொள்வது அவசியமாகும். அல்லாஹ் குர்ஆனில் கூறுகிறான் நிச்சயமாக விசுவாசிகள் சகோதரர்களே!நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள் விசுவாசிகள் தங்களுக்கு மத்தியில் இரக்கம் காட்டுவதிலும் அன்பு செலுத்துவதிலும் ஒருவருக்கொருவர் பரஸ்பரமாக இருப்பதிலும் ஓர் உடலைப் போன்றவர்கள். உடலின் ஓர் உறுப்பிற்கு நோய் ஏற்பட்டாலும் ஏனைய உறுப்புகளும் உறக்கமின்மையாலும் காய்ச்சலாலும் பாதிக்கப்படும்.இஸ்லாமிய கிலாஃபா என்பது சகல முஸ்லிம்களுக்குமான ஆட்சியும் தேவையுமாகும். மேலும் அவர்கள் மீது கடமையுமாகும். நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் கூறியதாக ஸஹீஹ் முஸ்லிமில் பின் வரும் ஹதீஸ் பதியப்பட்டுள்ளது. கலீஃபாவிற்கு கொடுக்கப்பட்ட பைஆ (சத்தியப்பிரமாணம்) இல்லாத நிலையில் யார் மரணிக்கிறாரோ அவர் ஜாஹிலிய மரணத்தை அடைந்தவராவர்.அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் இருக்கிற முஸ்லிமாக இருக்கட்டும், சீனாவிலும் இந்தோனேசியாவிலுமுள்ள முஸ்லிமாக இருக்கட்டும், லெபனானிலும் மொரோக்கோவிலுமுள்ள முஸ்லிமாக இருக்கட்டும், இந்தியாவிலும் இலங்கையிலுமுள்ள முஸ்லிமாக இருக்கட்டும் அனைவருமே இஸ்லாமிய சட்டங்கள் முழுவதையும் பின்பற்றுமாறு ஏவப்பட்டுள்ளனர். எனவே இ;ஸ்லாமிய கிலாஃபாவை நிலைநாட்டுவதும் அவர்கள் மீது கடமையாகும்.நாம் அனைவரும் ஒரேயொரு இஸ்லாமிய சமூகத்தை சேர்ந்தவர்கள் என்ற அசைக்கமுடியாத நம்பிக்கை ஒவ்வொரு முஸ்லிமிடமும் இருப்பது அவசியமாகும். ஏகாதிபத்தியவாதிகளால் நம்மீது திணிக்கப்பட்ட நிலையில் உருவான பல நாடுகளாக நாம் பிரிந்துள்ளோம். எனவே மிக பலவீனமானவர்களாகவும் இருக்கின்றோம். இதனை ஒருபோதும் நாம் ஏற்றுக்கொள்ளக்கூடாது. மாறாக முஸ்லிம்கள் அனைவருக்குமான ஒரு ஆட்சியின் கீழ் முஸ்லிம்களின் பலமான இருப்பை ஏற்;படுத்திக்கொள்ள நாம் ஆர்வத்தோடும் முழு முயற்சியோடும் செயற்படுவது அவசியமாகும். எகிப்து இஸ்லாமிய ஆட்சியின் ஒரு அங்கமாக இருக்கவேண்டும் என்பதற்காக எகிப்தில் வாழுகின்ற முஸ்லிம்கள் இஸ்லாமிய கிலாஃபா நோக்கி அழைக்கவேண்டும். அதற்காக பாடுபடவேண்டும். அவ்வாறே குவைத்தில் வாழுகின்ற முஸ்லிம்கள் குவைத் இஸ்லாமிய ஆட்சியின் ஒரு பகுதியாக இருக்கவேண்டும் என்பதற்காக பாடுபடவேண்டும். இதைப்போன்றே ஏனைய அனைத்து இஸ்லாமிய நாடுகளில் இருக்கின்ற முஸ்லிம்களும் இஸ்லாமிய கிலாஃபாவை நோக்கி அழைக்கவேண்டும், பாடுபடவேண்டும்.இஸ்லாமிய கிலாஃபா முஸ்லிம்களை மட்டும் கவனிக்கின்ற ஓர் ஆட்சியாக இருக்காது, மாறாக முஸ்லிமாக இருந்தாலும் சரி முஸ்லிமல்லாதவராக இருந்தாலும் சரி, இ;ஸ்லாமிய ஆட்சியோடு இருக்கிற சகலரையும் கவனிக்கிற ஆட்சியாக இருக்கும். இஸ்லாமிய ஆட்சியோடு இருக்கிற சகலருக்கும் பரிபூரண குடியுரிமை இருக்கும். ஷரீஆ எதிர்பார்க்கின்ற கடமைகளையும் உரிமைகளையும் அனுபவிப்பார்கள். நீதி, சமூக விவகாரங்கள் எதிலும் பாகுபாடு காட்டப்படமாட்டாது. முஸ்லிம்களைப்போன்றே முஸ்லிம் அல்லாதோரின் உடல், மானம், உடமைகள் யாவும் பாதுகாக்கப்படும். சத்தியமும் அச்சமும் ஒன்று சேரமுடியாது என ஒரு முஸ்லிமிற்கு நன்றாகத்தெரியும். அதைப்போலவே இறைவிசுவாசமும், இறைமறுப்பும் ஒன்றுசேரமுடியாது. இஸ்லாமிய கிலாஃபாவை நோக்கி போராடுகையில், இறைமறுப்பாளர்கள் மற்றும் அவர்களின் உதவியாளர்களின் எதிர்ப்பையும் போராட்டத்தையும் சந்திக்கவேண்டிவரும் என்பதை முஸ்லிம் நன்கு அறிவான்.நபிகள் நாயகம்(ஸல்) அவர்களும் அவர்களுடைய விசுவாசிகளும் அங்கீகாரத்தையோ வரவேற்பையோ முதலில் பெறவில்லை. மாறாக உருவப்பட்ட வாள்களையும் கடும் கோபப்பட்ட உள்ளங்களையுமே சந்தித்தனர். மிகப்பெரிய இஸ்லாமியப் போராட்டங்களே நிகழ்ந்தன. ஆனால் அவற்றில் இஸ்லாத்திற்கே வெற்றி கிட்டின. இதுவே நம்மை நோக்கி அல்லாஹ் அருள்மறையில் கூறுகின்ற சத்தியமாக இருக்கிறது.

ஜனநாயகம் : நவீன கால இணைவைப்பு

ஜனநாயகம் : நவீன கால இணைவைப்பு
ஜனநாயகம் உலக அளவில் பெரும் வரவேற்பை பெற்றுள்ள கொள்கையாகும். முஸ்லிம்கள் கூட ஜனநாயகத்தை வானளாவ புகழ்ந்து வருகின்றனர். ஆனால் இந்தியாவில் அமுலில் இருக்கும் மதசார்பற்ற ஜனநாயக முறை இஸ்லாத்திற்கு முற்றிலும் புறம்பான ஒரு கோட்பாடாகும். இஸ்லாம், ஆட்சி அதிகாரம் அனைத்தும் அல்லாஹ்வுக்கு மட்டுமே சொந்தமானது என்று கூறுகின்றது. அல்லாஹ் தனது திருமறையில் ஆட்சி செலுத்தும் அதிகாரம் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருக்கும் இல்லை. அவனைத் தவிர வேறு யாருக்கும் நீங்கள் அடிபணியக் கூடாது என்று கட்டளை இட்டுள்ளான். (அல்குர்ஆன்12:40) ''எனவே அல்லாஹ் இறக்கியருளிய சட்டத்திற்கேற்ப அவர்களுடைய விவகாரங்களில் தீர்ப்பளியுங்கள். அவர்களுடைய ஆசாபாசங்களைப் பின்பற்றாதீர்கள்! அவர்கள் உம்மை குழப்பத்திலாழ்த்தி, அல்லாஹ் உம்மீது இறக்கியருளிய அறிவுரைகள் சிலவற்றிலிருந்து (உம்மை) இம்மியளவும் நழுவச் செய்திடா வண்ணம் நீர் அவர்களிடம் எச்சரிக்கையாக இருப்பீராக! பிறகும் அவர்கள் இதனைப் புறக்கணித்தார்களாயின், அல்லாஹ் அவர்களுடைய சில பாவங்களின் காரணமாக அவர்களை துன்பத்திலாழ்த்திடவே நாடிவிட்டான் என்று அறிந்து கொள்ளுங்கள். மேலும் திண்ணமாக அந்த மக்களில் பெரும்பாலோர் வரம்பு மீறியவர்களாவர். அவர்கள் அல்லாஹ்வின் சட்டத்தைப் புறக்கணிக்கிறார்கள் என்றால் பிறகு ஜாஹிலியத்தின் (அறியாமைக்காலத்தின்) தீர்ப்பினையா அவர்கள் விரும்புகின்றார்கள்? ஆயினும் அல்லாஹ்வின் மீது உறுதியாக நம்பிக்கை கொண்டவர்களை பொறுத்தவரை அல்லாஹ்வைவிட நல்ல தீர்ப்பு வழங்குபவன் யார்?"" (அல்குர்ஆன் 5 : 49,50)எனவே இஸ்லாத்தை பொறுத்தமட்டில் ஆட்சிஅதிகாரமும், சட்டமியற்றும் அதிகாரமும் அல்லாஹ்வுக்கு மட்டுமே உரியது. இதில் அவனுக்கு இணை துணை யாருமே கிடையாது. ஆனால் இந்தியாவில் நடைமுறையிலுள்ள ஜனநாயகம் ஆட்சி அதிகாரமும், சட்டமியற்றும் அதிகாரமும் மக்களுக்கே உரியது என்று கூறுகின்றது. ஜனநாயகத்தில் பெரும்பான்மை மக்களின் விருப்பமே அது சரியாக இருந்தாலும் தவறாக இருந்தாலும் நடைமுறைப்படுத்தப்படும். இறைவனது வழிகாட்டுதல்களை குறித்து சிந்திக்க மத சார்பற்ற ஜனநாய முறையில் சிறிதளவும் வாய்ப்பில்லை.''பூமியில் வசிப்பவர்களில் பெரும்பாலோரை நீர் பின்பற்றினால் இறைவனின் பாதையிலிருந்து உம்மை அவர்கள் வழி கெடுத்துவிடுவார்கள். ஆதாரமற்ற வெறும் யூகங்களைத்தான் அவர்கள் பின்பற்றுகிறார்கள். இன்னும் அவர்கள் (பொய்யான) கற்பனையிலேயே மூழ்கிக் கிடக்கிறார்கள்."" (அல்குர்ஆன் 6 : 116)எனவே இஸ்லாமும், ஜனநாயகமும் எதிரும் புதிருமான கொள்கைகளாகும். இறைவனுக்கு இணைவைக்கும் அரசியல் வடிவமே ஜனநாயகமாகும். அது மனிதனை கடவுள் ஆக்குகின்றது. ''தமது மனோ இச்சையை தெய்வமாக கொண்டோரை.. .."" (25:43) (ஆ.P மற்றும் ஆ.டு.யு க்கள்) கண்ணியப்படுத்தி அவர்களது தவறுகளுக்கெல்லாம் நியாயம் கற்பிக்கும் நிறுவனங்களை (பாராளுமன்றம், சட்டமன்றம்) உற்பத்தி செய்கின்றது ஜனநாயகம்.மதசார்பற்ற ஜனநாயக அரசியல் அமைப்பை ஏற்றுக் கொள்வது இந்த அமைப்பை உருவாக்க தேர்தலில் போட்டியிடுவது, அல்லது போட்டியிடுவோரை ஆதரிப்பது இணைவைத்தல் மட்டுமின்றி, பாராளுமன்றம், சட்டமன்றம் ஆகியவற்றின் வடிவில் இன்னொரு இலாஹ்வை உருவாக்குவதற்கு சமமாகும். எனவே லாஇலாஹா இல்லல்லாஹ் முஹம்மதுற் றசூலுல்லாஹ் என்ற கலிமாவை மொழிந்த எவரும் ஓட்டுப் போட்டு நவீனகால தாஃகூத்தான பாராளுமன்றத்தை உருவாக்க முன்வரக் கூடாது.இன்றைய இந்தியாவில் அல்லாஹ் ஹராமாக்கி இருப்பதை ஹலால் ஆக்குவதும், அல்லாஹ் ஹலால் ஆக்கி இருப்பதை ஹராம் ஆக்குவதும் பாராளுமன்றம், சட்டமன்றங்களின் பணிகளாக இருந்து வருகின்றன. உதாரணமாக : எத்தனை குழந்தைகளை வேண்டுமானாலும் பெற்றுக் கொள்ளும் உரிமையை மனிதர்களுக்கு அல்லாஹ் ஹலால் ஆக்கியுள்ளான். அல்லாஹ் திருக்குர்ஆனில் கூறுகின்றான், ''நீங்கள் வறுமைக்கு பயந்து உங்களுடைய குழந்தைகளைக் கொலை செய்யாதீர்கள்;, அவர்களுக்கும் உங்களுக்கும் நாமே உணவளிக்கின்றோம். அவர்களை கொல்லுதல் நிச்சயமாக பெரும் பிழையாகும்."" (அல்குர்ஆன் 17 : 3)ஆனால் இன்றைய சட்டமியற்றும் பாராளுமன்றம், சட்டமன்ற அவைகள் தமது கரங்களில் சட்டத்தை எடுத்துக் கொண்டு மனித இன உற்பத்தியை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை அமுல் படுத்தி வருகின்றன. இதேபோல் சென்ற 1988ல் நாடாளுமன்றத்தில் மத ஆலயங்கள் துஷ்பிரயோக தடைசட்டம் கொண்டு வரப்பட்டது. இந்த சட்டத்தின் நோக்கம் மதத்தையும் அரசியலையும் பிரிப்பதுதான். தீனின் பிரிக்க முடியாத பாகமாக அரசியல் விளங்கும்போது, இறைவன் தனது அடிமைகளுக்கு கொடுத்திருக்கும் இந்த சுதந்திரத்தை பறிக்க சட்டமியற்றும் மன்றங்களுக்கு எங்கே உரிமை இருக்கின்றது? அல்லாஹ் ஹராமாக்கி இருப்பதை ஹலால் ஆக்குவதிலும் சட்டம் இயற்றும் கூடாரங்கள் பெரும் பங்கு வகித்துள்ளன. உதாரணமாக மதுக்கடைகள் வைக்க அனுமதிக்கும் சட்டம், விபச்சாரம் செய்வதற்கு கூட லைசென்ஸ், லாட்டரி எனும் சூதாட்டத் திட்டத்தை அமுல்படுத்த அனுமதி. ஆனால் அல்லாஹ் கூறுகின்றான்.''இறைநம்பிக்கை கொண்டவர்களே! மது, சூதாட்டம், பலிபீடங்கள், குறிபார்க்கும் அம்புகள் ஆகியவை அருவருக்கத்தக்க ஷைத்தானியச் செயல்களாகும். ஆவற்றை தவிர்த்து கொள்ளுங்கள் அதன் மூலம் நீங்கள் வெற்றி பெறலாம்."" (அல்குர்ஆன் 5 : 90,91 )இப்படி அல்லாஹ் ஹராம் ஆக்கியிருப்பதை ஹலாலாகவும், அல்லாஹ் ஹலால் ஆக்கியிருப்பதை ஹராமாக்கி வைக்கும் அவைகளே சட்டமன்றங்களும், பாராளுமன்றங்களும். இப்படி அல்லாஹ் விதித்துள்ள விதி முறைகளுக்கு நேர் எதிரான சட்டங்களை உருவாக்க பாராளுமன்றத்திற்கு போட்டியிடும் வேட்பாளர்களுக்கு முஸ்லிம்கள் எப்படி வாக்களிக்க முடியும்?நாம் மேலே குறிப்பிட்டுள்ள இறைவசனங்களில் இறைவன் கடுமையாக எச்சரிக்கை விடுத்திருப்பினும் குஃப்ரை (இறை நிராகரிப்பை) அழித்து விட்டு அல்லாஹ்வின் வாக்கை மேலோங்க வைக்க பாடுபட வேண்டிய முஸ்லிம்கள் இன்று மதசார்பற்ற ஜனநாயக தேர்தலில் பங்கு கொள்வதில் பெரும் விருப்பமுடையவர்களாக இருக்கின்றார்கள். இதன் மூலம் அவர்கள் இன்னொரு இலாஹ்வை (இறைவனை) பாரளுமன்றத்தின் வடிவில் உருவாக்குகின்றோம் என்பதை உணர்வதில்லை. ஒரு முறை பெருமானார் (ஸல்) அவர்கள், (யூதர்களும், கிருத்தவர்களும்) அல்லாஹ்வை விடுத்து மார்;க்க மேதைகளையும், துறவிகளையும் தங்களின் ரப் (கடவுள்) ஆக ஆக்கிக் கொண்டார்கள் (9:31) என்ற இறை வசனத்தை ஒரு கூட்டத்தார் முன்நிலையில் ஓதிக் காட்டினார்கள். அப்போது அந்த அவையிலிருந்த அதீ பின் ஹாத்திம் என்ற இஸ்லாத்தை தழுவிய கிருத்தவர், கிருத்தவர்கள் தங்கள் மதகுருமார்களை வணங்காதிருக்கும் போது அவர்கள் எப்படி கடவுளராக ஆக முடியும் என்று கேட்டார். அதற்கு நபி(ஸல்) பதில் சொன்னார்கள்,அந்த அறிஞர்களும் துறவிகளும் எதனை ஹராம் என்று கூறினார்களோ அதனை ஹராமாகவும் எதனை ஹலால் என்று கூறினார்களோ அதனை ஹலால் என்றும் ஏற்றுக் கொள்கின்றீர்கள். இதுதான் அவர்களை கடவுளராக ஆக்கிக் கொள்வதாகும் என்று கூறினார்கள். (அஹ்மத், திர்மிதி)ஓட்டுப் போட்டு சட்டமியற்ற பாராளுமன்றம் சட்டமன்றம் அமைப்பது மற்றொரு கடவுளை உருவாக்குவதுதான் என்பது அண்ணல் நபி (ஸல்) அவர்களின் பதிலுரையில் இருந்து நமக்கு தெளிவாக புலப்படுகின்றது. இருப்பினும் எல்லா வகையான சமாதானங்களையும் கூறி முஸ்லிம்கள் அவ் அமைப்பில் அங்கம் வகித்து வருகின்றனர். அல்லாஹ் இவ்வாறு செயல்படுவோரை இவ்வாறு எச்சரிக்கின்றான்.''மேலும் தனக்கு நேர்வழி தெளிவாகிவிட்ட பின்னரும், யார் இறைத் தூதரிடத்தில் பகைமை காட்டுவதில் முனைப்பாக இருக்கின்றானோ, இறை நம்பிக்கையாளர்களின் போக்கிற்கு மாறான பாதையில் செல்கின்றானோ அவனை அவன் திருப்பி விட்ட திசையிலேயே நாம் செலுத்துவோம், பின்னர் அவனை நரகத்தில் வீசி எறிவோம். அது மிக்க கெட்ட தங்குமிடமாகும்."" (அல்குர்ஆன் 5: 44,45,47)''திண்;ணமாக தனக்கு இணைவைக்கப்படுவதை அல்லாஹ் மன்னிப்பதில்லை. இதைத் தவிர அனைத்து பாவங்களையும் தான் நாடுபவர்களுக்கு மன்னித்து விடுகின்றான். அல்லாஹ்வுக்கு இணைவைப்பவர்கள் திண்ணமாக பெரும் பொய்யை புனைந்தவராவர். மேலும் பாவத்தை புரிந்தவராவர்."" (அல்குர்ஆன் 4 : 48 )முஸ்லிம்களுக்கு இறுதி வெற்றி மறுமையில்தான். அந்த இறுதி வெற்றிக்கு பங்கம் விளைவிக்கவல்லது மதசார்பற்ற ஜனநாயக முறையில் பங்கு கொள்வது. எனவே அல்லாஹ்வுக்கு இணைகற்பிக்கும் இந்த அமைப்பினை புறக்கணிப்போம். ஈருலகிலும் வெற்றி பெறுவோம். அருட்ச் செல்வன் - ளுஐஆ செய்திமடல் - டிச.'95

Six C's of Character - Yasir Fazaga