Search This Blog
Sunday, April 23, 2006
கிலாஃபா
இஸ்லாமிய கிலஃபா ஆட்சியால் மட்டுமே முஸ்லிம்களின் நாடுகளை பாதுகாக்க முடியும். அதனை நிலைநாட்டுவது கடமையாகும். இக்கடமையை நிலைநாட்டாது முடங்கிக்கிடப்பது ஹராமாகும். உலகில் உள்ள அனைத்து முஸ்லிம்களுக்குமான ஆட்சி ஒழுங்குதான் கிலாஃபா ஆகும்;. இதன் மூலம் இஸ்லாமிய ஷரீஆ சட்டங்கள் அமுல் செய்யப்படும். இஸ்லாமிய தஆவா முழு உலகுக்கும் சுமந்து செல்லப்படும். இது முஸ்லிம்கள் அனைவரையும் ஒன்று சேர்க்கக்கூடிய, இஸ்லாமிய நாடுகளை ஒன்றுபடுத்தக்கூடிய அரசியல் ஒழுங்காகும். இஸ்லாமிய ஷரீஆவைக் கொண்டு ஆளுகின்ற கலீஃபா ஒருவர் இருப்பது அவசியம் என நபிகள் நாயகம்(ஸல்) கட்டளையிட்டார்கள். ஸஹீஹ் முஸ்லிமில் பின்வரும் ஹதீஸ் பதியப்பட்டுள்ளது. "...அதிகமான கலீஃபாக்கள் காணப்படுவார்கள் நாயகமே அப்போது நாம் என்ன செய்யவேண்டும்?" என்றனர் சஹாபாக்கள். அதற்கு நாயகம்(ஸல்) கூறினார்கள் 'முதலாமவருக்கு உங்கள் பைஅத்(சத்தியப்பிரமாணத்தை) கொடுங்கள்' மேலும் கூறினார்கள் 'இரண்டு கலீஃபாக்களுக்கு பைஅத் கொடுக்கப்பட்டால் அவர்களுள் இரண்டாமவரை கொன்றுவிடுங்கள்'. கிலாஃபா என்பது நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் மீண்டும் வரும் என்று செய்தி கூறிச்சென்ற ஆட்சிமுறையாகும். நபிகள் நாயகம்(ஸல்) கூறினார்கள் 'பிறகு ஒரு கிலாஃபா நபியின் வழிமுறையில் தோன்றும்'.இஸ்லாமிய கிலாஃபா ஆட்சி மூலமே முஸ்லிம்கள் மீது அல்லாஹ் கடமையாக்கிய நீதி நிர்வாகம், பொருளாதாரம், சமூகவியல், கல்வி, வெளிநாட்டு அலுவல்கள் ஆகியவை தொடர்பான சகல இஸ்லாமிய ஷரீஆ சட்டங்களும் நடைமுறைபடுத்தப்படும். கிலாஃபா ஆட்சி மூலமே முஸ்லிம்கள் மீது அல்லாஹ் கடமையாக்கிய ஜிஹாத் போராட்டம் நடைமுறைபடுத்தப்படும். இந்த ஜிஹாத் இஸ்லாத்தை முழு உலகுக்கும் சுமந்து செல்வதற்காகவும், முஸ்லிம் நிலங்;களையும், உயிர், மானம், செல்வம் ஆகியவற்றையும் பாதுகாப்பதற்காகவும், மேலும் தமது ஆட்சியை ஏற்றுக்கொண்ட திம்மீக்களையும் (இஸ்லாமிய ஆட்சியில் வாழும் முஸ்லீம் அல்லாதவர்கள்) பாதுகாப்பதற்கான போராட்டமாகும்.இஸ்லாமிய கிலாஃபா என்பது அல்லாஹ்(சுபு) எந்தத் தீமைகளைவிட்டும் தவிர்த்து விலகிக்கொள்ளுமாறு முஸ்லீம்களுக்கு ஏவினானோ அவற்றை தடுக்கின்ற ஆட்சியாகும். இது சமூகத்தில் காணப்படுகின்ற தீமையின் அடையாளங்கள் அனைத்தையும் ஒழித்துக்கட்டும். இஸ்லாமிய நன்மையை பாதுகாக்கும். சகலவிதமான வழிகேடுகள் உட்செருகல்கள், அத்துமீறல்கள் அனைத்தையும் தடுக்கும். கிலாஃபா, சமூகத்தின் நாலா பக்கங்களிலும் ஈமானிய பண்பாடுகளையும் போற்றத்தக்க சுத்தத்தையும், ஒளியையும், தொலைத்தொடர்பு மூலமாகவும் கல்லூரிகள், நிறுவனங்கள் மூலமாகவும் பரப்பிவிடும். இஸ்லாமிய ஆட்சியில் வாழும் பிரஜைகள், தமது பிள்ளைகள், தீமைகள், சீர்கேடு, ஒழுக்க வீழ்ச்சி என இழுத்துச் செல்லப்படுவார்களே என அஞ்சமாட்டார்கள்.கிலாஃபா என்பது அல்லாஹ் முஸ்லிம்களுக்கு நிறைவேற்றும்படி கூறிய கட்டளையாகும். தங்களுக்கு மத்தியில் ஒற்றுமையாக இருத்தல், இனவெறி, நிறவெறி மற்றும் கோத்திற வெறிகளை விட்டும் தூரமாக இருத்தல் ஆகியவற்றையும் நிலைநாட்டும். இது ஒருசாரரின் அல்லது ஒரு துறையினரின் ஆட்சியாக இருக்காது. மாறாக இதன் பார்வை தமது பிரஜைகள் அனைவரும் ஒன்றே என்பதாகவே இருக்கும். குர்ஆனிலும் சுன்னாவிலும் காணப்படுகின்ற பலமான ஆதாரத்திற்கு ஏற்பவே இஸ்லாம் நடைமுறைபடுத்தப்படும். இது இனத்தையும் நிறத்தையும் பார்க்கின்ற ஆட்சியாக இருக்காது. அஜமியைவிட அரபிக்கு எந்த சிறப்பும் இருக்காது. கறுப்பரைவிட வெள்ளையருக்கு எந்த சிறப்புமிருக்காது. தக்வாவைக்கொண்டே சிறப்பு கணிக்கப்படும்.ஒவ்வொரு முஸ்லிமும் இஸ்;லாமிய சட்டங்கள் சகலத்தையும் நிறைவேற்றும்படியே ஏவப்பட்டுள்ளனர். இதன் கருத்து உலகிலுள்ள முஸ்லிம்கள் அனைவரும் சமம் என்பதே. எனவே அவர்கள் அனைவரையும் கவனத்தில் கொள்வது அவசியமாகும். அல்லாஹ் குர்ஆனில் கூறுகிறான் நிச்சயமாக விசுவாசிகள் சகோதரர்களே!நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள் விசுவாசிகள் தங்களுக்கு மத்தியில் இரக்கம் காட்டுவதிலும் அன்பு செலுத்துவதிலும் ஒருவருக்கொருவர் பரஸ்பரமாக இருப்பதிலும் ஓர் உடலைப் போன்றவர்கள். உடலின் ஓர் உறுப்பிற்கு நோய் ஏற்பட்டாலும் ஏனைய உறுப்புகளும் உறக்கமின்மையாலும் காய்ச்சலாலும் பாதிக்கப்படும்.இஸ்லாமிய கிலாஃபா என்பது சகல முஸ்லிம்களுக்குமான ஆட்சியும் தேவையுமாகும். மேலும் அவர்கள் மீது கடமையுமாகும். நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் கூறியதாக ஸஹீஹ் முஸ்லிமில் பின் வரும் ஹதீஸ் பதியப்பட்டுள்ளது. கலீஃபாவிற்கு கொடுக்கப்பட்ட பைஆ (சத்தியப்பிரமாணம்) இல்லாத நிலையில் யார் மரணிக்கிறாரோ அவர் ஜாஹிலிய மரணத்தை அடைந்தவராவர்.அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் இருக்கிற முஸ்லிமாக இருக்கட்டும், சீனாவிலும் இந்தோனேசியாவிலுமுள்ள முஸ்லிமாக இருக்கட்டும், லெபனானிலும் மொரோக்கோவிலுமுள்ள முஸ்லிமாக இருக்கட்டும், இந்தியாவிலும் இலங்கையிலுமுள்ள முஸ்லிமாக இருக்கட்டும் அனைவருமே இஸ்லாமிய சட்டங்கள் முழுவதையும் பின்பற்றுமாறு ஏவப்பட்டுள்ளனர். எனவே இ;ஸ்லாமிய கிலாஃபாவை நிலைநாட்டுவதும் அவர்கள் மீது கடமையாகும்.நாம் அனைவரும் ஒரேயொரு இஸ்லாமிய சமூகத்தை சேர்ந்தவர்கள் என்ற அசைக்கமுடியாத நம்பிக்கை ஒவ்வொரு முஸ்லிமிடமும் இருப்பது அவசியமாகும். ஏகாதிபத்தியவாதிகளால் நம்மீது திணிக்கப்பட்ட நிலையில் உருவான பல நாடுகளாக நாம் பிரிந்துள்ளோம். எனவே மிக பலவீனமானவர்களாகவும் இருக்கின்றோம். இதனை ஒருபோதும் நாம் ஏற்றுக்கொள்ளக்கூடாது. மாறாக முஸ்லிம்கள் அனைவருக்குமான ஒரு ஆட்சியின் கீழ் முஸ்லிம்களின் பலமான இருப்பை ஏற்;படுத்திக்கொள்ள நாம் ஆர்வத்தோடும் முழு முயற்சியோடும் செயற்படுவது அவசியமாகும். எகிப்து இஸ்லாமிய ஆட்சியின் ஒரு அங்கமாக இருக்கவேண்டும் என்பதற்காக எகிப்தில் வாழுகின்ற முஸ்லிம்கள் இஸ்லாமிய கிலாஃபா நோக்கி அழைக்கவேண்டும். அதற்காக பாடுபடவேண்டும். அவ்வாறே குவைத்தில் வாழுகின்ற முஸ்லிம்கள் குவைத் இஸ்லாமிய ஆட்சியின் ஒரு பகுதியாக இருக்கவேண்டும் என்பதற்காக பாடுபடவேண்டும். இதைப்போன்றே ஏனைய அனைத்து இஸ்லாமிய நாடுகளில் இருக்கின்ற முஸ்லிம்களும் இஸ்லாமிய கிலாஃபாவை நோக்கி அழைக்கவேண்டும், பாடுபடவேண்டும்.இஸ்லாமிய கிலாஃபா முஸ்லிம்களை மட்டும் கவனிக்கின்ற ஓர் ஆட்சியாக இருக்காது, மாறாக முஸ்லிமாக இருந்தாலும் சரி முஸ்லிமல்லாதவராக இருந்தாலும் சரி, இ;ஸ்லாமிய ஆட்சியோடு இருக்கிற சகலரையும் கவனிக்கிற ஆட்சியாக இருக்கும். இஸ்லாமிய ஆட்சியோடு இருக்கிற சகலருக்கும் பரிபூரண குடியுரிமை இருக்கும். ஷரீஆ எதிர்பார்க்கின்ற கடமைகளையும் உரிமைகளையும் அனுபவிப்பார்கள். நீதி, சமூக விவகாரங்கள் எதிலும் பாகுபாடு காட்டப்படமாட்டாது. முஸ்லிம்களைப்போன்றே முஸ்லிம் அல்லாதோரின் உடல், மானம், உடமைகள் யாவும் பாதுகாக்கப்படும். சத்தியமும் அச்சமும் ஒன்று சேரமுடியாது என ஒரு முஸ்லிமிற்கு நன்றாகத்தெரியும். அதைப்போலவே இறைவிசுவாசமும், இறைமறுப்பும் ஒன்றுசேரமுடியாது. இஸ்லாமிய கிலாஃபாவை நோக்கி போராடுகையில், இறைமறுப்பாளர்கள் மற்றும் அவர்களின் உதவியாளர்களின் எதிர்ப்பையும் போராட்டத்தையும் சந்திக்கவேண்டிவரும் என்பதை முஸ்லிம் நன்கு அறிவான்.நபிகள் நாயகம்(ஸல்) அவர்களும் அவர்களுடைய விசுவாசிகளும் அங்கீகாரத்தையோ வரவேற்பையோ முதலில் பெறவில்லை. மாறாக உருவப்பட்ட வாள்களையும் கடும் கோபப்பட்ட உள்ளங்களையுமே சந்தித்தனர். மிகப்பெரிய இஸ்லாமியப் போராட்டங்களே நிகழ்ந்தன. ஆனால் அவற்றில் இஸ்லாத்திற்கே வெற்றி கிட்டின. இதுவே நம்மை நோக்கி அல்லாஹ் அருள்மறையில் கூறுகின்ற சத்தியமாக இருக்கிறது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment