Search This Blog

Sunday, April 23, 2006

ஏந்தல் நபிகளாரின் எளிய வாழ்க்கைhttp://www.iniyaislam.com

ஏந்தல் நபிகளாரின் எளிய வாழ்க்கை

அல்லாஹ்வுடைய ரஸ_லிடத்தில் நிச்சயமாக அழகிய முன்மாதிரி இருக்கிறது (அல்குர்ஆன் 33:21) என்று அருளாளன் அல்லாஹ் அருள்மறை வழியாக, பெருமானார் ஸல்லல்லாஹ{ அலைஹி வஸல்லம் அவர்களின் வாழ்க்கையின் ஒவ்வொரு அங்கமும் முழு மனித சமுதாயமும் பின்பற்றி ஒழுக வேண்டிய ஒப்பற்ற முன்மாதிரி என்பதை பறைசாற்றுகிறான். இம்மறை வசனத்தை பின்பற்றி அந்த ரஸ_ல் காட்டிய பாட்டையில் நம் பாதங்களை பதிப்போமானால் இன்று உலகத்தில் காணப்படும் இன்னல்கள் அனைத்தும் சுவடே இல்லாமல் மறைந்து போகும் என்பதில் சிறிதும் சந்தேகமில்லை. இஸ்லாமிய சாம்ராஜியத்தின் உன்னத தலைமை பதவியை அடைந்திருந்தும் பெருமானார் ஸல்லல்லாஹ{ அலைஹி வஸல்லம் அவர்கள் தங்களை தங்களின் தோழர்களை விட பெருமையாகக் கருதியதே இல்லை. நானும் இறைவனின் ஓர் அடிமையே ஆவேன். எனவே ஓர் அடிமை போன்றே உண்ணுகிறேன், அடிமை போன்றே உட்காருகிறேன் என அடிக்கடி கூறுவார்கள். மக்காவில் இருக்கும்போது எவ்வாறு ஆடம்பரமற்ற எளிய வாழ்க்கையை நடத்தினார்களோ அதேபோன்று சகல வசதிகளும் வாய்க்கப்பெற்று மதீனாவின் அரசராய் மிளிர்ந்த போதும் எவ்வித டாம்பீகமுமில்லாத சாதாரண வாழ்க்கை முறையையே கைக்கொண்டார்கள்.
ஒருமுறை அண்ணலார் கடைவீதி சென்று துணி வாங்கி வந்தார்கள். அச்சிறு துணி மூட்டையைத் தம்மிடம் கொடுக்கும்படி அபூஹ{றைறா ரழியல்லாஹ{ அன்ஹ{ அவர்கள் கேட்டார்கள். இந்த வேலையை இதற்குரியவர்தான் செய்ய வேண்டும். நீர் என்னைவிட தாழ்ந்தவர் என நான் கருத முடியவில்லையே என்று கூறி அம்மூட்டையைத் தாங்களே வீட்டிற்கு எடுத்துச் சென்றார்கள். ஒரு சமயம் பிரயாணத்தில் இருக்கும்போது வழியில் சமயல் செய்ய நேர்ந்தது. நபித்தோழர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு வேலையை ஏற்றுக் கொண்டார்கள். பெருமானார் அவர்கள் விறகு சேகரிக்கும் பொறுப்பை ஒப்புக் கொண்டார்கள். தோழர்கள் அவ்வேலையை தாங்களே செய்வதாகக் கூறியும் நபி ஸல்லல்லாஹ{ அலைஹி வஸல்லம் அவர்கள் அதனை ஒத்துக் கொள்ள வில்லை. தன்னுடனிருக்கும் சக பயணிகளைவிட தன்னை உயர்வாக நினைத்துக் கொள்ளும் அடியான் மீது அல்லாஹ் அன்பு கொள்ள மாட்டான் என பகர்ந்தார்கள் மாநபி ஸல்லல்லாஹ{ அலைஹி வஸல்லம் அவர்கள். இவ்வாறு கூறிய பின்னர் அவர்களே சென்று விறகு சேகரித்தும் வந்தார்கள். பெருமானார் ஸல்லல்லாஹ{ அலைஹி வஸல்லம் அவர்கள் தங்களின் சொந்த வேலைகளை மட்டும் செய்தார்கள் என்றில்லை. பிறருக்கும் வேலை செய்து உதவுவார்கள். யாராவது ஒரு வேலை செய்து தருமாறு கேட்டால் மறுக்காமல் அதனை மகிழ்வோடு செய்து கொடுப்பார்கள். இயலாதவர்கள், விதவைகள் போன்றோரின் தேவைகளையும் பூர்த்தி செய்வார்கள்.
நபிகளார் பச்சை மண் செங்கலினால் கட்டப்பட்ட சிறிய அறைகளிலேயே குடியிருந்தார்கள். அவற்றின் கூரைகள் பேரீச்ச ஓலைகளினால் வேயப்பட்டிருந்தன. உணவை உட்கொள்ளுமுன் அல்லாஹ்வின் திருநாமத்தை உச்சரிப்பார்கள். உண்டு முடிந்ததும் அவனுக்கு நன்றி செலுத்தும் வகையில் அல்ஹம்துலில்லாஹ் என்று கூறுவார்கள். வயிறு நிறைந்திருப்பதை விட பட்டினியால் பசித்திருப்பதையே அண்ணலார் விரும்புவார்கள். வேளை தவறாது மூன்று நாட்கள் அவர்கள் தொடர்ந்து சாப்பிடதில்லை. ஒரேநாளில் கூட இரண்டு வேளை சேர்ந்தாற் போல் அவர்கள் உணவருந்தியதில்லை.
கண்மணி நாயகம் ஸல்லல்லாஹ{ அலைஹி வஸல்லம் அவர்கள் அணிந்த ஆடைகளோ மிக சாதாரணமானவை. முரடான துணிகளையே அவர்கள் அணிவார்கள். அந்த உடைகளிலும் பல ஒட்டுக்கள் இருக்கும். அண்ணலாரின் படுக்கையும் எளிய முறையிலேயே இருந்தது. ஒருநாள் அருமைத் தோழர்கள் நாயகத்தின் திருமேனியில் படுக்கைப் பாயின் அடையாளம் பதிந்திருப்பதை கண்டு மனம் வருந்தியபோது, தோழர்களே! நான் ஒரு பிரயாணி, வழியில் ஒரு மரத்தடியில் கொஞ்சம் ஓய்வு எடுப்பதற்கு ஒப்பாகும் இவ்வுலக வாழ்வு என பதிலுறுத்தார்கள்.
மற்றொரு முறை மாநபித்தோழர் உமர் இப்னுல் கத்தாப் ரழியல்லாஹ{ அன்ஹ{ அவர்கள் நபிகளாரின் வீட்டில் ஒரு கட்டிலும், ஒரு சாதாரண தலையணையும், கோதுமை நிறைந்த ஒரு மண் பாத்திரமும், தோல் கூஜாக்களும் மட்டுமே இருப்பதைப் பார்த்து துயருற்றவர்களாய் அண்ணல் எங்கள் ஆருயிரே! நாயகமே! தாங்கள் கிஸ்ரா, கைஸர் மன்னர்களைப் போன்று வசதியாக வாழக்கூடாதா? என்று கேட்டார்கள். அதற்கு ஏந்தலார், கத்தாபுடைய மகனே! அவர்கள் உலகத்தைப் பெறவும் நான் மறுமையைப் பெறவும் உமக்கு விருப்பமில்லையா? என வினவினார்கள். அன்பின் சகோதரர்களே! சிந்தித்துப் பாருங்கள். மாநபி வாழ்வு என்ற உறைகல்லில் நம் இன்றைய வாழ்கையை உறசிப் பாருங்கள். கொஞ்சம் வசதியும் செல்வமும் நமக்கு வந்து விட்டால் எப்படியெல்லாம் வாழ வேண்டுமென நினைக்கிறோம். iகிக்கு ஒரு ஆள் காலுக்கு ஒரு ஆள் என நம்மைச் சுற்றி எப்போதும் ஆட்கள் இருக்க வேண்டும். நாம் நினைத்த காரியத்தை நினைத்த நேரத்திலேயே முடித்து விடவேண்டும். அடுத்தவர் எப்படிப் போனால் என்ன, நாம் வானாளாவ வீடு பங்களாக்கள் கட்டி ஒய்யாரமாக வாழ வேண்டும் என்றுதானே நினைக்கிறோம். திருமணம் போன்ற நிகழ்ச்சிகளில்தான் எத்தனை ஆடம்பரம்! வீண் விரயம்! நமக்கு இச்செல்வங்களையும் வசதி வாய்ப்புகளையும் வழங்கிய அல்லாஹ்வை மறந்து விடுகிறோம். நம்மை செல்வந்தனாக ஆக்கிய இறைவனுக்கு நம்மை ஏழையாக மாற்றிட எவ்வளவு நேரம் வேண்டும்? நிச்சயமாக உங்களுடைய பொருட்களும், உங்களுடைய மக்களும் உங்களுக்குச் சோதனையாகும் (அல்குர்ஆன் 64:15) என்ற இறைமறையின் வசனத்தை சிந்தனையில் இருத்த வேண்டும். அல்லாஹ் நமக்கு பொருட் செல்வத்தையும் மக்கள் செல்வத்தையும் வாரி வழங்கியிருப்பதெல்லாம் நம்மை சோதிக்கத்தான். இச்செல்வங்களினால் செருக்கேறி உலகத்தையே சதமென உவக்கிறானா அல்லது அதனை கொடுத்த இறைவனுக்கு நன்றி செலுத்தி அவன் ஏவியோருக்கு அதிலிருந்து அள்ளித் தந்து நாயனின் நல்லருளை நாடுகிறானா என்பதை சோதிப்பதற்காகத்தான் இவைகளை அவன் வழங்குகிறான். அப்படியானால் செல்வ வளத்தோடு வாழ்வது கூடாதா? என்று நீங்கள் கேட்டால், மாநபித்தோழர்கள் கலீஃபா உஃத்மான் ரழியல்லாஹ{ அன்ஹ{, அப்துர்ரஹ்மான் இப்னு அவ்ஃப் ரழியல்லாஹ{ அன்ஹ{ போன்ற பெருமக்களின் வாழ்வு நமக்கு பாடமாக அமையும். இத்தோழர்கள் அப்போதே மிகப்பெரும் செல்வந்தர்களாக வாழ்ந்திருக்கிறார்கள். ஆனால் இச்செல்வங்கள் அல்லாஹ்வால் நமக்கு வழங்கப்பட்ட சோதனைகள் என்பதை உணர்ந்தவர்கள். எனவே செல்வம் அவர்களை ஒன்றும் செய்திட முடியவில்லை. மாறாக அவர்களின் ஈமான்தான் அச்செல்வத்தை ஆட்சி செய்தது. அதனால் அல்லாஹ் மேலும் மேலும் அவர்களின் செல்வத்தை அதிகப்படுத்தினான் என்பது வரலாறு. எனவே அல்லாஹ் நமக்கு அள்ளித் தந்துள்ள அருட்கொடைகளுக்காக அவனுக்கு நன்றி செலுத்துவோம். அவன் ஆகுமாக்கியுள்ள வழியில் ஆடம்பரமின்றி சிறப்பாக வாழ்வோம்.
நம் உற்றார் சுற்றாருக்கும், ஏழை எளியோருக்கும், இஸ்லாமிய அரப்பணிகளுக்கும் அள்ளி வழங்குவோம். அவன் வழங்கிய ஒவ்வொரு காசுக்கும் மறுமையில் பதில் சொல்லியாக வேண்டும் என்பதை நினைவில் கொள்வோம். இஸ்லாமிய தூண்களில் ஒன்றான ஜகாத்தை முறைப்படி செலுத்தி விடுவோம் என இன்றே உறுதி ஏற்போம். (இன்ஷா அல்லாஹ்)-

No comments:

Six C's of Character - Yasir Fazaga