Search This Blog

Sunday, April 23, 2006

இஸ்லாமிய உம்மத்தின் மகத்தான இலட்சியம்

இஸ்லாமிய உம்மத்தின் மகத்தான இலட்சியம்- இமாம் ஹஸனுல் பன்னா ஷஹீத் (றஹ்) -
எனது சமூகமே! அல்குர்னில் அல்லாஹ் அகீதாவின் அடிப்படைகளையும் சமூக நலன்களின் அடிப்படைகளையும் தெளிவுபடுத்தியுள்ளான். அதில் மனிதர்கள் கடைப்பிடிக்க வேண்டிய கட்டளைகளும் தவிர்ந்து வாழ வேண்டிய விலக்கல்களும் விரவிக் கிடக்கின்றன. முஸ்லிம்கள் அல்குர்னைப் பின்பற்றி வாழ்கிறார்களா? அதன் கட்டளைகளைத் தமது வாழ்வில் கடைப்பிடிக்கின்றனரா? அல்லாஹ் குறிப்பிடும் நம்பிக்கைக் கோட்பாட்டை (அகீதாவை) உறுதியாக ஈமான் கொள்கின்றார்களா? அல்லாஹ் அவர்களுக்குத் தெளிவுபடுத்தும் இலட்சியங்களை முஸ்லிம்கள் சரியாக விளங்கிக் கொண்டார்களா? தமது வாழ்வின் பல்வேறு நடவடிக்கைகளிலும் உயிரோட்டமுள்ள இஸ்லாமிய சட்டங்களை அவர்கள் நடைமுறைப்படுத்துகிறார்களா? இந்தக் கேள்விகளுக்கு உடன்பாடான பதில்களை நாம் கண்டால் இலட்சியத்தை நோக்கிப் பயணிக்கலாம். னால், அல்குர்னின் போதனைகளைப் புறக்கணித்து அதன் கட்டளைகளைப் பின்பற்றாதவர்களாக முஸ்லிம்கள் இருக்கும்பொழுது நமது அடிப்படைப்பணிகளும் நாம் அனைவரும் நம்மைப் பின்பற்றுவோரும் இந்த கேள்விகளை நோக்கி மீள்வதாகவே இருக்கும்.
அல்குர்ன் வாழ்வின் நோக்கத்தை வரையறுக்கின்றது. மனித வாழ்வின் மகத்தான இலட்சியத்தை தெளிவுபடுத்துகின்றது. இவ்வகையில் வாழ்க்கையில் சில மனிதர்களின் முழு முயற்சியும் உண்பதும் இன்பம் நுகர்வதுமே என்று அல்குர்ன் குறிப்பிடுகின்றது. “ நிராகரிப்பாளார்கள் அற்ப இன்பங்களை அனுபவிக்கின்றனர். கால்நடைகளைப் போன்று உண்டு களிக்கின்றனர். நரக நெருப்பே அவர்களின் தங்குமிடமாகும்.” (சூறதுல் ஹஜ்) இன்னொரு சமுகத்தின் முழு முயற்சியும் உலகப் பொருட்களைத் தேடுவதிலேயே முடிந்து விடுகின்றது. மனிதர்களுக்கு பெண்கள், வெள்ளி, தங்கத்திலான பொருட்கள் பழக்கப்பட்ட ஒட்டகம் (வாகனம்), கால்நடைகள் விளைநிலங்கள் என்பவற்றின் மீதான இச்சைகள் கவர்ச்சியாக்கப்பட்டுள்ளன. இவை உலக வாழ்வின், அழிந்துபோகின்ற அற்ப இன்பங்கள். னால் அல்லாஹ்விடமே சிறந்த நிலையான தங்குமிடம் உள்ளது. (ல இம்ரான்)
வாழ்க்கையில் இன்னொரு மக்கள் கூட்டத்தினரின் முயற்சி பற்றியும் அல்குர்ன் குறிப்பிடுகின்றது. பூமியில் குழப்பங்களை உண்டுபண்ணிவிடுவதே அவர்களின் நோக்கம் என அது குறிப்பிடுகின்றது. “ மக்களில் சிலரது வார்த்தைகள் உலக வாழ்வில் உங்களுக்குப் பெரும் கவர்ச்சியாக உள்ளது. னால் அவர்களின் உள்ளங்களில் இருப்பது பரம விரோதமே என்பதற்கு அல்லாஹ் சாட்சியாக இருக்கிறான். இவர்கள் பொறுப்புகளை ஏற்றால் பூமியில் விரைந்து குழப்பங்களை ஏற்படுத்துகின்றனர். விளைநிலங்களையும் சந்ததிகளையும் அழித்துவிடுகின்றனர். அல்லாஹ் இத்தகைய குழப்பக்காரர்களை விரும்புவதில்லை.”(2:204,205) இவை அல்குர்ன் குறிப்பிடும் வித்தியாசமான மனிதர்களின் வேறுபட்ட இலட்சியங்கள். அல்லாஹ் மு•மின்களை இத்தகைய அற்ப இலட்சியங்களை விட்டும் பாதுகாத்து அவற்றிலிருந்து விடுதலை அளித்துவிட்டான். மு•மின்கள் மீது அல்லாஹ் அதியுன்னதமான பணியொன்றை சுமத்தியிருக்கிறான். அதை அவர்கள் தமது தோள்கள் மீது சுமந்திருக்கின்றனர். அந்த உயர்ந்த கடமை இதுதான், மனித சமூகத்திற்கு சத்தியத்தை எடுத்தியம்பி, ஓட்டுமொத்த மனித சமூகத்தையும் நன்மையின்பால் வழிநடத்துதல். இஸ்லாம் என்ற சூரியன் மூலம் மூழு உலகத்திற்கும் ஒளியூட்டல். இதை அல்லாஹ் இப்படிச் சொல்கின்றான். “ ஈமான் கொண்டவர்களே! அல்லாஹ்வுக்கு சிரம் தாழ்த்துங்கள். சுஜுத் செய்யுங்கள். உங்கள் இரட்சகனை வணங்குங்கள். நன்மையானவற்றையே செய்யுங்கள். நீங்கள் வெற்றி பெறுவீர்கள். அல்லாஹ்வின் பாதையில் உண்மையான முறையில் போராடுங்கள். அவனே உங்களைத் தேர்ந்தெடுத்தான். அது உங்களின் தந்தை இப்ராஹிமின் மார்க்கமாகும். நீங்கள் பின்பற்றும் மார்க்கத்தில் எவ்வித கஷ்டத்தையும் நாம் ஏற்படுத்தவில்லை அவரே உங்களை இதற்கு முன்னர் முஸ்லிம்கள் என்று அழைத்தார். இவ்விஷயத்தில் இறைத்தூதர் உங்களுக்கு சாட்சியாகவும் நீங்கள் மக்களுக்கு சாட்சியாகவும் இருக்கிறீர்கள். எனவே தொழுகையை நிலைநாட்டுங்கள். ஸக்காத்தையும் கொடுத்து வாருங்கள். அல்லாஹ்வே உங்கள் பொறுப்புதாரி. உதவி செய்வதிலும் பொறுப்பாக இருப்பதிலும் அவனே மிகவும் சிறந்தவன். இதன் கருத்து அல்குர்ன் மனித குலத்தின் உபதேசகர்களாக முஸ்லிம்களை கருதுகின்றது என்பதே.
இதன் உன்னத போதனைகளை பிரச்சாரம் செய்வதற்காக உலகத்திற்கான தலைமைத்துவ அதிகாரமும் முஸ்லிம்களுக்கே வழங்கப்பட்டுள்ளது. எனவே உலகத்திற்கு வழிகாட்டும் தகுதியும் தலைமைத்துவம் அளிக்கும் உரிமையும் எங்களுக்கே உரித்தானது.
அல்லாஹ் இந்த இலட்சியப் பாதையில் மு•மின்களின் உயிர்களையும் செல்வங்களையும் விலைக்கு வாங்கிக் கொண்டதாகக் குறிப்பிடுகின்றான். “ நிச்சயமாக அல்லாஹ் விசுவாசிகளிடமிருந்து அவர்களின் உயிர்களையும், அவர்களது செல்வங்களையும் நிச்சயமாக அவர்களுக்கு சுவனம் உண்டு என்பதற்குப்பகரமாக (விலைக்கு) வாங்கிக் கொண்டான்; ” (9:111) அல்லாஹ்வின் மார்க்கத்தை மக்களின் உள்ளங்களை நோக்கி கொண்டு செல்வதற்கு இந்த தியாகமும் அர்ப்பணமும் மிகவும் முக்கியமானது. இதிலிருந்து ஒரு முஸ்லிம் தனது மறுமைக்காக உழைக்க வேண்டும் என்ற நோக்கில் உலக வாழ்வை த•வாவுக்காக அர்ப்பணம் செய்கிறான் என்பது தொளிவாகின்றது. வெற்றிவாகை சூடவிரும்பும் முஸ்லிம் நேர்வழி, அருள், இரக்கம் போன்றவற்றை அணிகலன்களாகக் கொண்டதொரு சானாக விளங்குகிறான். இதனால், இஸ்லாத்திற்குக் கிடைக்கும் வெற்றி என்பது உலக நாகரீகத்தைக் கட்டியெழுப்புவதற்கான அறிவையும் வழிகாட்டலையும் வழங்குகின்ற வெற்றியாகவே விளங்குகின்றது. இந்த இலட்சியத்தை விட்டும் முஸ்லிம்கள் எங்கிருக்கிறார்கள்?
எனது கண்ணியத்திற்குரிய சகோதரனே! அல்குர்னிலிருந்து முஸ்லிம்கள் இந்தக்கருத்தைப் புரிந்து கொண்டார்களா? இதனால் அவர்களின் உள்ளங்கள் உயர்ச்சி பெற்றதா? அவர்களது ன்மாக்கள் இழகி ஜாஹிலிய்யா சிந்தனை அடிமைத்துவத்திலிருந்து அவர்கள் தம்மை விடுவித்துக் கொண்டார்களா? மனோ இச்சைகள், சிற்றின்பங்கள் என்பவற்றிலிருந்து தம்மை தூய்மைப்படுத்திக் கொண்டனரா? அற்பப் பிரச்சினைகளிலிருந்தும் மிகத் தாழ்ந்த இலட்சியங்களிலிருந்தும் முஸ்லிம்கள் உயர்ந்து நிற்கின்றனரா? வானங்களையும் பூமியையும் படைத்த அல்லாஹ்வுக்கு அவர்கள் முழுமையாகக் கட்டுப்பட்டு வாழ்கின்றார்களா? அல்லாஹ்வின் வார்த்தையை மேலோங்கச் செய்வது அவனது பாதையில் போராடுகின்றனரா? அவனது மார்க்கத்தை பூமியில் பரப்பி அதன் ஷரீவைப் பேணுகின்றனரா?
உண்மையில் முஸ்லிம்கள் இன்று மனோயிச்சைகளின் அடிமைகளாகவும் அற்ப இன்பங்களின் கைதிகளாகவும் மாறி விட்டார்கள். சுவையான உணவும் வசதியான வாகனமும் அழகான உடையும் கவர்ந்திழுக்கும் பெண்ணும் டம்பரமும் தூக்கமும் வரட்டு கெளரவமும் போலிப்பகட்டுமே முஸ்லிம்களின் இலட்சியங்களாகி விட்டன. சின்னச் சின்ன இலட்சியங்களோடு அவர்கள் திருப்திப்பட்டுக் கொண்டார்கள். உலகைத் தேடுவதிலேயே மூழ்கிப்போனதால் பெரும் சோதனைகளுக்கு முகங்கொடுக்கிறார்கள். இதைதான் இறைதூதர் (ஸ்ல்) அவர்களின் வார்த்தை உண்மைப்படுத்துகிறது “ தீனாருக்கு அடிமைப்பட்டவன் நாசமாகட்டும். திர்ஹமுக்கு அடிமைப்பட்டவன் நாசமாகட்டும். பட்டாடைக்கு அடிமைப்பட்டவன் நாசமாகட்டும்.”
ஓர் இலட்சியம்தான் அதற்கான பாதையை நோக்கி பயணிக்கத் தூண்டுகின்றது. னால், நமது உம்மத்தில் அந்த இலட்சியம் தெளிவற்றதாகவும் குழப்பமாகவும் இருக்கும்பொழுது அதைத் தெளிவாக வகுத்துக் கொள்வது மிக அவசியமானது. இப்போது நாம் அந்தத் தெளிவைப் பெற்று விட்டோம். உலகத்திற்கு தலைமைத்துவத்தை வழங்கி முழு மனித குலத்தையும் இஸ்லாத்தின் போதனைகளால் வழிநடத்துவதே அந்த இலட்சியம் என்ற கருத்தில் நாம் ஒன்றுபட்டு விட்டோம். இஸ்லாம் அல்லாத எதன் மூலமும் மனித சமூகத்திற்கு சுபீட்சம் கிடையாது என்பதிலும் நாம் கருத்தொருமைப்படுகின்றோம். இந்த இலட்சியப் பணியை மக்களிடம் சென்றடையச் செய்யவே நாம் விரும்புகின்றோம். இஸ்லாமிய உம்மத்திற்கு இந்த இலட்சியத்தை மிகத் சரியாக விளக்குவதற்கு நாம் விழைவோம். இந்த இலட்சியப் பணியை நாம் புதிதாகக் கண்டுபிடிக்கவில்லை. இது அல்குர்னின் ஒவ்வொரு வசனத்திலும் இறைதூதரின் ஒவ்வொரு ஹதீஸிலும் மிகத் துல்லியமாக தெரியும் பணியாகும். இஸ்லாத்தை விளங்கி அதன் போதனைகளை நடைமுறைப்படுத்துவதில் முன்னுதாரணமாகத் திகழ்ந்த நபித்தோழர்களின் ஒவ்வொரு செயலிலும் பிரதிபலித்த இலட்சியமாகும். இந்தப் பணியை முஸ்லிம்கள் ஒப்புக் கொள்வதற்கு விரும்பினால் அதுவே ஈமானினதும் உண்மையான இஸ்லாத்தினதும் அத்தாட்சியாக இருக்கும்.

No comments:

Six C's of Character - Yasir Fazaga