விஸ்வ இந்து பரிஷத் அறிவிப்பு ராமர் பாலம் பாதுகாக்க 50 லட்சம் கர சேவகர்
லட்சுமணபுரி, அக். 7: “ராமர் பாலத்தை பாதுகாக்கும் பணியில் மத்திய அரசை எதிர்த்து போராட 50 லட்சம் கர சேவகர்கள் வருகிற 12ம் தேதி முதல் திரட்டப்படுவார்கள்“ என்று விஸ்வ இந்து பரிஷத் அறிவித்து இருக்கிறது.இது பற்றி விசுவ இந்து பரிஷத் பொதுச் செயலாளர் பிரவீன் தொகாடியா லட்சுமணபுரியில் நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது:ராமரால் கட்டப்பட்ட பாலத்தை இடிக்கும் முயற்சியை முறியடிக்க மத்திய அரசை எதிர்த்து போராட வருகிற 12ம் தேதி முதல் 26ம் தேதி வரை 50 லட்சம் கர சேவகர்கள் திரட்டப்படுவார்கள். அப்போது அவர்கள் “அனுமான் சாலிசா” மந்திரம் ஓதும்படி கேட்டுக் கொள்ளப்படுவார்கள். கடைசி நாளான 26ம் தேதி வால்மீகி பிறந்த தினம் ஆகும். அன்று அனைத்து கர சேவகர்களும் அனுமான் சாலிசா மந்திரம் ஓதுவார்கள்.ராமர் பாலத்தை அரசியல் பிரச்சினை ஆக்கவோ, தேர்தல் பிரச்சினை ஆக்கவோ யாரும் அனுமதிக்கப்பட மாட்டார்கள். இது சாதுக்கள், சாமியார்கள் பிரச்சினை. அவர்கள்தான் போராட்டத்துக்கு தலைமை ஏற்பார்கள். அதில் அரசியல் கட்சி தலைவர்கள் பங்கேற்க அனுமதி இல்லை. ராமர் பாலத்தை இடிக்க பிறப்பித்த உத்தரவை வாபஸ் பெற நவம்பர் 20ம் தேதி வரை மத்திய அரசுக்கு கெடு கொடுக்கப்பட்டு உள்ளது. அதற்குள் வாபஸ் பெறாவிட்டால் சாதுக்களும் சாமியார்களும் தெருவில் இறங்கி போராடுவார்கள்.இவ்வாறு பிரவீன் தொகாடியா கூறினார்.
1 comment:
Good words.
Post a Comment