கோவை குண்டு வெடிப்பு: பாஷா ஆயுள்! அன்சாரிக்கு இரட்டை ஆயுள்!
புதன், 24 அக்டோபர் 2007
கோவை குண்டு வெடிப்பு வழக்கில் பாஷாவுக்கு ஆயுள் தண்டைனயும், அச்சாரிக்கு இரட்டை ஆயுள் தண்டனையும் விதித்து நீதிபதி இன்று தீர்ப்பளித்தார்.1998 பிப்ரவரி 14ல் அத்வானியின் தேர்தல் பிரசாரத்தின்போது கோவையில் பல இடங்களில் குண்டு வெடித்தது. இதில் 58 பேர் கொல்லப்பட்டனர்.குண்டு வெடிப்பு தொடர்பாக 180 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இவர்களில் அல் உம்மா இயக்க தலைவர் பாஷா, செயலாளர் அன்சாரி, கேரள மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் அப்துல் நாசர் மதானி உட்பட 167 பேர் கைது செய்யப்பட்டனர்.இந்த வழக்கை விசாரிக்க தனி நீதிமன்றம் அமைக்கப்பட்டது. இந்த ஆண்டு ஆகஸ்ட் 1ஆம் தேதி நீதிபதி உத்ராபதி தீர்ப்பு வழங்கினார். அல் உம்மா தலைவர் பாஷா, பொதுச்செயலாளர் அன்சாரி உட்பட 158 பேர் குற்றவாளிகள் என தீர்ப்பு அளித்தது. மதானி உட்பட 8 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.70 பேர் மீது முக்கிய குற்றச்சாட்டும், 88 பேர் மீது சாதாரண குற்றச்சாட்டும் நிரூபிக்கப்பட்டன. முக்கிய குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படாத 88 குற்றவாளிகளுக் கான தண்டனைகள் அறிவிக்கப்பட்டு விட்டன.இவர்களுக்கு 9 ஆண்டு வரை சிறைத்தண்டனை அளிக்கப்பட்டது. ஏற்கனவே 9 ஆண்டுகள் வரை சிறையில் இருந்து விட்டதால், 83 பேர் விடுவிக்கப்பட்டனர். 5 பேர் வேறு வழக்குகளில் தண்டனை பெற்றிருப்பதால், சிறையில் உள்ளனர்.இதையடுத்து கூட்டுச்சதி, மதக்கலவரம் தூண்டுதல் உள்ளிட்ட முக்கிய குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்ட அல் உம்மா தலைவர் பாஷா, பொதுச்செயலாளர் அன்சாரி உட்பட 70 பேருக்கு இன்று தண்டனை அறிவிக்கப்பட்டது.நீதிபதி உத்ராபதி இன்று காலை அளித்த தீர்ப்பில், கூட்டுச்சதி, மதக்கலவரம் தூண்டுதல் ஆகிய குற்றங்கள் நிரூபிக்கப்பட்டுள்ளதால் அல் உம்மா தலைவர் எஸ்.ஏ.பாஷாவுக்கு ஆயுள் தண்டனையும், அதன் பொதுச் செயலாளர் முகமது அன்சாரிக்கு இரட்டை ஆயுள் தண்டனையும் வழங்கி உத்தரவிட்டார்.ஏனைய 70 பேருக்கான தண்டனை விவரங்களையும் நீதிபதி அறிவித்து வருகிறார். இதையொட்டி நீதிமன்ற வளாகத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.தீர்ப்புக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பாஷா, முஸ்லிம்களுக்கு மட்டும் தண்டனை வழங்கப்பட்டுள்ளது என்றும், இச்சம்பவத்தில் தொடர்புடைய இந்துக்கள் யாரும் தண்டிக்கப்படவில்லை என்று கூறினார்.இத் தீர்ப்பை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்வதாக பாஷாவின் வழக்கறிஞர் பவானி பி.மோகன் தெரிவித்தார். மேலும் இவ்வழக்கில் தங்களுகளுக்கு உரிய நியாயம் உயர் நீதிமன்றத்தில் கிடைக்கும் என்றும் அவர் கூறினார்.இதனிடையே ஜாமீன் பெறுவது தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்ய இருப்பதாகவும் பவானி மோகன் மேலும் தெரிவித்தார்.
No comments:
Post a Comment