Search This Blog

Wednesday, October 17, 2007

முத்துப்பேட்டை : முஸ்லிம் பெண்களை வெட்ட வந்த சங்பரிவார்!அப்பாவிகளை கைது செய்த காவல்துறை!

முத்துப்பேட்டை : முஸ்லிம் பெண்களை வெட்ட வந்த சங்பரிவார்!அப்பாவிகளை கைது செய்த காவல்துறை!
சங்பரிவார சக்திகளிடம் வீழந்துவிட்ட முத்துப்பேட்டை காவல்துறை தலை நிமிருமா?

அச்சிறுபாக்கம் ஷாஜஹான்
Source : http://www.tmmkonline.org/tml/others/108998.htm

முத்துப்பேட்டையில் செல்போன் நீசார்ஜ் கடை வைத்திருப்பவர் நஜிமுதீன். இவரது கடையில் ரீசார்ஜ் செய்ய வந்த சங்கர் என்பவருக்கும் இவருக்கும் பிரச்சனை ஏற்பட கைகலப்பு ஏற்படு கிறது அப்போது அந்த வழியாக வந்த பி.ஜே.பி. நகர செயலாளர் மாரிமுத்து சங்கருக்கு ஆதரவாக பிரச்சனையில் ஈடுபடுகிறார். இதையடுத்து தாக்கப்பட்ட நஜிமுதீன் முத்துப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் கொடுக்க செல்கிறார். ஆனால் 50க்கும் மேற்பட்ட சங்பரிவார கும்பல் காவல் நிலையத்தில் தயாராக நிற்கிறது. விஷயமறிந்து தமுமுக திருவாரூர் மாவட்ட துணை செயலாளர் தீன் முஹம்மது காவல் நிலையத்திற்கு சென்றார். புகார் கொடுக்க வந்தவரை தாக்க முனைந்த சங்பரிவார் கும்பலிடம் இருந்து நஜீமுதீனை அழைத்து வருகிறார்.
ஆனால் சங்பரிவார கும்பல் வெறி அடங்காமல் ஸ்டேஷன் வெளியே நிறுத்தி வைத்திருந்த முஸ்லிம்களுக்கு சொந்தமாக ஒரு ஆட்டோவை கொளுத்துகின்றனர். போலீஸும் வேடிக்கை பார்க்கிறது. அதேபோல் தம்பிக்கோட்டை என்னுமிடத்தில் பேருந்தில் வந்த முஸ்லிம் பெண்களை ஒரு கும்பல் வெட்டுவதற்காக பாய்கிறது. அப்போது தடுக்க முனைகிறார் இப்ராஹீம். அதனால் அவரை வெட்டி விட்டு கும்பல் தப்பி ஒடிவிடுகிறது.
சம்பவங்களை கேள்விப்பட்ட முத்துப்பேட்டை முஸ்லிம் இளைஞர்கள் ஒன்று திரள, கலவர அபாயம் ஏற்படு கிறது. பஜாரில் சில கடைகள் தாக்கப்படுகின்றன. உடனடியாக அதிரடிப் படை சம்பவ இடத்திற்கு வரவழைக்கப் படுகிறது.
இந்நிலையில் முத்துப்பேட்டை நகர தமுமுக செயலாளர் ஹலீம், இப்ராஹீமை வெட்டிய ரவுடிக்கும்பல் மீது வழக்கு பதிவு செய்த எண்ப்ங் நகல் வாங்குவதற்காக முத்துப்பேட்டை காவல் நிலையம் செல்கிறார். ஆனால் சங்பரிவார சிந்தனை கொண்டதாக மாறிவிட்ட முத்துப்பேட்டை காவல்துறை, ஹலீமைக் கைது செய்கிறது. நகர துணை செயலாளர் ரவூப்பையும் வீடு புகுந்து கைது செய்துள்ளனர். அது மட்டுமில்லாமல் பெருநாள் விடுமுறைக் காக வீட்டுக்கு வந்த சென்னை சதக் கல்லூரியில் பி.காம் முதலாம் ஆண்டு படிக்கும் மாணவன் தாஜிம் என்பவரை யும் கைது செய்துள்ளனர். கலவரத்தை தொடங்கி வைத்து குளிர் காய்ந்து கொண்டிருக்கும் சங்பரிவாரக் கும்பலை விட்டுவிட்டு அப்பாவி முஸ்லிம்களை கைது செய்து வரும் காவல்துறையின் போக்கு முத்துப்பேட்டை மக்களை கொதிப்படையச் செய்துள்ளது.
இதுகுறித்து நம்மிடம் பேசிய மாவட்ட துணைச் செயலாளர் தீன்முஹம்மது, கலவரத்தை ஆரம்பித்த சங்பரிவார் கும்பலையும் அதற்கு பின்புலமாக இருக்கும் மகேஷ், கருப்பு, மாரிமுத்து போன்றவர்களை கைது செய்யாமல் அப்பாவிகளை அதுவும் அடுத்த மாதம் தேர்வை எதிர்நோக்கி இருக்கும் மாணவர் உட்பட அப்பாவி முஸ்லிம்களைக் கைது செய்து வரும் போக்கு வன்மையாக கண்டிக்கத்தக்கது. அவர்களை சட்டரீதி யாக பிணையில் எடுக்க முயற்சிகள் செய்து வருகிறோம். உண்மைக் குற்றவாளிகளை கைது செய்யாமல் விட்டு விடும் போக்கினால்தான் முத்துப் பேட்டையில் அவ்வப்போது கலவரம் நடக்கிறது என்றார்.
முத்துப்பேட்டை ஐக்கிய ஜமாத் தலைவர் பஷீர் கூறுகையில்,
''கடந்த 15 வருடங்களாக இதுபோன்று பிரச்சினைகள் ஏற்படுவது சாதாரணமாகி விட்டது. இதற்குக் காரணம் பிரச்சினையை உண்டாக்கி அரசியல் ஆதாயம் தேட நினைக்கும் பி.ஜே.பி., இந்து முன்னணி குறிப்பாக பி.ஜே.பி. மாவட்டச் செயலாளர் கருப்பு போன்றவர்கள்தான். ஆனால் ஒவ்வொரு முறையும் உண்மைக் குற்றவாளிகளை விட்டுவிட்டு அப்பாவிகளையும், சம்பந்தமில்லாதவர்களையும் கைது செய்வது காவல் துறையின் வாடிக்கையாகி விட்டது.
* முத்துப்பேட்டையில் பல ஆண்டு களாக அடிக்கடி நடைபெறும் கலவரத் திற்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும்
* இந்த ஆண்டு 3.1.2007 அன்று மாலை 4 மணிக்கு மன்னார்குடியில் கோட்டாட்சியரால் அழைக்கப்பட்டு நடந்த சமாதானக் கூட்டத்தில் ஏற்பட்ட எழுத்துமூலமாக சமாதான உடன்படிக்கை யின்படி 'முஸ்லிம் ஜமாத்' தரப்பினர் நடந்து கொண்ட பிறகும், தான் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றத் தவறிய ஆர்.டி.ஓ. மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்
* ஒவ்வொரு கலவரத்தின் போதும் உண்மையான குற்றவாளிகள் யார் என்று காவல்துறை அறிந்தும் அவர்களைக் கைது செய்யாமல் அப்பாவிகளை இரவு நேரங்களில் கைது செய்வதையும் அவர்களைத் துன்புறுத்துவதை நிறுத்த வேண்டும்.
* பல ஆண்டுகளாக நடைபெற்று வரும் கலவரங்களில் முஸ்லிம்களுக்கு ஏற்பட்ட இழப்புகளுக்கு சரியான நிவாரணத்தை (இழப்பீடு) அரசு வழங்க வேண்டும்
* காவல் நிலையம் எதிரிலேயே ஒரு முஸ்லிம் சகோதரரின் ஆட்டோவை தீயிட்டுக் கொளுத்தி நாசப்படுத்தக்கூடிய அளவுக்கு சமூக விரோதிகளின் அராஜகம் அசுர வளர்ச்சி அடைந்திருப் பதை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்
* முத்துப்பேட்டை நகர பகுதியில் எப்போதுமே ஒரு சிறிய பிரச்சினை ஏற்பட்டால் கூட சம்பந்தமே இல்லாமல் பட்டுக்கோட்டையிலிருந்து முத்துப் பேட்டைக்கு வரும் பேருந்தில் பயணிக்கும் அப்பாவி முஸ்லிம்கள் மீது பி.ஜே.பி. வகையறாக்களால் அடிக்கடி நடத்தப்படும் கொலைவெறித் தாக்குதலை தடுத்து நிறுத்த வேண்டும்.
- என்றார் ஐக்கிய ஜமாத் தலைவர் பஷீர்.
இந்நிலையில் அக்டோபர் 15 அன்று மாநிலச் செயலாளர் எம். தமிமுன் அன்சாரி முத்துப்பேட்டைக்கு நேரில் சென்று நிலைமைகளை ஆய்வு செய்தார்.
மாநில துணைச் செயலாளர் பேராசிரியர் ஹாஜாகனி தலைமையில் தமுமுக குழு ஒன்று திருவாரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் சந்திரசேகரனை சந்தித்து முத்துப்பேட்டை நிலைமைகளை எடுத்துரைத்து நியாயம் வழங்கக் கோரியது.
தமுமுக தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ் மற்றும் பொதுச் செயலாளர் ஹைதர் அலி ஆகியோர் தலைமைச் செயலகத்தில் அரசு உயர் அதிகாரிகளை சந்தித்து முத்துப்பேட்டை நிலவரங்களை எடுத்துக் கூறினர். அப்பாவிகளைக் கைது செய்வது பிரச்சினைக்கு எவ்வகையிலும் தீர்வு தராது என்பதை அவர்கள் எடுத்துரைத்து, கைது செய்யப்பட்ட அப்பாவிகளை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் எனக் கோரினர்.
சங்பரிவார சக்திகளிடம் வீழந்துவிட்ட முத்துப்பேட்டை காவல்துறை தலை நிமிருமா?

No comments:

Six C's of Character - Yasir Fazaga