Search This Blog

Tuesday, October 23, 2007

ஈராக்கில் போர்- தயாராக தீவிரவாதிகளுக்கு பின்லேடன்

ஈராக்கில் போர்- தயாராக தீவிரவாதிகளுக்கு பின்லேடன் அழைப்புசெவ்வாய்க்கிழமை, அக்டோபர் 23, 2007

பாக்தாத்: ஈராக்கில் பெரிய அளவில் புனிதப் போர் தொடுக்க பிரிந்து கிடக்கும் தீவிரவாத அமைப்புகள் ஒருங்கிணைந்து தாக்குதலுக்குத் தயாராக வேண்டும் என்று அல் கொய்தா அமைப்பின் தலைவர் ஒசாமா பின் லேடன் அழைப்பு விடுத்துள்ளார்.அமெரிக்கா நீண்ட காலமாக தேடி வரும் பின் லேடன் உயிருடன் இருக்கிறாரா, இல்லையா என்ற சர்ச்சை இன்னும் முடிந்த பாடில்லை. ஆனால் லேடனின் பேச்சுக்கள் அடங்கிய ஆடியோவும், வீடியோவும் அவ்வப்போது வெளியாகி வந்தன.ஆனால் கடந்த சில வருடங்களாக லேடனின் வீடியோ எதுவும் வெளியாகாமல் இருந்தது. இந்த நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் லேடனின் புதிய வீடியோ வெளியானது. இது உண்மையான வீடியோதான் என்று கூறப்பட்டதால் லேடன் உயிருடன் இருப்பதாக உறுதியாக நம்பப்படுகிறது.இந்த நிலையில் அல்ஜசீரா டிவியில் லேடனின் புதிய உரை ஒன்று ஒளிபரப்பாகியுள்ளது. அதில், ஈராக்கில் முழு அளவிலான புனிதப் ேபாருக்கு ஆயத்தமாக வேண்டும் என தீவிரவாதிகளுக்கு லேடன் அழைப்பு விடுத்துள்ளார்.லேடனின் உரையில், ஈராக் அரசுக்கும், அமெரிக்க நாட்டு படைக்கும் எதிராக போராடும் சில இயக்கங்கள் தற்போது சிதறி கிடக்கின்றன. புனிதப்போர் நடத்தும் தங்களுடைய கடமையிலிருந்து அவர்கள் பின்வாங்க கூடாது.சோர்வு அடையாமல் அனைத்து இயக்கங்களும் ஒன்றிணைந்து ஈராக்கில் பெரியளவில் தாக்குதலுக்கு தயாராக வேண்டும்.உலகம் முழுவதும் பிரிந்து கிடக்கும் இயக்கங்கள் அனைத்தும் ஒன்று சேர வேண்டும். பிரிந்து சென்றவர்கள் அனைவரும் திருந்தி திரும்பி வாருங்கள். தாக்குதலுக்கு தயாராவோம் என்று அதில் கூறியுள்ளார் லேடன்.பிரிந்து கிடக்கும் தீவிரவாதிகளை ஒருங்கிணைக்க அல் கொய்தா அமைப்பில் புதிய முயற்சிகள் தொடங்கியுள்ளதையே லேடனின் பேச்சு வெளிக்காட்டுவதாக உள்ளதாக கூறப்படுகிறது. எனவே லேடனின் இந்தப் புதிய பேச்சு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

No comments:

Six C's of Character - Yasir Fazaga