ஃபலஸ்தீன் – தொடரும் யூத பயங்கரவாதம்!
Posted By தேங்கை முனீப் On January 19, 2009 (7:48 am) In செய்திகள், நிகழ்வுகள், பாலஸ்தீன் வரலாறு
மோசடி, சூழ்ச்சி, துரோகம், நயவ ஞ்சகம் இவற்றுக்குப் பெயர்போனவர்கள் யூதர்கள் என்றால் மிகையாகாது. வரலாறு நெடுகிலும் இத்தகைய குணம் கொண்ட யூதர்கள் இன்று உலகிலேயே மிகப் பெரிய பயங்கரவாத சக்திகளாக விளங்குகின்றனர்.
"உங்களைக் கடுமையாக நோவினை செய்து, உங்கள் ஆண்மக்களை அறுகொலை செய்து உங்கள் பெண்மக்களை மட்டும் வாழ விட்ட ஃபிர்அவ்னிடமிருந்து உங்களைக் காப்பாற்றினானே அதை நினைத்துப் பாருங்கள்" (2:49) என்று அல்லாஹ் இந்த யூதர்களுக்குச் செய்த அருட்கொடையை நினைவூட்டிய போதும் ஒவ்வொரு காலகட்டத்திலும் அல்லாஹ்வின் உதவியையே மறந்து துரோகம் இழைத்தனர் யூதர்கள். இன்று அந்த ஃபிர்அவ்ன் செய்ததையும் மீறி ஃபலஸ்தீனில் ஆண்குழந்தை பெண்குழந்தை என்று பாராமல் சக்தி வாய்ந்த குண்டுகளை வீசித் தாக்கிக் கொண்டிருக்கின்றனர்.
20 ஆம் நூற்றாண்டின் தொடக்க காலங்களில் ஃபலஸ்தீன் அரரபுகளின் சுதந்திர தேசமாகவே இருந்தது. நாடோடிகளாகத் திரிந்த யூதர்களை அரவணைத்து இடமளித்த அன்றைய ஃபலஸ்தீன முஸ்லிம்கள் யூதர்களின் சூழ்ச்சியை அறியவில்லை. 1948 ல் ஃபலஸ்தீன் மண்ணின் இதயத்தைப் பிளந்து இஸ்ரேல் என்ற தனிநாட்டை ஜக்கிய நாடுகள் சபையின் துணையுடன் உருவாக்கிக் கொடுத்தன ஆதிக்க சக்திகளான இங்கிலாந்தும் அமெரிக்காவும். சொந்த மண்ணில் உரிமையிழந்து அகதிகளாக விரட்டப்பட்டனர் ஃபலஸ்தீன் முஸ்லிம்கள். ஆனால் யூதர்களோ தங்கள் துரோகச் செயலை அதிகப்படுத்திக் கொண்டனர். நாட்டைப் பாதுகாக்கிறோம் என்ற பெயரில் சிறுகச் சிறுக ஃபலஸ்தீனின் பகுதிகளைக் கைப்பற்றி மொத்த ஃபலஸ்தீனின் எண்பது சதவிகித பகுதியையும் தங்கள் வசமாக்கிக் கொண்டனர். மீதமுள்ள இருபது சதவிகித பூமியிலும் மண்ணின் மைந்தர்களை நிம்மதியாக வாழவிடவில்லை.
தேசப் பாதுகாப்பு என்ற பெயரில் அன்றிலிருந்து இன்று வரை ஃபலஸ்தீன் தேசத்தில் இஸ்ரேல் இனப்படுகொலைகளை நடத்திக் கொண்டிருக்கிறது. தங்கள் சொந்த மண்ணுக்காகப் போராடி வரும் ஃபலஸ்தீன் மக்களை தீவிரவாதிகள் என்று முத்திரை குத்தியதுடன் அவர்களை ஒடுக்குகிறோம் என்ற பெயரில் இத்தகைய இனப்படுகொலைகளை உலக அரங்கில் நியாயப்படுத்துகிறது இஸ்ரேல்.
உங்களுக்கென ஒதுக்கப்பட்ட பகுதியுடன் ஒதுங்கிக் கொள்ளுங்கள். எங்களை சுதந்திரமாக வாழ விடுங்கள் என்ற ஃபலஸ்தீன் மக்களின் கோரிக்கையை இஸ்ரேல் பொருட்படுத்தவில்லை.
ஃஃபலஸ்தீனின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ளது கஸ்ஸா நகரம். 362 சதுர கி.மீ பரப்பளவு கொண்ட இப்பகுதியில் கிட்டத்தட்ட 15 லட்சம் மக்கள் வசிக்கின்றனர். இவர்களின் அன்றாட வாழ்வு இன்று கேள்விக்குறியாக உள்ளது. உலகின் மிகப்பெரிய திறந்த வெளிச் சிறைச்சாலையைப் போன்று இந்நகரை அடக்கி இஸ்ரேல் வெறியாட்டம் நடத்தி வருகிறது.
இஸ்ரேல் கஸ்ஸா நகரத்தின் எல்லைகளை மூடியதுடன் பொருளாதாரத் தடையையும் விதித்துள்ளது. இதனால் அத்தியாவசியப் பொருட்களின்,இறக்குமதி பாதிக்கப்பட்டு அம்மக்களின் உயிர் வாழ்க்கை கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தான் கடந்த டிசம்பரிலிருந்து இஸ்ரேல் கஸ்ஸா நகர்மீது கொலைவெறித் தாக்குதல் நடத்திக் கொண்டிருக்கிறது. சிறு குழந்தைகளையும் பொதுமக்களையும் குறிவைத்துத் தாக்குகிறது. மின் உற்பத்தி நிலையம் குண்டு வைத்துத் தகர்க்கப்பட்டு நகரமே இருளில் மூழ்குகிறது. பள்ளிக்கூடங்கள் மருத்துவ சாலைகளைக் கூட விட்டுவைக்க வில்லை. இது வரை நடந்த தாக்குதல்களில் கொல்லப்பட்டவர்களில் அதிகம் பேர் குழந்தைகளும் பெண்களும். குழந்தைகளைக் குறிவைத்து நடத்திய இத்தாக்குதலை உலகமே கண்டனக் குரல் எழுப்பியும் இஸ்ரேலின் வெறி அடங்கவில்லை.
எப்போது நம்மீது குண்டு விழுமோ என்ற பீதியில் கஸ்ஸா நகர மக்கள் ஒவ்வொரு இரவையும் கழித்துக் கொண்டிருக்கின்றனர். குழந்தைகள் மரண பயத்தால் தாய் தந்தையரைக் கட்டிப் பிடித்துக் கொண்டிருக்கின்றன. பத்து மாதம் சுமந்து வேதனைப் பட்டு பெற்று சில நாட்களே ஆன குழந்தை ஏவுகணைத் தாக்குதலுக்குப் பலி! தன் கண் முன்னே இறந்து கிடக்கும் தாயை தூங்கிக் கொண்டிருப்பதாக நினைத்து எழுப்பும் பாலகன்! தாக்குதல்களில் காயம் பட்டவர்களுக்கு அவசர உதவி செய்யும் மக்கள் கூட்டத்தை நோக்கி மீண்டும் தாக்குதல்! ஓரே குடும்பத்தைச் சேர்ந்த அனைவரும் பலி! எங்கும் மரண ஓலம்! சதைப் பிண்டங்கள், குப்பைக் கூளங்கள்! கடும் குளிர்! மின்சாரம் துண்டிப்பு! இவை அனைத்தும் இன்றைய கஸ்ஸா நகரின் கோரக் காட்சிகள்.
ஒருபக்கம் ஆயுதங்களுடன் அமெரிக்காவின் கப்பல் இஸ்ரேலில் இறங்குகிறது. இன்னொரு புறம் அத்தியாவசிய உதவிப் பொருட்களுடன் கஸ்ஸாவை நோக்கி வந்த செம்பிறைச் சங்கத்தின் கப்பலை இஸ்ரேல் தடுத்து வைக்கிறது. வானிலிருந்தும், தரையிலிருந்தும், கடலிலிருந்தும் மும்முனைத் தாக்குதல்கள் ஃபலஸ்தீன் மக்களை அலைக்கழித்துக் கொண்டிருக்கிறது. இதுவரை நடந்த தாக்குதல்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டு விட்டனர்.ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்துள்ளனர். இடிக்கப்பட்ட வீடுகளின் இடிபாடுகளுக்கு மேல் கூடாரம் அமைத்து தங்கும் மக்கள்! மரண பீதியில் வீடுகளை விட்டும் ஆயிரக்கணக்கில் வெளியேறும் அகதிகள்!
பயங்கரவாதம், தீவிரவாதம் குறித்துப் பொங்கி எழுந்த குரல்கள் கஸ்ஸா நகரத்தில் நடக்கும் அட்டூழியத்தை எதிர்க்கத் திரானியில்லாமல் அடங்கியுள்ளன. பச்சிளம் குழந்தைகள் மீது பாஸ்பரஸ் குண்டுகள் வீசிப் படுகொலை செய்வது இவர்களின் கண்களுக்கு பயங்கரவாதமாகத் தெரியவில்லை. காயம் அடைந்தவர்களுக்கு மருத்துவ உதவி கூட கிடைக்காமல் தடைசெய்யப்படுவது பயங்கரவாதமாகத் தெரியவில்லை. சர்வதேச போர் விதிமுறைகளை சற்றும் சட்டை செய்யாமல் இஸ்ரேல் நடத்தி வரும் இந்த அராஜகங்களை ஏன் ஜக்கிய நாடுகள் சபையால் தடுத்து நிறுத்த இயலவில்லை? காரணம் அமெரிக்காவின் கண்களுக்கு இவை பயங்கரவாதமாகத் தெரியவில்லை. ஐக்கிய நாடுகள் சபை அமெரிக்காவின் கைப்பிள்ளை. இஸ்ரேலோ அமெரிக்காவின் கள்ளப் பிள்ளை. மும்பைத் தாக்குதலைக் குறித்து தனது கண்டனத்தைப் பதிவு செய்த அமெரிக்க அதிபராக வரப்போகும் ஒபாமா இஸ்ரேல் விவகாரம் குறித்து வாய் திறக்கவில்லை.
ஃபலஸ்தீன் பிரச்சினையில் அரபு நாடுகள் ஒன்றிணைந்து உறுதியான முடிவு எடுக்க வேண்டும். வளைகுடா நாடுகளில் ஒன்றான கத்தர் இஸ்ரேலுடன் வியாபாரத் தொடர்பைத் துண்டித்துள்ளது. அத்துடன் இஸ்லரலுடனான அனைத்து உறவுகளையும் பயங்கரவாதத்தை எதிர்க்கும் நாடுகள் முறித்துக் கொள்ள வேண்டும். ஃபலஸ்தீன் மக்களுக்கு ராணுவ ரீதியாக அவை உதவ முன்வர வேண்டும்.
இந்தியா வல்லரசாக வளர்ந்து வரும் நாடு. ஃபலஸ்தீன் பிரச்சினையில் இந்தியா தனது எதிர்ப்பைப் பதிவு செய்தாலும் இஸ்ரேலுடன் ஆன உறவும் நீடிக்கிறது. இந்திய மண்ணிலிருந்து இஸ்ரேலின் செயற்கைக் கோள்கள் பறக்கின்றன. தன் நாட்டு மக்களின் உணர்வுகளைப் புரிந்து இந்திய அரசு ஃபலஸ்தீன் விவகாரத்தில் நீதியுளடன் நடந்து கொள்ள வேண்டும் முஸ்லிம்களின் எதிர்ப்புக் குரல்கள் ஆட்சியாளர்களைச் சென்றடைய வேண்டும்.
ஃபலஸ்தீன் மக்களுக்கு ஆதிக்க சக்திகள் நீதி வழங்குமோ இல்லையோ எல்லாவற்றையும் கண்காணித்துக் கொண்டிருக்கும் வல்ல இறைவன் நிச்சயம் நீதி வழங்குவான்.
இஸ்ரவேலர்களைக் குறித்த முன்னறிவிப்பும் எச்சரிக்கையும்.
நாம் இஸ்ராயீலின் சந்ததியினருக்கு (முன்னறிவிப்பாக தவ்ராத்) வேதத்தில்; "நிச்சயமாக நீங்கள் பூமியில் இருமுறை குழப்பம் உண்டாக்குவீர்கள்; ஆணவத்துடன், பெரும் அழிச்சாட்டியங்கள் செய்பவர்களாக நடந்து கொவீர்கள்" என்று அறிவித்தோம். எனவே, அவ்விரண்டில் முதலாவது வாக்குறுதி வந்த போது, உங்களுக்கு எதிராக (போரில்) கடுமையான வலிமையுடைய நம் அடியார்களை ஏவி விட்டோம்; அவர்கள் உங்கள் வீடுகளில் புகுந்து (உங்களையும். உங்கள் பொருள்களையும்) தேடி (அழித்து) விட்டார்கள்; (இவ்வாறு முதல்) வாக்குறுதி நிறைவேறியது. பின்னர் அவர்கள் மீது வெற்றியடையும் வாய்ப்பை உங்கள்பால் திருப்பினோம்; ஏராளமான பொருள்களையும், புதல்வர்களையும் (தந்தது) கொண்டு உங்களுக்கு உதவி செய்து, உங்களைத் திரளான கூட்டத்தினராகவும் ஆக்கினோம். (அல்குர்ஆன் 17: 5,6)
சரித்திரத்தின் பல்வேறு கட்டங்களில் யூதர்கள் அக்கிரமம் இழைத்த போதெல்லாம் அல்லாஹ் அவர்களைத் தண்டித்ததை மேற்கண்ட வசனங்களில் கூறுகிறான். அதன் பின்னர் அவர்களுக்கு வெற்றியை அளிக்கவும் செய்தான். ஆனால் மீண்டும் வரம்பு மீறுதலில் ஈடுபட்டால் மீண்டும் அவர்களுக்கு அழிவு உண்டு என்று எச்சரித்துள்ளான்.
(இதன் பின்னரும் நீங்கள் திருந்திக் கொண்டால்) உங்கள் இறைவன் உங்கள் மீது கருணை புரியப்போதும். ஆனால், நீங்கள் (பாவத்தின் பக்கமே) திரும்புவீர்களானால், நாமும் (முன் போல் தண்டிக்கத்) திரும்புவோம்; மேலும் காஃபிர்களுக்கு ஜஹன்ன(ம் எனும் நரக)த்தைச் சிறைச்சாலையாக ஆக்கி வைத்துள்ளோம். (17:8)
அல்லாஹ் தன் திருமறையில் சுட்டிக்காட்டியதைப் போல் இன்று மிகப்பெரும் அழிச்சாட்டியத்திலும் வரம்பு மீறுதலிலும் இந்த மனித மிருகங்கள் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றன. நிச்சயமாக அக்கிரமம் இழைக்கப்பட்டவர்களுக்கு அவனது உதவி வந்தே தீரும். அது வரை நாம் கையேந்திப் பிரார்த்திப்போம். ஃபலஸ்தீன் மக்களுக்கு விடுதலை கிடைக்க, அக்கிரமக்காரர்களின் பிடியிலிருந்து அவர்கள் விடுபட, அங்குள்ள குழந்தைகள் நிம்மதியாகத் தங்கள் இரவுகளைக் கழிக்க, யூதர்களின் கையிலிருந்து நமது மூன்றாம் புனிதத் தலமாகிய மஸ்ஜிதுல் அக்ஸா விடு பட எல்லாம் வல்ல அல்லாஹ்வை ஒவ்வொரு தொழுகையிலும் துஆ செய்வோம்.
நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்:
"நீங்கள் யூதர்களுடன் போர் செய்யாதவரை மறுமை நாள் ஏற்படாது. எது வரையெனில், ஒரு கல்லின் பின்னால் யூதன் (ஒளிந்து) இருக்க, அக்கல்லோ இதோ என் பின்னால் யூதன்! முஸ்லிமே இவனைக் கொன்று விடு என்று கூறும்".
(புகாரி – ஹதீஸ் எண் 2926)
Article taken from இஸ்லாம்கல்வி.காம் - Portal - http://www.islamkalvi.com/portal
URL to article: http://www.islamkalvi.com/portal/?p=1576
No comments:
Post a Comment