Search This Blog

Sunday, September 23, 2007

சிந்தாதிரிப்பேட்டை இந்து முன்னணி அலுவலகத்தில் 50 பேர் கும்பல் தாக்குதல்

சிந்தாதிரிப்பேட்டை இந்து முன்னணி அலுவலகத்தில் 50 பேர் கும்பல் தாக்குதல்: ராமகோபாலன் பாதுகாப்பு அதிகாரி- போலீஸ்காரர் படுகாயம்
சென்னை, செப். 23-
சிந்தாதிரிப்பேட்டை மீன் மார்க்கெட் எதிரில் அய்யா முதலி தெருவில் இந்து முன்னணி அலுவலகம் உள்ளது. இன்று காலை 50 பேர் கொண்ட கும்பல் மோட்டார் சைக்கிளில் இந்து முன்னணி அலுவலகத்துக்கு வந்தனர்.
பின்னர் திடீரென கல்வீசி தாக்குதலில் ஈடுபட்டனர். பீர்பாட்டிலையும் தூக்கி வீசினார்கள். இதில் அலுவலகத்தின் கண்ணாடிகள் உடைந்து நொறுங்கின.
அப்போது அங்கு குமரேசன் என்ற போலீஸ்காரர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். கல்வீச்சில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. ராமகோபாலனின் பாதுகாப்பு அதிகாரி விஜயனும் படுகாயம் அடைந்தார்.
தகவல் கிடைத்ததும் மத்திய சென்னை இணை கமிஷனர் பாலசுப்பிரமணியம் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார். ராமகோபாலனையும் பார்த்து பேசினார். இந்த சம்பவத்தை யொட்டி அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
தண்டையார் பேட்டை வைத்தியநாதன் மேம்பாலம் அருகே இந்து முன்னணி சார்பில் விநாயகர் சிலை வைக்கப்பட்டு இருந்தது. இன்று மதியம் அங்கிருந்து ஊர்வலமாக சிலை எடுத்துச் செல்லப்பட இருந்தது.
அப்போது சிலர் அங்கு வந்து ரோட்டில் கருணாநிதி பற்றி அவதூறான வாசகங் களை எழுதினார்கள்.
இது பற்றி கேள்விப்பட் டதும் டன்லப் ரவி தலைமை யில் 100-க்கும் மேற்பட்ட தி.மு.க.வினர் அங்கு திரண்டு வந்தனர். இரு தரப்பினரும் மோதிக் கொள்ளும் சூழ்நிலை யும் பதட்டமும் நிலவியது.
கருணாநிதி பற்றி அவதூறாக எழுதியவர்களை கைது செய்யக்கோரி தி.மு.க. வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அத்வானி கொடும்பாவியையும் எரித்த னர்.
விநாயகர் சிலை அருகே தி.மு.க.வினர் மீது செருப்பு வீசப்பட்டது. பாட்டில்களும் வீசப்பட்டன. இரு தரப்பினரும் மோதும் சூழ்நிலை உருவானது. ஒருவரை ஒருவர் அடிக்க பாய்ந்தனர். 2 ஆட்டோக்களின் கண்ணாடிகள் நொறுக்கப்பட்டன.
பதட்டம் அதிகாìத்ததைத் தொடர்ந்து போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தினரை கலைத்தனர். அந்த பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டனர்.
இந்து முன்னணி அலுவல கம் நொறுக்கப்பட்டது தொடர்பாக அதன் மாநில அமைப்பாளர் ராமகோபாலன் கூறியதாவது:-
இன்று காலையில் 82-வது வட்ட தி.மு.க. செயலாளர் பிரபாகரன் தலைமையில் 30-க்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள்களில் தி.மு.க.வினர் திரண்டு வந்து தாக்குதல் நடத்தியுள்ளனர். இது வன்மை யாக கண்டிக்கத்தக்கது. போலீஸ் வண்டியிலேயே ஏறிச்சென்று ஒரே கும்பல் தான் அனைத்து இடங்களிலும் வன்முறையில் ஈடுபடுகிறது. இது திட்டமிட்டு நடத்தப்பட்ட தாக்குதல். இந்த தாக்குதலை கண்டு நான் அஞ்சப் போவது இல்லை. இன்று மதியம் நான் தொடங்கி வைக்கும் ஊர்வலம் திட்டமிடப்படி நடக்கும். அதில் என் உயிர் போனாலும் கவலை இல்லை.
அமைச்சர் ஆற்காடு வீராசாமியை கருணாநிதி தூண்டி விட்டுள்ளார். ஆர்.கே. நகர் பவர் அவுஸ் அருகிலும் இந்து முன்னணி அமைப்பின் கொடி எரிக்கப்பட்டு விநாயகர் சிலைகள் உடைக்கப்பட்டுள் ளன. தமிழ்நாட்டில் சட்டம்- ஒழுங்கு சீர் குலைந்துள்ளது. எனவே மத்திய அரசு உடனடி யாக தமிழக அரசை டிஸ்மிஸ் செய்ய வேண்டும்.
வேதாந்தி சாமியார் கருணாநிதியை பற்றி தவறாக பேசவில்லை என அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அப்படியே அவர் பேசி இருந்தாலும் அதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்காக உத்தர பிரதேசம் சென்று போராட்டம் நடத்த வேண்டியதுதானே. இதற்காக தமிழகத்தின் அமைதியை குலைப்பதாப
காசி அல்லது அயோத்தி சென்று ராமரைபற்றி இழி வாக பேசுவதற்கு கருணாநிதி தயாராப.
இவ்வாறு ராமகோபாலன் கூறினார்.

No comments:

Six C's of Character - Yasir Fazaga