அல்-உம்மாவை சேர்ந்தவர் கோவை நீதிமன்றத்தில் சரண்
கோவை, செப்.27: இந்து முன்னணி பகுதிச் செயலர் சிவா கொலை வழக்கில் கீழ் நீதிமன்றத் தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் உறுதி செய்ததால், ஜாமீனில் இருந்த அல்-உம்மாவைச் சேர்ந்த பிலால் ஹாஜியார் கோவை விரைவு நீதிமன்றத்தில் புதன்கிழமை சரணடைந்தார்.
1991 செப்.5-ம் தேதி அதிகாலையில் நடைப் பயிற்சிக்காக சென்று கொண்டிருந்த சிவா கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக, அல்-உம்மாவைச் சேர்ந்த பாஷா, ஊம்பாபு, ஜாகிர் உசேன், சாகுல் அமீது, சபூர் ரகுமான், பிலால் ஹாஜியார், ஆரூன்பாஷா, தாஜுதின் உள்ளிட்ட 11 பேர் மீது கோவை விரைவு நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.
இதில், 10 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இதை எதிர்த்து செய்த மேல்முறையீட்டை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் தாஜுதின், ஆரூன் பாஷா ஆகியோரை விடுதலை செய்தது.
மற்றவர்களின் தண்டனையை உறுதி செய்தது. இதையடுத்து, ஜாமீனில் இருந்த பிலால் ஹாஜியார் கோவை நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
No comments:
Post a Comment