களவொழுக்கம்பற்றி-திமிர்வாதம் பேசும்தினமணியும்-பூவுலகில்ராமனாகஅவதரித்த திருமாலின் காமக்களியாட்டங்களும்!
நன்றி: `முரசொலி, 23-9-2007)
தினமணியில் ஓர் ஆர்.எஸ்.எஸ். பார்ப்பனர் ஆசிரியர் பொறுப்பில் அமர்த்தப்பட்டிருக்கிறார்! அவர் பொறுப்பு ஏற்ற முதல் நாளிலிருந்தே தினமணியை ஆர்.எஸ்.எஸ். மத வெறிக்கும்பலின் ஊதுகுழலாக மாற்ற அரும்பாடு பட்டு வருகிறார்! இவரது கருத்து, எழுத்து எல்லாமே சோவை அடியொற்றியவை. சோவும் ஆர்.எஸ்.எஸ்.காரர்தான், நான் எந்தக் கட்சியும் இல்லை என்று செல்லியபடியே தி.மு.க.வை பக்கம் பக்கமாய்த் தாக்கி எழுதுவார் பா.ஜ.க.வைத் தாங்கிப் பிடிப்பார்.
பார்ப்பனத்தியான ஜெயலலிதா எவ்வளவு அராஜகம் - ஊழல் செய்தாலும் அதனையெல்லாம் கண்டு கொள்ளாமல் அவருக்கு கில்ட் - தங்கமுலாம் பூசி அவருக்குப் பளபளப்பு ஏற்படுத்த இடை விடாமல் எழுதுவார். அப்படிப்பட்ட சோவின் பட்டறையில் உருவான - அவரது அத்தியந்த சீடர்தான் தினமணியின் ஆசிரியப் பொறுப்பில் அமர்ந்திருக்கும் வைத்தியநாத அய்யர்!
நாள்தோறும் தி.மு.க.வை விமர்சிப்பது என்ற பேரால் அப்பதங் களையே தலையங்கமாகவும், செய்தித் தலைப்புகளாகவும் - கேலிச் சித்திரங்களாகவும் வெளியிட்டு வரும் தினமணி - 22-9-2007 சனியன்று கடவுள் காப்பாற்றட்டும் என்ற தலைப்பில் எழுதியுள்ள தலையங்கத்தில் கலைஞர் மீது சேறு வாரி இறைத்து இருக்கிறது. தலையங்கம் முழுவதும் பார்ப்பனத் திமிரே பரவிக்கிடக்கிறது.
ஆயிரக்கணக்கான வருடங்களாகத் திரும்பத் திரும்பச் சொல்லியும் எழுதியும் கேட்டும், பார்த்தும் திகட்டாத ஒரு காவியத்தை (இராமாயணத்தை) இவரது களவொழுக்கக் கதைகளுடன் ஒப்பிடுவது எந்த விதத்தில் நியாயம்?
தேவையில்லாமல் இராமரை முதல்வர் விமர்சிக்க வேண்டிய அவசியம்தான் என்ன?
தன்னுடைய மூன்றாம் தர களவொழுக்கக் கதாநாயகர்களுடன் காவிய நாயகனான இராமரை ஒப்பிட வேண்டிய அவசியம் என்ன? என்றெல்லாம் விஷத்தை கக்கி இருக்கிறது தினமணி தலையங்கம்!
இராமன் ஏகபத்தினி விரதன் என்பதெல்லாம் அவருடைய கவனத்தைக் கவரவில்லை என்றால் எங்கே கோளாறு - என்று கேட்கிறார் வைத்தியநாத அய்யர்.
இராமனைப் பெற்றதாகக் கூறப்படும் தசரதனுக்கு 60 ஆயிரம் மனைவிகள் என்று எழுதி வைக்கப்பட்டிருப்பதை ஏனோ அய்யர்வாள் மறுத்துவிட்டார் அல்லது மறந்தது போல் நடிக்கிறார்!இராமர் கடவுள் அதாவது மகாவிஷ்ணுதான் பூவுலகில் இராமராக அவதரித்தார் என்கிறது இராமாயணம்.
ஏகபத்தினி விரதனாக பூவுலகில் அவதரித்த விஷ்ணு, திருமாலின் யோக்கியதை என்ன? திருமாலாக இருந்த போது, அவர் செய்த காமக் கொடூரங்கள் என்னென்ன?
இராமாயண ஆராய்ச்சி என்ற புத்தகத்தில் சந்திரசேகரப் பாவலர் வால்மீகி இராமாயணம், கம்பராமாயணம் உள்ளிட்ட பல்வேறு இராமாயணங்களையும் ஆய்வு செய்து இராமனாக அவதரித்த திருமாலின் யோக்கியதை - காமக் களியாட்டங்கள் பற்றி ஆதாரங்களோடு அம்பலப் படுத்தியிருக்கிறார்.
சந்திரசேகரப் பாவலரின், இயற்பெயர் இ.மு.சுப்பிரமணியப் பிள்ளை, நெல்லையைச் சேர்ந்த இவர் பழுத்த சைவப் புலவர் - சீரிய ஆராய்ச்சியாளர். இவர் இராமாயணம் கடவுள் கதை அல்ல; கட்டுக் கதை என்பதை, பல்வேறு இராமாயணங்களை ஒப்பிட்டு எழுதிய போது - தினமணி வைத்தியநாத அய்யர், சோ, சரத் குமார், விஜயகாந்த், இல.கணேசன் போன்றோர்கள் பிறந்திருக்கவே இல்லை!
1927 முதலே தந்தை பெரியார் அவர்களின் பச்சை அட்டைக் குடிஅரசு ஏட்டில் தொடர்ந்து எழுதினார் சந்திரசேகரப் பாவலர். அவரது இராமாயண ஆராய்ச்சி முதன் முதலாக 1929 லேயே புத்தகமாக வெளிவந்தது. பெரியார் சுய மரியாதைப் பிரச்சார நிறுவனம் வெளியிட்ட புத்தகம் அது.
1920 களில் - இராமன் பிறப்பு பற்றியும் இராமனாக பூவுலகில் அவதரித்த திருமாலின் யோக்கியதை - காமக் கொடூரக் களியாட்டங்கள் பற்றியும் சந்திரசேகரப் பாவலர் எழுதிய விமர்சனத்தின் ஒரு பகுதி வருமாறு: இராமாயணம் ஏழு காண்டங்களாகப் பிரிக்கப் பெற்றுள்ளது. அவையாவன:
பால காண்டம், அயோத்தியா காண்டம், ஆரணிய காண்டம், கிஷ்கிந்தா காண்டம், சுந்தர காண்டம், யுத்த காண்டம், உத்தர காண்டம். இவற்றில் முதலாவதாகிய பால காண்டத்தை முதலில் ஆராய்வோம்.
இராவணேசுவரனால் துன்பமடைந்த தேவர்கள் யாவரும், இந்திரனோடு நான்முகன் உலகடைந்து தங்கள் குறையைத் தெரிவித்துக் கொண்டிருந்தனர். அப்போது திருமாலும் அங்கே வந்து சேர்ந்தார். உடனே நான்முகனும் தேவர்களும் அவரைப் பூமியில் மனிதனாகப் பிறந்து இராவணனைக் கொன்று வர வேண்டுமென்று வேண்டிக் கொண்டனர். அவ்வேண்டுதலுக்கு தாமும் இசைந்து, அவர்களை நோக்கித் திருமால், தசரத மன்னருக்கு மகனாகப் பிறந்து இராவணனைக் கொன்று பதினோராயிரம் ஆண்டு வாழ்ந்து பின்னர் இங்கே வருவேன் என்று கூறினார். அவ்வாறே தசரதனுக்கு மகனாகப் பிறந்தார். இவ்வாறு பிறப்பதற்கு ஆதாரமான மற்ற காரணங்களையும் ஆராய்வோம்.
(1) ஒரு கால் திருமால் பிருகு முனிவருடைய மனைவியைக் கொன்று விட்டார். அதனால் அம் முனிவர் திருமாலை நோக்கி மனிதனாகப் பிறந்து மனைவியை இழந்து வருந்தும்படிச் சபித்துவிட்டார். இது முதற் காரணம். இது வால்மீகி இராமாயண உத்தர காண்டம் அய்ம்பத்தோராம் சருக்கத்திலுள்ளது. அங்கே விவரமாக ஆராய்வோம். இதே செய்தி, மகாஸ்காந்த புராணம் உபதேச காண்டம், அறுபத்து நாலாம் அத்தியாயத்திலும் கூறப் பெற்றுள்ளது.
(2) சலந்தராசுரனுக்கு மனைவியாகிய பிருந்தையைச் சேர வேண்டும் என்னும் காதல் மிகக் கொண்ட திருமால், அவ்வசுரன் இறந்தமை கண்டு அவனுடலில் நுழைந்து கொண்டு அவளிடம் இன்பம் நுகர்ந்து கொண்டிருந்தார்.
சில நாள்களில் அவரை அக்கற்பரசி இன்னாரென அறிந்து கொண்டு, மாயையினால் என்னோடு கூடி அதனால் பிறர் மனையாளைப் புணரலென்னும் குற்றத்திற்குள்ளாகிய ஏ திருமாலே! உன் மனைவியைப் பகைவன் வஞ்சனையா லெடுத்துப் போகக் கடவன். என் கணவன் உடம்பினைக் குரங்குகளால் நீ கொண்டு வந்ததனாலே நீயும் குரங்குகளோடு சேர்ந்து காட்டில் அலையக் கடவாய் என்று சபித்தாள். பின் உடனே அவள் தீக்குளித்துக் கெட்ட தன் உடம்பைச் சாம்பலாக்கினாள். இச் செய்தி மகா ஸ்காந்த புராணம் தக்க காண்டம் இருபத்து மூன்றாம் அத்தியாயத்திலுள்ளது. பின் திருமால் அவள் சாம்பலிற் கிடந்து புரண்டார். அதன் பின் அச்சாம்பலில் முளைத்த துளசியை அணிந்து மயக்கந் தீர்ந்தார் என்பது இரண்டாவது காரணம்.
(3) ஒரு பிரதோஷ வேளையிலே திருமால் மனித உடம்போடு திருமகளைப் புணர்ந்து கொண்டிருந்தார். அப்போது சோதனைக்குச் சென்ற அற்புதாக்கன் என்னும் சிவகணத் தலைவன் அவரை நோக்கி, நீ யாரடா? என்று கேட்டான். அதற்குக் கொஞ்சமும் வெட்கமின்றி விலகாமல், திருமால், அவள் மேலிருந்த வண்ணமாகவே கேட்பது யாரடா? என்றார். இவ்வெறுக்கத் தகுந்த செயலைக் கண்டு மீண்டும் அத் தலைவன் இச்செய்யை நந்தி பிரானிடம் தெரிவித்தான். உடனே நந்தி தேவர் அத் திருமாலைப் பூமியில் இராமனாய்ப் பிறந்து மனைவியைப் பிரிந்து வருந்துமாறு சபித்தார். இச்செய்தி சிவ ரகசியத்து மூன்றாம் அம்சத்து இரண்டாம் காண்டம் நாற்பத்து மூன்றாம் சருக்கத்தில் காண்க.
அச்செய்யுள் வருமாறு:-
அவனை நீ யாவனடாவென்று கேட்டேன்அம்புயப் பெண்ணைத்தழுவனீங்க கில்லான் யவ்வனமாதுடன் கூடி யிலச்சையின்றி யென்னை நீ யாவனடா வென்று கேட்டான்.
கவனமுறு மிவன்தூர்த்த னென்று கண்டேன்கருத்திலவன் றனைந்தள்ள வல்லே னெம்மான்சினனருள்சே ருனதாணை குறித்து மீண்டேன் தேவரீ ரிதொரு புதுமை யவன்பாற் கண்டேன்.மன்னவன் தன்மைந்னா மிராமனாகிவந்து பிறந் திடக் கடவ னாகுமன்றேஇது போன்றதொரு செய்தி சிவரகசியம் 3 ஆம் அம்சம், 2 ஆம் காண்டம், 4 ஆம் சருக்கத்திலும் காணப்படுகின்றது.
அதாவது, வைகுண்டத்தில் திருமால் பிரதோஷ வேளையாகிய மாலைக் காலத்திலே திருமகளைப் புணர்ந்து கொண்டிருக்க, அங்கே பிருகு முனிவர் அவரைக் காணச் சென்றார். அப்போது தடுத்த கருடனைச் சாம்பலாக்கி அம்முனிவர் உள்ளே நுழைந்தார். அவர் வருவதைக் கண்ட திருமால் நீங்காமல் புணர்ச்சியிலிருந்த படியே அவரை வந்து நிற்கும்படி கை காட்டித் தடுத்தார். உடனே பிருகு முனிவர், எந்நாளும் இனியவந்திவேளை தன்னில் ஏந்திழையைப் புணர்வரோ? உனக்கிப் புத்திசொன்னார் ஆர் உன்மத்தமுண்டோ வென்று தூயமா தவன் தான்மா தவனைநோக்கிப் பன்னாளும் பிரதோடந் தனில்உன் னாமம் பகர்ந்துளோர் தரிசித்தோர் பரவல் செய்தோர் துன்னாத நிரயத்தில் புகுவாரென்று சூழ்கோபத் தால்சாபம் சொல்லிப் போனான்.
மேற்கண்ட சாபங்கள் பலிக்கும் காலம் வர,திருமால் தேவர்களின் வேண்டுகோளின்படி பூமியில் மனிதனாகப் பிறந்தார். - என்று வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கிறார் சந்திரசேகரப் பாவலர்.
தினமணி தலையங்கத்தில் களவொழுக்கம் என்று வாய் நீளம் காட்டியிருக்கிறார் வைத்தியநாத அய்யர்!
இராமனாகப் பிறந்தவரின் - திருமாலின் - ஒழுக்கம் என்ன ஒழுக்கம்?ஜலந்தாசூரன் மனைவியைப் புணரத் தவிக்கிறார் ஒழுக்க சீலர் திருமால்! அவன் இறந்து போய்விடுகிறான். அவனது உடலுக்குள் யோக்கிய சிகாமணியான திருமால் புகுந்து கொண்டு ஜலந்தாசூரனின் மனைவி பிருந்தையை ஏமாற்றி அவளை அடைகிறான்; சரியாகச் சொல்வதானால் கற்பழித்து விடுகிறான்!
பிருந்தை - அசுரனின் (சூத்தரனின்) மனைவி ஆயிற்றே! தன்னை ஏமாற்றிக் கற்பழித்தவன் திருமால் என்று தெரிந்து கொண்ட மறுகணமே தீக்குளித்து இறந்து போகிறாள்! காவிய ராமனை - களவொழுக்கக் கதாநாயகர்களுடன் ஒப்பிடலாமா என்று பாய்ந்து பிராண்டுகிறது தினமணி!
காவிய இராமனாக அவதரித்த திருமாலின் காமக் கொடூர களியாட்டங்கள் - அதற்குத் திகட்டாத தேனாக இனிக்கிறது என்றால் என்ன அர்த்தம்?
அது அவாளுடைய பரம்பரை ஒழுக்கம் என்பதல்லால் வேறு என்ன?
நன்றி: `முரசொலி, 23-9-2007)
No comments:
Post a Comment