Search This Blog

Wednesday, September 05, 2007

பிலால் குற்றம் செய்திருந்தால் தூக்கில் போடுங்கள்

ஐதராபாத் போலீஸ் தேடும் குற்றவாளி பிலால் குற்றம் செய்திருந்தால் தூக்கில் போடுங்கள்
தந்தை உருக்கம்
ஐதராபாத், செப்.5: ஐதராபாத் தொடர் குண்டு வெடிப்பில் முக்கிய குற்றவாளியான பிலால் என்பவனை போலீசார் தேடி வருகின்றனர். ஆனால், பிலால் ஓர் அப்பாவி என்றும் அவன் எங்கிருக்கிறான் என்பது பற்றியும் எங்களுக்கு 3 ஆண்டுகளாகத் தெரியாது என்று அவனது தந்தை அப்துல் வாஷத் உருக்கமாகக் கூறுகிறார்.ஐதராபாத் குண்டு வெடிப்புக்கு மூளையாக செயல்பட்டுள்ளதாக இந்நகரைச் சேர்ந்த பிலால் என்பவனை போலீசார் தேடி வருகின்றனர். ஆனால், பிலால் கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக தலைமறைவாக இருக்கிறான். வங்கதேசத்தில் பதுங்கியிருப்பதாக போலீசார் கூறுகின்றனர்.ஆனால், இதை பிலாலின் தந்தை மறுக்கிறார். ஐதராபாத்தில் மூசரம்பாக் பகுதியில் வசிக்கிறார் பிலாலின் தந்தை அப்துல் வாஷத், ஓய்வு பெற்ற ஆசிரியர். இவருக்கு பிலாலையும் சேர்த்து 7 மகன்கள், 4 மகள்கள். பிலாலின் நான்கு அண்ணன்களும் துபாயில் பணியாற்றுகின்றனர். சகோதரிகள் 4 பேருக்கும் திருமணமாகிவிட்டது. 5வது மகனான பிலால், கடந்த 2004ம் ஆண்டில் 12ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போது காணாமல் போய்விட்டான். அவன் எங்கிருக்கிறான் என்ற விவரம், அவனது குடும்பத்துக்கு தெரியவில்லை. இந்நிலையில் பிலாலை போலீஸ் தேடி வருவது பற்றி அவனது தந்தை அப்துல் வாஷத் கூறியதாவது:எனது மகன் பெயர் முகமது ஷாகித். பிலால் என்பது போலீஸ் வைத்த பெயர். கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன என் மகன் எங்கிருக்கிறான் என்று எனக்கு மட்டுமில்லை, எங்கள் குடும்பத்தில் யாருக்கும் தெரியாது. அவன் மிகவும் தயக்க குணம் கொண்டவன். அதிர்ந்து பேசமாட்டான். அவன் ஒரு போதும் தீவிரவாதியாக இருக்க மாட்டான். அவன் மீதுள்ள குற்றங்கள் நிருபணமானால் அவனை தூக்கில் போடட்டும். விசாரணை என்ற பெ யரில் போலீசார் எங்களை துன்புறுத்துகின்றனர். இவ்வாறு அப்துல் வாஷத் கூறினார். பெங்களூர் தாக்குதலிலும் தொடர்பு: இதற்கிடையில் கடந்த 2005ம் ஆண்டு பெங்களூரில் விஞ்ஞானிகள் மாநாட்டில் நடந்த தாக்குதலுக்கும், ஐதராபாத் மெக்கா மசூதியில் நடந்த குண்டு வெடிப்புக்கும் பிலால்தான் காரணம் என்று கர்நாடக போலீசார் கூறியுள்ளனர்.

No comments:

Six C's of Character - Yasir Fazaga