Search This Blog

Tuesday, July 31, 2007

மீண்டும் படரும் காவி இருள்

மீண்டும் படரும் காவி இருள்
மும்பை மாநகராட்சித் தேர்தல்களில் சிவசேனாவும்; டெல்லி மாநகராட்சித் தேர்தல் மற்றும் பஞ்சாப் சட்டசபைத் தேர்தலில் பா.ஜ.க.வும் வெற்றி பெற்றதையடுத்து, அரசியல் அரங்கில் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் இந்து மதவெறிக் கூட்டணிக்கு வெற்றி வாய்ப்புகள் அதிகம் இருப்பதாகப் பத்திரிகைகள் குறிப்பிட்டன. உத்திரப்பிரதேச தேர்தல் தோல்வியை வைத்து இந்துத்துவ அரசியல் பின்னடைவுக்கு ஆளாகிவிட்டதாகவும் சில அறிஞர்கள் ஆய்வுரை எழுதக்கூடும். இந்த வெற்றி தோல்விகள் எனப்படுபவையெல்லாம் தேர்தல் அரசியல் குறித்த மக்களுடைய கண்ணோட்டத்தைத்தான் வெளிப்படுத்துகின்றனவேயன்றி, இவை இந்து பாசிசக் கும்பலின் பலம் அல்லது பலவீனத்தை மதிப்பிடுவதற்கான அளவுகோல்கள் அல்ல.
தேர்தல் அரசியலின் வெற்றிதோல்விகளுக்கு அப்பால், சித்தாந்த ரீதியாகவும் அமைப்பு ரீதியாகவும் திரட்டப்பட்ட ஒரு பாசிச அமைப்பாக சங்கப் பரிவாரம் இருக்கிறது. தேர்தலில் தோல்வியடைந்து விட்டால், அடுத்த 5 ஆண்டுகளுக்கு அறைக்குள் முடங்கிக் கொண்டு, அறிக்கை அரசியல் நடத்தும் பிற முதலாளித்துவக் கட்சிகளைப் போல அது முடங்கிக் கொள்வதில்லை.
கடந்த நாடாளுமன்றத் தேர்தல் தோல்விக்குப் பிறகு, பதவிச் சண்டையாலும், உட்கட்சிப் பூசல்களாலும், பாரதிய ஜனதாக் கட்சியே முடங்கி விட்டதாக முதலாளித்துவ ஊடகங்கள் கணித்தன. நாடாளுமன்ற அரசியல் சீரழிவுகளுக்கெல்லாம் அப்பாற்பட்ட, கட்டுப்பாடான, ஒழுக்கமான கட்சியாகத் தன்னை சித்தரித்துக் கொள்ள முயன்றதில்தான் பா.ஜ.க. தோல்வி அடைந்ததேயன்றி, அத்தகைய சீரழிவுகள் இப்பாசிச கும்பலின் பலத்தை குன்றச் செய்துவிடவில்லை.
மறுகாலனியாக்கக் கொள்கைகளின் விளைவாக, காங்கிரசு கூட்டணி அரசின் மீது மக்களின் அதிருப்தியும் வெறுப்பும் அதிகரித்துவரும் இன்றைய சூழலில், இத்தகைய மக்கள் பிரச்சினைகள் எதற்காகவும் போராடாத அதேநேரத்தில், தன்னுடைய பார்ப்பன பாசிச நடவடிக்கைகளை சங்கப் பரிவாரம் முடுக்கி விட்டிருக்கிறது. சமீபத்திய பல நிகழ்வுகள் இதனை நிரூபிக்கின்றன.
மதம் மாறிக் காதலிக்கும் நபர்களை காவி வெறியர்கள் கடந்த காலங்களில் ஈவிரக்கமின்றிக் கொன்றொழித்ததற்கு பல உதாரணங்கள் உள்ளன. குஜராத்தில் தனது முசுலீம் கணவனின் உயிரைக் காக்க முனைந்த "குற்றத்திற்காக' நடுவீதியில் வன்புணர்ச்சிக்கு ஆளாக்கப்பட்டுக் கொல்லப்பட்ட இந்துப் பெண்ணான கீதா பென்னின் கதை நாம் அறிந்ததுதான்.
சமீபத்தில் ம.பி. மாநிலத் தலைநகர் போபாலில் அத்தகைய அபாயத்திலிருந்து மயிரிழையில் ஒரு காதல் ஜோடி தப்பியது. முசுலீம் மதத்தைச் சேர்ந்த உமரும், இந்து மதத்தைச் சேர்ந்த பிரியங்காவும் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்தனர். கடுமையான எதிர்ப்பு உருவாகக் கூடும் என அஞ்சி மும்பைக்குத் தப்பியோடி, உமர் தன்னைச் "சுத்திகரிப்பு' சடங்கு செய்து கொண்டு, இந்துவாக மதம் மாற்றி கொண்டார். இருவரும் திருமணமும் செய்து கொண்டனர்.

உடனே இந்த "சர்வதேச'ப் பிரச்சினைக்காக பஜ்ரங் தள் களத்தில் (கலவரத்தில்) இறங்கியது. உமரின் வீட்டிற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. போபாலில் உமரின் மீது ஆள்கடத்தல் குற்றம் பதிவு செய்யப்பட்டது. உமரின் அண்ணன் போலீசால் கைது செய்யப்பட்டார். மும்பை உயர்நீதி மன்றத்தில் பாதுகாப்பு கோரி, உமரும், பிரியங்காவும் மனுத் தாக்கல் செய்தனர். அவர்களுக்கு மும்பையிலேயே தங்குவதற்கான ஏற்பாடுகளைச் செய்யவும், காவல்துறை பாதுகாப்பு வழங்கவும் மும்பை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டது.
ஆனால், உமரும், பிரியங்காவும் போபாலுக்குள் நுழையக் கூடாதென்றும், மீறி நுழைந்தால் உயிர் மிஞ்சாதெனவும் பஜ்ரங் தள் அவர்களுக்கு மிரட்டல் விடுத்தது. ஏப்ரல் 12 அன்று போபாலில் இப்பிரச்சினைக்காக பந்த் நடத்தவும் அழைப்பு விடுத்தது. மேலும் இவ்வாறு "ஆசை காட்டி மதமாற்றம் செய்யும்' முசுலீம்களிடமிருந்து இந்துப் பெண்களைக் காப்பதற்காக, "இந்துப் பெண்கள் பாதுகாப்புக் கமிட்டி' என்றொரு அமைப்பையும் உருவாக்கியுள்ளது. ""பெண்கள் ஆண்களோடு இரு சக்கர வண்டிகளில் செல்லும் பொழுது ஹெல்மெட் அணியக் கூடாது. நவீன ஆடைகள் அணியக் கூடாது'' என்று தாலிபான்களை விஞ்சும் விதத்தில் பல "கட்டுப்பாடுகளை'யும் அறிவித்திருக்கிறது, இந்த அமைப்பு. இவற்றையெல்லாம் வெளிக் கொணர்ந்து அம்பலப்படுத்திய ஸ்டார் நியூஸ் தொலைக்காட்சி நிறுவனத்தின் மும்பை அலுவலகத்தையும் தாக்கியிருக்கிறது, இந்து பாசிச குண்டர் படை.
1998ஆம் ஆண்டு ஒரிசாவிலுள்ள டாங்ஸ் மாவட்டத்தில் கிரஹாம் ஸ்டெய்ன்ஸ் எனும் பாதிரியார் உயிரோடு எரித்துக் கொல்லப்பட்டதும், குஜராத்தில் பைபிள்கள் எரிக்கப்பட்டதும், தேவாலயங்கள் தாக்கப்பட்டதும், கன்னியாஸ்திரீகள் வன்புணர்ச்சிக்கு ஆளாக்கப்பட்டதும் பழைய கதைகள் அல்ல. அன்று பா.ஜ.க. ஆட்சியிலிருந்த காரணத்தினால் மட்டும் அவை நடந்துவிடவுமில்லை.
ஏப்ரல் 29ஆம் தேதியன்று ஜெய்ப்பூரில் வால்ட்டர் மசி எனும் பாதிரியாரின் வீடு புகுந்து நிகழ்த்தப்பட்ட கொலைவெறித் தாக்குதல் தொலைக்காட்சிகளில் வெளிவந்து வடமாநிலங்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அத்தாக்குதலை சந்தர்ப்பவசமாக படமாக்கிய ஆஜ்தக் செய்தி நிறுவனத்தின் நிரூபர் சரத்குமார், ""அப்பாதிரியாரின் பரிதாபக் கதறல் என் காதுகளில் இன்னமும் ஒலித்துக் கொண்டிருக்கிறது. இப்படியொரு குரூரத்தை, உதவிக்கு ஆளில்லாத ஒற்றை மனிதனை இத்தனை பேர் ஈவிரக்கமின்றித் தாக்கியதை இது வரை நான் கண்டதேயில்லை'' என மனமுடைந்து கூறினார்.
ஊடகங்களில் வெளிவந்த இச்சம்பவத்தின் பரபரப்பு அடங்குவதற்குள், மே 6ஆம் தேதியன்று மகாராஷ்டிராவிலுள்ள கோலாப்பூர் மாவட்டத்தின் விசுவ இந்து பரிசத் குண்டர்களால் பட்டப் பகலில் நடுவீதியில் இரு கிறித்தவ நிறுவன ஊழியர்கள் அடித்து நொறுக்கப்பட்டு, தெருத்தெருவாக இழுத்துச் செல்லப்பட்டனர். அடித்தவர்களில் ஒருவரைக் கூடக் கைது செய்யாத போலீசு, மதமாற்றம் செய்ய முயன்ற "குற்றத்திற்காக' குற்றுயிராகக் கிடந்த இருவரையும் கைது செய்தது.
அதேநாளில் கர்நாடகாவில் கோலார் தங்க வயலுக்கு அருகிலுள்ள நரசப்பூரில் வழிபாட்டை முடித்துக் கொண்டு தேவாலயங்களிலிருந்து வெளியில் வந்த கிறித்தவர்கள் தாக்கப்பட்டனர். பத்து நாட்களில் தேவாலயம் மூடப்பட வேண்டுமென ஆர்.எஸ்.எஸ். குண்டர்கள் எச்சரிக்கை விடுத்தனர். மே 3ஆம் தேதியன்று சத்திஸ்கரில் பிரார்த்தனைக்காக கூடிய கிறித்தவர்களை வீடு புகுந்து தாக்கிய பஜ்ரங் தள் வெறியர்கள், அவர்களது கை, கால்களை முறித்தனர். மே 1ஆம் தேதியன்று ஆக்ராவில் ஒரு கிறித்தவப் பள்ளி தாக்கப்பட்டது.
···
ஆர்.எஸ்.எஸ்.இன் ""கண்காணிப்பு'' இப்பொழுது கல்விக் கூடங்களுக்குள்ளும் நுழைந்துவிட்டது. மே 9ஆம் தேதியன்று குஜராத் மாநிலம் வதோதராவிலுள்ள மகாராஜா சாயாஜி ராவ் பல்கலைக் கழகத்தின் நுண்கலைப் பிரிவில் மாணவர்களின் ஓவியங்கள் ஆண்டுத் தேர்விற்காக ஆசிரியர்களின் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன. உள்ளூர் பி.ஜே.பி. குண்டன் நீரஜ் ஜெயின் என்பவனுடைய தலைமையில் அங்கு வந்த ஆர்.எஸ்.எஸ். குண்டர்கள், மாணவர் சந்திரமோகன் வரைந்த ஓவியங்கள் இந்துக் கடவுள்களையும், இயேசுவையும் அவமதிக்கும் விதமாக இருப்பதாகக் கூறி அவரைத் தாக்கினர்.
இங்கேயும் தாக்கியவர்கள் கைது செய்யப்படவில்லை. மாறாக தாக்கப்பட்ட சந்திரமோகன் "மத விரோதத்தைத் தூண்டினார்' எனக் குற்றம் சாட்டப்பட்டுக் கைது செய்யப்பட்டார். ஆர்.எஸ்.எஸ். ஆதரவு துணைவேந்தர் இத்தாக்குதல் பற்றி மௌனம் சாதிக்க, மாணவர்கள் போராட்டத்தில் இறங்கினர். போராட்டங்களுக்கு போலீசு அனுமதி மறுக்கவே, மாணவர்கள் இந்துப் பாசிசத்தை அம்பலப்படுத்துமுகமாக காமரசத்தை வெளிப்படுத்தும் பழங்கால இந்திய ஓவியங்களின் கண்காட்சிக்கு ஏற்பாடு செய்தனர்.
சந்திரமோகன் தாக்கப்படும்போது அமைதி காத்த துணைவேந்தர், இப்போது சுறுசுறுப்பாகச் செயல்பட்டார். அக்கண்காட்சியை மூட உத்தரவிட்டார். துணைவேந்தரின் நடவடிக்கையை மாணவர்கள் எதிர்த்தனர். மாணவர்களை ஆதரித்த குற்றத்துக்காக கல்லூரி முதல்வர் சிவாஜி ராவ் பணிக்கர் மே 12ஆம் தேதியன்று பணிநீக்கம் செய்யப்பட்டார். இக்கண்காட்சிக்கு வந்த பி.ஜே.பி. உறுப்பினர்கள், ""உங்களுடைய நிர்வாணப் படங்களை நாங்கள் மாட்டுவோம்'' என்று கல்லூரி மாணவிகளை மிரட்டினர். தற்பொழுது பல்கலைக்கழகத்தின் கலை வரலாற்றுத் துறையே இழுத்து மூடப்பட்டு விட்டது. கைது செய்யப்பட்ட மாணவர் சந்திரமோகன், நாடு தழுவிய எதிர்ப்பைத் தொடர்ந்து நான்கு நாட்களுக்கு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
இவற்றிற்கெல்லாம் முத்தாய்ப்பு வைத்ததைப் போல உத்தரபிரதேச தேர்தல் பிரச்சாரத்திற்காக பாரதிய ஜனதா ஒரு குறுந்தகடை வெளியிட்டது. சங்கப் பரிவாரம் நடத்திவரும் அருவறுக்கத்தக்க முசுலீம் எதிர்ப்பு வெறி பிரச்சாரத்தின் அனைத்து முடை நாற்றமும் "பாரதத்தின் குரல்' என்ற தலைப்பில் வெளியிடப்பட்டிருக்கும் இக்குறுந்தகட்டில் நாடக வடிவில் பச்சையாகவே பதிவாகியிருக்கிறது.
""இந்துக்கள் இரண்டு குழந்தைகளைப் பெற்றுக் கொண்டு சும்மாயிருப்பார்கள். ஆனால், முசுலீம்கள் ஐந்து கல்யாணம் பண்ணிக் கொண்டு 35 நாய்களைப் பெற்றெடுத்து நாட்டையே முசுலீம் நாடாக்கி விடுவார்கள்.'' (முசுலீம்கள் கூறுவது போன்ற காட்சியில்) ""ஹா! ஹா! ஹா! இந்துப் பெண்கள் நம்மிடம் சிக்கிக் கொண்டு திணறும் பொழுது கத்திக் கூச்சலிடுவார்கள். ஆனால் அவர்களைக் காப்பாற்ற யாரும் இல்லை. நாம் மிகுந்த மகிழ்ச்சியடைவோம். ஹா! ஹா! ஹா''""பி.ஜே.பி.க்கு ஓட்டுப் போடவில்லையென்றால் நீங்கள் வருத்தப்பட வேண்டியிருக்கும். இந்த நாடு அடிமையாகி விடும். உங்கள் நெற்றியில் உள்ள திலகங்களை அழித்துவிட்டு நீங்கள் தாடி வளர்க்க வேண்டியிருக்கும்.''
தேர்தலுக்கு முன் இந்தக் குறுந்தகடுப் பிரச்சினையையொட்டி பயங்கரமாகச் சண்டமாருதம் செய்த தேர்தல் ஆணையம், இதற்காக எந்தத் தலைவரையும் கிரிமினல் வழக்கில் கைது செய்யவில்லை என்பதையும் காங்கிரசு உள்ளிட்ட ஓட்டுக் கட்சிகள் அனைத்தும் ஆரம்பகாலக் கூச்சலுக்குப் பின் மூச்சு விடவும் இல்லை என்பதையும் நாம் இங்கே நினைவிற் கொள்ளவேண்டும்.···குஜராத் கலவரத்திற்குப் பிறகு நடந்த தேர்தலில் வெற்றி பெற்ற மோடி, அங்கே ஒரு "ராம ராஜ்ஜியத்தை' நிறுவி விட்டான் என்றால் அது மிகையல்ல. குஜராத் கலவரத்தில் தமது உடைமைகளையும், உறவினர்களையும் இழந்து விரட்டியடிக்கப்பட்ட முசுலீம்கள் ஐந்தாண்டுகளுக்குப் பிறகு இன்றும் தங்கள் வீடுகளுக்கு திரும்பச் செல்ல முடியவில்லை. இந்துக் குடியிருப்புகளும், முசுலீம் சேரிகளும் குஜராத்தில் தனித்தனித் தீவுகளாக பிரிக்கப்பட்டு விட்டன. படுகொலைகளுக்காக குற்றம் சாட்டப்பட்டவர்கள் அங்கே வெளிப்படையாக உலவுகிறார்கள். பாதிக்கப்பட்ட மக்களும் வழக்குத் தொடுத்தவர்களும் பதுங்கி வாழ்கிறார்கள். பாபு பஜ்ரங்கி, நீரஜ் ஜெயின் போன்ற காலிகள் சட்டத்திற்கு அப்பாற்பட்ட சமூக, கலாச்சாரக் காவலர்களாக உருவெடுத்திருக்கிறார்கள். குஜராத் கலவரம் குறித்து பொதுவான மனிதாபிமானக் கண்ணோட்டத்தில் எடுக்கப்பட்ட "பர்ஜானியா' என்ற திரைப்படத்தைக்கூட குஜராத்தில் வெளியிட முடியவில்லை.
உத்திரப் பிரதேசத்தில் பா.ஜ.க. வெளியிட்ட குறுந்தகட்டில் ஒரு வசனம் வருகிறது. ""தான் இந்துவென்று அழைத்துக் கொள்ளவே அஞ்சவும், நம்மை ஆத்மராமென்றோ, ராதாகிருஷ்ணன் என்றோ, சோகன்லால் என்றோ, மோகன்லால் என்றோ அழைத்துக் கொள்ளவே அஞ்சும் நாள் வெகு தொலைவில் இல்லை. நாம் எங்கு பார்த்தாலும் அப்பாஸ்களும், நக்விக்களும், ரிஜ்விக்களும், மௌல்விக்களும் மட்டுமே இருப்பார்கள்.''
எதிர்காலத்தில் நடைபெறப் போவதாக ஊதிப் பெருக்கப்படும் இந்த கோயபல்சுகளின் பொய் பிரச்சாரம் நேரெதிரான விதத்தில் குஜராத்தில் கண்கூடாகக் காணக் கிடக்கிறது. இன்று அங்கே ஜீகன்புராவில் வசிக்கும் முசுலீம்கள் நாராயண்புரா எனும் இந்துப் பகுதிக்கு வேலைக்குச் செல்வதில்லை. செல்ல நேர்ந்தாலும், தாங்கள் முசுலீம் என்பதை சொல்லிக் கொள்வதில்லை. நாளை இந்நாடே இவர்களின் குரு கோல்வால்கர் கண்ட ஆரியக் கனவாக, மோடி நிதர்சனமாக்கிய குஜராத்தாக மாறுமேயானால், அங்கே முசுலீம் என்று மட்டுமல்ல, பகுத்தறிவாளன், சாதி மறுப்பாளன், மொழி உணர்வாளன், கம்யூனிஸ்டு என்று யாரும் சொல்லிக் கொள்ள முடியாது. வீதிதோறும் பஜ்ரங்கிகளும், ரிதம்பராக்களும் காந்தி கண்ட ராமராஜ்ஜியத்தின் தருமகர்த்தாக்களாக நம் வாழ்வின் ஒவ்வொரு அங்குலத்தையும் அதிகாரம் செய்வார்கள்.
மறுகாலனியாக்கக் கொள்கைகளின் கோரத் தாக்குதல் மக்கள் மத்தியில் தோற்றுவித்து வரும் அதிருப்தி அலையை விழுங்கிக் கொள்வதற்கு பார்ப்பன பாசிசம் தம் பதுங்கு குழியிலிருந்து மேலெழும்புகிறது. மக்களின் வெறுப்பை பா.ஜ.க. அறுவடை செய்து கொண்டு ஆட்சி அமைக்குமானால், அந்த ஆட்சி இந்துத்துவத்தின் இன்னுமொரு ஆட்சி என்பதைவிட, குஜராத்தைப் போல, நாடே இந்து ராஷ்டிரத்தின் பரிசோதனைச் சாலையாக மாற்றப்படும் ஆட்சியாக அமையும்.· அழகு

Sunday, July 29, 2007

சட்டம், ஒழுங்கு ஏடிஜிபி ஆனார் விஜயக்குமார்

சட்டம், ஒழுங்கு ஏடிஜிபி ஆனார் விஜயக்குமார் ஜூலை 29, 2007 சென்னை: வீரப்பனை வேட்டையாடிய சிறப்பு அதிரடிப்படைத் தலைவர் கூடுதல் டிஜிபி விஜயக்குமார், சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபியாக சென்னைக்கு மாற்றப்பட்டுள்ளார். சந்தனக் கடத்தல் வீரப்பனை வேட்டையாடிய சிறப்பு அதிரடிப்படைக்குத் தலைவராக இருந்தார் கூடுதல் டிஜிபி விஜயக்குமார். வீரப்பன் வதத்திற்குப் பின்னர் சென்னை சப் இன்ஸ்பெக்டர் பயிற்சி அகாடமியின் தலைவராக நியமிக்கப்பட்டார்.
சமீபத்தில் தேனி மாவட்டத்தில் புதிதாக முளைத்துள்ள நக்சலைட்டுகளை வேட்டையாடும் சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டார். இந்த நிலையில் சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபியாக விஜயக்குமார் நியமிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து மீண்டும் சென்னைக்குத் திரும்புகிறார் விஜயக்குமார். இதுவரை இப்பதவியில் இருந்து வந்த கே.வி.எஸ். மூர்த்தி ஓய்வு பெறுகிறார். சென்னை மாநகர காவல்துறை ஆணையராக ஏற்கனவே விஜயக்குமார் பணியாற்றியுள்ளார் என்பது நினைவிருக்கலாம். இதுதவிர மேலும் சிலரும் மாற்றப்பட்டுள்ளனர். சென்னை ஆயுதப் படை ஐஜி ஜே.கே.திரிபாதி சென்னை மத்தியக் குற்றப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார். ஆயுதப்படை ஐஜியாக கே.பி.மகேந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார். கமாண்டோ படை எஸ்.பி. ஸ்ரீதர், நெல்லை எஸ்.பியாக மாற்றப்பட்டுள்ளார். நெல்லை எஸ்.பி. செந்தாமரைக்கண்ணன், வேலூர் போலீஸ் பயிற்சிப் பள்ளி கமாண்டராக மாற்றப்பட்டுள்ளார். நாமக்கல் எஸ்.பி. தீபக் தாமோதர் தூத்துக்குடிக்கு மாற்றப்பட்டுள்ளார். தூத்துக்குடி எஸ்.பி. ஜான் நிக்கல்சன், மண்டபம் கடலோர பாதுகாப்புப் படைப் பிரிவின் 12வது பட்டாலியன் கமாண்டராக நியமிக்கப்பட்டுள்ளார்.

Thursday, July 26, 2007

மேலப்பாளையம் கொலை வழக்கு: அல்- உம்மா தீவிரவாதிகள் 7 பேர் விடுதலை

மேலப்பாளையம் கொலை வழக்கு: அல்- உம்மா தீவிரவாதிகள் 7 பேர் விடுதலை நெல்லை, ஜுலை. 26-
மேலப்பாளையத்தை சேர்ந்தவர் சாதலி. இவர் இப்பகுதியில் உள்ள அல்-உம்மா தீவிரவாதிகள் குறித்து போலீசுக்கு தகவல் கொடுத்து வந்ததாக கூறப் படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த ஒரு கும்பல் கடந்த 2004-ம் ஆண்டில் மேலப்பாளையம் பகுதியில் சாதலியை வெட்டி கொலை செய்தது.
7 பேர் மீது வழக்கு
இதுகுறித்து மேலப்பாளை யம் போலீசார் வழக்கு பதிவு செய்து அல்-உம்மா இயக்கத்தை சேர்ந்த கோழி அலியார், கொத்தனார் அலி, ஷாலின், ரோஷன், மண்எண்ணை பஷீர், ïனுஸ், முல்லன் சையதுஅலி ஆகிய 7 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணை நெல்லை முதலாவது கூடுதல் செசன்சு கோர்ட்டில் நடந்து வந்தது. விடுதலை
இந்த வழக்கில் இன்று தீர்ப்பு கூறப்பட்டது. இதில் கொலைக்கான ஆதாரம் நிரூபிக்கப்படவில்லை என்று கூறி வழக்கு தொடரப்பட்ட 7 பேரையும் விடுதலை செய்து நீதிபதி சேஷையா தீர்ப்பளித்தார். இந்த கொலை வழக்கில் சிக்கியிருந்த மண்எண்ணை பஷீர் மீது வெடிகுண்டு வழக்கு உள்பட பல வழக்குகள் உள்ளன என்பது குறிப்பிடத் தக்கது.

Tuesday, July 24, 2007

பிரதிபா பாட்டீல் அம்மையார்.

முஸ்லிம்களின் வரலாற்றை தவறாகப் புரிந்து கொண்ட,பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த - பார்ப்பன எதிர்ப்பு கொள்கைக் குடும்ப கட்டமைப்பைக் கொண்ட,தேர்தல்களில் போட்டியிட்ட போதெல்லாம் வெற்றிக்கனிகளையே பறித்த பிரதிபா பாட்டீல் அம்மையார்.
ஐக்கிய முற்போக்குக்கூட்டணி மற்றும் இடதுசாரிகளின் வேட்பாளராக ராஜஸ்தான் மாநில ஆளுநராக இருந்த பிரதிபா பாட்டீல் அறிவிக்கப்பட்டு வேட்புமனுத்தாக்களும் செய்யப்பட்டு விட்டன.
1947-ல் அந்நிய ஆதிக்கத்தின் பிடியிலிருந்து மீண்டு 60 ஆண்டுகளுக்குப் பிறகு, முதன் முறையாக இந்தியத் திருநாட்டின் குடியரசுத் தலைவர் பதவியை அலங்க(hரப்பதவிக்கு)ரிக்க இப்போது நாட்டை ஆளும் ஐக்கிய முற்போக்குக்கூட்டணி மற்றும் இடதுசாரிகளின் ஆதரவோடு இன்ஷா அல்லாஹ் ஒரு பெண் தேர்தெடுக்கப்படவிருக்கிறார்.
சமீபத்தில் முஸ்லிம் பெண்களின் முக்காடு விசயத்தில் கருத்துக் கூறி ஒட்டு மொத்த முஸ்லிம்களின் கண்டனக்கணைகளை சந்தித்த பிரதிபா பட்டீல் ஒரு பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த பார்ப்பன எதிர்ப்பு கொள்கைகளைக் கொண்ட குடும்ப கட்டமைப்பைக் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது முஸ்லிம்களின் வரலாற்றை சரியாக தெரிந்து கொள்ளாமல் அல்லது தவறாக புரிந்து கொண்டிருப்பது விந்தையாக உள்ளது.
பெண்களின் பாதுகாப்புக் கவசமாகவும் கண்ணியமான உடையாகவும் திகழும் (புர்கா) முக்காடு விசயத்தில் கருத்துக் கூறி ஒட்டுமொத்த முஸ்லிம்களின் அதிருப்தியை சம்பாத்தித்துக் கொண்ட பிரதிபா அம்மையாரின் கடந்த கால வரலாறு நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்துகின்றன.
அவரைப்பற்றிய சுருக்கமான ஆய்வுக்கட்டுரை
மகாராஷ்ரா - ஜல்காவோன் மாவட்டத்தில் 1934 டிசம்பர் 19ம் தேதி பிறந்த பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த பிரதிபா பட்டீல் சோலங்கி என்ற பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர். இவர் எம்.ஏ., எல்.எல்.பி., பட்டம் பெற்றுள்ளார்.
இதற்கு முன் இருந்த 11 குடியரசுத் தலைவர்களில் ஒவ்வொரு முறை மட்டுமே தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினர் அப்பதவியை வகித்துள்ளனர்; 110 கோடியுள்ள இந்திய மக்களில் சுமார் 90 கோடிக்கு மேல் தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினராகும்.
மகாராஷ்டிராவின் வடக்கில் உள்ள ஜல்கோயன் எனும் ஊரில் வழக்குறைஞர் தொழில் செய்து வந்துள்ளார். அங்கு கிராமத்து மாணவர்களுக்குப் பயன்தரும் வகையில பொறியியல் கல்லூரியை ஏற்படுத்தி நடத்தி வருகிறார். பார்வையற்றோருக்கு அந்நகரில் தொழில் பயிற்சி பள்ளியையும், ஏழை பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, மலைவாழ் மக்களுக்குப் பள்ளி ஒன்றையும் நடத்திவருகிறார்.
கிராமியப் பொருளாதார மேம்பாட்டிலும், பெண்கள் முன்னேற்றத்திலும் தனி அக்கறை செலுத்துகிறார் பெண்கள் கூட்டுறவு வங்கியை ஜல்கோயன் நகரில் உருவாக்கியுள்ளார். அவர்களுக்கு என மும்பை, மற்றும் டெல்லியில் தனி விடுதிகளையும் நடத்துகிறார்.
பள்ளி, கல்லூரியில் பயிலும் பொழுது விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்டு பரிசுகள் பெற்ற பிரதிபா பாடில், 1962ல் சீன ஆக்கிரமிப்பின்போது துணைக் காவல் படையின் தளபதியாகவும் இருந்துள்ளார்.
1966-ல் டாக்டர் தேவிசிங் ராம்சிங் ஷெகாவத் எனும் வேதியியல் பேராசிரியரை, ஜாதி மறுப்பு மணம் செய்து கொண்டவர். இது பெற்றோர் ஏற்பாட்டில் நடந்த திருமணம். ஒரு மகனும் மகளும் இவர்களுக்குப் பிள்ளைகள். தேவிசிங் ஷெகாவத், வித்யபாரதி மகாவித்யாலயா எனும் கல்வி நிறுவனத்தை, மகாராஷ்டிரத்தின் வடகிழக்கில் விதர்பா பகுதியைச் சேர்ந்த அமராவதி நகரில் நடத்துகிறார். அதே நகரில் உழவர் அறிவியல் மையம் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் குழந்தைகளுக்கு மழலையர் (நர்சரி) பள்ளியையும் பிரதிபா அம்மையார் நடத்துகிறார்.
அமராவதியில் அகில இந்தியக் காங்கிரஸ் மாநாடு 1890களில் நடந்த பொழுது அதற்குத் தலைமை தாங்கியவர், சர்.சங்கரன் நாயர். பின்பு அதிலிருந்து விலகினார். 1921-22ல் காந்தியாரிடம் அவர் கள்ளுக்கடை மறியலை நிறுத்தக் கோரினார். அதற்குக் காந்தியார், மறியலை நிறுத்துவது தம் கையில் இல்லை என்றும், ஈரோட்டுப் பெண்கள் இருவர் (பெரியாரின் துணைவியார் நாகம்மையார், தங்கை கண்ணம்மையார்) கையில் இருக்கிறது என்றும் பதில் கூறினார். முன்பு மத்திய மாகாணத்தில் இருந்த இதே அமராவதியில்தான், இரண்டாவது அகில இந்திய பார்ப்பனர் அல்லாதவர் மாநாடு, பானகல் அரசர் தலைமையில் 1925ல் நடைபெற்றது. (முதல் மாநாடு 1924ல் சர் ஏ. ராமசாமி முதலியார் தலைமையில் பெல்காமில் நடந்தது) மாளவியா, ராஜகோபாலாச்-சாரி, மோதிலால் நேரு ஆகியோர் இந்த மாநாடுகள் தொடர்வதை விரும்பாமல், காந்தியார் மூலம் வல்லபாய் படேலைத் தூது அனுப்பி, பார்ப்பனர் அல்லாதார் இயக்கம் இந்திய அளவில் பரவாமல் தடுத்து விட்டனர்.
இந்தச் சூழலில், பிரதிபா அம்மையாரின் துணைவர் தேவிசிங் கூறும் செய்தி ஒன்று கவனத்தில் கொள்ளத்தக்கது. ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து விதர்பா பகுதியில் குடியேறியுள்ள அவர் குடும்பம், மகாராஷ்டிர அரசியலில் செல்வாக்கு பெற்றதாக இருக்கவில்லை. ஆனால், அவருடைய துணைவியாரின் (பிரதிபாவின்) பெரிய தந்தையார் வழக்கறிஞராகவும், அப்பொழுதைய பம்பாய் மாகாண சட்டப் பேரவையின் உறுப்பினராகவும் இருந்த, தோங்கர்சிங் பாடில் ஆவார். அவர் பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் திவான் பகதூர் விருது பெற்றவர். திவான் பகதூர் தோங்கர்சிங் பாடில், சிவசேனாவின் நிறுவனத் தலைவர் பால் தாக்கரேயின் தந்தை பிரபோதன் தாக்கரேவுக்கு மிக நெருங்கியவர் எனத் தெரிவிக்கிறார்.
இங்கு நாம் தெரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால், பிரபோதன் தாக்கரே பார்ப்பனர் அல்லாதார் இயக்கத்தில் மிக ஈடுபாடு கொண்டவர் என்பதும், பார்ப்பனியத்தை மறுத்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. அவருக்கு 'மிக நெருக்கமாக' இருந்த பிரதிபாவின் பெரிய தந்தையார் பார்ப்பனர் அல்லாதவர் இயக்கத்தில் ஈடுபாடு கொண்டிருந்தார் என்பதும் தெரியவருகிறது.
இன்னொரு முக்கியச் செய்தியை, பிரதிபா பாடிலின் துணைவர் தருகிறார். மண்டல் ஆணையம் நிறைவேற்ற ஆணை வந்த பொழுது, மகாராஷ்டிரத்தில் கலவரத்தைத் தூண்டப் பெரு முயற்சி நடந்தது. ஆனால், நாக்பூரில் கூடிய மகாராஷ்டிரச் சட்டப் பேரவையில் சுமார் மூன்று மணி நேரம் புள்ளி விவரங்களுடன் பேசி அக்கலவர முயற்சியை முறியடித்து, அமைதியை நிலை நாட்டியுள்ளார், பிரதிபா பாடில்.
மகாராஷ்டிர சட்டப் பேரவை உறுப்பினராக 1962 முதல் 1985 வரை பதவி வகித்துள்ளார். நகர்ப்புற வளர்ச்சி, வீட்டமைப்பு, கல்வி, சுற்றுலா, சட்டமன்ற நடவடிக்கைகள், பொது சுகாதாரம், சமூக நலம், கலாசாரத்துறை ஆகியவற்றில் அமைச்சராகப் பணியாற்றியவர். துணை அமைச்சராக முதல் அமைச்சரவையில் இடம் பெற்றவர். காபினட் அந்தஸ்துள்ள அமைச்சராக நியமனம் பெறும் அளவுக்குத் திறமையாகப் பணியாற்றியவர்.
மகாராஷ்டிர முதலமைச்சராக சரத்பவார், 1979 ஜூலையில் பதவி வகித்தபோது, எதிர்க்கட்சித் தலைவராகப் பணியாற்றியவர் பிரதிபா 1985-ல் நாடாளுமன்றத்தின் மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஓராண்டுக்குப் பிறகு மாநிலங்களவைத் துணைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1986 நவம்பர் 18 முதல் 1988 நவம்பர் 5 வரை அப்பதவியில் இருந்தார். இதே காலகட்டத்தில் நாடாளுமன்றத்தின் உரிமைக்குழுத் தலைவராகவும் இருந்துள்ளார்.
1988 முதல் 1990 வரை மகாராஷ்டிர மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவராகவும்.
1991-ல் அமராவதி தொகுதியிலிருந்து மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
சட்டப்பேரவை, மக்களவை ஆகியவற்றுக்கு போட்டியிட்டபோதெல்லாம் வெற்றிக்கனிகளையே பறித்தவர் பிரதிபா அம்மையார்.
மக்களவை உறுப்பினர் பதவிக் காலம் முடிந்த பிறகு தேர்தல் பிரச்சாரத்தின் போது தீவிரமாகப் பாடுபட்டவர்.
2004 நவம்பரில் கட்சித் தலைமையே அவரை அழைத்து ராஜஸ்தான் மாநில ஆளுனராக நியமித்தது.

நீதியைத்தேடி...(கவிதை)

நீதியைத்தேடி...(கவிதை)

கண்ணீரை மையாக்கி, வேதனையெனும்தூரிகை கொண்டு வரையப்பட்டஓவியமோ காவியமோ அல்ல இது!எங்களது உடலில் இன்னும்உயிர் உள்ளது என்றமறக்கப்பட்ட உண்மைக்குஎஞ்சியுள்ள ஒரே சான்று!எதிர்பார்த்து, எதிர்பார்த்து ஏங்கித் தவிக்கும்வேதனையை வெளிபடுத்த இந்தஉள்ளத்திற்கு கண்ணில்லையே,கண் கட்டப்பட்ட இவ்வுலகநீதி தேவதையைப் போல்...ஆகையால்தான் வேதனை, வெளியேதெரியும் விழிகளின் வழியே வெப்பமாக!வேதனையை வெளிப்படுத்த இந்த கண்கள்இரத்தக் கண்ணீர் வடிக்கும் சாத்தியமில்லை,பானையில் இருந்தால்தானேஅகப்பையில் வரும்? - தற்போதுஎங்கள் உடலிலும் இரத்தம் இல்லையே!ஈவிரக்கமற்ற காட்டேரிகளைப்போல்நாங்களுமா நடமாடும் சடலங்களானோம்?இங்கு சமத்துவம் ஆழமாக இருக்கிறது!அப்பாவிக்கும், பாவிக்கும் இல்லைசிறு வித்தியாசங்கள் இங்கு பல,இருவரும் இருக்கின்றனர்சமமாக!? - இவ்வுலகில்,நடமாடிக் கொண்டும், நடைப் பிணங்களாகவும்,சிறைக்கு உள்ளும், வெளியிலும்!நாங்களும் வாழ்ந்தோம் சில நாட்கள்!"அந்த இனிமையான மணித்துளிகளின்நினைவுகள் போதும், மீண்டும்நாம் சந்திக்கும் வரை, அல்லதுசத்திய மரணம் நம்மை சந்திக்கும் வரை''எனும் வார்த்தைகள் இன்னும் எத்தனைநாட்கள் உதவும் அறியோம் இறைவா!நீதி தேவதையே, நீ கண்ணை கட்டி இருப்பதுபாரபட்சமற்ற முறையில் நீதி வழங்கிடவேஎன்ற எங்கள் நம்பிக்கையை, உன்நீதித் தாராசில் நிறுத்திப்பார்! - அநீதிஇழைக்கப்பட்டோர் உன்னிடம்எதிர்பார்ப்பை கைவிட்டுகளத்தில் இறங்கியதன் காரணம் புரியும்!தீவிரவாதிகள், பயங்கரவாதிகள் போன்ற சிலமுத்திரைகளுக்கு அஞ்சிடுவர் இவர்களென்றுஎதிர்பார்ப்பதில் நியாயம் இல்லை!இப்போது அவர்களின்எதிர்பார்ப்புகள் அநியாயமாகமறக்கவும், மறுக்கவும் பட்டுவேதனை மட்டுமே தொடர்கதையாக!நீதி தேவதையே, நீ கண் திறக்கமாட்டாயா என்று கேட்பவர்கள்குரல் ஓலமாய் மாறும் முன், உன்நீதி உடனே வழங்கப்பட வேண்டும்!அதுவே உன்னுடைய உடலில்உயிருள்ளது என்பதற்கு எஞ்சிஇருக்கும் கடைசி வாய்ப்பு!!
நன்றி : சத்தியமார்க்கம்

இஸ்ரேல் சிறைகளில் துன்புறுத்தப்படும் பாலஸ்தீனச் சிறார்கள்


இஸ்ரேல் சிறைகளில் துன்புறுத்தப்படும் பாலஸ்தீனச் சிறார்கள்

பாலஸ்தீனப் பகுதிகளில் தீவிரவாதத்தை ஒழிப்பதாகக்கூறி பொதுமக்கள் மீது இஸ்ரேல் நடத்தும் கொடுமை ஒருபுறமிருக்க, பாலஸ்தீனச் சிறார்கள் அபுகுரைபுக்கும் குவாண்டனாமோவுக்கும் எவ்வித வேறுபாடும் இல்லாத கொடுமைகளுக்கு இஸ்ரேல் இராணுவத்தினரால் ஆட்படுத்தப்படுவதாக குழந்தைகள் பாதுகாப்புக்கான பன்னாட்டு அமைப்பு (Defense for Children International - DCI) குற்றம் சாட்டியுள்ளது.
உலகின் பிற நாடுகளைச்சேர்ந்த சிறார்களைப் போலவே பாலஸ்தீனச் சிறார்களும் அரசியலில் நேரடியாக ஈடுபடுவதில்லை. இருப்பினும், அவர்கள் சிறார்கள், குழந்தைகள் என்கிற சிறு கரிசனம் கூட இல்லாமல் காட்டுமிராண்டித் தனமாக அவர்கள் இஸ்ரேலிய படையினரால் விசாரணை என்ற பெயரில் துன்புறுத்தப்படுவதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
முஹம்மத் மஹ்சிரி என்ற 17 வயதான சிறுவன் ஒருவனை மேற்குக் கரை பகுதியில் இஸ்ரேலிய இராணுவம் கடந்த ஆண்டு கைது செய்தது. இச்சிறுவன் அங்கிருக்கும் ஒரு அகதி முகாமில் தங்கியிருந்தான். அவனைக் கைது செய்ய இஸ்ரேலிய இராணுவம் கூறிய காரணம் அவன் இஸ்ரேலிய இராணுவ டாங்கிகளை நோக்கிக் கல்லெறிந்தது தான். அவனைப் பல்வேறு இராணுவ முகாம்களுக்கு விசாரணை என்ற பெயரில் அலைக்கழித்த இராணுவம் அவன் மீது சுமத்திய 'தீவிரவாதக்' குற்றம் நிரூபிக்கப்படாததால் 13 மாதங்களுக்குப் பிறகு விடுதலை செய்தது.
இச்சிறுவன் DCI அமைப்பிடம் அடைக்கலமான பின் அவனது கண்ணீர்க்கதை தற்போது உலகிற்குத் தெரிய வந்துள்ளது. ஒவ்வொரு நாளும் அதிகாலை 2 மணி முதல் இரவு 11 மணிவரை ஒருவர் மாற்றி ஒருவராகப் பல்வேறு இராணுவ அதிகாரிகள் இச்சிறுவனைத் துன்புறுத்தி விசாரணை செய்தனர் என்று அவன் கூறினான்.
ஒருமுறை விசாரணையின் போது மழைபெய்ததால் மழையில் நனையவைக்கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டுள்ளான். சில அதிகாரிகள் பாலியல் துன்புறுத்தலையும் மேற்கொண்டதாகவும் அவன் கூறியுள்ளான்.
விசாரணையின் போது ஆட்டு மந்தையை இழுத்து வருவது போல சிறார்களை இராணுவத்தினர் இராணுவ நீதிமன்றத்துக்கு இழுத்து வருவார்கள் என்றும் அவன் தெரிவித்தான்.
மேலும் இதுகுறித்து தகவல் அளித்த DCI அலுவலர் ஒருவர், இஸ்ரேலிய இராணுவம் சிறார்களின் தூக்கத்தைக் கெடுப்பது, உணவோ குடிநீரோ அளிக்காமல் சித்திரவதை செய்வது போன்ற கொடும் உத்திகளை விசாரணையின் போது பயன்படுத்துவதாகத் தெரிவித்தார்.
DCI அலுவலர் இஸ்ரேல் நாடு குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமைகளைத் தடுக்க செய்யப்பட்ட உலகநாடுகளின் ஒருங்கிணைந்த பிரகடனத்தில் கையொப்பம் இட்டுள்ளது நகைப்புக்குரிய வேதனையான செய்தி ஆகும் என்று மேலும் தெரிவித்தார்.
செப்டம்பர் 28, 2000 முதல் மார்ச் 31, 2007 வரை இஸ்ரேலிய இராணுவம் விசாரணை என்ற பெயரால் அழைத்துச் செல்லப்பட்டு கொல்லப்பட்ட சிறார்களின் எண்ணிக்கை 860 என்றும் தற்போது அதன் பிடியில் இருக்கும் சிறார்களின் எண்ணிக்கை 398 என்றும் அதன் அறிக்கை தெரிவிக்கிறது.
NANDRI: SATYAMARGAM.

ஆபத்தாக மாறும் அஜினோமோட்டா

தகவல் அறியும் உரிமைச் சட்டம்.
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் அடிப்படையில் சமூகப்பிரச்சனைகளைக் கருத்தில் கொண்டு உற்பத்தியாளர்கள் மற்றும் நுகர்வோர்களின் விழிப்புணர்வுகளுக்காக ஊடகங்கள் மற்றும் இணையங்களில் கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் இந்தக்கட்டுரை தொகுக்கப்பட்டுள்ளது.
-எம்.ஹெச்.ஜி.
===================================================================================================
ஆபத்தாக மாறும் அஜினோமோட்டா
பதறவைக்கும் ஒரு பகீர் ரிப்போர்ட்.

உயிரினங்கள் எல்லாம் உயிர் வாழ்வதற்காக மட்டுமே உணவு உண்கின்றன. ஆனால், மனிதர்கள் இதிலிருந்து மாறுபட்டு ருசிக்காகவும், நறுமணத்துக்காகவும், பலவித செயற்கை நிறமிகளையும் சுவையூட்டிகளையும் உணவில் சேர்த்து உடல் நலத்தைக் கெடுத்துக் கொள்கிறார்கள். சமீப காலத்தில் அஜினோமோட்டோ என்னும் நச்சுப் பொருளை ஒரு செயற்கைச் சுவையூட்டியாகப் பயன்படுத்துவது அதிகரித்துள்ளது. இதன் வேதிப் பெயர் 'மோனோ சோடியம் குளூட்டமேட் Mono Sodium Glutamate என்பதாகும்.
''ஒரு ஸ்பூன் அஜினமோட்டோ சேருங்கள். பிரியாணி, ஃபிரைடு ரைஸ், சாம்பார், ரசம் போன்றவற்றின் சுவை கூடி விடும். அதுமட்டுமல்ல, சாப்பிட மறுத்து அடம் பிடிக்கும் குழந்தைகள் கூட, அஜினமோட்டோ கலந்த உணவு என்றால் சமர்த்தாகச் சாப்பிடுவார்கள்!'' என்று டி.வி.களிலும், நாளிதழ்களிலும் வெளிவரும் விளம்பரங்களால், அஜினமோட்டோ விற்பனை சூடுபறக்கிறது. பலவிதமான பாக்கெட்டுகளில் சாதாரண பெட்டிக் கடைகளில்கூட கிடைக்கிறது இந்த மாயப்பொடி.
இப்படி அலற வைக்கும் விளம்பரங்களால் விற்பனையில் கொடி கட்டிப் பறக்கும் அஜினமோட்டோவுக்கு வேறொரு முகமும் உள்ளது. ''அஜினமோட்டோ கலந்த உணவை உண்டால், குழந்தைகளுக்கு ஆபத்து. தினமும் மூன்று கிராமுக்கு மேல் அஜினமோட்டோ கலந்த உணவை உண்டால் பெரியவர்களுக்குக் கூட கழுத்துப் பிடிப்பு, தலைவலி, நெஞ்சுவலி, தலைசுற்றல், மூச்சுத் திணறல் வர வாய்ப்பு உள்ளது'' என்று சென்னை மாநகராட்சியின் சுகாதாரத்துறை, அண்மையில் எச்சரிக்கை ஒன்றை வெளியிட்டு, எக்கச்சக்க பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
அஜினோமோட்டோ தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், ஏஜெண்டுகள், அஜினோமோட்டோவைப் பயன்படுத்தும் ஹோட்டல்கள், ரெஸ்டாரெண்டுகளுக்கும் சென்னை மாநகராட்சி இது தொடர்பாக நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
அதற்கு பதில் அளித்து கடந்த 23-04-07 திங்கள்கிழமை அன்று பத்திரிகையாளர்களுக்கு நேர்காணல் அளித்த அஜினமோட்டோ நிறுவனத்தின் இந்தியப் பிரிவு நிர்வாக இயக்குனர் மனோகரன் கூறியதாவது ''எங்கள் நிறுவனம் கண்டுபிடித்த இந்த சோடியம் குளுட்மேட் தொண்ணூற்று எட்டு ஆண்டுகளாக, இருபத்து மூன்று நாடுகளில் விற்பனை செய்யப்படுகிறது. அஜினோமோட்டோ என்ற பெயரில் இதை விற்று வருகிறோம். வேறு நிறுவனங்களும் வேறுவேறு பெயர்களில் இதை விற்கின்றன.
சீன, ஜப்பானிய, ஸ்பானிய, பிரெஞ்ச் மற்றும் மேற்கத்திய உணவு வகைகளிலும் அஜினமோட்டோ பயன்படுத்தப்பட்டு வருகிறது. நாங்கள் தாய்லாந்தில் இருந்து இதை இறக்குமதி செய்து சென்னையில் பேக் செய்து இந்தியா முழுவதும் விற்கிறோம்.
'அஜினமோட்டோவால் தலைவலி, வாந்தி, உடல் அசதி, கழுத்துப் பிடிப்பு, மூச்சுத் திணறல் வரும்' என்ற தவறான தகவல் ஆரம்பத்தில் அமெரிக்காவில் உலா வந்தது. அதன்பிறகு நடந்த ஆய்வில் அது தவறான கூற்று எனத் தெரிய வந்தது. அஜினமோட்டோவால் எந்த ஆபத்தும் இல்லை என்று அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து ஆராய்ச்சிக்கழகம் சான்றிதழ் அளித்துள்ளது. உலக சுகாதார அமைப்பும் 'இது பாதுகாப்பானது' என அங்கீகரித்துள்ளது! சில நிபந்தனைகளுடன் இதை உணவில் சேர்த்துக்கொள்ளலாம் என்றும் பரிந்துரை செய்துள்ளது.
எல்லா அஜினமோட்டோ பாக்கெட்களிலும், பன்னிரண்டு மாதங்களுக்குக் குறைவான குழந்தைகளுக்கு இதைப் பயன்படுத்த வேண்டாம் என்று குறிப்பிட்டுள்ளோம். தற்போது சென்னை மாநகராட்சி கேட்டுக் கொண்டதற்கிணங்க டி.வி. விளம்பரத்திலும் இந்த வாசகத்தைச் சேர்த்துக்கொண்டிருக்கிறோம். அதுபோல் 'ஒரு ஸ்பூன் சேர்த்துக்கொள்ளலாம்' என்பதை 'ஒரு டீஸ்பூன்' என மாநகராட்சியின் உத்தரவின் பேரில் மாற்றிக்கொண்டிருக்கிறோம்.
சோடியம் குளுட்மேட் என்பது ஒரு அமினோ அமிலம். இது நம் உடலிலுள்ள புரதத்தில் இயற்கையாகவே உள்ளது. நாங்கள் ஆண்டுக்குப் பதினெட்டு லட்சம் டன் சோடியம் குளுட்மேட்டை உற்பத்தி செய்து, அதை எழுபதாயிரம் கோடி டாலருக்கு விற்று வருகிறோம். இதே அளவுக்கு கலப்பட சோடியம் குளுட்மேட் விற்பனையும் நடைபெறுகிறது. கடைகளில், கலப்படமாக சுகாதாரமற்ற முறையில் விற்கப்படும் சோடியம் குளுட்மேட், உண்மையிலேயே ஆபத்தானது. இந்தக் கலப்பட சோடியம் குளுட்மேட்டை தடுத்தாலே தற்போது எழுந்துள்ள சர்ச்சை ஓய்ந்துவிடும்'' என்றார் அவர்.
இந்த அஜினோ மோட்டோவின் விஷத்தன்மை பற்றி இருவேறு கருத்துக்கள் இருந்த போதிலும், பல மருத்துவ ஆராய்ச்சிகள் மனிதர்களுக்கு அதிலும் குறிப்பாகக் குழந்தைகளுக்கு இது பலவித ஆபத்துகளை உருவாக்கும் என்று நிரூபித்துள்ளன. கருவுற்ற எலிகளுக்கு அஜினோமோட்டோ கலந்த உணவைத் தொடர்ந்து கொடுத்து வந்ததால் அவற்றின் குட்டிகளுக்கு மூளைப் பகுதியில் உள்ள செல்கள், அளவில் சுருங்கியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அஜினோமோட்டோ கலந்த உணவுப் பொருட்களை அடிக்கடி சாப்பிடும் குழந்தைகளுக்கு, உடல் வளர்ச்சியைத் தூண்டும் ஹார்மோன் சுரப்பது வெகுவாகக் குறையும். இதனால், உடல் வளர்ச்சி தடைப்பட்டு உயரம் குறைகிறது. மேலும் இந்த வேதிப் பொருள் மூளையில் 'ஆர்குவேட் நுக்ளியஸ்' என்னும் பகுதியைப் பாதிப்பதால் உடல் எடை தாறுமாறாக அதிகரிக்கும்.
மூளை மட்டுமின்றி இரைப்பை, சிறுகுடல், கல்லீரல் போன்ற உறுப்புகளிலும், அழற்சியையும், சிறு இரத்தக் கசிவையும் ஏற்படுத்துகிறது. இதனால் குழந்தைகளுக்குக் காரணம் கண்டுபிடிக்க முடியாத வயிற்று வலி அடிக்கடி ஏற்படும். ஒவ்வாமை உள்ள ஒரு சிலருக்கு இந்த வேதிப்பொருள் கலந்த உணவைச் சாப்பிட்ட சில நிமிடங்களிலேயே மார்பில் எரிச்சலும், மூச்சுத் திணறலும் ஏற்பட்டு, உடல் வியர்க்க ஆரம் பித்துவிடும். இந்த நோய்க் குறிகளுக்கு 'சைனா உணவக நோய்' ( CHINA RESTAURANT SYNDROM) என்று தனிப் பெயரே சூட்டப்பட்டுள்ளது.
''சோடியம் குளுட்மேட் (அஜினமோட்டோ) பற்றி எழுதுவதற்காக நாம் ஆய்வில் இருந்தபோது 'ஜீரோ ஏடேட் ஹைட்ரோ ஜெனடேட்' பற்றிய தகவலும் நம்மை அதிர்ச்யில் ஆழ்த்தியது,
''இது பசு, எருது, பன்றி போன்ற பல விலங்குகளின் கொழுப்பிலிருந்து தயாரிக்கப்படும் எண்ணெய். இதில் உடலுக்குத் தேவையற்ற ஒருவித கொழுப்பு இருக்கிறது. பாக்கெட்டுகளில் கிடைக்கும் உருளைக்கிழங்கு சிப்ஸ், பீட்ஸா, சாக்லெட், துரித உணவுகள் இந்த எண்ணெயில்தான் தயாரிக்கப்படுகின்றன. இந்த எண்ணெயைப் பலமுறை திரும்பத் திரும்பப் பயன்படுத்தினாலும் உணவின் மணம் மாறாது. பதினெட்டு மாதம் வரை உணவுப் பொருள் கெட்டுப் போகாது. மெக்டொனால்ட், பீட்ஸா கார்னர்களில் கிடைக்கும் ஸ்நாக்ஸ் பொருட்கள் நம் வீட்டுத் தயாரிப்பை விட சுவையுடன் இருப்பது போல தோன்றுவதற்கு இந்த எண்ணெய்தான் காரணம். ஆனால், இந்த எண்ணெயைப் பயன்படுத்தினால் உடலில் வேண்டாத கொழுப்பு சேர்ந்து இருதய நோய், புற்றுநோய், உடல் பருமன் எல்லாம் வந்துவிடும்!'' என்ற அதிர்ச்சிதான் அது,
புதிது புதிதாகக் கண்டுபிடித்து சுற்றுச் சூழலிலும், உணவிலும் கலக்கும் பெரும்பாலான வேதிப் பொருட்களை நமது கல்லீரலில் செயல்படும் பி_450 என்னும் நொதிப் பொருட்கள் விஷ முறிவு செய்து நம்மைக் காப்பாற்றுகின்றன. ஆயினும் சில வகையான நச்சுப் பொருட்களை வெளியேற்ற முடியாமல் இந்த பி_450 நொதிகள் திணறுகின்றன. குறிப்பாகச் செயற்கை நிறமிகளும் அஜினோ மோட்டோ போன்ற சுவையூட்டிகளும் பி_450 நொதிகளைச் செயலிழக்கச் செய்கின்றன.
சோடியம் குளுட்மேட்டை உணவில் கலந்து சாப்பிடுவதால் தலைவலி, வாந்தி வருவதாக எழுபதுகளின் ஆரம்பத்தில் அமெரிக்க டாக்டர்கள் கண்டுபிடித்து எச்சரித்தனர். ஒரு வயதுக்குக் குறைவான குழந்தைகளுக்கு இதைக் கொடுக்கக்கூடாது என்று அமெரிக்க அரசு தடை விதித்தது.
இந்த நிலையில், அஜினமோட்டோ நிறுவனம், மூன்று ஆண்டுகளுக்கு முன் அமர்க்களமாக இந்த சோடியம் குளுட்மேட்டை இந்தியாவில் அறிமுகம் செய்தது. பால், பால் சேர்க்கப்பட்ட பொருள்கள், மினரல் வாட்டர், ஐஸ்கிரீம், காபி, டீ போன்றவற்றில் இதைக் கலக்கக்கூடாது என்ற நிபந்தனையோடுதான் அஜினமோட்டோ நிறுவனம் இங்கு அடியெடுத்து வைக்க இந்திய அரசு அனுமதியளித்தது. இப்போது இந்திய உணவுப் பொருள் கலப்பட தடுப்புச் சட்டத்திற்கு எதிராக இந்தப் பொருள் விளம்பரப்படுத்தப்பட்டு, விற்பனை செய்யப்படுவதாக சென்னை மாநகராட்சி குற்றம் சாட்டியுள்ளது''
பரவலான விளம்பரங்கள் மூலமும் வீடு வீடாகச் சென்று விற்பனை செய்வதாலும் தற்போது பலரும் இந்த நச்சுப் பொருளை சமையலில் ஒரு சுவையூட்டியாகச் சேர்க்க ஆரம்பித்து விட்டார்கள். பெரிய உணவகங்களில் வழங்கப்படும் 'சூப்'களிலும் பிரியாணி வகைகளிலும், துரித உணவகங்களில் வறுத்து வழங்கப்படும் எல்லா உணவுப் பண்டங்களிலும் இந்த அஜினோ மோட்டோ சேர்க்கப்படுகிறது. விருந்துணவு தயாரிக்கும் பல சமையல் நிபுணர்கள் 'டேஸ்ட் பவுடர்' என்று பெயரிட்டு சமையல் பொருட்களின் பட்டியலில் இதையும் சேர்த்து வாங்குகின்றனர்.
இதனால்தான் திருமணம் போன்ற விருந்து நிகழ்ச்சிகளில் உணவு உண்போர் உடனடியாக வயிற்று உபாதையால் அவதிப்படுகிறார்கள்.
மேலை நாடுகளில் உணவுப் பொட்டலங்களின் அட்டைப் பெட்டியில் அஜினோமோட்டோ கலந்திருப்பதை வெளிப்படையாக எழுத வேண்டும் என்று விதி இருக்கிறது.
ஆனால், நமது நாட்டில் குழந்தைகளைக் கவரும் வகையில் பல வண்ணப் பாக்கெட்டுகளில் நொறுக்குத் தீனிகளை விற்பவர்கள் அவற்றில் அஜினோ மோட்டோ கலந்திருப்பதை மறைத்து 'added flavours' என்று மக்களுக்குப் புரியாத சங்கேத மொழியில் எழுதி ஏமாற்றுகிறார்கள்.
பல்வேறு விளம்பரங்களில் அஜினோ மோட்டோ ஒரு தாவர உணவு என்றும் அதனால் ஆபத்து எதுவுமில்லை என்றும் தவறான தகவலைப் பரப்புகிறார்கள். தாவரங்களிலும் உயிரைப் பறிக்கும் நச்சுத் தன்மை உண்டு என்பதே உண்மை.
ஆகவே, அஜினோ மோட்டோவை உணவுப் பொருட்களில் கலப்பதை உடனடியாகத் தடை செய்ய வேண்டும். அதுவரை பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு இந்த நச்சுப் பொருள் கலந்த உணவு வகைகளை வாங்கிக் கொடுக்காமல் இருப்பது நல்லது.
அஜினோமோட்டோ : ஒரு வரலாறு!
குழந்தைகளை மையமாக வைத்துத் தயாரிக்கப்படும் ரெடிமேட் நொறுக்குத் தீனிகளான மேகி, லேய்ஸ், குர்குர்ரே என்பதிலிருந்து இன்று பலவகை துரித உணவுகள், வீட்டுச் சமையல் அறைகள் வரை புகுந்துவிட்ட இந்த அஜினோ மோட்டோ, தன் கரங்களை இன்னும் அதிகமாக நீட்டிக் கொண்டிருப்பது அதன் ஆக்கிரமிப்புத் தன்மையையே காட்டுகிறது.
சாப்பாட்டில் அதிகம் பிரியமில்லாத நோஞ்சான் குழந்தைகளுக்குப் பல பெற்றோர்கள், இந்த அஜினோமோட்டோ கலந்த நொறுக்குத் தீனி பொட்டலங்களை வாங்கிக் கொடுப்பர். இந்தக் குழந்தைகளும் வீட்டு உணவைவிட இந்தப் பொட்டலத் தீனிகளை அளவுக்கு மீறி தின்பர்.
'இதையாவது பிரியப்பட்டு தின்கிறானே' என்று ஆசை ஆசையாய் பலரும் இதை அவனுக்கு வாங்கிக் கொடுப்பர்.
சில மாதங்கள், வருடங்கள் கழித்து இந்த 'நோஞ்சான்' எக்கச்சக்கமான சதை போட்டு ஊளைச் சதையுடன் தோன்றுவான் என்பதே உண்மை. பசியை கண்ட்ரோல் செய்யும் உடலின் இயற்கையான நொதிப் பொருட்கள் அஜினோமோட்டாவால் செயல்படாத தன்மை ஏற்படும்போது, அஜினோமோட்டோவை தொடர்ந்து உண்ணும் சிறுவர்கள் சில காலம் கழித்துக் கண்டதை உண்ண ஆரம்பிப்பார்கள். பசிக்கும் நேரத்தில் அளவுக்கு அதிகமாக இப்படி உண்டதால்தான் இவர்கள் காலப்போக்கில் குண்டர்களாக மாறி விடுகிறார்கள்.
அஜினோ மோட்டோவானது இன்று இரண்டு ரூபாயிலிருந்து இருநூற்றி ஐம்பது ரூபாய்க்குகூட தரத்துக்கேற்ப விற்கப்படுகிறது.
வெளிநாடுகள் பலவற்றில் அஜினோ மோட்டோ தடை செய்யப்பட, இந்திய விற்பனையாளர்கள் வருமானத்துக்குப் பயந்துபோய் இது தாவரங்களிலிருந்து உற்பத்தி செய்யப்படுகிறது என்று சப்பைக் கட்டு கட்டினார்கள். ஒரு டன் திராட்சைப் பழங்களிலிருந்து ஒரு மில்லி கிராம் சயனைட்டை உற்பத்தி செய்யலாம் என்ற உண்மையைக் கூட இந்த வியாபாரிகளால் புரிந்து கொள்ள முடியாமல் போனது துரதிர்ஷ்டவசமே.
கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்புகூட, அஜினோமோட்டோ நொறுக்குத் தீனி பாக்கெட்டுகளில் 'விஷிநி' அதாவது மோனோ சோடியம் கலந்துள்ளது என்று அச்சிடப்பட்டிருந்தது. ஆனால், இந்த எச்சரிக்கை வாசகங்கள் கூட இன்று பொட்டலங்களில் இல்லாமலிருப்பது அந்த வியாபார நிறுவனங்களின் வெற்றியையும் அரசாங்கத்தின் அலட்சியத் தன்மையையுமே காட்டுகிறது.
ஜப்பானிய டாக்டர் ஒருவரால் கண்டுபிடிக்கப்பட்டதே அஜினோமோட்டோ. இயற்கையாகவே சுவையில்லாத அஜினோ மோட்டோ பொரித்த, வறுத்த உணவுகளுடன் கலக்கும் போது புளிப்புச் சுவை ஏற்படுகிறது.
22 வகையான அமினோ ஆசிட்களில் ஒன்றான க்ளூட்டமிக் ஆசிட்டிலிருந்து அஜினோ தயாரிக்கப்படுகிறது.
பெரிய பெரிய நட்சத்திர ஹோட்டல்கள் எல்லாம் தங்கள் உணவு வகைகளின் சுவைகளில் ஒரு பிரத்யேகத் தன்மை இருப்பதாக பீற்றிக்கொண்டாலும், அதற்கான இரகசியங்கள் அஜினோ மோட்டோவில்தான் இருக்கிறது. சரியான அளவில் கலக்கக்கூடிய தேர்ந்த சமையல்காரர்களுக்கு சீக்கிரம் ப்ரமோஷன் உண்டு.
பிறப்புக் கோளாறு, உறுப்புகளில் வளர்ச்சியற்ற தன்மை, தலைவலி, வாந்தி, செரிமானச் சிக்கல், கெட்ட கனவு, தூங்குவதில் சிக்கல், சோம்பல், மிதமாகும் இதயத்துடிப்பு, முடிகொட்டுதல், ஆஸ்துமா மற்றும் சர்க்கரை வியாதி போன்றவை அஜினோமோட்டோவை தொடர்ந்து சாப்பிடுபவர்களுக்கு ஏற்படுவதாக மருத்துவர்கள் அண்மையில் கண்டுபிடித்திருக்கின்றனர்.
- எம். ஹெச்.ஜி.

பத்து மிளகிருந்தால் பகைவர் வீட்டிலும் உண்ணலாம்

பத்து மிளகிருந்தால் பகைவர் வீட்டிலும் உண்ணலாம்
அந்தக் காலத்தில் ஒருவர்க்கொருவர் சண்டையிட்டு பகையாளியாகி விட்டால் விருந்துகளில் நஞ்சு கலந்து கொன்று விடுவார்களாம்.
அவ்வாறு நேராதிருக்க பங்காளி, பகையாளி வீடுகளில் விருந்துக்குச் செல்லும் போது 10 மிளகை தூள் செய்து 1 வெற்றிலையில் வைத்து மென்று விழுங்கி விடுவார்களாம்.
அப்போது அந்த விருந்தில் ஏதாவது நஞ்சு இருந்தால் அது முறிந்து உயிரைக் காப்பாற்றி விடுமாம்.
எல்லாம் நஞ்சுமயம்!நம்முடைய இன்றைய வாழ்வில் நஞ்சுமயம் என்பது சர்வ சாதாரணமாகி விட்டது.
• குடிக்கின்ற தண்ணீரில் நஞ்சு• பணம் கொடுத்து பருகும் குளிர்பாணத்தில் நஞ்சு• இழுக்கின்ற மூச்சில் நஞ்சு• சாப்பிடுகின்ற உணவில் நஞ்சுஇப்படி முக்கால் மூணு வீசம் நஞ்சுமயமாகிவிட்ட நம் அன்றாட வாழ்வில் .
இதன் பாதிப்பு- உடலில் இரத்தமும் நஞ்சுமயமாகி இறுதியில் வயிறு, இதயம், கல்லீரல், மூளை, சிறுநீரகம் என்று முக்கிய உறுப்புகளில் நஞ்சு சேர்ந்து அவை சிர்குலைகின்றன. இவற்றை இணைத்துச் செயல்பட வைக்கும் இரத்தக் குழாய்களில் இந்த நஞ்சுகள் உப்புப் படிவம், கொழுப்புத் திரட்சிகளாகப் படிந்து இறுதியில் இதயம், சிறுநீரகம், மூளை ஆகியவற்றை சேதமுறச் செய்கின்றன.
ஆக மெல்லக் கொல்லும் இந்த நஞ்சுகளை அவ்வப்போது அகற்ற வேண்டும். அதற்கு என்ன மருந்து சாப்பிட வேண்டும் என்று கேட்கின்றீர்களா?
அதைச் சாப்பிட்டால் இரத்தத்தில் நஞ்சு முறியும்.
அது என்ன?
பத்து மிளகைத் தூள் செய்து தினசரி மோரிலோ, தேனிலோ அல்லது 1 சாப்பாட்டுடன் சேர்த்துச் சாப்பிட்டால் போதும். காலை - இரவு என இப்படி தினசரி இரண்டு வேளை சாப்பிட்டு வந்தால் இரத்தத்தில் சேரும் எல்லா நஞ்சுகளும் அம்பேல்....
என்ன? உடனே இந்த பழக்கத்தை தொடரலாமே??-- *********************************************(முஃமின்களே! பிரார்த்தனை செய்யுங்கள்:) ''எங்கள் இறைவா! நாங்கள் மறந்து போயிருப்பினும், அல்லது நாங்கள் தவறு செய்திருப்பினும் எங்களைக் குற்றம் பிடிக்காதிருப்பாயாக! எங்கள் இறைவா! எங்களுக்கு முன் சென்றோர் மீது சுமத்திய சுமையை போன்று எங்கள் மீது சுமத்தாதிருப்பாயாக! எங்கள் இறைவா! எங்கள் சக்திக்கப்பாற்பட்ட (எங்களால் தாங்க முடியாத) சுமையை எங்கள் மீது சுமத்தாதிருப்பாயாக! எங்கள் பாவங்களை நீக்கிப் பொறுத்தருள்வாயாக! எங்களை மன்னித்தருள் செய்வாயாக! எங்கள் மீது கருணை புரிவாயாக! நீயே எங்கள் பாதுகாவலன்; காஃபிரான கூட்டத்தாரின் மீது (நாங்கள் வெற்றியடைய) எங்களுக்கு உதவி செய்தருள்வாயாக!'' (அல்-குர்ஆன் 2:286)

ராமன் பாலம்

தில்லுமுல்லு ஜெயலலிதாவைக் கேட்கிறோம்-ராமனே கற்பனை ராமன் பாலம் எங்கிருந்து வந்தது? இப்போது எங்கே போனான் அந்த இராமபிரான்?
-பரமத்தி சண்முகம்
நன்றி; விடுதலை 05-05-2007


17 இலட்சத்து 50 ஆயிரம் ஆண்டுகள் பழமையானது `இராமர் பாலம்'' என்றும் பலயுகங்கள் கடந்தது என்றும், இது பழமையான நமது இதிகாச காவியமான ராமாயணத்தில் உள்ளதெனவும், எனவே இந்தப் பாலத்தை இடித்தால் ``நான் சட்டரீதியாக போராடுவேன்'' என்று அதிமுக பொதுச் செயலாளரான அறிக்கைத் தலைவி ஜெயலலிதா எச்சரித்துள்ளார். அம்மாவுக்கு இராமாயண இதிகாசத்திலும், இராமர்மீதும் அவ்வளவு பக்தியும் நம்பிக்கையும் படிந்துள்ளது.ஜெயலலிதாவைக் கேட்கிறோம், 17 இலட்சம் ஆண்டுகளுக்கு முன்பு மனிதர்களே கிடையாதே! பிறகு தசரதன் எங்கே? அவன் மகன் இராமன் எங்கே? சீதை தானெங்கே? பாலம் தானெங்கே? பாலம் தண்ணீருக்கு மேலேதானே இருக்கும்! எப்படி பாதாளத்தில் இருக்கும்? இராமர் கடவுளானால், இராமர் கட்டிய பாலம் எப்படிக் கடலுக்கடியில் மூழ்கும்? இவைகளுக்கெல்லாம் ஜெயலலிதாதான் விளக்கங்கூற வேண்டும். பா.ஜ.க., இந்து முன்னணி, ஆர்.எஸ்.எஸ்., போன்ற இந்து மத அமைப்புக்களை அணித்திரட்டி போர்க்கோலம் காணவும் தயாராகி விட்டார் ஜெயலலிதா!அறிஞர் அண்ணாவின் பெயரைக் கட்சி சுமக்கிறது அவரது திருவுருவத்தைத் தாங்கிக் கொடி பறக்கிறது!அறிஞர் அண்ணா இராமாயணத்தைப் பற்றிக் கூறியுள்ள கருத்தென்ன? ``இராமனும் இராவணனும் உண்மை உருவங்களா? வரலாற்றுக் காலத்தவரா? அல்ல. கற்பனைகள். இதனைக் கூறிடத் தன்மான இயக்கத்தவர் தயங்குவதில்லை''அறிஞர் அண்ணா ஆதாரம்: இராவண காவியத்துக்கான அணிந்துரைஇராமனே கற்பனைப் படைப்பென்று அறிஞர் அண்ணாவே கூறிவிட்ட பிறகு இராமன் கட்டிய பாலமேது? இராமாயண காவியமே கற்பனை, வான்மீகி முனிவர் எழுதிய மூலகாவியம் என்று பல்வேறு அறிஞர்கள், ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.இங்கே நாம் கேட்பது; அண்ணாவே இராமாயணம் ஒரு கற்பனைக் காவியம் என்று கூறிவிட்டப் பிறகு அண்ணாவின் பெயராலேயே கட்சி நடத்தும் அதன் தலைவி, அண்ணாவின் கருத்துக்கு முற்றிலும் விரோதமான அறிக்கை விடலாமா?இதே கருத்தைத்தான் தந்தை பெரியாரும் பல ஆண்டுகளாக பல்வேறு கோணங்களில் ஆராய்ச்சி செய்து எழுதியும் பேசியும் வந்திருக்கிறார்! இதோ மூதறிஞர் இராஜாஜி தான் எழுதிய சக்ரவர்த்தி திருமகன் என்ற இராமாயணத்திற்கான முன்னுரையில்;``வால்மீகி இராமாயணத்தில் காணப்படும் இராமன் ஒரு சிறந்த இராஜகுமாரன், வீரபுருஷன், அபூர்வமான தெய்வீக நற்குணங்கள் பெற்றவன் அம்மட்டே, கடவுளாக வேலை செய்யவில்லை'' பிறகு எங்கே போய் இராமன் பாலம் கட்டினான்?ஏன்! ஒரு சிறந்த இராஜகுமாரன் இராமேசுவரத்துக்கும், இலங்கைக்கும் இடையே 30 கிலோ மீட்டர் தொலைவுக்குப் பாலம் கட்ட முடியாதா? என்று கேட்கலாம்! எப்படி முடியும்? 17 இலட்சத்து 50 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கட்டியதாகத்தானே ஜெயலலிதா சொல்கிறார். அந்தக் காலத்தில், செங்கல், கருங்கல், சுண்ணாம்பு, இரும்பு போன்ற பொருள் இருந்திருக்க முடியாதே! இராமர் கடவுள் அவதாரமாயிருந்தால் அணில் போன்ற பிராணிகள்? தங்கள் உடலில் இருக்கின்ற ரோமங்கள் மூலம் மணல் சேர்த்துக் கொடுத்திருக்கும், இராமன் ஒரு சத்திரியன் தான் என்பதுதானே இராஜாஜி உள்ளிட்ட ஆராய்ச்சியாளர்கள் முடிவு!``வால்மீகி இராமாயணப்படி இராமன் விந்திய மலைக்குத் தெற்கே வரவே இல்லை, இந்தியாவுக்கும் ஸ்ரீலங்காவுக்கும் இடையே பாலம் எதுவும் கட்டவுமில்லை''(மிகப் பெரிய இராமாயண ஆராய்ச்சியாளர் டி. அமிர்தலிங்க அய்யர் இராமாயண விமர்சனம் என்ற நூலை அடிப்படையாகக் கொண்டு பழம்பெரும் கம்யூனிஸ்ட் தலைவர் கே. முத்தையா எழுதியுள்ள ``இராமாயண உண்மையும் புரட்டும்'' என்ற நூல்) ஆக இராமாயணம் என்பது வைணவ மதத்தை வளர்க்க எழுதிய இதிகாசம், சமஸ்கிருதத்தில் வால்மீகி எழுதும் முன் எழுத்து, அச்சு இயந்திரம் எல்லாம் வராத காலத்தில் வாய்மொழியாக நாடோடிக் கதையாயிருந்ததைத்தான் பின்னர் சமஸ்கிருதத்தில் வால்மீகி எழுதிட இதனைத் தமிழில் எழுதியவர் கம்பர்! இந்தக் கம்பரின் அழகு தமிழ் காவியத்தில் ஆபாசம் கலந்து தந்த புரட்டுக்கதைதான் இராமாயணம்! அந்தப் புரட்டுக் காவிய நாயகன்தான் இராமன்!! *** இராமாயணம் நடந்த கதை அல்ல! அதற்கு சரித்திர ஆதாரம் இல்லை!*** இராமாயணம் நடந்தது பூலோகத்தில் என்றால் தேவர்கள், ரிஷிகள் எல்லாம் பூலோகத்தில் எங்கு இருந்தார்கள்?*** தேவலோகத்திலென்றால் அங்கிருந்து பூலோகத்துக்கு எப்படி வந்தார்கள்? ஏன் வந்தார்கள்? இவை தந்தை பெரியார் அவர்கள் தொடுத்துள்ள வினாக்கள்! இவைகளுக்கு ஜெயலலிதா விடை கூறட்டும்!! ஒரு பெரிய திட்டம்! கப்பல் போக்குவரத்தில் தமிழகத்துக்கு மட்டுமின்றி இந்திய நாடு முழுமைக்கும் பயனளிக்கக் கூடிய சர்வதேச வர்த்தகத்தில் இந்தியா பெரும் பங்கேற்க வசதியான நீர் வழிப் போக்குவரத்தில் முதன்மையான இடம் பெறக் கூடியத் திட்டம்!! இதை நிறைவேற்றி விட்டால் திமுகவுக்கு கிடைத்திட இருக்கிற மாபெரும் புகழை எண்ணிப் பொருமுகின்ற ஜெயலலிதா காழ்ப்புணர்ச்சியினால் குறுகிய நோக்கத்தினால் இந்த மாபெரும் திட்டத்தை நிறைவேற்றிட ஓய்வொழிச்சலின்றி அயராது பாடுபடும் கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் மாண்புமிகு டி.ஆர். பாலு அவர்களைத் தொடர்ந்து கொஞ்சங்கூடப் பண்பாடற்ற, நாகரீகமில்லாத, நாராச நடையில், தாக்குவதோடு மாண்புமிகு முதல்வர் அவர்களையும் பொய்யர் என்றும் நா கூசாது ``நரகலைத் தின்று வாய் கொப்பளிக்கும் பேச்சை'' எந்தப் பொறுப்புள்ள ஏடுகளாவது கண்டிக்கின்றனவா என்றால் இல்லை! அந்தளவு பத்திரிகா தர்மம் இங்கே வாழ்கிறது! சரி, ஜெயலலிதா இனிச் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப் போவதாக கூறுகிறார். யார் தடுக்கிறார்கள், அவருக்குத் துணையாக மாபெரும் அகில இந்திய அரசியல் கட்சி (?)யின் மகத்தான மக்கள் தலைவர் சுப்ரமணியசாமி வேறு துணையிருக்கிறார், போங்கள் என்றுதான் தமிழக மக்கள் கூறுவார்கள். அது சரி அம்மாவுக்கு ஒரு கேள்வி! ஸ்ரீஇராமபிரான் கட்டிய பாலத்தை இடிக்காமல் தடுக்க! அந்த இராமபிரானே வரலாமே! ஒரே பாணத்தை எய்து, இலங்கைக்கும் தமிழ்-நாட்டுக்கும் இடையே உள்ள கடலை வற்றச் செய்ய முயன்ற போது கடல் அரசனான சமுத்திர ராஜன் ராமன் முன் தோன்றி மன்னிப்புக் கேட்டு இராமர் கூட்டம் இலங்கை செல்ல வழிவிட்டதாக இராமாயணம் கூறுகிறதே! இப்போது எங்கே போனான் அந்த இராமபிரான்? இராமாயணம் கற்பனைக் கதை! என்று தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, இராஜாஜி மற்றும் பல்வேறு அறிஞர் பெரு மக்களும் ஆராய்ச்சியாளரும், ஏன் பண்டித நேருவேகூட இராமாயணம் என்பது ஆரிய திராவிடப் போராட்டத்தைக் குறிக்கும் ஒரு கதை என்றுதான் கூறியிருக்கிறார் . இருந்தும் அண்ணா பெயரில் கட்சியை வைத்து அரசியல் நடத்தும் ஜெயலலிதாவுக்கு கரூர் பகுத்தறிவாளர் மன்றம் சார்பில் ஓர் அறைகூவல், இதுபற்றி விவாதிக்கத் தயாரா?மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் மாண்புமிகு டி.ஆர். பாலு அவர்கள் தஞ்சை சரசுவதி மகாலுக்கு நேரடியாகச் சென்று ஆய்வு நடத்தியதற்கு மோசமான அர்த்தம் கற்பித்துக் கிண்டல் மொழி பேசிய ஜெயலலிதாவே ஒரு நூலகத்திற்குத் திடீரென செல்வது தவறா? அவர் நூலகத்துக்கு நேரில் சென்று பார்த்ததும், பத்திரிக்கைகளில் வந்த செய்திப்படி வால்மீகி இராமாயணத்தில் உள்ள சில பகுதிகளைப் படி எடுத்துச் சென்றுள்ளார், இதில் என்ன தவறு? இது எப்படி ஆவணங்களை அழிப்பதாகும்? ஜெயலலிதாவே கூறியிருப்பது போல நூலகத்தில் உள்ள ஆவணங்கள் எவை வேண்டுமோ அவைகளைத் தமது இருப்பிடத்திற்கே வரவழைத்துப் பார்த்துக் கொள்ள முடியுமே! ஏன் அவ்வாறு செய்யவில்லை அமைச்சர்? அது அதிகாரத் தலையீடு ஆகிவிடும்! ஒரு பெரிய உலகப் புகழ் வாய்ந்த நூலகத்திற்கு நேரில் செல்வதுதான் முறை! நேரில் சென்றால் வேண்டும் நூல்கள், தேவைப்படும் விவரங்கள் எல்லாம் பெற முடியும்! அவர் ஒன்றும் சீல் வைத்த பங்களாவில் உள்ளூர் காவலர்களைப் புறந்தள்ளி விட்டு வெளியூர் காவலர்கள் துணையோடு கேரள நம்பூதிரிகளையும் ஆரூடக்காரர்களையும் வைத்து இரகசிய யாகமோ, யக்ஞமோ நடத்தவில்லையே! அவர் ஜெயலலிதாவைப் போல் நீதிமன்றத்திலேயே தான் போட்ட கையெழுத்தை தன்னுடையதல்ல என்று பச்சையாகப் பொய் சொல்லவில்லையே! தேர்தல் வேட்புமனு தில்லுமுல்லுகளே சந்தி சிரிக்கிறதே! அதன் காரணமாக ஒரு கவர்னரே கேவலப்பட்டு நீதிமன்றத்தின் கண்டனத்திற்கு ஆளான கதையெல்லாம் ஊர் சிரிக்கும் இரகசியமாயிற்றே? பொய்யே வேதமாய், புரட்டும் பித்தலாட்டமே பிழைப்பாய், தான் பெற்ற மகளுக்குக் கூடத் தன் தந்தை யார் எனத் தெரியாமல் இருட்டில் தள்ளி விட்டு வெளியில் வெளிச்சம் போட்டுத் திரிவோர் வெகு விரைவில் மக்களால் தண்டிக்கப்படுவார்கள்.
நன்றி: விடுதலை 05-05-2007

I’ve found God, says man who cracked the genome Steven Swinford

I’ve found God, says man who cracked the genomeSteven Swinford

THE scientist who led the team that cracked the human genome is to publish a book explaining why he now believes in the existence of God and is convinced that miracles are real. Francis Collins, the director of the US National Human Genome Research Institute, claims there is a rational basis for a creator and that scientific discoveries bring man “closer to God”. His book, The Language of God, to be published in September, will reopen the age-old debate about the relationship between science and faith. “One of the great tragedies of our time is this impression that has been created that science and religion have to be at war,” said Collins, 56. “I don’t see that as necessary at all and I think it is deeply disappointing that the shrill voices that occupy the extremes of this spectrum have dominated the stage for the past 20 years.” For Collins, unravelling the human genome did not create a conflict in his mind. Instead, it allowed him to “glimpse at the workings of God”. “When you make a breakthrough it is a moment of scientific exhilaration because you have been on this search and seem to have found it,” he said. “But it is also a moment where I at least feel closeness to the creator in the sense of having now perceived something that no human knew before but God knew all along. “When you have for the first time in front of you this 3.1 billion-letter instruction book that conveys all kinds of information and all kinds of mystery about humankind, you can’t survey that going through page after page without a sense of awe. I can’t help but look at those pages and have a vague sense that this is giving me a glimpse of God’s mind.” Collins joins a line of scientists whose research deepened their belief in God. Isaac Newton, whose discovery of the laws of gravity reshaped our understanding of the universe, said: “This most beautiful system could only proceed from the dominion of an intelligent and powerful being.” Although Einstein revolutionised our thinking about time, gravity and the conversion of matter to energy, he believed the universe had a creator. “I want to know His thoughts; the rest are details,” he said. However Galileo was famously questioned by the inquisition and put on trial in 1633 for the “heresy” of claiming that the earth moved around the sun. Among Collins’s most controversial beliefs is that of “theistic evolution”, which claims natural selection is the tool that God chose to create man. In his version of the theory, he argues that man will not evolve further. “I see God’s hand at work through the mechanism of evolution. If God chose to create human beings in his image and decided that the mechanism of evolution was an elegant way to accomplish that goal, who are we to say that is not the way,” he says. “Scientifically, the forces of evolution by natural selection have been profoundly affected for humankind by the changes in culture and environment and the expansion of the human species to 6 billion members. So what you see is pretty much what you get.” Collins was an atheist until the age of 27, when as a young doctor he was impressed by the strength that faith gave to some of his most critical patients. “They had terrible diseases from which they were probably not going to escape, and yet instead of railing at God they seemed to lean on their faith as a source of great comfort and reassurance,” he said. “That was interesting, puzzling and unsettling.” He decided to visit a Methodist minister and was given a copy of C S Lewis’s Mere Christianity, which argues that God is a rational possibility. The book transformed his life. “It was an argument I was not prepared to hear,” he said. “I was very happy with the idea that God didn’t exist, and had no interest in me. And yet at the same time, I could not turn away.” His epiphany came when he went hiking through the Cascade Mountains in Washington state. He said: “It was a beautiful afternoon and suddenly the remarkable beauty of creation around me was so overwhelming, I felt, ‘I cannot resist this another moment’.” Collins believes that science cannot be used to refute the existence of God because it is confined to the “natural” world. In this light he believes miracles are a real possibility. “If one is willing to accept the existence of God or some supernatural force outside nature then it is not a logical problem to admit that, occasionally, a supernatural force might stage an invasion,” he says.http://www.timesonline.co.uk/article/0,,2087-2220484,00.html

குஜராத் மாநிலம் கோத்ரா கலவரம்

குஜராத் மாநிலம் கோத்ரா கலவரம் தொடர்பாகப் பாதிக்கப்பட்ட 4 ஆயிரத்து 545 குடும்பங்களைச் சேர்ந்த 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் 81 குடியிருப்பு முகாம்களில் மிகப் பரிதாபமான நிலையில் இருந்து வருகின்றனர் எனும் உண்மையை உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட குழு கண்டறிந்து அறிக்கை தாக்கல் செய்துள்ளது. இந்த மக்களுக்கு வாழ்வுரிமையோ, உணவோகூடச் சரிவர இல்லாமல் அவதிப்படுகின்றனர் எனக் குழு அவ்வறிக்கையில் கூறியுள்ளது.உச்சநீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட குழுவின் தலைவர் டாக்டர் என்.சி. சக்சேனா தன் அறிக் கையில் பின்வரும் அதிர்ச்சி தரும் தகவல்களைத் தந்துள்ளார்.பாதிக்கப்பட்ட மக்களுக்கான குடியிருப்புகள் எதையும் மாநில அரசு அமைத்துத் தரவில்லை. மொத்தம் உள்ள 81 குடியிருப்புகளில் அய்ந்தில் மட்டுமே பள்ளிகள் உள்ளன. இவற்றிலும் நான்கில் மட்டுமே மதிய உணவு வழங்கப்படுகிறது.

குழந்தைகளுக்கான வளர்ச்சித் திட்டத்தின் கீழ் நான்கு மட்டுமே குழந்தைகளுக்கு ஊட்டச் சத்து வழங்குகின்றன. கருவுற்ற தாய்மார்களுக்கும், குழந்தை பெற்ற தாய்மார்களுக்கும் தரப்படும் உதவியை ஒரே ஒரு நிலையம் மட்டுமே அளிக்கிறது.

இந்து பென் தீவிரவாதிகள்
வழக்கு விசாரணைஇந்த அறிக்கையைப் பரிசீலித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் அரிஜித் பசாயத் மற்றும் டி.கே. ஜெயின் ஆகியோர் கோடை விடுமுறைக்குப் பின் இது தொடர்பான விசாரணையைத் தள்ளி வைத்துள்ளனர். இடம்பெயர்ந்த மக்கள் உணவுக்கும் மற்ற தேவைகளுக்கும் மிகவும் சிரமப்படும் நிலைபற்றிய சங்கடம் தரும் தகவல்கள் கிடைத்துள்ளன. உச்சநீதிமன்றம் உத்தரவிட்டபடி குஜராத் அரசு எவ்வித நடவடிக்கையும் நிறைவேற்றவில்லை.குஜராத் அரசு ஒப்புதல்குழு அனுப்பிய கடிதத்துக்குப் பதில் எழுதிய நரேந்திர மோடி அரசு, 2002 கலவரத்தில் பாதிக்கப் பட்ட மக்களுக்கு நிவாரணக் குடியிருப்புகள் அரசால் செய்து கொடுக்கப்படவில்லை என்பதை ஒத்துக் கொண்டுள்ளது. ``கலவரத்தில் வெடித்த வன்முறை பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதித்துவிட்டது.

அவர்களுக்கு ஏற்கெனவே வேலை தந்து உதவியவர்கள் தற்போது வேலை தரத் தயாரில்லை. எனவே, அவர்கள் வேலை வாய்ப்பின்றி உள்ளனர்’’ என்று குழு தெளிவாகவே தெரிவித்துள்ளது.இந்நிலையில், குஜராத் அரசு உச்சநீதிமன்றத்திற்குத் தவறான தகவல்களைத் தந்திருக்கிறது. நீதிமன்ற உத்தரவின்படி பாதிக்கப்பட்டோருக்குத் தரவேண்டிய உணவு, வேலைவாய்ப்பு ஆகியவற்றை அரசு தரவேயில்லை என்பதை சான்றுகள் மெய்ப்பிக்கின்றன எனக் குழு தெரிவித்திருக்கிறது.ஆய்வு வெளிப்படுத்தும் அவலங்கள்குழுவின் உறுப்பினர்கள் முழு அளவில் ஆய்வு செய்துள்ளனர். 81 குடியிருப்புகளில் மூன்றில் மட்டுமே நியாய விலைக் கடைகள் உள்ளன. 4 ஆயிரத்து 545 குடும்பங்களில் 725 குடும்பங்களுக்கு மட்டுமே வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ளவர்களுக்கான குடும்ப அட்டைகள் தரப்பட்டுள்ளன. இவர்கள் மீதான பொருளாதார புறக்கணிப்பு மிகவும் கடுமையாக நிலவுகிறது.

எரித்து கொல்லப்பட்ட முஸ்லிம் சிசுக்கள்
நீதிமன்ற அவமதிப்புபாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான மக்களின் குடியிருப்புகளில் நிலவும் மோசமான சூழலைக் கருத்தில் கொண்டு பார்த்தால், குஜராத் மோடி அரசின் தலைமைச் செயலாளர் மீது நீதிமன்ற அவமதிப்பு அறிவிக்கை தரப்படவேண்டும் என்று குழுவின் தலைவர் டாக்டர் சக்சேனா தெரிவித்துள்ளார். தலைமைச் செயலாளர் மற்றுள்ள உயர் அலுவலர்கள் நீதிமன்றக் குழு அதிகாரிகளுக்குத் தவறான, பொய்ப் புள்ளி விவரங்களை அளித்துள்ளனர்.குடியிருப்புகளில் வசிக்கும் எல்லாக் குடும்பங்களுக்கும் ’அந்தியோதயா’ அடையாள அட்டைகள் வழங்கப்பட வேண்டும்; இவர்கள் தங்கள் உடைமைகளை இழந்துவிட்டனர்; பொருளாதாரப் புறக்கணிப்பால் மிகவும் பாதிப்படைந்துள்ளனர்; தங்கள் வீடுகளுக்குச் செல்ல பயப்படுகின்றனர்; தொடக்கப்பள்ளிகளும், மதிய உணவுக் கூடங்களும் 81 குடியிருப்புகளிலும் தொடங்கப்படவேண்டும்; குழந்தைகளுக்கான வளர்ச்சித் திட்ட உதவிகள் அனைவருக்கும் வழங்கப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றக் குழு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

கோத்ரா சம்பவத்தை வைத்துக் கொண்டு இந்து மதவெறி சக்திகள் சிறுபான்மை இசுலாமிய மக்கள் மீது நடத்திய தாக்குதல் மிகக் கொடூரமானது. பல்லாயிரக்கணக்கான இசுலாமியர்கள் கொல்லப்பட்டனர். கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள இசுலாமியர்களின் சொத்துக்கள் சூறையாடப்பட்டன. இசுலாமியப் பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டனர்.குஜராத்தில் நடத்தப்பட்ட இந்து மதவெறியின் கோர தாண்டவம் ஆர்.எஸ்.எஸ்., பஜரங்தள், சங்பரிவார், பா.ஜ.க. போன்ற மதவெறிக் கட்சி, அமைப்புகளின் ரத்தம்படிந்த இன்னொரு பக்கத்தை உலகிற்கு அம்பலப்படுத்தியது.இதுநாள்வரையில், இந்து பாசிச நரேந்திர மோடி அரசு, பாதிக்கப்பட்ட சிறுபான்மை இசுலாமிய மக்களுக்கு குறைந்தபட்ச நிவாரணம்கூட வழங்கவி்ல்லை. நீதியைப் பெற்றுத் தர வேண்டிய நீதி அமைப்புகளும் தேவையான முயற்சிகளை மெற்கொள்ளவில்லை.தற்போது உச்சநீதிமன்றம் அமைத்த குழு தனது அறிக்கையில், பாதிக்கப்பட்ட சிறுபான்மை இசுலாமியர்களுக்கு குஜராத் அரசு எதையும் செய்யவில்லை எனபதைத் தெளிவாக கூறியுள்ளது.


இந்து தீவிரவாதிகளால் எரிக்கப்பட்ட முஸ்லிம் பென்களும் குழந்தைகளும்
சிதறிக்கிடக்கும்சிறுபான்மை இசுலாமிய மக்களின்சாம்பலின் துகல்களின் ஊடே..மரண ஓலங்கள்,வழிந்தோடும் ரத்த ஆறுகள்,சிதறிக் கிடக்கும் சதைகள்,மண்டை ஓடுகள்,பிய்த்து எறியப்பட்ட பிஞ்சுகள்,சிதைக்கப்பட்ட பெண்களின் உடல்கள்..நாறிக் கொண்டிருக்கிறதுநரேந்திர மோடியின்இந்து மதவெறி.நீதிக்காக காத்துக் கிடக்கிறதுகுரலற்றவர்களின் குரல்...

நன்றி : புதுவை கோ. சுகுமாரன்

பெண்ணியம் சில புரிதல்கள்

பெண்ணியம் சில புரிதல்கள்
சையத் அப்துர் ரஹ்மான் உமரி

பெண்ணியம் தொடர்பான சில அடிப்படை விஷயங்களை சகோதரர்கள் புரிந்து கொண்டால் நலம் என்று நினைக்கிறேன். பிரச்சனையின் முழுப் பரிணாமத்தை விளங்கிக் கொள்வதற்கு அவை துணைபுரியும். ஏனென்றால், யார் வேண்டுமானாலும் எதைப் பற்றி வேண்டுமானாலும் அதைப் பற்றிய அடிப்படையான அறிவு இருக்கின்றதோ, இல்லையோ பேசலாம் என்பது இப்போதெல்லாம் ஒரு புதிய மரபாக ஆகி வருகின்றது. பெண்ணியம் என்றால் என்ன? என்பது பற்றி அனைத்து வாசகர்களும் நன்கு விளங்கி வைத்திருப்பார்கள் என்று நான் கருதவில்லை.ஆதி காலந்தொட்டே பெண்ணினம் ஏதோ ஒரு வகையான அடக்கு முறைக்கு ஆளாகிக் கொண்டே வந்துள்ளது. இஸ்லாமியக் கண்ணோட்டத்தில் மனித வரலாற்றைப் பார்த்தோமென்றால் எப்போதெல்லாம் சத்திய நன்னெறி பின் தள்ளப்பட்டு அசத்திய கோட்பாடுகள் தலையெடுத்தனவோ அப்போதெல்லாம் ஏறக்குறைய எல்லா சமூக அவலங்களும் அரங்கேறியுள்ளன. அவற்றுள் முன் வரிசையில் பெண் அடக்கு முறை இடம் பிடிக்கின்றது.

இறைத்தூதர்கள் வழியாக இடையிடையே இஸ்லாமிய நன்னெறி புத்துயிர் பெற்ற போதெல்லாம் பெண்ணுக்கு அவளுடைய இயல்பான உரிமை வழங்கப்பட்டு வந்துள்ளது.வரலாற்றில் ஆணித்தரமாக பதிவாகியுள்ள செய்திகளின் அடிப்படையில் பார்த்தோமென்றால் பத்தொன்பதாம் நூற்றாண்டில் பெண்ணியக் கொள்கை தலையெடுத்தது. பெண் விடுதலைக்கான வாசல் திறந்தது, என்பதை படிக்கலாம்.

ஆனால், உண்மை நிகழ்வுகளை அலசிப் பார்த்தோமென்றால் பெண்ணுக்கான உண்மையான சுதந்திரம் ஆயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு முன்னால் இஸ்லாமின் மூலமாகத்தான் கிடைத்துள்ளது என்பதை ஒப்புக் கொள்ளலாம்.ஒவ்வொருவரும் தன்னுடைய சொந்த ஊரை, தான் பேசும் மொழியை, தான் பின்பற்றும் சமய நெறியை விரும்பி நேசிக்கத் தான் செய்கிறார்கள். எல்லை கடந்து போய் சிலரிடம் இது வெறியாக மாறிவிடுவதும் உண்டு! அத்தகைய ஒரு சமயப்பற்றினால், நாம் இவ்வாதத்தை முன் வைக்கவில்லை. மனிதகுலத்திற்கான விடுதலையே இஸ்லாமின் மூலமாதத்தான் சாத்தியம் என்று நாம் கூறுகிறோம்.

வரலாற்று அரங்கில் குறைந்த கால கட்டம் தான் என்றாலும் அதைப் பரீட்சித்துக் காட்டி இருக்கிறோம். மனித குல விடுதலையே இஸ்லாமின் மூலமாகத் தான் என்னும் போது பெண் இனமும் கண்டிப்பாக அதில் அடங்கத்தானே செய்யும்!

சமவுரிமை, சமத்துவம் என்றெல்லாம் பேசும் இன்றைய பெண்ணிய சிந்தனை பத்தொன்பதாம் நூற்றாண்டில் பிறப்பெடுத்தது. கற்பனைச் சமூகவியலாளரான சார்லஸ் ப்யூரியே என்பவர் தாம் முதலில் பெண்ணியம் (Feminism) என்ற சொல்லை 1837 இல் கையாண்டார். அதன் பின்பு அது தொடர்ந்து வளர்ச்சியடைந்து கொண்டே சென்று இன்று விமர்சனங்களின் விளிம்பில் வந்து நிற்கின்றது.ஓரிடத்தில் உரிமைகள் மறுக்கப்படுகின்றன, நசுக்கப்படுகின்றன என்றால் அவற்றைப் பெறவும் மீட்டெடுக்கவும் அங்கே பாதிப்படைந்தவர்களால் கிளர்ச்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. கருத்து மோதல்கள் கிளம்புகின்றன. போராட்டங்கள் வெடிக்கின்றன! எந்தெந்தக் காரணங்களால் இவ்வுரிமைகள் பறிக்கப்பட்டனவோ அவற்றைக் குறி வைத்தே இவ்வெதிர்வினைச் செயற்பாடுகள் அமைகின்றன.

இக்கண்ணோட்டத்தில் பெண்ணியம் பேசும் உலகளாவிய குழுக்களை கீழ்க்காணும் ஏழெட்டுப் பிரிவுகளில் வகைப்படுத்தலாம். அப்பிரிவுகளின் தலைப்புகளே பின்னணிக் காரணங்களை விளக்கி விடும் என்பதால் வகைப்படுத்துவதோடு நாம் நின்று கொள்கிறோம்.


சமஉரிமை, சமத்துவம் கோரும் குழுக்கள் (Egalitarian Forms)தாயார் சமூக அமைப்புக் குழுக்கள் (Gynocentric Forms)ஆணாதிக்க எதிர்ப்புக் குழுக்கள் (Belief Inoppression bg Patriarchty)பிரிவினைவாதக் குழுக்கள் (Segregatailnalist)நிலம் சார்ந்த குழுக்கள் (African American)மேற்குலகு தாண்டிய குழுக்கள் (Non-Western)பாலியல் சுதந்திரம் பேசும் குழுக்கள் (Pro-sex Feminism)நம்முடைய இறை நம்பிக்கையும் ஈமானும் சரியாக இருக்கின்ற பட்சத்தில் இந்த இடத்தில், இத்தகைய பின்னணிக் காரணங்கள் இஸ்லாமிய சமூக அமைப்பினுள் நிலவுகின்றனவா? என்று கேட்பதை விட, இத்தகைய பின்னணிக் காரணங்கள் இடம் பெற இஸ்லாமியக் கோட்பாடு அனுமதிக்கின்றதா? என்று கேட்பதற்கே முன்னுரிமை அளிப்போம். இவ்விரண்டு கேள்விகளுக்கும் இடையிலான அடிப்படை அதே சமயம் அதிமுக்கிய வேறுபாட்டை விளங்கிக் கொண்டால் இன்றைக்கு ஒரு சிலர் இஸ்லாமியப் பெண்ணியம் என்று அறிவுக்குச் சம்பந்தமே இல்லாமல் மனதில் தோன்றியதையெல்லாம் வெளிப்படுத்திக் கொண்டிருக்கும் சூழல் தோன்றியிருக்காது.ஏனென்றால், யூதப் பெண்ணியம், கறுப்புப் பெண்ணியம், பிரெஞ்சுப் பெண்ணியம், ஆப்பிரிக்கப் பெண்ணியம். கிறிஸ்துவப் பெண்ணியம், இந்து மதப்பெண்ணியம் என்றெல்லாம் நிலம் சார்ந்த, இனம் சார்ந்த, சமயம் சார்ந்த பெண்ணியக் குழுக்கள் காணப்படுவதைப் போல இஸ்லாமியப் பெண்ணியம் என்று உலக அரங்கில் காணப்படுவதில்லை (அதைத் தோற்றுவிக்க ஒருசிலர் வலுக்கட்டாயமாக முயற்சிக்கிறார்கள்) ஏன்? என்ன காரணம்? என்றால் எந்த விதமான உட்காரணங்களும் அறவே இல்லை என்பதால் இஸ்லாமியப் பெண்ணியம் தோன்றுவதற்கான சாத்தியக் கூறுகளும் அடியோடு கிடையாது.

ஒரு கொள்கையோ, கோட்பாடோ பெண்ணை மனுஷியாகக் கருத மறுத்தால், அவளை அடக்கி வைக்கவும் அடிமைப்படுத்தவும் நினைத்தால், அவளிடம் புதைந்துள்ள திறதமைகளை வெளிக்கொணர விடாமல் தடுத்தால் நாம் அதை உட்காரணம் என்று கூறுகிறோம்.ஒரு கொள்கையைப் பின்பற்றும் மக்கள், பின்பற்றாளர்கள் அதனை முறையாக பின்பற்றாததால் தோன்றும் பின் விளைவுகளை நாம் புறக்காரணம் என்று வகைப்படுத்துகிறோம்.இஸ்லாமிய வட்டத்திற்குள் பெண் விடுதலை என்கிற பேச்சே எழ வாய்ப்பில்லை. ஏனெனில் அதற்கான உட்காரணம் ஒன்று கூட இங்கு காணப்படவில்லை என்று நாம் கூறுவதால் இஸ்லாமியப் பெண்கள் அனைவரும் சமூக அளவிலும், கல்வி, பொருளாதாரத்திலும் வளர்ச்சியும் முன்னேற்றமும் அடையப் பெற்று மேனிலையில் விளங்குகிறார்கள் என்று சாதிப்பதாக அர்த்தம் கொள்ளக் கூடாது. நம்முடைய பெண்கள் மிகவும் பின் தங்கிய நிலையில் தான் உள்ளார்கள் என்பதையோ, அதற்கான மூலக் காரணங்களை இனங்கண்டறிந்து நீக்குவதில் முனைந்து செயற்பட வேண்டும் என்பதையோ நாம் ஒரு போதும் மறுக்கவில்லை.உட்காரணம், புறக்காரணம் என்பவை பற்றிய முறையான புரிதல் எதுவும் இல்லாமல், ஆழ்ந்து சிந்திக்கும் திறன், சீர்தூக்கிப்பார்க்கும் போக்கு எதுவுமே இல்லாமல், மேற்கண்ட எல்லாவகையான பெண்ணியக் கொள்கைகளுக்கும் அமைந்துள்ளதைப் போன்றே, முஸ்லிம் பெண்களின் கீழ் நிலைக்கும் இஸ்லாமிய சமயத்தில் உள்ள குறைபாடுகளும் கோளாறுகளும் தான் காரணம் என்று வெள்ளாடுகளைப் போல மேலோட்டமாகப் புரிந்து கொண்டும், அதிமேதாவித்தனமாக பேசுவதாக நினைத்துக் கொண்டும் சிலர் எக்கச்சக்கமாக பேசிக் கொண்டுள்ளார்கள்.

இத்தகைய வெள்ளாடுகளை கறுப்பு ஆடுகளாக எப்படியாவது மாற்றி இஸ்லாமின் மீது சேற்றையும் சகதியையும் வாரியிறைத்து விட வேண்டும் என்று உலகளாவிய அளவில் சில சக்திகள் தொடர் முயற்சிகளில் ஈடுபடுகின்றன. இறையருளால் இத்தகு முயற்சிகள் அவர்கள் எதிர்பார்த்த வெற்றியைப் பெறுவதில்லை என்பதோடு, உட்காரணம் எதுவும் உண்மையிலேயே இல்லாததால் அவை தோல்வியையே தழுவும்.இன்னொரு விஷயத்தையும் நீங்கள் கவனித்துப் பார்க்க வேண்டும். கட்டுரைக்கு இடையில் சம்பந்தமில்லாமல் வந்து விட்ட விஷயம் என்றாலும் கவனித்தாக வேண்டிய விஷயம். இக்கட்டுரையை எழுதிக் கொண்டிருக்கிற நான், இறைவனுக்கு பயந்து நான் அறிந்த சில விஷயங்களை சகோதரர்களோடு பகிர்ந்து கொள்ள வேண்டும், நாளை அதற்கான விசாரணையை சந்திக்க வேண்டியிருக்கும் என்கிற பயத்தில் எழுதிக் கொண்டுள்ளேன்.

இறைவனைப் பற்றிய பயம் என்னை எழுதத் தூண்டுகின்றது. இறைநம்பிக்கை, இறையருள் என்கிற சொற்களைப் பயன்படுத்துகிறேன். அதே சமயம், இஸ்லாமியப் பெண்ணியம் என்று பேசுபவர்களுடைய, முஸ்லிம் பெண்களைப் பார்த்து பரிதாபப்பட்டு எழுத்தாணியை ஏந்துபவர்களை உன்னிப்பாக நீங்கள் பார்த்தீர்கள் என்றால் இத்தகைய ஒரு பார்வையையே காண முடியாது!ஒரே இறைவன் தான் என்பது நம் கொள்கை!. ஒரே இறைவன் தான் என்பதால் அவனால் படைக்கப்பட்ட அனைத்து மக்களும் சரிசமமானவர்கள்!!. வெள்ளை கறுப்பு பாகுபாடுகள், நிற வேறுபாடுகள், ஆண்பெண் பிரிவினைகள் அறவே கிடையாது. ஆணை விட பெண் தாழ்ந்தவள் அல்ல என்று நாம் கூறுகிறோமென்றால் அதற்கான அடிப்படை அம்சம் இங்கு தான் இருக்கின்றது. மேலுலகில் இருந்து கருத்துக்களைத் தருவித்துக் கொண்டிருக்கும் இறக்குமதியாளர்கள் (இறங்குமதியாளர்கள்) இந்த இடத்தில் வேறுபடுகிறார்கள்.பெண்களின் முன்னேற்றத்திற்காகப் பாடுபடுவதும் அதற்காக முனைந்து உழைப்பதும் தான் பெண்ணியம் என்றால் இன்றைய முஸ்லிம் பெண்களின் நிலை என்ன? சமூக அளவிலும், குடும்ப அளவிலும். கல்வி, பொருளாதார நிலைகளிலும் அவர்கள் எங்ஙனம் காணப்படுகிறார்கள்? என்பன போன்ற கேள்விகள் எழுகின்றன.

இன்ஷா அல்லாஹ் அவற்றை அடுத்த கட்டுரையில் காண்போம்.
அதே சமயம் பெண்களின் உரிமைகளாக பெண்ணியக் குழுக்கள் முன் வைக்கும் சம உரிமை, ஆண்களுக்கு நிகரான வேலைவாய்ப்புகள், தனித்துவம், பாலியல் சுதந்திரம், ஓரினச் சேர்க்கை, போன்றவற்றைப் பற்றி இஸ்வாம் என்ன கருதுகின்றது என்பதையும் நாம் பார்த்தாக வேண்டியிருக்கிறது.
இஸ்லாமிய சமூகம் என்பது இறைத்தூதர் முஹம்மது (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் இறைவனின் பேரருள் அவர் மீது உண்டாகட்டும்) அவர்களுடைய வார்த்தைகளில் ஓருடலைப் போன்றது. உடலில் ஒரு நோய் தோன்றிவிட்டால் அதெல்லாம் ஒன்றுமில்லை என்று கூறி மழுப்புவது அறிவுடைமை ஆகாது. நோய் நாடி நோய் முதல் நாடி கண்டடைந்து நீக்க முயல வேண்டும். முஸ்லிம் பெண்கள் இன்று எப்படியெல்லாம் அலைக்கழிக்கப்படுகிறார்கள் என்பதைப் பார்க்கும் போது நம் உள்ளம் பதறுகின்றது. இறைவனிடம் அவர்களுக்காக மன்றாடுகிறோம். தலாக், வரதட்சணை, அடக்கு முறை, பாலியல் துன்புறுத்தல்கள், சிறைக் கொடுமைகள் போன்று எத்தனை எத்தனையோ தளைகளை அவர்கள் தங்கள் கழுத்துக்களில் சுமந்து கொண்டுள்ளார்கள். இவற்றையெல்லாம் எதிர்க்க வீறு கொண்டு நாம் போராடுவோம்.பெண்ணியம் என்கிற பேனரின் கீழ் அல்ல!நம் இனப் பெண்கள் இன்னலுறுகிறார்களே என்கிற அக்கறையினாலும் அல்ல,இறைவனும் இறைத்தூதரும் கடமையாக்கியுள்ள காரணத்தினால் ....... நாளை விசாரணை நாளன்று வல்ல இறைவனுக்கு முன்னால் குற்றவாளிகளாய் நிற்க வேண்டியிருக்குமே என்கிற பயத்தினால்......
நன்றி : அந்நிஷா

Monday, July 23, 2007

பகுத்தறிவின் லீலைகள் வியந்தோதாய் உடன்பிறப்பே…

பகுத்தறிவின் லீலைகள் வியந்தோதாய் உடன்பிறப்பே…
ஏய்! சாயிபாபாவெறுங்கையிலிருந்து விபூதியும் பூச்செண்டும்வரவழைத்தாயே! அதுவா அற்புதம்?வெயிலறியா உன் தலைமுடியிலிருந்துவிதவிதமாய் கடிகாரங்களை வரவழைத்தாயே!அதுவா அற்புதம்?
பசியறியா உன் வயிற்றியிலிருந்துபலப்பல லிங்கங்களை வரவழைத்தாயே!அதுவா அற்புதம்?அடே! சாயிபாபாவழியறியா உன் காவிக் கஜானாவிலிருந்துகடைசியில் கருணாநிதியைவெளியே வரவழைத்தாயே!அதுவன்றோ அற்புதம்!!வீழ்ந்திற்றோ கொள்கைக் குன்று என்றுவிளங்காத உடன்பிறப்பே...இருநூறு கோடி எதிரே வருகையில்பெரியார் பார்வையா பார்க்க முடியும்?
கொஞ்சம் பகுத்தறிவோடு பார்!யாருக்கும் தலைவணங்காத சுருள்முடியையேகோபாலபுரம் தன் காலடிக்கு வரவழைத்ததுஆன்மீகத்திற்கே பேரடி அல்லவா?அதிசயம் அல்லவா?
அற்புதத்தில் விஞ்சி நிற்பதுபாபாவா? கலைஞரா? பார்!வெறுங்கையிலிருந்து நோக்கியாவைவரவழைத்தார்!
இதோ... ஊமைகள் பேசுகிறார்கள்!காலிக் கஜானாவிலிருந்துகலர் டி.வி.யை வரவழைத்தார்!அதோ... குருடர்கள் பார்க்கிறார்கள்;வாயிலிருந்தே இரண்டு ஏக்கர் நிலத்தைவரவழைத்தார்!அதோ முடவர்கள் நடக்கிறார்கள்.அது மட்டுமா...?
அணுவைத் துளைத்து, மலைகள் விழுங்கி,ஆழ்கடல் குடித்து ஆயிரமாய் விளைநிலங்கள் செரித்துகுறுகத் தறிக்கும் உலகமயப் பொதுமறையைஓவியமாய்த் தீட்டும் அற்புதம்அந்த பாபாவுக்கு வருமா?அவரா, இவரா?
அற்புதத்தைத் தெரிவு செய்ய முடியாமல்திக்குமுக்காடி நெளிகிறது தெலுங்கு கங்கை.ஆசீர்வாதத்திற்குப் பயந்துஓடி ஒளிகிறது கூவம்!
துரை. சண்முகம்

குடியரசுத் தலைவர் தேர்தல்- பி.ஜே.பி. பிரசாரம்

அமெரிக்க ஜனநாயகத்தில் அத்தரும், பன்னீரும் மணக்கும் என்பார்கள். ஆனால், அங்கே நடைபெறும் குடியரசுத் தலைவர் தேர்தலில் சேற்றின் நாற்றமும், புழுதியின் வாடையும்தான் வீசும். அங்கே இரண்டு கட்சி ஆட்சிமுறைதான் உள்ளது. குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடுகிறவர்களும் தொழில் சாம்ராஜ்ய அதிபர்களாக இருப்பார்கள். குறிப்பாக, ஆயுத உற்பத்தி விற்பனையில் தொடர்புடையவர்களாக இருப்பார்கள். எனவே, அங்குள்ள தொலைக்காட்சிகளும் ஏடுகளும் இதர பிரசார சாதனங்களும் இரண்டுபட்டு நின்று பிரசாரம் செய்யும்.
தங்கள் எதிர் அணி வேட்பாளரை எந்த அளவிற்குத் தரம் தாழ்த்தி விமர்சிக்க முடியுமோ, அந்த அளவிற்குத் தாழ்ந்து வந்து தாக்குதல் தொடுக்கும். அந்த வேட்பாளர், பள்ளியில் படிக்கும்போது யாரைக் காதலித்தார் தெரியுமா என்று ஆரம்பித்து, அவருடைய காதலிகளின் பட்டியலை வெளியிட்டு இப்போது கரம் பிடித்திருப்பவரின் வாழ்க்கையையும் விமர்சிக்கும்.
அதன் எதிர் அணி சும்மா இருக்குமா? வேட்பாளரின் தாத்தாவிற்கு எத்தனை காதலிகள், பாட்டிக்கு எத்தனை காதலர்கள் என்று ஆரம்பிக்கும். இரு தரப்பின் களங்கம், முறைகேடுகள், புகார்கள் அம்பலத்திற்கு வரும்.
ஆனால், இந்தியக் குடியரசுத் தலைவர் தேர்தல் முன்னர் கண்ணியமாக, நாகரிகமாக நடைபெற்று வந்தது. தனி நபர் தாக்குதல் எந்தக் காலத்திலும் முன்னிறுத்தப்படவில்லை. ஆனால், அண்மையில் நடந்த தேர்தலை அமெரிக்கத் தரத்திற்கு பி.ஜே.பி. இழுத்துச் சென்றுவிட்டது. ஏற்கெனவே தத்துவ வறட்சியில் தள்ளாடும் அந்தக் கட்சி அண்மைக்காலமாக அரசியல் வறட்சியில் அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறது.
தமது அரசியலை நகர்த்த குடியரசுத் தலைவர் தேர்தல் அதற்கு ஒரு வாய்ப்பாக அமைந்தது. அந்தத் தேர்தலில் மீண்டும் போட்டியிடும்படி அப்துல் கலாமைச் சந்தித்து வேண்டுகோள் விடுத்தது. அவர் மறுத்துவிட்டார். அதன் பின்னர், பொது வேட்பாளரை நிறுத்தலாம் என்று ஊருக்கு உபதேசம் செய்தது.
குடியரசுத் தலைவர் தேர்தலில் வேட்பாளரை நிறுத்துவது என்று காங்கிரஸ், இடதுசாரிக் கட்சிகளின் ஐக்கிய முன்னணி முடிவு செய்ததும், நீண்ட விவாதங்களுக்குப் பின்னர் ராஜஸ்தான் கவர்னராக இருந்த பிரதிபா பாட்டீலை நிறுத்தியது.
பொது வேட்பாளர் என்ற தமது இரண்டாவது முயற்சியிலும் தோல்வி கண்ட பி.ஜே.பி., வேறு வழியின்றி தமது தானைத் தலைவர்களில் ஒருவரான பைரோன்சிங் ஷெகாவத்தை சுயேச்சை வேட்பாளராக நிறுத்தியது. பொட்டும் பூவும் சுமங்கலிக்குச் சுமையாக இருக்காது. ஷெகாவத்தை பி.ஜே.பி. வேட்பாளராக நிறுத்தியிருந்தால், கட்சியின் மானமாவது காப்பாற்றப்பட்டிருக்கும். கட்சி முத்திரை சுமையாகிப் போனது.
முன்னாள் ராணுவத்தினர் சங்கம் அமைத்திருப்பது போல, முன்னாள் முதலமைச்சர்கள் ஒரு சங்கம் வைத்திருக்கிறார்கள். அவர்களுடைய ஆதரவு கோரி செல்வி ஜெயலலிதாவிற்கு பி.ஜே.பி. தூது அனுப்பியது. எந்தப் பக்கம் அடியெடுத்து வைப்பது என்று தெரியாது அந்தச் சங்கம் தடுமாறிக் கொண்டிருந்தாலும், ஷெகாவத்தை ஆதரிப்பதற்கு இல்லை என்று கைவிரித்துவிட்டது. ஆகவே, அடுத்து இன்னொரு தோல்வியை பி.ஜே.பி. சந்தித்தது.
இன்னொரு பக்கம், சொந்தக் கூட்டணிக்குள்ளேயே வெடிச் சத்தங்கள் கேட்டன. மாநில உணர்வோடு பிரதிபா பாட்டீலைத்தான் ஆதரிப்போம் என்று சிவசேனா அறிவித்தது. பி.ஜே.பி. கலங்கிப்போனது. ஷெகாவத்திற்கு ஆதரவு உண்டா இல்லையா என்று கடைசி நிமிடம் வரை திரிணாமுல் காங்கிரஸ் முடிவெடுக்க மறுத்தது. எனவே, தொட்டால் சிணுங்கியாக பி.ஜே.பி. துவண்டுபோனது.
வெற்றிக்கான எல்லா வழிகளும் இயல்பாய் அடைபட்ட பின்னர், அந்தக் கட்சிதான் என்ன செய்யும்? மேலும் ஓட்டப் பந்தயத்திற்குப் பொய்க்கால் குதிரை ஆசைப்பட்டிருக்கக் கூடாது.
கடைசியாக, புதைபொருள் ஆராய்ச்சியில் பி.ஜே.பி. இறங்கியது. நாற்பது ஆண்டுகளாக அடிமேல் அடியெடுத்து வைத்து பொது வாழ்வில் முன்னேறியவர் பிரதிபா பாட்டீல். குடியரசுத் தலைவர் தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் செய்யும் வரை அவர் ராஜஸ்தான் கவர்னராக இருந்தார். அந்த மாநிலத்தில் பி.ஜே.பி. ஆட்சிதான் நடைபெறுகிறது. அதுவரை பிரதிபா பாட்டீல் மீது எவரும் எந்தக் குற்றச்சாட்டும் கூறியதில்லை.
ஆனால், தேர்தல் பிரசாரம் சூடு பிடிக்கத் தொடங்கியதும் பிரதிபா பாட்டீலின் சொத்துக் கணக்கை தேர்தல் ஆணையம் கேட்க வேண்டும் என்று பி.ஜே.பி. கோரியது. அந்தக் கோரிக்கையை தேர்தல் ஆணையம் ஏற்க மறுத்தது. ஆனால், சொத்துக் கணக்கை பிரதிபா வெளியிட்டார்.
நாடு விடுதலை பெற்ற அறுபது ஆண்டுகளுக்குப் பின்னால், முதன் முதலாக ஒரு பெண்மணி குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடுகிறார்.
நாளை குடியரசுத் தலைவியாக அமரப்போகும் அந்தப் பெண், நாட்டின் முதல் குடிமகள். முப்படைகளுக்கும் தலைவி. அமைகின்ற ஜனநாயக அரசுகளுக்கெல்லாம் அங்கீகாரம் அளிக்கப் போகும் தலைமகள். எனவே, அவருக்கு எதிராக பி.ஜே.பி. பிரசாரம் தொடங்கினாலும் அதனை ஓர் எல்லைக்குள் நிறுத்திக் கொள்ளும் என்று எதிர்பார்த்தோம். ஆனால், நாகரிக உலகின் நம்பிக்கையை பி.ஜே.பி. அடியோடு தகர்த்துவிட்டது. குடியரசுத் தலைவரின் சிறப்பைக் குலைத்துவிட்டது.
இறுதியாக, பிரதிபா பாட்டீல் மீது அவதூறு பரப்புவதற்காகவே ஒரு வெப் சைட்டை பி.ஜே.பி. தொடங்கியது.
அருண்ஷோரி, குல்கர்னி போன்ற பி.ஜே.பி.யின் பிரசார எழுத்தாளர்கள் பிரபல ஏடுகளில் பிரதிபா பாட்டீலுக்கு எதிராகவும் அவரது குடும்பத்தினருக்கு எதிராகவும் எழுதிக் குவித்தனர்.
ஒரு காலத்தில் பிரதிபா பாட்டீல் அங்கம் வகித்த அல்லது, தொடங்கிய நிறுவனங்களில் எப்போதோ நடந்ததாக முறைகேடுகள், ஊழல்கள் என்று பட்டியல் போட்டனர். அவை அனைத்தும் உண்மைக்கு மாறானவை என்று ஆதாரங்களோடு மறுக்கப்பட்டன.
பிரதிபா பாட்டீலை சிறுமைப்படுத்தி சித்திரிப்பதற்காக தனியார் தொலைக்காட்சியில் அருண்ஷோரியின் பெரிய பேட்டி ஒளிபரப்பப்பட்டது. பேட்டி கண்டவர் கரன் தாப்பர். ஆனால், அருண்ஷோரி சுமத்திய குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய் என்பது பின்னர் தாப்பருக்கே தெரிந்தது.
குடியரசுத் தலைவர் தேர்தல் தொடர்பாகப் பேட்டி அளிக்க அந்தத் தொலைக்காட்சி பி.ஜே.பி. தலைவர் ராஜ்நாத் சிங்கை அழைத்தது. கரன் தாப்பரே பேட்டி கண்டார். 'அருண்ஷோரி சொன்ன தகவல்கள் அனைத்தும் தவறானவை. அதனை நம்பி ஒளிபரப்பியதற்காக வருத்தம் தெரிவிக்கிறேன்' என்று அவர் சொன்னார். பி.ஜே.பி. தலைகுனிந்தது. ஆனால், அதற்காக வெட்கப்படவில்லை.
ராஜஸ்தான் கவர்னராக இருந்தவர் பிரதிபா பாட்டீல். இன்றைக்கும் இந்தியாவின் குடியரசுத் துணை தலைவராக இருப்பவர் ஷெகாவத். அரசியல் கண்ணியம் கருதி, அவர் தமது பதவியை ராஜினாமாச் செய்துவிட்டு தேர்தல் களத்திற்கு வந்திருக்க வேண்டும். ஆனாலும், அவர் வகிக்கும் பதவியின் மரியாதை கருதி காங்கிரஸ் கட்சி எந்தக் கடுமையான விமர்சனத்தையும் வீசவில்லை. ஆனால், பிரதிபா பாட்டீல் மீது தினம் ஒரு அவதூறு பரப்பும் பெரும் பொறுப்பை சுஷ்மா சுவராஜிற்கு பி.ஜே.பி. அளித்திருந்தது.
அத்வானியும் ஜார்ஜ் பெர்னாண்டஸ§ம் பிரதிபா பாட்டீலுக்கு ஏன் வாக்களிக்கக்கூடாது என்று ஒரு சுற்றறிக்கை அனுப்பியிருந்தனர். தங்கள் வேட்பாளர் ஷெகாவத்திற்கு ஏன் வாக்களிக்க வேண்டும் என்று இவர்கள் தெரிவித்திருந்தால், அதனை நம்மால் புரிந்து கொள்ள முடியும்.
1942_ம் ஆண்டிலிருந்து நாட்டின் விடுதலைப் போராட்டம் வேகம் பெற்றது. அப்போது இந்த ஷெகாவத் என்ன செய்து கொண்டிருந்தார்? வெள்ளையர் ஆட்சிக்குக் காவல் துறை அதிகாரியாகச் சேவகம் செய்து கொண்டிருந்தார் என்று இடதுசாரிக் கட்சிகள் ஒரே ஒரு குற்றச்சாட்டைக் கூறின. அதற்கு இன்றுவரை ஷெகாவத் பதில் சொல்லவில்லை.
குடியரசுத் தலைவர் தேர்தல் களத்தை பி.ஜே.பி. கொள்கை ரீதியான போர்க்களமாக்கி இருக்கலாம். ஆயுதங்களே இல்லாதவர்கள் எப்படிக் கொள்கை போராட்டம் நடத்த முடியும்? எனவே, அமெரிக்கா பாணியில் புழுதிப் போராட்டத்தைத் தொடங்கினார்கள்.
இந்தியக் குடியரசுத் தலைவர் தேர்தல் பிரசாரம் இதுவரை இவ்வளவு கீழான நிலையை எட்டியதில்லை. அந்தக் காரியத்தையும் பி.ஜே.பி. தொடங்கி வைத்துவிட்டது.
அடுத்து, அவர்களுடைய அரசியல் வறட்சி தமிழகத்திற்கு இழுத்து வரும். இல்லாத ராமர் பாலத்தைத் தேடி அவர்கள் பொல்லாத போராட்டம் நடத்துவார்கள். தற்போது அந்தக் கட்சி ஆட்சியிலிருக்கும் மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்திஷ்கரில் அடுத்து வரும் சட்டமன்றத் தேர்தல் அதற்குச் சோதனையாக அமையும். பீகாரில் அந்தக் கட்சிக்கும் ஐக்கிய ஜனதா தளத்திற்கும் உள்ள உறவு எலியும் தவளையுமாகும். அது கூட்டணியாகி வருகிறது. இந்தச் சூழலில்தான் குடியரசுத் தலைவர் தேர்தலில் தலையிட்டு தோல்வியையும் களங்கத்தையும் தேடிக் கொண்டிருக்கிறது.

நன்றி: ரிப்போர்ட்டர்

கோவை குண்டு வெடிப்பு வழக்கில் இருவருக்கு ஜாமீன்கோவை

கோவை குண்டு வெடிப்பு வழக்கில் இருவருக்கு ஜாமீன்

கோவை : கோவை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட இருவருக்கு ஜாமீன் வழங்கி தனி கோர்ட் உத்தரவிட்டுள்ளது. கோவை தொடர் குண்டு வெடிப்பு வழக்கு, தனி கோர்ட்டில் நடந்து வருகிறது. வழக்கின் தீர்ப்பு வரும் ஆக.,1ல் தீர்ப்பு வழங்கப்படுகிறது. இந்நிலையில், நவுஷாத், சர்தார் ஆகிய இருவரும் ஜாமீன் கோரி தனி கோர்ட்டில் மனு செய்தனர். மனுவை விசாரித்த தனி கோர்ட், இருவருக்கும் ஜாமீன் வழங்கி, தீர்ப்பளித்தது. இருவரும் ரூ.10 ஆயிரம் செலுத்தி, சொந்த ஜாமீனில் செல்ல கோர்ட் அனுமதி அளித்துள்ளது. இது குறித்து வக்கீல் அபுபக்கர் கூறுகையில், ""குற்றம் சாட்டப்பட்ட நவுஷாத், சர்தார் ஆகியோருக்கு, தலா ரூ.10 ஆயிரம் சொந்த ஜாமீன் அளித்து, தனி கோர்ட் உத்தரவிட்டுள்ளது. கோவை சிறையில் அடைக்கப்பட்டிருந்த நவுஷாத் நேற்று விடுவிக்கப்பட்டார். சென்னை சிறையில் உள்ள சர்தார் இன்று விடுதலை செய்யவுள்ளார். இருவரும், ஒவ்வொரு வாய்தாவுக்கும் தவறாமல் ஆஜராக வேண்டும். கோர்ட்டில், குற்றம் சாட்டப்பட்டோருடன் சேர்ந்து நிற்க கூடாது. கோர்ட்டுக்கு வரும் போது, போலீஸ் சோதனைக்கு ஒத்துழைக்க வேண்டும்; பேட்டி கொடுக்க கூடாது, போன்ற நிபந்தனைகளின் பேரில் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது,'' என்றார். கோவை குண்டு வெடிப்பு வழக்கு விசாரணை ஒன்பது ஆண்டுகளாக நடந்து வந்தது. 174 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளனர்.

வழக்கின் தீர்ப்பு ஆக., 1ல் வழங்கப்படுகிறது. இந்நிலையில், முதல் முறையாக இருவருக்கு ஜாமீன் அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஹனீபுக்கு எதிரான ஆதாரம் ஆஸி. போலீசார் முரண்பாடு

ஹனீபுக்கு எதிரான ஆதாரம் ஆஸி. போலீசார் முரண்பாடு

புதுடெல்லி, ஜூலை 21: ஆஸ்திரேலியாவில் கைது செய்யப்பட்டுள்ள இந்திய டாக்டர் முகமது ஹனீப்பின் செல்போன் சிம் கார்டு, ஸ்காட்லாந்து விமான நிலைய தாக்குதல் சம்பவத்தில் கைப்பற்றப்படவில்லை என்று தெரியவந்துள்ளது. ஆனால், இங்குதான் அவரது சிம்கார்டு கைப்பற்றப்பட்டதாக ஆஸ்திரேலியா போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.ஸ்காட்லாந்து விமான நிலையத்தின் மீது வெடிகுண்டுகள் நிரப்பப்பட்ட ஜீப்பை மோதி தகர்க்கும் தீவிரவாதிகளின் திட்டம் தோல்வி அடைந்தது. இதுதொடர்பாக இங்கிலாந்தில் கபீல் அகமது, அவரது உறவினர் சபீல் அகமது ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.இதேபோல், இவர்களின் மற்றொரு உறவினர் டாக்டர் முகமது ஹனீப் ஆஸ்திரேலியாவில் கைது செய்யப்பட்டுள்ளார். இவர்கள் அனைவரும் பெங்களூரைச் சேர்ந்தவர்கள்.வெடிகுண்டு ஜீப்பை ஓட்டி வந்த சபீல் அகமதுவுக்கு தனது செல்போன் சிம்கார்டு கொடுத்ததாக ஆஸ்திரேலியாவில் கைது செய்யப்பட்டுள்ள முகமது ஹனீப் மீது அந்நாட்டு போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். ஆனால், இந்த வழக்கே பொய்யானது என்று தெரியவந்துள்ளது.தாக்குதல் சம்பவத்தில் ஈடுபடுத்தப்பட்ட ஜீப்பில் முகமது ஹனீப்பின் சிம்கார்டு இருந்ததாக போலீசார் கூறியுள்ளனர். ஆனால், ஜீப்பில் இருந்து எந்த செல்போனும் கைப்பற்றப்படவில்லை என்றும், சம்பவம் நடந்து 8 மணி நேரத்துக்கு கைதான கபீல் அகமதுவிடம் இருந்துதான் முகமது ஹனீப்பின் சிம்கார்டு கைப்பற்றப்பட்டதாகவும் இப்போது தெரியவந்துள்ளது. இதை ஆஸ்திரேலிய பத்திரிகைகள் செய்தியாக வெளியிட்டுள்ளன. ஆனால், இதுகுறித்து ஆஸ்திரேலியா போலீசார் கருத்து எதையும் தெரிவிக்கவில்லை.

Sunday, July 22, 2007

லண்டன் வாலிபரை தாக்கிய சரவணா ஸ்டோர்ஸ் ஊழியர்கள் கைது

லண்டன் வாலிபரை தாக்கிய சரவணா ஸ்டோர்ஸ் ஊழியர்கள் கைது
சென்னை, ஜூலை 22: லண்டன் வாலிபரை தாக்கிய சரவணா ஸ்டோர்ஸ் ஊழியர்கள் 6 பேர் கைது செய்யப்பட்டனர்.லண்டனைச் சேர்ந்தவர் இளஞ்செழியன். இவர் மனைவி சுதர்ஷினி, மகள் நிலாயினி (3) ஆகியோருடன் சென்னைக்கு சுற்றுலா வந்தார். நேற்று முன்தினம் இரவு தி.நகர் ரங்கநாதன் தெருவில் உள்ள சரவணா ஸ்டோர்ஸ் கடைக்கு சென்ற இளஞ்செழியன், ரூ.10 ஆயிரத்துக்கு பொருட்கள் வாங்கினார். அப்போது, சிறிய ரப்பர் பந்து ஒன்றை நிலாயினி எடுத்துக் கொண்டாள். குழந்தை அழுததால் மனைவியிடம் பொருட்களை எடுத்து வரச்சொல்லி விட்டு இளஞ்செழியன் குழந்தையை தூக்கிச் சென்றார்.அப்போது கடை ஊழியர் ஒருவர், குழந்தை கையில் இருந்த பந்தை பார்த்ததும் அதை திருடிச் செல்வதாக நினைத்து பிடுங்கி உள்ளார். அதற்கு, Ôஇந்த பந்து நான் வாங்கியது. பணம் செலுத்தி விட்டேன்Õ என்று இளஞ்செழியன் கூறியுள்ளார். அதை நம்பாத ஊழியர்கள் இளஞ்செழியனை சரமாரியாக தாக்கினர். இளஞ்செழியனை பொதுமக்கள் காப்பாற்ற முயன்றனர். பல ஊழியர்கள் சேர்ந்து தாக்கியதால் ஒன்றும் செய்ய முடியவில்லை.கட்டுப்பாட்டு அறைக்கு இளஞ்செழியன் போன் செய்தார். போலீசார் வந்து இளஞ்செழியனை மீட்டனர். இதுகுறித்து மாம்பலம் போலீசில் இளஞ்செழியன் புகார் செய்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்யாமல் தாமதப்படுத்தினர். இதுபற்றி, போலீஸ் கமிஷனர் லத்திகா, துணை கமிஷனர் லட்சுமி ஆகியோருக்கு தகவல் தெரிந்தது. உடனடியாக நடவடிக்கை எடுக்க மாம்பலம் போலீசா ருக்கு உத்தரவிட்டனர். போலீசார், சரவணா ஸ்டோர்ஸ§க்கு சென்று வைகுண்ட பெருமாள், மூர்த்தி, தம்பிராஜ், பாலமுருகன் உட்பட 6 ஊழியர்களை கைது செய்தனர். அவர்களை போட்டோ எடுக்க, போலீஸ் உதவி கமிஷனர் சலேத்ராஜ், இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் ஆகியோரிடம் நிருபர்களும், புகைப்படக்காரர்களும் அனுமதி கேட்டனர். அவர்களோ அனுமதி மறுத்ததோடு, Ôமுடிந்தால் கோர்ட்டில் போய் எடுத்துக் கொள்ளுங்கள்Õ என்றனர்.இதையடுத்து, கைது செய்யப்பட்ட 6 பேரும், சைதாப்பேட்டை 17வது மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். உடனே, 6 பேர் சார்பிலும் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதை ஏற்றுக் கொண்ட மாஜிஸ்திரேட் அவர்களுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

இராமர் பாலம்

டாக்டர் க.இந்திரகுமார் லண்டன் அமெ?க்காவின் வானியல் விண்வெளி ஆய்வுகளுக்கு பொறுப்பாக உள்ள Nச்tடிணிணச்டூ அஞுணூணிணச்தtடிஞி குணீச்ஞிஞு அஞீட்டிணடிண்tணூச்tடிணிண (Nஅகுஅ) என்ற நிறுவனம் வெளியிட்ட சில ஆய்வுப் படங்களை அடிப்படையாக வைத்தே இந்த சர்ச்சை உருவாக்கப்பட்டுள்ளது. "எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு' என்ற வள்ளுவர் வாக்கிற் கமைய இந்த சர்ச்சையிலும் மெய்ப் பொருளைக் கண்டுபி டிக்கும் நோக்குடன் இக் கட்டுரை எழுதப்படுகிறது.
நாஸாவினுடைய செய்மதிகள் மட்டுமல்ல, ?ன்னாள் சோவியத் ஒன்றியத்தின் செய்மதிகள் கூட ?ழு உலகத்தை யும் விண்வெளியில் வலம் வந்த தமது செய்மதிகள் ?லம் படம் பிடித்துள்ளன. இவை விண்வெளியினூடாக செய்யப் பட்ட பூகோள ஆய்வுகளுக்கும் பயன்பட்டன. அந் நாடுக ளின் இராணுவ மேலாதிக்கத்துக்கும் உதவின.
அமெ?க்கா எடுத்த படங்களில் சில பகிரங்கமாக வெளி யிடப்பட்டன. இன்டர்நெட்டிலும் வெளியிடப்பட்டன.
(சோவியத் படங்கள் எவற்றையும் நாம் இதுவரையில் காணக்கிடைக்கவில்லை.) இவ்வாறு எமக்கு கிடைத்த இணையப் படங்களில் இரா மர் பாலம் சம்பந்தப்பட்ட படங்கள் இந்து மதப் பிரசாரர்க ளின் கைக்கு எட்டின. இந்தப் படங்களுக்குக் கை, கால் சேர்த்து, நாஸாவின் பெயரைச் சொல்லி மேற்கு நாடுகளி லும் வட இந்தியாவில் உள்ள இந்துப் பிரசாரர்கள் (இந்துத் துவா இயக்கம்) இராமர் பாலத்துக்கு தெய்வீக ?லாம் பூச ?ற்பட்டனர்.
நாஸா உடனடியாக இதற்கு மறுப்புத் தெ?வித்த போதி லும், அதைக் கண்டுகொள்ள அவர்கள் மறுத்தனர். அவர் களது இராமோபதேசத்தை இணையத் தளங்கள் ?லமாக வும் ஏனைய பிரசார ஊடகங்களினூடாகவும் தொடர்ந்தனர். நாஸா நிறுவனம் தமது படங்களை இந்திய அரசுக்கு அனுப் பவும் இல்லை. இராமர் பாலத்தைச் சுட்டிக்காட்டவும் இல் லை.
இணையத் தளத்தில் உள்ள வில்கிப்பீடியா (ஙிடிடூடுடிணீஞுஞீடிச்) என்ற இலவச கலைக் களஞ்சியம் இந்த விவகாரத்தைப் பற் றிய சகல உண்மைகளையும் கொண்டுள்ளது. (தீதீதீ.
தீடிடூடுடிணீஞுஞீடிச்.ணிணூஞ்) இராமர் அணையின் அமைப்பும் 500 ஆண்டுகள் வரலாறும் ஆதாமின் பாலம் (அஞீச்ட்'ண் ஆணூடிஞீஞ்ஞு) என்றும் அழைக்கப் பட்டு வந்த இராமர் பாலத்தை ராம் சேது (கீச்ட் குஞுtத) என்று இந்தியில் வழங்குவார்கள்.
இலங்கையின் வடமேற்கில் உள்ள மன்னாருக்கும் இந்தி யாவின் தென்கிழக்கில் உள்ள இராமேஸ்வரத்துக்கும் இடையே இராமர் பாலம் அமைந்துள்ளது. இது 30 மைல் கள் நீளமானது. தென்மேற்கில் அமைந்துள்ள மன்னார்க் குடாக் கடலையும் வடகிழக்கில் அமைந்துள்ள பாக்கு நீ? ணையையும் இது பி?க்கிறது. ஆழமற்ற கடலில் ஒரு சங்கி லித் தொடராக, திட்டுத் திட்டாக அமைந்துள்ள சுண்ணாம் புக் கற்பாறைகளால் அமைந்தது தான் இந்த இராமர் பாலம்.
இங்கே சில இடங்களில் மணற்தரைகள் கடல் மட்டத்திற்கு மேலேயே உள்ளன. இங்கே கடலின் ஆழம் 3 அடி ?தல் 30 அடி வரை மட்டுமே இருக்கும். இதன் காரணமாக இந் தப் பாலத்துக்குக் குறுக்காக கப்பற் போக்குவரத்து செய்ய ?டியாது.
15 ஆம் நூற்றாண்டு வரை இந்த இராமர் பாலம் ?ற்று ?ழுதாகக் கடல்மட்டத்துக்கு மேலே தான் இருந்ததாகச் சொல்லப்படுகிறது. இதன் மேல் கால் நடையாகவே சென்று விடக் கூடிய தாக இருந்ததாம். கி.பி. 1480 இல் ஏற் பட்ட ஒரு பயங்கரச் சூறாவளியை அடுத்தே பாலத்தைக் கடல் கொண்ட தாகவும் பாலம் 3 ?தல் 30 அடி தண் ணீ?ல் ?ழ்கியதாகவும் கோவில் ஆதாரங்கள் தெ?விக்கின்றன.
தலைமன்னாருக்கும் இராமேஸ்வ ரத்துக்கும் இடையே நடைபெற்று வந்த ஊஞுணூணூதூ படகுச் சேவை இலங்கை யில் தமிழர்களின் விடுதலைப் போரா ட்டம் வலுவடைந்ததையடுத்து, சில வருடங்களுக்கு ?ன்னர் நிறுத்தி வைக்கப்பட்டது. இராமேஸ்வரம் தீவையும் இந்திய நிலப்பரப்பையும் பாம்பன் பாலம் இணைக்கிறது.
தொழில் வரலாறும் புராணம்சார் நம்பிக்கைகளும் இராமர் அணையின் தொல் வரலாற் றுடன் இந்திய வீர காவியமான இரா மாயணம் என்ற காப்பியத்தின் இரா மர் சார் நம்பிக்கைகளும் ஒன்றாகக் கலந்துள்ளன. இராவணன் என்ற இலங்கையை ஆண்ட "அசுரன்' "சிறை பிடித்து' வைத்திருந்ததாகச் சொல்லப் படும் இந்திய இளவரசர் இராம?ன் மனைவியான சீதையை மீட்க இராம ரும் அவரது படையினரும் கடல் கடந்து செல்வதற்காக நிறுவப்பட்ட கடல்வழி நடைபாதை தான் இராமர் பாலம். கடலில் மிதக்கின்ற மணற் பாதைக ளின் மேல் பாலம் அமைக்கப்பட்டதாகவும் அந்தப் பா லத்தை உறுதி செய்வதற்காக கடவுள் அப் பாதைகளை கடற் படுக்கையோடு இணைத்து நங்கூரமிட்டதாகவும் இராமாய ணத்தை எழுதி வைத்தவர்கள் தெ?வித்துள்ளனர்.
இந்துஸ்தான் டைம்ஸ், வைஷ்ணவச் செய்தி வலைய மைப்பு, இந்தோலிங்க் போன்ற இந்து செய்திச் சேவைகள் நாஸாவின் இந்திய இலங்கைப் படங்களைப் பார்த்தவு டன், விழுந்தடித்துக் கொண்டு தமது கற்பனை அபிலாஷை களை அரங்கேற்றின.
தீதீதீ.tஞுணண்ஞு.ஞிணிட் என்ற இணையதளம் இந்துஸ்தான் டைம்ஸ் பத்தி?கையில் 10.10.2002 இல் பின்வரும் தலைப் புடன் வெளிவந்த செய்தியை அரங்கேற்றியது.
நாஸாவின் படங்கள் 1,750,000 ஆண்டுகள் பழமையான மனிதனால் நிறுவப்பட்ட பாலத்தைக் கண்டுபிடித்தன.
(Nஅகுஅ ஐட்ச்ஞ்ஞுண் ஊடிணஞீ 1,750,000 ஙுஞுச்ணூ Oடூஞீ Mச்ண Mச்ஞீஞு ஆணூடிஞீஞ்ஞு) என்பதே அந்த செய்தியாகும்.
இந்தப் பாலத்தினது தனித் தன்மை வாய்ந்த வளைவும் அதன் ஆக்க அமைப்பும் அது மனிதனால் அமைக்கப்பட்டது தான் என்பதை நிலைநிறுத்தின.
மக்களால் ஆர்வமாக நம்பப் படும் மரபுவழிக் கதைகளும் புதைபொருள் ஆய்வுகளும் இலங்கையில் மனித இனம் ?தன் ?தலில் தோன்றியது 1,750,000 ஆண்டுகளுக்கு ?ன்பென்று நிறுவியுள்ளதாக வும், அந்தக் காலகட்டத்திலேயே இந்தப் பால?ம் நிறுவப் பட்டதாகவும் செய்தி வெளியிடப்பட்டிருந்தது.
1,700,000 ஆண்டுகளுக்கு ?ன்னர் உலகம் திரேசு யுகத் தில் இருந்த போது இராமாயணம் நடைபெற்றது என்பது இந்துக்களின் புராணவழி நம்பிக்கையாகும்.
நாஸாவின் படங்களைக் காட்டிக்காட்டி இந்துத்துவாக்கள் கட்டவிழ்த்து விட்ட போலிப் பிரசாரத்துக்கு ஒரு ?ற்றுப் புள்ளி வைக்கும் வகையில் இந்துஸ்தான் டைம்ஸ் பத்தி? கைக்கு ஒரே ஒரு வாரத்தில் நாஸா ஒரு மறுப்பை அனுப்பி வைத்து, அது பிரசு?க்கப்பட்டது.
நாஸாவின் உத்தியோகபூர்வ பேச்சாளரான மார்க் ஹெஸ் வெளியிட்ட இந்த மறுப்பு உலக ஊடகங்களிலெல்லாம் வந் தது. இத்தகைய பிரசாரத்துடன் சில ""படித்த மனிதர்களும்'' தம்மை இணைத்துக் கொண்டனர்.
1. திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் சேய்மை உணர்வாற்றல் நடுவர், இராமர் பாலம் 3500 ஆண்டு பழை மையானது என்ற (ச?யான) கருத்தை ?ன்வைத்தனர்.
2. இந்திய மண்ணியல் அமைப்பு மேற்பார்வை நிறுவனத் தின் ?ன்னாள் இயக்குநரும் ச?த்திரத் தொழில்நுட்பத்துக் கான தேசிய நிறுவன உறுப்பினருமான டாக்டர் பத்?நாராய ணன் இந்துப் பிரசாரகர்களோடு சேர்ந்து கொண்டு இராமர் பாலம் ஒரு இயற்கையான அமைவு அல்ல என்று வாதிட் டார்.
3. வி. ஓ. சிதம்பரம் காலேஜின் மண்ணியல்பு ஆய்வு நடு வத்தின் அதிபரான என். ராமானுஜம் இராமர் பாலம் மனித னால் ஆக்கப்பட்டது அல்ல, அது ஒரு இயற்கை அமைவு தான் என்று வாதாடினார்.
படங்கள் எங்களுடையவை, ஆனால் விளக்கங்கள் எமது அல்ல நாஸா இராமர் பாலத்தின் போலிக் கோட்பாட்டை நாஸா அம்ப லம் செய்தது. (Nஅகுஅ ஈஞுஞதணடுண் கீச்ட்ச் ஆணூடிஞீஞ்ஞு கூடஞுணிணூதூ) ""சங்கிலித் தொடராக உள்ள தீவுகள் உருவாகியிருக்கக் கூடிய ?றை பற்றியோ அல்லது அவற்றினுடைய வயதைப் பற்றியோ நேரடியான தகவல் எதுவும் பூமியின் சுற்றுப் பாதையில் உள்ள செய்மதிகள் ?லமாக எடுக்கப்படும் புகைப்படங்களையோ ஒத்த வடிவங்களையோ வைத்துப் பெற்றுக் கொள்ள ?டியாது'' என்றார் மார்க் ஹெஸ்.
""அதிலும் பாலத்தின் தோற்ற வடிவமைப்பை வைத்து அதில் எதையாவது மானிடர்கள் நிறுவினார்களா என்பதை நிச்சயமாகச் சொல்ல ?டியாது.'' வெளிநாடுகளில் வசித்து வரும் இந்தியர்களின் டிணஞீணிடூடிணடு.ஞிணிட், திச்டிண்டணச்திச்ணஞுதீண் ணஞுtதீணிணூடுண் போன்ற இணை யத்தளங்கள் இவ்வார ?ற்பகுதியில் ஒரு செய்தியை வெளி யிட்டிருந்தன.
நாஸா எடுத்த விண்வெளி புகைப்படங்கள் ""பாக்கு நீ?ணையில் ஒரு மர்மம் வாய்ந்த புராதன பாலத்தைக் கண்டுபிடித்துள்ளன என் பதே அந்தச் செய்தி. இதனை இந்திய செய்திச் சேவை நிறுவனமான ககூஐ அவதானித்து விட்டு அதனை மறுபிரசுரம் செய்த போது அதற்கு ஒரு நம்பகத்தன்மையை ஏற்படுத்தியது.
நாஸா கண்டுபிடித்ததாகச் சொல்லப்பட்டது உண்மையில் 30 கிலோ மீற்றர் நீள?ள்ள சங்கிலித் தொடராக அமைந்த ஆதாமின் பாலம் என்றழைக்கப்படும் மணல் திட்டுக்களே, வேறெந்த விதமான மர்மப் பால?ம் அல்ல என்றார் ஹெஸ்.
இந்த மணற்திட்டுத் தொடரை நாஸா நிறுவனம் பல ஆண் டுகளாகப் படம்பிடித்து வந்துள்ளது எனவும் அதன் ?லம் எதுவிதமான விஞ்ஞானக் கண்டுபிடிப்பும் ஏற்படவில்லை என்றும் அவர் கூறினார்.

Monday, July 16, 2007

சர்வதேச பயங்கரவாதிபின்லேடனின் புதிய வீடியோவால் திடீர் பரபரப்பு

சர்வதேச பயங்கரவாதிபின்லேடனின் புதிய வீடியோவால் திடீர் பரபரப்பு
வாஷிங்டன், ஜுலை. 16-
பின்லேடனின் புதிய வீடியோ பேச்சு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தலைக்கு விலை
அல்-கொய்தா இயக்க தலைவர் பின்லேடனை, அமெரிக்கா தீவிரமாக தேடி வருகிறது. பின்லேடனின் தலைக்கு நிர்ணயம் செய்திருந்த விலையை கூட இரண்டு நாட்களுக்கு முன் அமெரிக்கா உயர்த்தி உள்ளது.
அதன்படி, பின்லேடனை உயிருடனோ, பிணமாகவோ பிடித்து கொடுப்பவருக்கு ரூ.200 கோடி அளிக்கப்படும். இந்த அறிவிப்புக்கு அமெரிக்க செனட், கடந்த வெள்ளியன்று ஒப்புதல் அளித்து விட்டது.
இந்த நிலையில் தீவிரவாத ஆதரவு இணைய தளங்களுக்காக பின்லேடனின் புதிய வீடியோ கேசட் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டது. அதற்கு முன்பாக அமெரிக்க தொலைக்காட்சி ஒன்று அந்த கேசட்டை வழி மறித்து பதிவு செய்து விட்டது. கேசட் குறித்த தகவல்களை சேனலின் மூத்த ஆசிரியர் ஆக்டோவியா தெரிவித்தார்.
பழைய படங்கள்
நாற்பது நிமிடங்கள் ஓடும் அந்த கேசட்டில் 50 வினாடிகள் மட்டும் பின்லேடன் தோன்றுகிறார். மீதி நேரங்களில் எல்லாம் பின்லேடனின் பழைய படங்கள் காண்பிக்கப்படுகின்றன. மேலும் கடந்த 2001-ம் ஆண்டு அமெரிக்க இரட்டை கோபுரங்கள் தகர்க்கப்பட்ட உடன் வெளியிட்ட கேசட்டில் இருந்த அதே பின்னணி காட்சிகள்தான் புதிய கேசட்டிலும் இருக்கின்றன.
ஆனால் பின்லேடனின் பேச்சு மட்டும் புதியதாக உள்ளது. பின்லேடனின் பேச்சு, அரேபிய மொழியில் இருந்து ஆங்கிலத்தில் மொழி பெயர்ப்பு செய்யப்பட்டு உள்ளது. ஆனால் பின்லேடனின் புதிய கேசட்டின் உண்மை தன்மை குறித்து அமெரிக்க தொலைக்காட்சி சேனல் எந்த உறுதியும் அளிக்கவில்லை.
உயிர் தியாகம்
புதிய கேசட்டில் பின்லேடன், "ஒரு தியாகியாக உயிர் தியாகம் செய்வதை நான் விரும்புகிறேன். இறைவனால் உருவாக்கப்பட்ட எனது உயிர் அவனது கையிலேயே இருக்கிறது. இறைவனுக்காக தியாகம் செய்வதே அவனுக்கு மகிழ்ச்சி தருவது ஆகும். இறைவனின் கூற்றும் இதுவே.
நான் உயிர் தியாகம் செய்ய வேண்டும் என்பதும் இறைவனது விருப்பம். முஸ்லிம்களின் பெருமைமிகு வாழ்க்கைக்காக உயிர் தியாகம் செய்யும் ஒவ்வொருவரும் இறைவனுக்காக தியாகம் செய்துள்ளனர். அவர்களை நான் பாராட்டுகிறேன்'' என்று தெரிவித்துள்ளார்.
நல்ல தகவல்
பாகிஸ்தானில் உள்ள லால் மசூதியில் ராணுவம் புகுந்து தாக்குதல் நடத்தியதில் ஏராளமான தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். பின்லேடனின் பேச்சு, அவர்களுக்கு பாராட்டு தெரிவிப்பது போல அமைந்துள்ளது.
பின்லேடனின் கேசட்டை வழி மறித்தது எப்படி என்பது குறித்து அந்த தொலைக்காட்சி சேனல் தெரிவிக்கவில்லை. ஆனால் பின்லேடனின் பேச்சை அல்-கொய்தா அமைப்பின் செய்திப்பிரிவான அல் சஹாப் தயாரித்து உள்ளதாக தெரிவித்தது.
பின்லேடனிடம் இருந்து விரைவில் நல்ல தகவல் வரும் என அவரது ஆதரவாளர்கள் சமீப காலமாக தெரிவித்து வந்தனர். அதன்படி இந்த புதிய கேசட் வெளியாகி உள்ளது.
பின்லேடன் இறந்து விட்டதாக பேசப்பட்டு வந்த நிலையில் அவர் தோன்றும் வீடியோ வெளியாகி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Friday, July 13, 2007

Laden's head now worth $50 million

Laden's head now worth $50 million
Friday, July 13, 2007 22:10 [IST]PTI
Washington: The US Senate today doubled the bounty on the head of Al-Qaeda mastermind Osama bin Laden, offering $50 million for his capture or death.
The vote followed a flurry of reports that the group behind the September 11 attacks in 2001 had rebuilt much of its capacity to train and plot terror strikes and was again trying to sneak operatives into the United States.
The bill, boosting the price on Bin Laden's head under the US State Department Rewards for Justice Programme, passed by an 87-1 vote. It directs Secretary of State Condoleezza Rice "to authorise a reward of $50 million for the capture or death or information leading to the capture or death of Osama bin Laden."
North Dakota Senator Byron Dorgan, who wrote the amendment to a defence policy bill, said "it has been six years, and Al-Qaeda is now rebuilding its terrorist training camps, along with the Taliban, in a safe harbour." "It has been six years and they are reconstituing their ability to attack us," he said.
Dorgan warned Al-Qaeda "remains the greatest threat to the United States, even after these six long years; after two wars ... After trillions of dollars spent on those wars and for homeland security, after the deaths of thousands of our military, and after the wounding of tens of thousands of our military."
Senators who spoke on the amendment mentioned a leaked draft of a new National Intelligence Estimate, which reportedly warned Al-Qaeda had rebuilt a safe haven and leadership in Pakistani border areas.

Thursday, July 12, 2007

'Mumbai police don't have any credible evidence'

http://www.rediff.com/news/2007/jul/11sheela.htm
'Mumbai police don't have any credible evidence'
Sheela Bhatt in Mumbai

July 11, 2007 19:30 IST
To witness the dilemma of modern India, you will need to visit the Naya Nagar area in Mira Road, a satellite town in Thane district in Maharashtra, cheek by jowl with the sprawling mass of humanity that we call Mumbai.
Here, in a small flat in Tirupati apartments, Ataur Rahman Sheikh lives with his wife Parveen Banu.
Naya Nagar still retains the charm of community life, as opposed to the satellite existence of the big metro. That feeling of belonging gives Muslims like Ataur Rahman and his wife security.
Correction: used to give a feeling of belonging and security. Because now, Ataur Rahman is intensely insecure, with the community around looking at them with distinct distrust. Many are livid with them.
Two of the couple's three sons, Faisal and Muzzamil, have been arrested under the Maharashtra Control of Organised Crime Act and are in Arthur Road jail as accused in the serial blasts of July 11, 2006, that left mangled metal, flesh and blood on the tracks of Mumbai.
Their third son Rahil, declared an absconder by the Mumbai police, is reportedly in Birmingham, Britain.
It is difficult to imagine -- or write about -- the life of parents whose children are accused of as heinous a carnage as 11/7, which left 187 people dead and 824 injured.
The couple alleges the media and police treat them as bad as terrorists, and think they were privy to the alleged actions of their sons.
Even the charitable and factually correct 'parents of alleged terrorists' sounds frightening.
The couple is only too aware of that.
Ataur Rehman doesn't have much hope of his situation changing or improving in their lifetime; he knows how Indian society -- with its strong beliefs in the institution of family -- blames parents much more for their children's sins.
Their isolation is complete. They don't trust anyone, not even their neighbours. They don't have visitors to their house. For the last one year, even their relatives have been avoiding them like the plague.
Ataur says they have disconnected their telephone to avoid getting calls from the police. They claim they use STD booths to call their sons' lawyer Shahid Azmi.
Azmi claims Faisal was an aiyaash (liked his luxuries, a free bird) and was living separately from his parents.
The Mumbai police claims Faisal had a flat in Bandra, an affluent suburb of Mumbai.
"Do you think after keeping bombs my son will live in this house?" asks the elderly Ataur. "Won't he run away? Arre, even a pickpocket doesn't go back to his usual hideouts. The Mumbai police don't have any credible evidence to link my son with the train blasts. They have tortured him to get the confession."
Faisal was arrested on July 27, 2006 from Mira Road.
At this point, before the elderly man can speak further, his wife enters the drawing room and admonishes her husband for speaking to a journalist.
Ataur, who is wearing a torn, sleeveless vest and trousers, stands up to talk to her. "Let me speak a little," he pleads.
Parveen Banu directs her anger at me.
"Go away, we don't want to speak," she hisses, trembling with rage. "All of you are in cahoots with the police. It's no use talking to you. You just want to sell a story because July 11 is here. We don't trust you, we don't trust anybody."
There is no way of judging whether she is in denial or if she is feeling cornered by the turn of events.
Ataur sits down on the sofa.
'Dil toot gaya hain. Dil bahut toot gaya hain (We are heartbroken),' he sighs. His unkempt beard, the visible tension on his face and his tired voice make him seem older than he is.
It seems to me that he wants to share his thoughts, but is unsure whether he can trust me.
A wall-to-wall purdah separates the drawing room from the rest of the flat. An entire wall of the drawing room is covered with wallpaper depicting a waterfall, a typical sign of a Muslim house where their Islamic sect's norm doesn't allow any human figure to be depicted in the house.
Hence, when I request if I can click their picture, they refuse. They say they don't have any picture of Faisal since their Ahale Hadees sect forbids taking any picture of human beings. They also refuse to answer questions on Faisal's childhood, or their religious beliefs.
Parveen tells Ataur again, "Don't speak a word." She repeatedly instructs her husband that he should answer my other questions in the minimum possible words.
Ataur ignores his wife's demand.
"Read these pages," he tells me, showing an Urdu newspaper. "It's in Urdu, but it tells the real tale. All the accused are saying that Mumbai police tortured them and forced them to give confessions. They took Faisal's signature on a blank paper. They tortured me, too. The police blackmailed us by threatening our women."
At this point, Parveen Banu gets almost hysterical. "Why are you telling her to write all this?" she screams. "She won't write the truth. They are all one, they have all ganged up. They believe the Hyderabad blasts were done by Muslims, the Malegaon blasts were done by Muslims, the Nagpur blasts were done by Muslims, the Mumbai blasts too were done by Muslims. They think only Muslims are behind the blasts."
And then she turns to me: "You are sitting here to catch us (aap baithe hai pakadne ko)."
Ataur points at his wife and tells me, "Hamara kya anzam hua hai aap dekh rahe hai (you can see our fate)."
He is aware of the seriousness of the allegations against Faisal, who is a prime accused in the blasts.
According to the police, Faisal's confession -- which he retracted later -- and his statements during narco-analysis tests have been relied upon to build the police case.
"Narco-analysis is also a kind of torture," Ataur says. "I went to listen to the public debate at the K C College on the scientific side of narco-analysis. The experts were claiming that it is absolutely wrong to resort to narco-analysis as evidence. This country is lawless."
I ask him what Faisal's source of income was. Ataur claims he was in the readymade garments business. Faisal's lawyer Azmi told me he was into dry fruit exports.
The police say many of the 11/7 accused went to Pakistan via Iran. The chargesheet mentions that Muzzamil, despite being Sunni, went to Iran for pilgrimage to a Shia shrine.
I ask Ataur why Muzzamil went to Iran. "Jiyarat (pilgrimage)," is the father's answer. "Thousands of Muslims go to Iran," adds the mother.
"I am not someone who can see the blood of innocent people," says Ataur, when he realises I have only a few questions. "I am accountable to god one day. That is the reality. We can't kill innocents because the Koran says if you kill one innocent you are killing mankind."
Parveen has had enough. She asks Ataur to end the interview.
Ataur vents his frustration, throwing up his hands: "You think the RDX is pasted here on the ceiling, on the walls and on the floors, right? What do you think of us? What do you want to know from us?"
The isolated couple, virtually imprisoned within the four walls of their middle class apartment in Mira road, has no faith left in the police, the media, the courts or indeed the nation's ability or inclination to listen to them. Nor do they seem to question what has prompted their isolation.
They think even their community leaders have sold their souls to politicians.
Many Indians might blindly -- or otherwise -- believe the investigations into the 11/7 case by the Mumbai police. They might not want to even wait for the court's verdict and feel that Ataur and Parveen 'deserve it.'
But, even they can't deny the fact that Ataur, Parveen and their three sons are Indian.
Mira Road rubs shoulders with our biggest and richest city and Faisal, the prime accused in an act of pure evil, was born and brought up amidst the culture of the Yeola district of Maharashtra and that of Mumbai.
The Sheikh family's religious sect has been flourishing within India for many decades now.
If their three sons are involved in terrorism, it is an Indian problem. If they are not, as Ataur claims, it is a matter of even bigger concern for the nation.
That is the dilemma of modern India.

கோவை குண்டு வெடிப்பு வழக்கு: ஆக. 1-ல் தீர்ப்பு http://http://content.msn.co.in/Tamil/News/Regional/0707-12-6.htm

கோவை குண்டு வெடிப்பு வழக்கு: ஆக. 1-ல் தீர்ப்பு
12 ஜூலை 200713:18 IST
Blog this story
கோவை குண்டு வெடிப்பு வழக்கில் வரும் ஆகஸ்ட் 1-ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று, இவ்வழக்கை விசாரித்து வரும் சிறப்பு நீதிமன்றம் இன்று அறிவித்துள்ளது.இதுதொடர்பான வழக்கு விசாரணை நீதிபதி உத்தராபதி முன் இன்று விசாரணக்கு வந்தபோது இந்த அறிவிப்பை நீதிபதி வெளியிட்டார். இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள 167 பேருக்கு விதிக்கப்படும் தண்டனை குறித்த விவரம் அன்றைய தினம் தெரிய வரும்.கடந்த 1998-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 14-ம் தேதி பாஜக தலைவர் எல்.கே. அத்வானி தேர்தல் பிரசாரத்துக்காக கோவை நகருக்கு வந்திருந்தார்.அந்த நேரத்தில் நகரின் பல இடங்களில் சக்தி வாய்ந்த குண்டுகள் வெடித்தன. அத்வானியை குறிவைத்து நடத்த முயன்ற இத்தாக்குதலில் 52 பேர் கொல்லப்பட்டனர். பலர் படுகாயம் அடைந்தனர்.

Six C's of Character - Yasir Fazaga