Search This Blog

Tuesday, July 24, 2007

ராமன் பாலம்

தில்லுமுல்லு ஜெயலலிதாவைக் கேட்கிறோம்-ராமனே கற்பனை ராமன் பாலம் எங்கிருந்து வந்தது? இப்போது எங்கே போனான் அந்த இராமபிரான்?
-பரமத்தி சண்முகம்
நன்றி; விடுதலை 05-05-2007


17 இலட்சத்து 50 ஆயிரம் ஆண்டுகள் பழமையானது `இராமர் பாலம்'' என்றும் பலயுகங்கள் கடந்தது என்றும், இது பழமையான நமது இதிகாச காவியமான ராமாயணத்தில் உள்ளதெனவும், எனவே இந்தப் பாலத்தை இடித்தால் ``நான் சட்டரீதியாக போராடுவேன்'' என்று அதிமுக பொதுச் செயலாளரான அறிக்கைத் தலைவி ஜெயலலிதா எச்சரித்துள்ளார். அம்மாவுக்கு இராமாயண இதிகாசத்திலும், இராமர்மீதும் அவ்வளவு பக்தியும் நம்பிக்கையும் படிந்துள்ளது.ஜெயலலிதாவைக் கேட்கிறோம், 17 இலட்சம் ஆண்டுகளுக்கு முன்பு மனிதர்களே கிடையாதே! பிறகு தசரதன் எங்கே? அவன் மகன் இராமன் எங்கே? சீதை தானெங்கே? பாலம் தானெங்கே? பாலம் தண்ணீருக்கு மேலேதானே இருக்கும்! எப்படி பாதாளத்தில் இருக்கும்? இராமர் கடவுளானால், இராமர் கட்டிய பாலம் எப்படிக் கடலுக்கடியில் மூழ்கும்? இவைகளுக்கெல்லாம் ஜெயலலிதாதான் விளக்கங்கூற வேண்டும். பா.ஜ.க., இந்து முன்னணி, ஆர்.எஸ்.எஸ்., போன்ற இந்து மத அமைப்புக்களை அணித்திரட்டி போர்க்கோலம் காணவும் தயாராகி விட்டார் ஜெயலலிதா!அறிஞர் அண்ணாவின் பெயரைக் கட்சி சுமக்கிறது அவரது திருவுருவத்தைத் தாங்கிக் கொடி பறக்கிறது!அறிஞர் அண்ணா இராமாயணத்தைப் பற்றிக் கூறியுள்ள கருத்தென்ன? ``இராமனும் இராவணனும் உண்மை உருவங்களா? வரலாற்றுக் காலத்தவரா? அல்ல. கற்பனைகள். இதனைக் கூறிடத் தன்மான இயக்கத்தவர் தயங்குவதில்லை''அறிஞர் அண்ணா ஆதாரம்: இராவண காவியத்துக்கான அணிந்துரைஇராமனே கற்பனைப் படைப்பென்று அறிஞர் அண்ணாவே கூறிவிட்ட பிறகு இராமன் கட்டிய பாலமேது? இராமாயண காவியமே கற்பனை, வான்மீகி முனிவர் எழுதிய மூலகாவியம் என்று பல்வேறு அறிஞர்கள், ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.இங்கே நாம் கேட்பது; அண்ணாவே இராமாயணம் ஒரு கற்பனைக் காவியம் என்று கூறிவிட்டப் பிறகு அண்ணாவின் பெயராலேயே கட்சி நடத்தும் அதன் தலைவி, அண்ணாவின் கருத்துக்கு முற்றிலும் விரோதமான அறிக்கை விடலாமா?இதே கருத்தைத்தான் தந்தை பெரியாரும் பல ஆண்டுகளாக பல்வேறு கோணங்களில் ஆராய்ச்சி செய்து எழுதியும் பேசியும் வந்திருக்கிறார்! இதோ மூதறிஞர் இராஜாஜி தான் எழுதிய சக்ரவர்த்தி திருமகன் என்ற இராமாயணத்திற்கான முன்னுரையில்;``வால்மீகி இராமாயணத்தில் காணப்படும் இராமன் ஒரு சிறந்த இராஜகுமாரன், வீரபுருஷன், அபூர்வமான தெய்வீக நற்குணங்கள் பெற்றவன் அம்மட்டே, கடவுளாக வேலை செய்யவில்லை'' பிறகு எங்கே போய் இராமன் பாலம் கட்டினான்?ஏன்! ஒரு சிறந்த இராஜகுமாரன் இராமேசுவரத்துக்கும், இலங்கைக்கும் இடையே 30 கிலோ மீட்டர் தொலைவுக்குப் பாலம் கட்ட முடியாதா? என்று கேட்கலாம்! எப்படி முடியும்? 17 இலட்சத்து 50 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கட்டியதாகத்தானே ஜெயலலிதா சொல்கிறார். அந்தக் காலத்தில், செங்கல், கருங்கல், சுண்ணாம்பு, இரும்பு போன்ற பொருள் இருந்திருக்க முடியாதே! இராமர் கடவுள் அவதாரமாயிருந்தால் அணில் போன்ற பிராணிகள்? தங்கள் உடலில் இருக்கின்ற ரோமங்கள் மூலம் மணல் சேர்த்துக் கொடுத்திருக்கும், இராமன் ஒரு சத்திரியன் தான் என்பதுதானே இராஜாஜி உள்ளிட்ட ஆராய்ச்சியாளர்கள் முடிவு!``வால்மீகி இராமாயணப்படி இராமன் விந்திய மலைக்குத் தெற்கே வரவே இல்லை, இந்தியாவுக்கும் ஸ்ரீலங்காவுக்கும் இடையே பாலம் எதுவும் கட்டவுமில்லை''(மிகப் பெரிய இராமாயண ஆராய்ச்சியாளர் டி. அமிர்தலிங்க அய்யர் இராமாயண விமர்சனம் என்ற நூலை அடிப்படையாகக் கொண்டு பழம்பெரும் கம்யூனிஸ்ட் தலைவர் கே. முத்தையா எழுதியுள்ள ``இராமாயண உண்மையும் புரட்டும்'' என்ற நூல்) ஆக இராமாயணம் என்பது வைணவ மதத்தை வளர்க்க எழுதிய இதிகாசம், சமஸ்கிருதத்தில் வால்மீகி எழுதும் முன் எழுத்து, அச்சு இயந்திரம் எல்லாம் வராத காலத்தில் வாய்மொழியாக நாடோடிக் கதையாயிருந்ததைத்தான் பின்னர் சமஸ்கிருதத்தில் வால்மீகி எழுதிட இதனைத் தமிழில் எழுதியவர் கம்பர்! இந்தக் கம்பரின் அழகு தமிழ் காவியத்தில் ஆபாசம் கலந்து தந்த புரட்டுக்கதைதான் இராமாயணம்! அந்தப் புரட்டுக் காவிய நாயகன்தான் இராமன்!! *** இராமாயணம் நடந்த கதை அல்ல! அதற்கு சரித்திர ஆதாரம் இல்லை!*** இராமாயணம் நடந்தது பூலோகத்தில் என்றால் தேவர்கள், ரிஷிகள் எல்லாம் பூலோகத்தில் எங்கு இருந்தார்கள்?*** தேவலோகத்திலென்றால் அங்கிருந்து பூலோகத்துக்கு எப்படி வந்தார்கள்? ஏன் வந்தார்கள்? இவை தந்தை பெரியார் அவர்கள் தொடுத்துள்ள வினாக்கள்! இவைகளுக்கு ஜெயலலிதா விடை கூறட்டும்!! ஒரு பெரிய திட்டம்! கப்பல் போக்குவரத்தில் தமிழகத்துக்கு மட்டுமின்றி இந்திய நாடு முழுமைக்கும் பயனளிக்கக் கூடிய சர்வதேச வர்த்தகத்தில் இந்தியா பெரும் பங்கேற்க வசதியான நீர் வழிப் போக்குவரத்தில் முதன்மையான இடம் பெறக் கூடியத் திட்டம்!! இதை நிறைவேற்றி விட்டால் திமுகவுக்கு கிடைத்திட இருக்கிற மாபெரும் புகழை எண்ணிப் பொருமுகின்ற ஜெயலலிதா காழ்ப்புணர்ச்சியினால் குறுகிய நோக்கத்தினால் இந்த மாபெரும் திட்டத்தை நிறைவேற்றிட ஓய்வொழிச்சலின்றி அயராது பாடுபடும் கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் மாண்புமிகு டி.ஆர். பாலு அவர்களைத் தொடர்ந்து கொஞ்சங்கூடப் பண்பாடற்ற, நாகரீகமில்லாத, நாராச நடையில், தாக்குவதோடு மாண்புமிகு முதல்வர் அவர்களையும் பொய்யர் என்றும் நா கூசாது ``நரகலைத் தின்று வாய் கொப்பளிக்கும் பேச்சை'' எந்தப் பொறுப்புள்ள ஏடுகளாவது கண்டிக்கின்றனவா என்றால் இல்லை! அந்தளவு பத்திரிகா தர்மம் இங்கே வாழ்கிறது! சரி, ஜெயலலிதா இனிச் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப் போவதாக கூறுகிறார். யார் தடுக்கிறார்கள், அவருக்குத் துணையாக மாபெரும் அகில இந்திய அரசியல் கட்சி (?)யின் மகத்தான மக்கள் தலைவர் சுப்ரமணியசாமி வேறு துணையிருக்கிறார், போங்கள் என்றுதான் தமிழக மக்கள் கூறுவார்கள். அது சரி அம்மாவுக்கு ஒரு கேள்வி! ஸ்ரீஇராமபிரான் கட்டிய பாலத்தை இடிக்காமல் தடுக்க! அந்த இராமபிரானே வரலாமே! ஒரே பாணத்தை எய்து, இலங்கைக்கும் தமிழ்-நாட்டுக்கும் இடையே உள்ள கடலை வற்றச் செய்ய முயன்ற போது கடல் அரசனான சமுத்திர ராஜன் ராமன் முன் தோன்றி மன்னிப்புக் கேட்டு இராமர் கூட்டம் இலங்கை செல்ல வழிவிட்டதாக இராமாயணம் கூறுகிறதே! இப்போது எங்கே போனான் அந்த இராமபிரான்? இராமாயணம் கற்பனைக் கதை! என்று தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, இராஜாஜி மற்றும் பல்வேறு அறிஞர் பெரு மக்களும் ஆராய்ச்சியாளரும், ஏன் பண்டித நேருவேகூட இராமாயணம் என்பது ஆரிய திராவிடப் போராட்டத்தைக் குறிக்கும் ஒரு கதை என்றுதான் கூறியிருக்கிறார் . இருந்தும் அண்ணா பெயரில் கட்சியை வைத்து அரசியல் நடத்தும் ஜெயலலிதாவுக்கு கரூர் பகுத்தறிவாளர் மன்றம் சார்பில் ஓர் அறைகூவல், இதுபற்றி விவாதிக்கத் தயாரா?மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் மாண்புமிகு டி.ஆர். பாலு அவர்கள் தஞ்சை சரசுவதி மகாலுக்கு நேரடியாகச் சென்று ஆய்வு நடத்தியதற்கு மோசமான அர்த்தம் கற்பித்துக் கிண்டல் மொழி பேசிய ஜெயலலிதாவே ஒரு நூலகத்திற்குத் திடீரென செல்வது தவறா? அவர் நூலகத்துக்கு நேரில் சென்று பார்த்ததும், பத்திரிக்கைகளில் வந்த செய்திப்படி வால்மீகி இராமாயணத்தில் உள்ள சில பகுதிகளைப் படி எடுத்துச் சென்றுள்ளார், இதில் என்ன தவறு? இது எப்படி ஆவணங்களை அழிப்பதாகும்? ஜெயலலிதாவே கூறியிருப்பது போல நூலகத்தில் உள்ள ஆவணங்கள் எவை வேண்டுமோ அவைகளைத் தமது இருப்பிடத்திற்கே வரவழைத்துப் பார்த்துக் கொள்ள முடியுமே! ஏன் அவ்வாறு செய்யவில்லை அமைச்சர்? அது அதிகாரத் தலையீடு ஆகிவிடும்! ஒரு பெரிய உலகப் புகழ் வாய்ந்த நூலகத்திற்கு நேரில் செல்வதுதான் முறை! நேரில் சென்றால் வேண்டும் நூல்கள், தேவைப்படும் விவரங்கள் எல்லாம் பெற முடியும்! அவர் ஒன்றும் சீல் வைத்த பங்களாவில் உள்ளூர் காவலர்களைப் புறந்தள்ளி விட்டு வெளியூர் காவலர்கள் துணையோடு கேரள நம்பூதிரிகளையும் ஆரூடக்காரர்களையும் வைத்து இரகசிய யாகமோ, யக்ஞமோ நடத்தவில்லையே! அவர் ஜெயலலிதாவைப் போல் நீதிமன்றத்திலேயே தான் போட்ட கையெழுத்தை தன்னுடையதல்ல என்று பச்சையாகப் பொய் சொல்லவில்லையே! தேர்தல் வேட்புமனு தில்லுமுல்லுகளே சந்தி சிரிக்கிறதே! அதன் காரணமாக ஒரு கவர்னரே கேவலப்பட்டு நீதிமன்றத்தின் கண்டனத்திற்கு ஆளான கதையெல்லாம் ஊர் சிரிக்கும் இரகசியமாயிற்றே? பொய்யே வேதமாய், புரட்டும் பித்தலாட்டமே பிழைப்பாய், தான் பெற்ற மகளுக்குக் கூடத் தன் தந்தை யார் எனத் தெரியாமல் இருட்டில் தள்ளி விட்டு வெளியில் வெளிச்சம் போட்டுத் திரிவோர் வெகு விரைவில் மக்களால் தண்டிக்கப்படுவார்கள்.
நன்றி: விடுதலை 05-05-2007

No comments:

Six C's of Character - Yasir Fazaga