கன்னியாகுமரி மாவட்ட இ.முன்னணி பிரமுகரை கொல்ல முயற்சி மதுரை தீவிரவாதிகள் தாக்குதலா?
சாமியார்மடம், ஜூலை8-சாமியார் மடத்தில் இந்து முன்னணி பிரமுகரை கொல்ல முயன்றவர்கள் மதுரை தீவிரவாதிகளாக என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.குமரி மாவட்டம் சுவாமியார்மடம் அருகே உள்ள கவியலூர் உண்ணா விளையை சேர்ந்தவர் ரவீந்திரதாஸ் (50). இந்து முன்னணி பிரமுகரான இவர் சாமியார் மடம் சந்திப்பில் கடை நடத்தி வருகிறார். நேற்று முன் தினம் இரவு கடையை அடைத்து விட்டு வீட் டுக்கு மொபட்டில் வந்து கொண்டு இருந்த போது இவரை பைக்கில் வந்த2 பேர் மறித்து அரிவாளால் கையில் வெட்டினர். படுகாயம் அடைந்த அவர் தனது மொபட்டை போட்டுவிட்டு ஓட்டம் பிடித்தார். ரவீந்திரதாசை வெட்டி யவர்கள் வந்த பைக் மின்கம்பத்தில் இடித்ததில் அதன் முன் பகுதி வளைந்தது இதனால் அதை ஓட்டமுடிய வில் லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் ரவீந்திரதாஸ் விட்டு சென்ற மொபட்டை எடுத்து கொண்டு தப்பி விட்டனர். தங்கள் வந்த பைக்கை அங்கேயே விட் டுச் சென்றனர். அப்போது அந்த வழியாக வந்த நெடுஞ்சாலை ரோந்து பணி போலீசார் படுகாயம் அடைந்த ரவீந்திரதாசிடம் விசா ரணை நடத்தினர். பின்னர் இது பற்றி தக்கலை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தக்கலை போலீசார் அந்த பைக்கை கைப்பற்றி விசா ரணை நடத்தினர். அதன் நம்பர் டிஎன்59டி2925. இது மதுரை நம்பர் என்பது தெரிய வந்தது. மதுரை போலீசாரிடம் தொடர்பு கொண்டு கேட்ட போது அங்கு இதே நம்பரில் பைக் இருப்பது தெரிய வந்தது. எனவே இவர்கள் போலி நம்பர் பிளேட்டில் வந்தது கண்டு பிடிக்கப்பட்டது. பைக்கில் கிஸ்புல்லா என்று எழுதப்பட்டு, கழு தை படம் உள்ளது. என வே அவர்கள் மதுரையை சேர்ந்த இஸ்லாமிய தீவிர வாதிகளாக இருக்கலாம் என்ற கோணத்தில் கியூ பிராஞ்ச் போலீசார் விசா ரணை நடத்தி வரு கிறார்கள். அவர்கள் 2 பேரும் தப்பிய விபரம் நெல்லை டிஐஜி கண்ணப்பனுக்கு தெரிய வந்தது. இதைய டுத்து அவர் சம்பந்தப்பட்ட போலீசாருக்கு டோஸ் விட்டார். ஏன் அவர்களை தப்ப விட்டீர்கள். அவர் களை உடனே பிடிக்க வேண்டும் என்று உத்தர விட்டு உள்ளார். படுகாயம் அடைந்த ரவீந்திரதாஸ் மருத்துவனையில் அனும திக்கப்பட்டு உள் ளார். இது குறித்து ரவீந் திரதாஸ் கூறியதாஸ்-நேற்று முன்தினம் இரவு கடையை அடைத்து விட்டு வீட்டுக்கு மொபட் டில் வரும் போது 2 பேர் என்னை அரிவா ளால் வெட்டினர் படுகாயத்து டன் தப்பினேன்.அவர்கள் என்னை பின் தொடர்ந்து வந்து தாக்கி உள்ளனர். புளிபணம் சந்திப்பில் வரும் போது இருட்டாக இருந்தது. உடனே அவர் கள் என் மொபட் மீது தங் கள் வந்த பைக்கை இடித்து தள்ளினர். எனக்கு யாருட னும் தகராறு கிடையாது. இவர்களை உடனே கைது செய்யவேண்டும் என் றார். கண்டனம்இந்து முன்னணி பிரமுகர் ரவீந்திரதாஸ் தாக்கப்பட்டதற்கு கண்ட னம் தெரிவித்து சாமியார் மடம் இந்து பரிவார்கமிட்டி கூட்டம் நேற்று நடந்தது. இந்து முன்னணி மாவட்ட செயலாளர் கோடியூர் சுப்பையா, தலைவர் ஆசிர்வாதம், பொது செயலாளர் கண்ணன், பா.ஜ. வால்வச்ச கோஷ் டம் பஞ்சாயத்து தலைவர் பிரபாகரன் ஆர்எஸ்எஸ் ராஜேந்திரன், பிரேம் குமார், உள்பட பலர் கலந்து கொண்டனர். இதில் நிறை வேற்றப்பட்ட தீர்மானங்கள்-இந்து முன்னணி பிரமுகரை தாக்கி யவர் களை 1 வாரத்தில் கைது செய்வதாக எஸ்பி கூறி உள்ளார். தவறினால் எங்கள் இயக்கம் சார்பில் போராட்டம் நடத்து வோம். போக்குவரத்து போலீ சார் நடவடிக்கை பொது மக்களுக்கு பயன் உள்ள தாக இல்லை. தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.இதற்கு எஸ்பி உத்தரவிட வேண் டும். இவ்வாறு தீர்மானம் நிறை வேற்றப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment