கோவை குண்டு வெடிப்பு வழக்கில் இருவருக்கு ஜாமீன்
கோவை : கோவை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட இருவருக்கு ஜாமீன் வழங்கி தனி கோர்ட் உத்தரவிட்டுள்ளது. கோவை தொடர் குண்டு வெடிப்பு வழக்கு, தனி கோர்ட்டில் நடந்து வருகிறது. வழக்கின் தீர்ப்பு வரும் ஆக.,1ல் தீர்ப்பு வழங்கப்படுகிறது. இந்நிலையில், நவுஷாத், சர்தார் ஆகிய இருவரும் ஜாமீன் கோரி தனி கோர்ட்டில் மனு செய்தனர். மனுவை விசாரித்த தனி கோர்ட், இருவருக்கும் ஜாமீன் வழங்கி, தீர்ப்பளித்தது. இருவரும் ரூ.10 ஆயிரம் செலுத்தி, சொந்த ஜாமீனில் செல்ல கோர்ட் அனுமதி அளித்துள்ளது. இது குறித்து வக்கீல் அபுபக்கர் கூறுகையில், ""குற்றம் சாட்டப்பட்ட நவுஷாத், சர்தார் ஆகியோருக்கு, தலா ரூ.10 ஆயிரம் சொந்த ஜாமீன் அளித்து, தனி கோர்ட் உத்தரவிட்டுள்ளது. கோவை சிறையில் அடைக்கப்பட்டிருந்த நவுஷாத் நேற்று விடுவிக்கப்பட்டார். சென்னை சிறையில் உள்ள சர்தார் இன்று விடுதலை செய்யவுள்ளார். இருவரும், ஒவ்வொரு வாய்தாவுக்கும் தவறாமல் ஆஜராக வேண்டும். கோர்ட்டில், குற்றம் சாட்டப்பட்டோருடன் சேர்ந்து நிற்க கூடாது. கோர்ட்டுக்கு வரும் போது, போலீஸ் சோதனைக்கு ஒத்துழைக்க வேண்டும்; பேட்டி கொடுக்க கூடாது, போன்ற நிபந்தனைகளின் பேரில் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது,'' என்றார். கோவை குண்டு வெடிப்பு வழக்கு விசாரணை ஒன்பது ஆண்டுகளாக நடந்து வந்தது. 174 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளனர்.
வழக்கின் தீர்ப்பு ஆக., 1ல் வழங்கப்படுகிறது. இந்நிலையில், முதல் முறையாக இருவருக்கு ஜாமீன் அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment