லண்டன் வாலிபரை தாக்கிய சரவணா ஸ்டோர்ஸ் ஊழியர்கள் கைது
சென்னை, ஜூலை 22: லண்டன் வாலிபரை தாக்கிய சரவணா ஸ்டோர்ஸ் ஊழியர்கள் 6 பேர் கைது செய்யப்பட்டனர்.லண்டனைச் சேர்ந்தவர் இளஞ்செழியன். இவர் மனைவி சுதர்ஷினி, மகள் நிலாயினி (3) ஆகியோருடன் சென்னைக்கு சுற்றுலா வந்தார். நேற்று முன்தினம் இரவு தி.நகர் ரங்கநாதன் தெருவில் உள்ள சரவணா ஸ்டோர்ஸ் கடைக்கு சென்ற இளஞ்செழியன், ரூ.10 ஆயிரத்துக்கு பொருட்கள் வாங்கினார். அப்போது, சிறிய ரப்பர் பந்து ஒன்றை நிலாயினி எடுத்துக் கொண்டாள். குழந்தை அழுததால் மனைவியிடம் பொருட்களை எடுத்து வரச்சொல்லி விட்டு இளஞ்செழியன் குழந்தையை தூக்கிச் சென்றார்.அப்போது கடை ஊழியர் ஒருவர், குழந்தை கையில் இருந்த பந்தை பார்த்ததும் அதை திருடிச் செல்வதாக நினைத்து பிடுங்கி உள்ளார். அதற்கு, Ôஇந்த பந்து நான் வாங்கியது. பணம் செலுத்தி விட்டேன்Õ என்று இளஞ்செழியன் கூறியுள்ளார். அதை நம்பாத ஊழியர்கள் இளஞ்செழியனை சரமாரியாக தாக்கினர். இளஞ்செழியனை பொதுமக்கள் காப்பாற்ற முயன்றனர். பல ஊழியர்கள் சேர்ந்து தாக்கியதால் ஒன்றும் செய்ய முடியவில்லை.கட்டுப்பாட்டு அறைக்கு இளஞ்செழியன் போன் செய்தார். போலீசார் வந்து இளஞ்செழியனை மீட்டனர். இதுகுறித்து மாம்பலம் போலீசில் இளஞ்செழியன் புகார் செய்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்யாமல் தாமதப்படுத்தினர். இதுபற்றி, போலீஸ் கமிஷனர் லத்திகா, துணை கமிஷனர் லட்சுமி ஆகியோருக்கு தகவல் தெரிந்தது. உடனடியாக நடவடிக்கை எடுக்க மாம்பலம் போலீசா ருக்கு உத்தரவிட்டனர். போலீசார், சரவணா ஸ்டோர்ஸ§க்கு சென்று வைகுண்ட பெருமாள், மூர்த்தி, தம்பிராஜ், பாலமுருகன் உட்பட 6 ஊழியர்களை கைது செய்தனர். அவர்களை போட்டோ எடுக்க, போலீஸ் உதவி கமிஷனர் சலேத்ராஜ், இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் ஆகியோரிடம் நிருபர்களும், புகைப்படக்காரர்களும் அனுமதி கேட்டனர். அவர்களோ அனுமதி மறுத்ததோடு, Ôமுடிந்தால் கோர்ட்டில் போய் எடுத்துக் கொள்ளுங்கள்Õ என்றனர்.இதையடுத்து, கைது செய்யப்பட்ட 6 பேரும், சைதாப்பேட்டை 17வது மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். உடனே, 6 பேர் சார்பிலும் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதை ஏற்றுக் கொண்ட மாஜிஸ்திரேட் அவர்களுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.
No comments:
Post a Comment