Search This Blog

Tuesday, July 24, 2007

நீதியைத்தேடி...(கவிதை)

நீதியைத்தேடி...(கவிதை)

கண்ணீரை மையாக்கி, வேதனையெனும்தூரிகை கொண்டு வரையப்பட்டஓவியமோ காவியமோ அல்ல இது!எங்களது உடலில் இன்னும்உயிர் உள்ளது என்றமறக்கப்பட்ட உண்மைக்குஎஞ்சியுள்ள ஒரே சான்று!எதிர்பார்த்து, எதிர்பார்த்து ஏங்கித் தவிக்கும்வேதனையை வெளிபடுத்த இந்தஉள்ளத்திற்கு கண்ணில்லையே,கண் கட்டப்பட்ட இவ்வுலகநீதி தேவதையைப் போல்...ஆகையால்தான் வேதனை, வெளியேதெரியும் விழிகளின் வழியே வெப்பமாக!வேதனையை வெளிப்படுத்த இந்த கண்கள்இரத்தக் கண்ணீர் வடிக்கும் சாத்தியமில்லை,பானையில் இருந்தால்தானேஅகப்பையில் வரும்? - தற்போதுஎங்கள் உடலிலும் இரத்தம் இல்லையே!ஈவிரக்கமற்ற காட்டேரிகளைப்போல்நாங்களுமா நடமாடும் சடலங்களானோம்?இங்கு சமத்துவம் ஆழமாக இருக்கிறது!அப்பாவிக்கும், பாவிக்கும் இல்லைசிறு வித்தியாசங்கள் இங்கு பல,இருவரும் இருக்கின்றனர்சமமாக!? - இவ்வுலகில்,நடமாடிக் கொண்டும், நடைப் பிணங்களாகவும்,சிறைக்கு உள்ளும், வெளியிலும்!நாங்களும் வாழ்ந்தோம் சில நாட்கள்!"அந்த இனிமையான மணித்துளிகளின்நினைவுகள் போதும், மீண்டும்நாம் சந்திக்கும் வரை, அல்லதுசத்திய மரணம் நம்மை சந்திக்கும் வரை''எனும் வார்த்தைகள் இன்னும் எத்தனைநாட்கள் உதவும் அறியோம் இறைவா!நீதி தேவதையே, நீ கண்ணை கட்டி இருப்பதுபாரபட்சமற்ற முறையில் நீதி வழங்கிடவேஎன்ற எங்கள் நம்பிக்கையை, உன்நீதித் தாராசில் நிறுத்திப்பார்! - அநீதிஇழைக்கப்பட்டோர் உன்னிடம்எதிர்பார்ப்பை கைவிட்டுகளத்தில் இறங்கியதன் காரணம் புரியும்!தீவிரவாதிகள், பயங்கரவாதிகள் போன்ற சிலமுத்திரைகளுக்கு அஞ்சிடுவர் இவர்களென்றுஎதிர்பார்ப்பதில் நியாயம் இல்லை!இப்போது அவர்களின்எதிர்பார்ப்புகள் அநியாயமாகமறக்கவும், மறுக்கவும் பட்டுவேதனை மட்டுமே தொடர்கதையாக!நீதி தேவதையே, நீ கண் திறக்கமாட்டாயா என்று கேட்பவர்கள்குரல் ஓலமாய் மாறும் முன், உன்நீதி உடனே வழங்கப்பட வேண்டும்!அதுவே உன்னுடைய உடலில்உயிருள்ளது என்பதற்கு எஞ்சிஇருக்கும் கடைசி வாய்ப்பு!!
நன்றி : சத்தியமார்க்கம்

No comments:

Six C's of Character - Yasir Fazaga