Search This Blog

Sunday, July 29, 2007

சட்டம், ஒழுங்கு ஏடிஜிபி ஆனார் விஜயக்குமார்

சட்டம், ஒழுங்கு ஏடிஜிபி ஆனார் விஜயக்குமார் ஜூலை 29, 2007 சென்னை: வீரப்பனை வேட்டையாடிய சிறப்பு அதிரடிப்படைத் தலைவர் கூடுதல் டிஜிபி விஜயக்குமார், சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபியாக சென்னைக்கு மாற்றப்பட்டுள்ளார். சந்தனக் கடத்தல் வீரப்பனை வேட்டையாடிய சிறப்பு அதிரடிப்படைக்குத் தலைவராக இருந்தார் கூடுதல் டிஜிபி விஜயக்குமார். வீரப்பன் வதத்திற்குப் பின்னர் சென்னை சப் இன்ஸ்பெக்டர் பயிற்சி அகாடமியின் தலைவராக நியமிக்கப்பட்டார்.
சமீபத்தில் தேனி மாவட்டத்தில் புதிதாக முளைத்துள்ள நக்சலைட்டுகளை வேட்டையாடும் சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டார். இந்த நிலையில் சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபியாக விஜயக்குமார் நியமிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து மீண்டும் சென்னைக்குத் திரும்புகிறார் விஜயக்குமார். இதுவரை இப்பதவியில் இருந்து வந்த கே.வி.எஸ். மூர்த்தி ஓய்வு பெறுகிறார். சென்னை மாநகர காவல்துறை ஆணையராக ஏற்கனவே விஜயக்குமார் பணியாற்றியுள்ளார் என்பது நினைவிருக்கலாம். இதுதவிர மேலும் சிலரும் மாற்றப்பட்டுள்ளனர். சென்னை ஆயுதப் படை ஐஜி ஜே.கே.திரிபாதி சென்னை மத்தியக் குற்றப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார். ஆயுதப்படை ஐஜியாக கே.பி.மகேந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார். கமாண்டோ படை எஸ்.பி. ஸ்ரீதர், நெல்லை எஸ்.பியாக மாற்றப்பட்டுள்ளார். நெல்லை எஸ்.பி. செந்தாமரைக்கண்ணன், வேலூர் போலீஸ் பயிற்சிப் பள்ளி கமாண்டராக மாற்றப்பட்டுள்ளார். நாமக்கல் எஸ்.பி. தீபக் தாமோதர் தூத்துக்குடிக்கு மாற்றப்பட்டுள்ளார். தூத்துக்குடி எஸ்.பி. ஜான் நிக்கல்சன், மண்டபம் கடலோர பாதுகாப்புப் படைப் பிரிவின் 12வது பட்டாலியன் கமாண்டராக நியமிக்கப்பட்டுள்ளார்.

No comments:

Six C's of Character - Yasir Fazaga