மேலப்பாளையம் கொலை வழக்கு: அல்- உம்மா தீவிரவாதிகள் 7 பேர் விடுதலை நெல்லை, ஜுலை. 26-
மேலப்பாளையத்தை சேர்ந்தவர் சாதலி. இவர் இப்பகுதியில் உள்ள அல்-உம்மா தீவிரவாதிகள் குறித்து போலீசுக்கு தகவல் கொடுத்து வந்ததாக கூறப் படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த ஒரு கும்பல் கடந்த 2004-ம் ஆண்டில் மேலப்பாளையம் பகுதியில் சாதலியை வெட்டி கொலை செய்தது.
7 பேர் மீது வழக்கு
இதுகுறித்து மேலப்பாளை யம் போலீசார் வழக்கு பதிவு செய்து அல்-உம்மா இயக்கத்தை சேர்ந்த கோழி அலியார், கொத்தனார் அலி, ஷாலின், ரோஷன், மண்எண்ணை பஷீர், ïனுஸ், முல்லன் சையதுஅலி ஆகிய 7 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணை நெல்லை முதலாவது கூடுதல் செசன்சு கோர்ட்டில் நடந்து வந்தது. விடுதலை
இந்த வழக்கில் இன்று தீர்ப்பு கூறப்பட்டது. இதில் கொலைக்கான ஆதாரம் நிரூபிக்கப்படவில்லை என்று கூறி வழக்கு தொடரப்பட்ட 7 பேரையும் விடுதலை செய்து நீதிபதி சேஷையா தீர்ப்பளித்தார். இந்த கொலை வழக்கில் சிக்கியிருந்த மண்எண்ணை பஷீர் மீது வெடிகுண்டு வழக்கு உள்பட பல வழக்குகள் உள்ளன என்பது குறிப்பிடத் தக்கது.
No comments:
Post a Comment