Search This Blog

Monday, July 23, 2007

பகுத்தறிவின் லீலைகள் வியந்தோதாய் உடன்பிறப்பே…

பகுத்தறிவின் லீலைகள் வியந்தோதாய் உடன்பிறப்பே…
ஏய்! சாயிபாபாவெறுங்கையிலிருந்து விபூதியும் பூச்செண்டும்வரவழைத்தாயே! அதுவா அற்புதம்?வெயிலறியா உன் தலைமுடியிலிருந்துவிதவிதமாய் கடிகாரங்களை வரவழைத்தாயே!அதுவா அற்புதம்?
பசியறியா உன் வயிற்றியிலிருந்துபலப்பல லிங்கங்களை வரவழைத்தாயே!அதுவா அற்புதம்?அடே! சாயிபாபாவழியறியா உன் காவிக் கஜானாவிலிருந்துகடைசியில் கருணாநிதியைவெளியே வரவழைத்தாயே!அதுவன்றோ அற்புதம்!!வீழ்ந்திற்றோ கொள்கைக் குன்று என்றுவிளங்காத உடன்பிறப்பே...இருநூறு கோடி எதிரே வருகையில்பெரியார் பார்வையா பார்க்க முடியும்?
கொஞ்சம் பகுத்தறிவோடு பார்!யாருக்கும் தலைவணங்காத சுருள்முடியையேகோபாலபுரம் தன் காலடிக்கு வரவழைத்ததுஆன்மீகத்திற்கே பேரடி அல்லவா?அதிசயம் அல்லவா?
அற்புதத்தில் விஞ்சி நிற்பதுபாபாவா? கலைஞரா? பார்!வெறுங்கையிலிருந்து நோக்கியாவைவரவழைத்தார்!
இதோ... ஊமைகள் பேசுகிறார்கள்!காலிக் கஜானாவிலிருந்துகலர் டி.வி.யை வரவழைத்தார்!அதோ... குருடர்கள் பார்க்கிறார்கள்;வாயிலிருந்தே இரண்டு ஏக்கர் நிலத்தைவரவழைத்தார்!அதோ முடவர்கள் நடக்கிறார்கள்.அது மட்டுமா...?
அணுவைத் துளைத்து, மலைகள் விழுங்கி,ஆழ்கடல் குடித்து ஆயிரமாய் விளைநிலங்கள் செரித்துகுறுகத் தறிக்கும் உலகமயப் பொதுமறையைஓவியமாய்த் தீட்டும் அற்புதம்அந்த பாபாவுக்கு வருமா?அவரா, இவரா?
அற்புதத்தைத் தெரிவு செய்ய முடியாமல்திக்குமுக்காடி நெளிகிறது தெலுங்கு கங்கை.ஆசீர்வாதத்திற்குப் பயந்துஓடி ஒளிகிறது கூவம்!
துரை. சண்முகம்

No comments:

Six C's of Character - Yasir Fazaga