Search This Blog

Sunday, July 08, 2007

வெல்கம் டு பாஃலஸ்தீன்

வெல்கம் டு பாஃலஸ்தீன் - (தமிழாக்கம் - முஹம்மத் ரஸ்மி)
ரொபர்ட் பிஸ்க் - பிரித்தானியாவின் முன்னணி நாளிதளான த இன்டிபென்டன்ட் இன் மத்திய கிழக்கு விவகாரங்களுக்கான நிருபர்இ கடந்த 25 வருடங்களாக லெபனானில் வசித்து வருகிறார். பிரிட்டனின் மிகப் புகழ்வாய்ந்த வெளிநாட்டு நிருபர் என்று நியுயோர்க் டைம்ஸ் அவருக்கு புகழாரம் சூட்டுகிறது. ஏழு முறை 'இவ்வாண்டுக்கான சர்வதேச ஊடகவியலாளர்' எனும் 'பிரித்தானிய ஊடக விருது' பெற்றவர்.
மூன்று கௌரவ கலாநிதி பட்டங்களை முறையே பிரிட்டன்இ பெல்ஜியம்இ அமெரிக்க பல்கலைக்கழகங்கள் இவருக்கு வழங்கியுள்ளன. மற்றும் பல உலகளாவிய விருதுகளுக்கும் பாராட்டுகளுக்கும் சொந்தக்காரர். 1970ல் ஆரம்பித்த அவரது ஊடகத்துறைப் பணி இன்றுவரை தொடர்கிறது. மேற்கின் மத்திய கிழக்குடனான வெளிநாட்டுக் கொள்கையின் தீவிர விமர்சகர் இவர். மேற்கு சார்பான விமர்சகர்கள் இவரை "னசநயனகரடடல pநளளiஅளைவiஉ" (கிலியூட்டும் வகையில் கெடுதலையே நோக்குபவர்!) என்று கூறுகின்றனர். வாந (யஉவழைளெ ழக வாந) றுநளவ (in சநளிழளெந வழ 9ஃ11) றயள யடிழரவ வழ டிசiபெ வழவயட னளையளவநச ரிழn வைள ழறn hநயன". (செப்டெம்பர் 11 நியுயோர்க் தாக்குதலின் விளைவான மேற்கின் எதிர்வினைகள் அது தன் மீதே பேரிடரை வரவழைத்துக் கொள்வதனை நோக்கியதாகும்) என்ற இவரது புகழ்பெற்ற கூற்று அவரது கருத்தோட்டத்தை அனுமானிக்கப் போதுமானதாகும். மேற்கினதும் மேற்கின் செல்லப் பிள்ளையான மஹ்மூத் அப்பாசினதும் தொடர்ச்சியான நெருக்குவாரங்களின் விளைவாக ஓரிரு தினங்களுக்கு முன்னர் பலஸ்தீனத்தின் காஸா பகுதியை ஹமாஸ் தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்தது. அப்பாசுடைய பதாஹ் பிரிவு காஸாவிலிருந்து இப்போது இஸ்ரேல் எல்லை ஊடாக வெளியேறிக்கொண்டிருக்கிறது. இதன் தொடர்ச்சியாக இஸ்ரேல் பிரதமர் யஹுத் ஒல்மர்ட் இன்று (19.06.07) ஜோர்ஜ் புஷ் உடனான உடனடி சந்திப்பு ஒன்றுக்கு ஏற்பாடு செய்துள்ளார். அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் தடுத்து வைக்கப்பட்டுள்ள பலஸ்தீன அதிகார சபைக்கான நிதியுதவி வெள்ளத்தை 'மடை திறக்க' இணங்கியுள்ளன. வெள்ளை மாளிகையின் செய்திக்குறிப்பு ஒன்றில் ஜனாதிபதி புஷ் 'அப்பாஸ் அனைத்து பலஸ்தீனியர்களினதும் பிரதமர்' என்றும் 'தீவிரவாதிகளுக்கு நடுவில் ஒரு நியாயக் குரல் எழுப்புபவர்' என்று புகழ்ந்து தள்ளியள்ளார். இஸ்ரேலிப் பிரதமர் ஒல்மர்ட் தன் பங்குக்கு 'என்ன தடைகள் ஏற்பட்டாலும் அப்பாசுடன் ஒத்துழைப்பதற்கான எல்லா முயற்சிகளிலும் தான் முன்நிற்கப் போவதாக' சூளுரைத்துள்ளார். ஹமாஸ் இயக்கத்தைத் தனிமைப்படுத்தி அதன் மீது தாக்குதல் ஒன்றைத் தொங்குவதற்கான ஜரூரான முயற்சிகள் தொடங்கியுள்ளதாக கருதவேண்டியுள்ளது. இவ்வாறு பலஸ்தீனம் மீதான மேற்குலகின் 'அயராத சமாதான முயற்சிகள்' சூடுபிடித்துள்ள நிலையில் மேற்கை நோக்கி வினாத் தொடுப்பதாக அமைந்துள்ள ரொபர்ட் பிஸ்க் அவர்களின் இக்கட்டுரை முக்கியத்துவம் பெறுகிறது
மேற்கின் இரட்டை நிலைப்பாட்டுக்கு சூடு வைக்கும் விதத்திலான அவரது எழுத்துக்கள் அலாதியானவை! (மொழிபெயர்த்தோன்)
மத்திய கிழக்கிலுள்ள முஸ்லிம்களின் நிலை தான் எவ்வளவு பரிதாபகரமானது? முதலில் பாலஸ்தீனியர்களை 'ஜனநாயகத்தை' தழுவிக் கொள்ளுமாறு நாம் நிர்ப்பந்தித்தோம். அவர்கள் ஹமாஸ் எனும் 'தவறான' ஒரு கட்சியைத் தெரிவு செய்தார்கள். பின்னர் ஹமாஸ் மினி சிவில் யுத்தம் ஒன்றையே வென்று காசா பிரதேசத்தில் தனது ஆட்சியை நிறுவியது. இருந்த போதும் மேற்கத்தேயர்களாகிய நாம் மதிப்பிழந்துபோன மஹ்மூது அப்பாசுடன் தான் தொடர்புகளை வலுப்படுத்தி வந்தோம். இன்று 'பலஸ்தீன்' (மேற்கோள் குறிகளை சரியாக விளங்கி வாசியுங்கள்!) இரண்டு பிரதம மந்திரிகளைக் கொண்டிருக்கிறது. வெல்கம் டு மிடில் ஈஸ்ட்!!யாருடன் நாங்கள் பேச்சுவார்த்தை நடத்தப் போகிறோம்? யாருடன் தான் பேச? பல மாதங்களுக்கு முன்னர் தாராளமாக நாங்கள் ஹமாசுடன் பேசி இருக்கலாம். ஆனால் ஜனநாயக ரீதியாக சட்டபூர்வமாகத் தெரிவு செய்யப்பட்ட ஹமாஸ் தலைமையிலான பலஸ்தீன அரசாங்கத்தை நாம் தான் விரும்பவில்லையே! பலஸ்தீன் மக்கள் ஏன் ஹமாசினது தலைமைத்துவத்தை உவந்து ஏற்றுக் கொண்டனர்? அவர்கள் ஊழல்கள் நிறைந்த அப்பாசுடைய பதாஹ் கட்சியை ஏன் நிராகரித்தார்கள்? பலஸ்தீனர்களின் தலைவிதியை மண்ணுக்குள் புதைக்கும் முற்றாக வலுவிழந்து போன ஒஸ்லோ உடன்படிக்கையையும்இ இஸ்ரேலினது ஆக்கிரமிப்புக் கொள்கையையும் நிராகரிக்கும் ஹமாசினது கரங்களையே அம்மக்கள் பலப்படுத்தினார்கள். ஹமாஸ் இஸ்ரேலை அங்கீகரிக்க வேண்டும் என்று கொக்கரித்தீர்களே! எங்கள் தரப்பிலிருந்து யாருமே கேட்கவில்லையே. ஹமாஸ் 'எந்த' இஸ்ரேலை அங்கீகரிக்க வேண்டும் என்று? 1948ல் பிறந்த போது இருந்த இஸ்ரேலையா? 1967ல் அது அரபுக்கள் மீது தொடுத்த போருக்கு பின்னரான இஸ்ரேலையா? அல்லது பலஸ்தீனர்களுக்கு சொந்தமான பகுதியை விழுங்கி ஏப்பமிட்டு இன்றும் கூட ஏன் இதற்கு மேலும் தொடரப் போகும் - இஸ்ரேல் அமைத்து வரும் யூத 'யூதர்கள் மட்டுமே' கொண்ட பெரும் குடியேற்றங்களை உள்ளடக்கிய இஸ்ரேலையா? இன்று எமது நம்பிக்கைக்குப் பாத்திரமான பொலிஸ்காரன் (பி.பி.சிஇ சீ.என்.என் மற்றும் பொக்ஸ் ஊடகங்கள் 'மிதவாதி' என்று போற்றும்) மஹ்மூது அப்பாசுடன் பேசுகிறோம்.
ஒஸ்லோ ஒப்பந்தத்தைப் பற்றி 600 பக்கங்களுக்கு மேற்பட்ட புத்தகம் ஒன்றை எழுதிஇ அதில் தப்பித் தவறிக் கூட ஆக்கிரமிப்பு (ழஉஉரியவழைn) என்ற சொல்லைப் பயன்படுத்தாதஇ பலஸ்தீனிலிருந்து பின்வாங்குதல் (றiவானசயறயட) என்ற சொல்லுக்கு பதிலாக (சநனநிடழலஅநவெ)மீளவும் படை குவிப்பை வேண்டும் என்று கோரி நின்றஇ கோட்டும் டையுமாக வெள்ளை மாளிகையை வலம் வந்து 'சரியானதை மட்டும் பேசிய' ஒரு 'தானைத் தலைவனை' முற்படுத்தி 'நிரந்தர சமாதானத்தை'ப்பற்றி பேசப்போகிறோமா! பேசுவோம்! (மீண்டும் நினைவூட்டுகிறேன். மேற்கோள்குறிகளை அவதானித்து வாசியுங்கள்) ஒரு உண்மையான இஸ்லாமியக் குடியரசை அமைக்க வேண்டித்தான் பலஸ்தீனியர்கள் ஹமாசைத் தெரிவு செய்தார்கள் என்ற கருத்தின் நிகழ்தகவு ஒருபுறமிருக்கஇ அப்பாசினதும் 'பலஸ்தீன அதிகார சபை'யினதும் அழுகித் துர்நாற்றமெடுத்த ஊழல் பேரரசிலிருந்து அம்மக்கள் விடுதலையை வேண்டி நின்றனர் என்பது உண்மையல்லவா?
சில வருடங்களுக்கு முன்னர் பலஸ்தீன அதிகார சபையின் முக்கியஸ்தர் ஒருவரின் வீட்டுக்கு அழைக்கப்பட்டிருந்தேன். இஸ்ரேலிய டாங்கிகளால் சல்லடையிடப்பட்டிருந்த அவரது வீட்டு சுவர்களை நான் பார்த்தேன். துயர் தரும் உண்மைதான்! ஆனால் என் கவனத்தை ஈர்த்தது அதுவல்ல. அவரது வீட்டின் ஆடம்பரக் குளியலறையில் பொருத்தப்பட்டிருந்த தங்க முலாம் பூசப்பட்ட நீர்க் குழாய் வகையறாக்கள் தான் அவை! ஊழலும் கட்டற்ற ஆடம்பரமும் தான் பதாஹ் தேர்தலில் மண்கவ்வ வழி செய்தது. அடிக்குமேல் அடிவாங்கி வாழ்வின் விளிம்புக்கே தள்ளப்பட்டிருந்த பலஸ்தீனியர்களுக்கு முதலில் தேவைப்பட்டது தம் பெயரில் சுரண்டிக் கொழுக்கும் ஊழல்வாதிகளுக்கு ஒரு முடிவு கட்டுவது தான். பலஸ்தீன் மட்டுமன்றி அரபு முஸ்லிம் உலகைப் பீடித்திருக்கும் புற்றுநோய் அது. அதுவேதான்! அது தான் ஹமாசை முன்தள்ளி வெற்றியை சுவீகரிக்க வைத்தது. 'யாவும் அறிந்த' - 'மனிதகுல நலனுக்காகவே செயற்படும்' மேற்கத்தேயர்களாகிய நாம் ஜனநாயகஇ சட்ட ஒழுங்குகளை மதித்து ஆட்சியை அமைத்த ஹமாசை நோக்கி பொருளாதாரத் தடைகளை விதித்தோம். அம்மக்களை பட்டினி போட்டோம். அவர்களை அச்சுறுத்தி பணியச் செய்ய 'ராஜதந்திர' பிரயத்தனம் எடுத்தோம். 'சரியான' நபர்களுக்கு அம்மக்கள் வாக்களித்திருந்தால் பலஸ்தீனுக்கு ஐரோப்பிய ஒன்றியத்திலேயே அங்கத்துவமும் கொடுத்திருப்போமோ!!? (கிடைத்திருந்தாலும் ஆச்சரியப்படுதற்கில்லை)மத்திய கிழக்கு முழுவதும் எமது 'வெளிநாட்டுக் கொள்கை' இதுவாகவே இருந்து வந்திருக்கிறது.
ஆப்கானில் ஹமீத் கர்ஸாய்க்கு நாங்கள் ஆதரவளிக்கிறோம். தமது அமைச்சரவையில் போர்வெறியர்களையும் போதைப் பொருள் மன்னர்களையும் அவர் வைத்திருக்கிறார். அது நமது 'ஜனநாயக' கண்களில் படுவதே இல்லை. மறுபக்கம் பயங்கரவாதத்துக்கு எதிரான யுத்தத்தில் நமது படைகள் மேற்கு ஹெல்மந்த் மாகாணத்தில் கொன்று குவிக்கும் அப்பாவி மக்களுக்கு அனுதாபமும் கொள்கிறோம். எகிப்தின் ஹூஸ்னி முபாரக்கை ஏனோ எமக்கு மிகவும்தான் பிடிக்கிறது. கெய்ரோ புறநகர்களில் உள்ள சித்திரவதைக் கூடங்களில் இஹ்வானுல் முஸ்லிமீன் இயக்கத்தினரை அடைத்து வைத்து அவர் நடத்தும் காட்டு தர்பாருக்கு அமெரிக்க ஜனாதிபதியிடமிருந்தே நேரடி அங்கீகாரமும்இ வாழ்த்துக்களும் வந்த வண்ணம் இருக்கின்றன. போதாக்குறைக்கு முபாரக்கின் மூன்று தசாப்தங்களுக்கும் மேலான 'நல்' ஆட்சிக்குப் பின்னரும் அவரது மகன் கமால் வெள்ளை மாளிகையின் ஆசீர்வாதத்தில் அடுத்த வாரிசு ஆகப் போகிறார் என்ற செய்தி வேறு!
பித்தங் கொண்ட லிபியாவின் சர்வாதிகாரி முஹம்மர் அல் கதாபியை போற்றிப் பாராட்டுகிறோம். அவரது ஏவல் ஓநாய்கள் வெளிநாடுகள் கொலைகளில் ஈடுபடுகின்றனர். டோனி ப்ளேயரின் அண்மைய திரிப்போலி விஜயம் முறைப்படி நடைபெற்றது. தனது அணு ஆயுத 'குறிக்கோள்களை' கைவிட்டு நமது 'பயங்கரவாதத்துக்கு எதிரான போரில்' ஒத்துழைக்க ஒப்புதல் வழங்கியமைக்காக நமது வெளியுறவுச் செயலர் ஜெக் ஸ்ட்ரோ கேணல் கடாபியை 'மேதகைமை மிக்க தலைவர்' () என்று பாராட்டி வேறு புல்லரிக்க வைக்கிறார்! ஜோர்தான் மன்னர் அப்துல்லாவின் சட்டவிரோத முடியாட்சியை நாம் விரும்பி ஆமோதிக்கிறோம். வளைகுடாவின் இன்ன பிற அமீர்கள்இ ஷேக்குகளுக்கு நமது ஆயுத உற்பத்திக் கம்பனிகள் அள்ளி வழங்கும் பெருந்தொகைக் 'கொமிஷன்களை' புகழ்பெற்ற நமது 'ஸ்கொட்லன்ட் யார்ட்' துப்பறிந்து கண்டுபிடித்த போது நமது பிரதம மந்திரி பிளேயரிடமிருந்து அவற்றை மூடிமறைக்கும்படி உத்தரவு பறக்கிறது! த இன்டிபென்டன்ட் தரும் மத்திய கிழக்கு செய்தியறிக்கைகளை பார்க்கும் போது நம் பிரதமருக்கு ஏற்படும் அல்ஜியின் யதார்த்தம் என்னவென்று புரிகிறதல்லவா? இந்த வளைகுடா தலைமைகளின் வாரிசுகளான இளவரசர்களும் இளவரசிகளும் ஒக்ஸ்போடிலும் ஹாவார்டிலும் படித்து வெளியேறி ஆட்சிக்கு வரும் பட்சத்திலாவது 'பிரச்சினைக்குரிய' இந்த மத்திய கிழக்கு எளிதாக கைவசப்படுமே என்ற ஆதங்கம் நமக்கு! இல்லையா? இவைதான் மத்திய கிழக்கை நோக்கிய நமது தாராளவாதத்தின் அல்லது கட்டுப்பாட்டின் அளவுகோல்களாக இருந்திருக்கின்றன. நமது சார்பினதும் எதிர்ப்பினதும் உள்ளடக்கம் இவைதான். நிச்சயம் இவையே தான்! இப்போது காஸா பிராந்தியம் ஹமாசிடம் இருக்கிறது. நமது 'தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்கள்' அடுத்து என்ன செய்யப் போகிறார்கள்?
ஆரவாரமான சொல்லடுக்குகளுடனும்இ அதிகாரத் தோரணையிலும்இ ராஜதந்திரத்துடனும் ஐ.நா. சபையில்இ ஐரோப்பிய யூனியனில்இ வாஷிங்டனில்இ மொஸ்கோவில்... இந்த இழிநிலையில் இருக்கும் மக்களுக்கு எதனைத்தான் நாம் தரப் போகிறோம்? பாலஸ்தீனத்தின் (அப்பாசுடைய) மேற்குக்கரைப் பதிப்பை மட்டும் வைத்துக் கொண்டாடப் போகிறோமா? மாற்றாக காஸா பகுதியில் ஹமாசையும் அதற்கு சட்டபூர்வமாக வாக்களித்து ஏற்றுக் கொண்ட மக்களையும் புறக்கணிக்கப் போகிறோமா? அவர்களுக்கு இன்னும் பல இடர்களை வருவிப்பது நமக்கு மிகவும் எளிது. சொல்லப் போனால் நம் வெளிவிவகார அரசியலின் ராஜபாட்டையே அதுதான்! பஷார் சிரியாவின் தலைவராக வந்திருக்காவிட்டால்.. (அவருக்கான மாற்று யார் - எது என்பது அந்த இறைவனுக்கே வெளிச்சம்) கிறுக்குப் பிடித்த அஹ்மத் நஜாதி இரானை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கா விட்டால்.. (அணுவாயுதத்தின் முதலும் முடிவும் உண்மையிலேயே அவருக்கு தெரியாதிருப்பினும்)... நமது கொல்லைப் புறத்திலிருக்கும் பெல்ஜியம்இ லக்ஸம்பேர்க் போன்ற 'ஜனநாயகங்கள்' போல லெபனானும் 'வீட்டு வளர்ப்பு' ஜனநாயகமாக இருந்தால்.. இப்படி பல 'ஆல்' (கை) கள் தாம் நமது அரசியல் அறமாகவும்இ விவேகமாகவும் ஆகி விட்டன.
ஆனால் பாருங்களேன்! தொல்லை பிடித்த இந்த மத்திய கிழக்கு மக்கள் 'தவறானவர்களுக்கே' தொடர்ந்தும் ஆதரவு தருகிறார்களே ஏன்? தவறானவர்களையே விரும்புகிறார்கள் - தவறானவர்களுக்கே தேர்தல்களில் தமது பொன்னான வாக்குகளைப் போட்டுத் தொலைக்கிறார்களே ஏன்? நம்மைப் போன்ற 'நாகரிகமடைந்த' மேற்கத்தேயர்களாக மாற விரும்புகிறார்களில்லையே ஏன்? இப்போது நாம் என்ன செய்யலாம்? காஸா பிரதேசத்தை மீண்டும் இஸ்ரேல் கைப்பற்றுவதற்கு ஆதரவளிக்கலாமா? நிச்சயம் நாம் இஸ்ரேலை அதன் அடாவடித்தனங்களை தன் பாட்டில் விட்டுவிடத்தான் போகிறோம். இஸ்ரேல் என்ன செய்தாலும் நமது இறுகிய மௌனம் கலையப் போவதில்லை தானே? தொடர்ந்தும் வளைகுடாவின் அமீர்கள் - ஷேக்குகள் - குறுநில மன்னர்களுக்குஇ அவர்களின் 'நல்லாட்சிக்கு' நம் பரிபூரண ஆதரவை வழங்கிக் கொண்டே இருப்போம். எது வரை? இப்பிராந்தியம் முழுவதும் அநீதியினதும் கொடுங்கோன்மையினதும் முழு மொத்த உருவமாக மாறியெழும் கொடுந் தீ பற்றி அது நம் முகத்திலும் வந்து விழும் வரை! அப்போதும் நாம் சொல்வோம்! இப்போது வெந்து புலம்பும் ஈராக்கியர்களுக்கு நாம் சொல்வது போல 'அன்பர்களே இன்னும் நீங்கள் எமது அன்புக்கும் அர்ப்பணிப்புக்கும் உரித்தானவர்களாக மாறவில்லை' சட்டபூர்வமாக ஜனநாயக விழுமியங்களின்படி மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஹமாஸ் அரசாங்கத்துக்கு எதிரான இந்த ஒட்டு மொத்த சதிப் புரட்சியை எப்படிக் கையாளப் போகிறோம். நம் அனைவரினதும் மனசாட்சியை நோக்கி விடுக்கப்படும் வினா இது!

No comments:

Six C's of Character - Yasir Fazaga