அருளாளன் அன்பாளன் அல்லாஹ்வின் திருப்பெயரால்..
“முஸ்லீம் பெண்களுக்கு” ஒரு கிறிஸ்தவ சகோதரியின் எச்சரிக்கை
இன்றைய உலகில் பெண்கள் அரைகுறை ஆடைகளை அணிவதும் ஆண் பெண் வித்தியாசமில்லாமல் நெருங்கிப் பழகுவதும் தான் பெண்கள் சுதந்திரம் என்று ஓலமிட்டு வருகின்றனர்.
இதற்கு அவர்கள் முன் மாதிரியாக எடுத்திருப்பது மேற்குலகப் பெண்களைத்தான். ஒரு சில முஸ்லிம் பெண்களும் இதற்கு அடிமையாகி வருவது தான் வருந்தத்தக்க விஷயம்.
இந்நிலையில் முஸ்லிம் பெண்களுக்காக கிறிஸ்தவ சகோதரி (ஃபெமினென்சா பெண்கள் இயக்கத்தின் துணை நிறுவனர் ஜோனா ஃபிரான்சிஸ் (துழுNNயு குசுயுNஊநுளு) அவர்களின் கடிதம்).
இஸ்ராயீலின் தாக்குதலுக்கும் ய+தர்களின் தீவிரவாத்திற்கும் எதிரான போருக்கு இடையிலும் முஸ்லிம் உலகம் ஒவ்வொரு அமெரிக்கக் குடும்பத்தின் கவனத்தையும் ஈர்ப்பதாக உள்ளது. நான் பார்க்கும் முஸ்லிம் பெண்களில் ஒன்றோ அல்லது பல குழந்தைகளையோ பெற்றிருப்பவர்களுக்கு என்னால் உதவி செய்ய முடியவில்லை.
முஸ்லிம் பெண்கள் கண்ணியமாக ஆடை அணிந்தும் அவர்களின் அழகு பளிச்சிடுவதை என்னால் காண முடிகிறது. நான் கண்டது அவர்களின் வெளி அழகை மட்டுமல்ல..! எனக்கு பொறாமையாக இருக்கிறது. உங்களின் வீரத்தையும் அழகையும் பணிவையும் இவற்றிற்கும் மேலாக உங்களின் மகிழ்ச்சியையும் ரசித்த என்னால் உங்களுக்கு உதவி செய்ய முடியவில்லை.
ஆம்.. அது வியக்கத்தக்கது தான், தொடர் தாக்குதலுக்கு ஆளாகியும் நீங்கள் எங்களை விட சந்தோஷமாக வாழ்வதை பார்க்;கும் போது எனக்கு வியப்பாகத்தான் உள்ளது. ஏனெனில் முஸ்லிம் பெண்கள் இன்றும் இயற்கையின் இயல்புக்கு உட்பட்ட பெண்களின் வாழ்க்கை (அமைப்பில் வாழ்ந்து வருகின்றீர்கள். ஆரம்ப காலத்தில் பெண்கள் வாழ்ந்த முறையில் வாழ்வது தான் உங்கள் மகிழ்ச்சிக்குக்குக் காரணம்).
1960 களில் மேற்குலக பெண்களும் இது போன்றதொரு வாழ்வைத்தான் வாழ்ந்தார்கள். இதே எதிரியின் கைகளால் தான் நாங்களும் தாக்கப்பட்டோம். ராணுவப்படையால் அல்ல! மாறாக கொடூர வித்தைகளாலும் ஒழுக்கச் சீர்கேட்டின் மூலமாகவும் நாங்கள் தாக்கபட்டோம். விமான ஏவுகணைகளையும் பீரங்கிகளையும கொண்டு தாக்குவதற்கு பதில், அமெரிக்கர்கள் எங்களை ஹாலிவுட் மூலம் தாக்கினார்கள். உங்கள் நாட்டை தரை மட்டமாக்கிய பிறகு உங்கள் சகோதரிகளையும அவர்கள் இதே முறையில் (ஹாலிவுட்) தாக்குவார்கள். அந்த நிலையை முஸ்லிம் பெண்கள் அடைவதை என்னால் சகித்துக் கொள்ள முடியாது. பின்பு நீங்கள் எங்களைப் போலவே அவமானத்திற்கு உள்ளாக்கப்படுவீர்கள்.
நீங்கள் ஹாலிவுட்டில் பார்க்கும் அனைத்தும் பொய் சித்தாந்தங்களும் நடை முறைக்கு புறம்பான கலாச்சாரங்களும் தான்!. அவர்கள் உடலுறவையும் காமத்தையும் தொலைக்காட்சிகளில் பரவலாகக் காட்டுவதன் மூலம் சமூகத்தில் அவர்களின் சதிகளை தீய சதிகளாய் நுழைக்க திட்டம் தீட்டுகிறார்கள். இவர்களின் இந்த ஹாலிவுட் எனும் விஷத்தை குடித்து விடாதீர்கள். பின்பு அதனை குணப்படுத்துவது சாதாரண விஷயம் அல்ல.
அந்த விஷத்தை தீமையை விட்டு விலக நினைத்தாலும் அது முழுமையாக உங்களை விட்டு நீங்காது. அதனால், இந்த தீமையை அமெரிக்க கலாச்சாரத்தை முழுமையாக புறந்தள்ளுவதே அறிவுடைமையாகும்.
அமெரிக்கர்களிள் இசையும் தீமைகளை தூண்டக்கூடிய திரைப்படங்களும் முஸ்லிம் பெண்களை இச்சைகளுக்கு ஆட்படுத்த முயற்சிக்கிறது. இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவெனில் இது போன்ற திரைப்படங்களில் நாங்கள் (அமெரிக்க பெண்கள்) விபச்சாரிகளைப் போல் உடை அணிவதையும் குடும்பத்தை விட்டு விலகி சந்தோஷமும் திருப்தியும் அடைவதாக சித்தரிக்கின்றனர்.
முஸ்லிம் சகோதரிகளே..! என்னை நம்புங்கள் நிச்சயமாக நாங்கள் எங்களின் இந்த வாழ்க்கையைப் பற்றி ஒரு போதும் சந்தோஷம் அடைந்தது கிடையாது. அமெரிக்கப் பெண்களில் பெரும்பாலானவர்கள் தாங்கள் செய்யும் வேலையை வெறுப்பவர்களும் காதல் எனும் பெயரால் கற்பை இழந்து சீரழிந்து நாசமாக்கி விடப்பட்டவர்களுமே அதிகம்.
அமெரிக்கர்களின் திரைப்படங்கள் குடும்பத்தை வெறுப்பது குழந்தை பெற்றுக்கொள்வதை கட்டுப்டுத்துவதையுமே நாகரீகமாக பிரச்சாரம் செய்கின்றது. இதன் மூலம் திருமண வாழ்க்கையை அடிமைத்தனமாகவும் தாய்மையை சாபமாகவும் ஒழுக்கமாக தூய வாழ்க்கையை வாழ்வதை பிற் போக்குத்தனம் என்று பெண்களுக்கு உபதேசம் செய்யப்படுகின்றது.
முஸ்லிம் பெண்களை கேவலமாக பாதைக்கு இட்டுச்செல்வதும் உங்களுடைய நம்பிக்கைளை தகர்க்க செய்வதுமே அவர்களின் நோக்கம்.
மேற்கத்திய ஆடைகள், ஒரு பெண்ணின் அழகு என்பதே அவளின் கவர்ச்சி மட்டும் தான் என்று நம்ப வைக்கின்றன. ஆனால் முஸ்லிம் பெண்களுடைய கலாச்சார ஆடைகளும் அவர்களுடைய பர்தாக்களும் மேற்கத்திய ஆடைகளைவிட அழகானவை. ஏனெனில், முஸ்லிம் பெண்களுடைய பாரம்பரிய ஆடைகள் அவர்களின் நம்பிக்கையையும் சுய மரியாதையையும் பாதுகாப்பதாக உள்ளது.பெண்களின் கவர்ச்சியும் அழகும் எப்போதும் தீய பார்வைகளில் இருந்து பாதுகாக்கப்பட வேண்டும். ஏனென்றால் அந்த அழகு அவளை திருமணம் செய்யும் ஆணுக்கு மட்டுமே உரியது. முஸ்லிம் பெண்களின் உயர்ந்த பொக்கிஷம் உங்களின் அழகும் தீமைகளைப் பற்றிய அறியாமைத்தனமும் தான்.
ஆனால் சில முஸ்லிம் பெண்கள் இஸ்லாமிய கலாச்சார எல்லையைத் தாண்டி மேற்கத்தியச் காலச்சாரத்தை பின்பற்ற விரும்புகின்றனர். பர்தா அணியும் விஷயத்தில் கூட அவர்கள் தங்களது தலை முடியை வெளியே தெரியும் விதத்தில் அலங்கரிக்கின்றார்கள்.
ஏன் நீங்கள் உங்களின் மரியாதையை விட்டுக் கொடு;த்து மேற்கத்திய பெண்களின் கலாச்சாரத்தின் பக்கம் தாவுகின்றீர்கள்? நாங்களே (மேற்கத்திய பெண்கள்) எங்களின் சீரழிந்த கலாச்சாரத்தை எண்ணி வருந்தும் நிலையில் முஸ்லிம் பெண்களுக்கு இந்த மேற்கத்திய அசிங்கத்தின் மீது ஆசை ஏன்? உங்களின் சுய மரியாதையை நீங்கள் தொலைத்து விட்டால் அதை ஈடு செய்ய முடியாதே! முஸ்லிம் பெண்கள் குறையில்லாத வைரங்கள் அல்லவா!
ஒரு பெண்ணின் மனதினை ஒரு பெண்ணால் மட்டுமே உணர முடியும். நாம் எல்லோரும் ஒரே பெண் சமுதாயம் தான்! நமது கோத்திரமோ, நமது மார்க்கமோ அல்லது நமது தேசமும் அந்த நிஜத்தை மாற்ற முடியாது. எல்லா நாட்டிலும் பெண்களின் மனது ஒரே தரம் தான்!
நம்முடைய இயற்கை குணம்; குடும்பத்தை வளர்ப்பதும் நாம் விரும்பும் நமது கணவர்மார்களுக்கு சந்தோஷத்தையும் தைரியத்தையும் கொடுப்பது தான்.
ஆனால் எங்களுக்கு நல்ல உத்தியோகமும் சொந்த வீட்டில் தனிக்குடித்தனமும்; நடத்துவது எங்களின் உள்ளத்தையும் உடலையும் எப்போது வேண்டுமானாலும் எந்த ஆணுக்கும் கொடுப்பது தான் சந்தோஷம் என்று அமெரிக்க பெண்கள் எண்ணிக் கொண்டிருக்கின்றார்கள். ஆனால் இது சுதந்திரம் அல்ல! இது காதலும் அல்ல!
பாதுகாப்பான திருமணத்தில் தான் ஒரு பெண்ணின் உடலும் மனமும் பாதுகாப்பாக இருக்கும். மற்ற அசிங்கமான விஷயங்களுக்கு உங்களை ஆட்படுத்திக் கொள்ளாதீர்கள். அது உங்கள் வாழ்க்கையை சீரழித்து விடும். கடைசியில் உங்களை “அன்பு – பாசம்” என்ற பெயரால் ருசித்த அவனும் விட்டு விடுவான்.
முஸ்லிம் பெண்கள் அனைவரும் அடிமைகள் என்று மேற்கத்திய பெண்களான எங்களுக்கு கற்றுக் கொடுக்கப்படுகிறது. ஆனால் உண்மையில் நாங்கள் தான் எங்களை சிறுமைப்படுத்தும் கலாச்சாரத்துக்கு அடிமைகளாகி விட்டோம். நாங்கள் ஏமாற்றப்பட்டு விட்டோம் என்பது எங்களுக்கு தெரியும்.
நாங்கள் வெளிப்படையாக ஒப்புக்கொள்ளாவிட்டாலும் முஸ்லிம் பெண்களின் கலாச்சாரத்தை ரகசியமாக ரசிக்கிறோம். பொறாமைப்படுத்துகின்றோம். எங்களின் வாழ்க்கை முறையை பார்த்து நாங்கள் விரும்பிய வாழ்க்கையையே வாழ்கின்றோம் என்று நீங்கள் தீர்மானித்து விடாதீர்கள். நாங்கள் இது போன்று வாழ்வது எங்களின் தவறு அல்ல.
எங்களில் பெரும்பாலானவர்கள் பாதுகாப்பாக பராமரிக்கும் தந்தையைக்கூட பெற்றிருந்தது கிடையாது.
எங்களின் குடும்பம் மேற்கத்திய கலாச்சாரத்தில் நாசமாக்கபட்ட நிலையில் உங்களை நான் கேட்டுக்கொள்கிறேன். சகோதரிகளே ஏமாந்து விடாதீர்கள். உங்களையும் நாசமாக்க அவர்களுக்கு வாய்ப்பை உண்டாக்காதீர்கள். உங்களின் கலாச்சாரத்தை விடுத்து பிறவற்றில் மோகம் கொள்ளாதீர்கள்.
தீமையைப் பற்றிய அறியாமையும் சுத்தமும் தான் பெண்களின் அழகு. கிறிஸ்துவப் பெண்களான நாங்கள் எங்கள் வாழ்க்கை எவ்வாறு அமைய வேண்டும் என்பதை இனி மேல் தான் தீர்மானிக்க வேண்டும். எங்களுக்கு முன் மாதிரியாக நீங்கள் வாழ வேண்டும் என்று விரும்புகின்றேன். ஏனெனில் நாங்கள் வாழ்க்கையை தொலைத்த பெண்கள்.
மனதில் நிலை நிறுத்துங்கள் ஒரு முறை பற்பசையை (Tooth Paste) வெளியே எடுத்து விட்டால் அதை மறுபடியும் அதனுள் செலுத்த முடியாது. அதனால் உங்கள் பற்பசையை பாதுகாப்பாக வையுங்கள். நான் சொன்னது உங்களுக்கு புரிந்திருக்கும் என்று நம்புகிறேன்.
பாசத்துடன் உங்கள்கிறிஸ்துவ சகோதரி ஜோன்னா ஃபிரான்சிஸ் துணை இயக்குனர். பெமினென்சா, Tennesse, USA. தமிழில் : தைசீர்
நன்றி : விடியல் வெள்ளி, பார்க்க 8 மற்றும் 9 பக்கம் ஜீன் 2007 மாத இதழ்