தென்காசி தமுமுக தலைவரை வெட்டிய வழக்கு
இந்து முன்னணியினர் 3 பேர் மீதான தேசிய பாதுகாப்புச் சட்டம் ரத்து
மதுரை, ஜூலை 8-தென்காசியில் கொலை முயற்சி வழக்கில் கைதான இந்து முன்னணியினர் 3 பேரை தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் காவலில் வைக்க கலெக் டர் பிறப்பித்த உத்தரவை மதுரை ஐகோர்ட் கிளை ரத்து செய்தது.தென்காசியில் ஆம்புலன்ஸ் சேவை நடத்துவது தொடர்பாக தமுமுக, இந்து முன்னணி அமைப்பினரிடையே மோதல் இருந்து வந்தது. பள்ளிவாசல் கட்டடம் கட்டுவது குறித்த பிரச்னையில் தென்காசிநகரஇந்து முன் னணி தலைவர் குமார் பாண்டியன் கடந்த டிசம் பர் மாதம் கொலை செய்யப்பட்டார். இக்கொலைக்கு பழி வாங்கும் வகையில் நெல்லை மாவட்ட த.மு.மு.க. தலை வர் மைதீன்சேட்கானை அரிவாளால் வெட்டிக் கொலை செய்ய முயன்றனர்.இச்சம்பவம் தொடர் பாக இந்து முன்னணி யைச் சேர்ந்த கபிலன் (40), சுரேந்திரன் (20), செந்தில்குமார் (29) ஆகி யோரை தென்காசி போலீ சார் கைது செய்தனர். இவர்களை தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் சிறையிலடைக்க நெல்லை கலெக்டர் கடந்த மார்ச் மாதம் 21ம் தேதி உத்தரவிட்டார்.இதை ரத்து செய்யக் கோரி ஐகோர்ட் மதுரைக் கிளையில் 3பேரும் மனு தாக்கல் செய்தனர். நீதிபதிகள் முருகேசன், சுதந்திரம் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன் இந்த மனு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் ஆஜ ரான வக்கீல் கதிர்வேல், ‘‘கருணை மனு உரிய காலத்தில் பரிசீலிக்கப்படவில்லை. இவர்களை தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் காவலில் வைக்க எந்த முகாந்திரமும் இல்லை. குற்றச்சாட்டுகள் குறித்து கலெக் டர் சரிவர கவனம் செலுத்தவில்லை. எனவே இவர் களை தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் காவலில் வைக்கும் கலெக்டர் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என வாதிட் டார். இதை ஏற்ற நீதிபதிகள், நெல்லை கலெக்டரின் உத்தரவை ரத்து செய்தனர்.
No comments:
Post a Comment