Search This Blog

Monday, July 09, 2007

மேலப்பாளையத்தில் முஸ்லிம்கள் உரிமை மீட்பு மாநாடு

மேலப்பாளையத்தில் முஸ்லிம்கள் உரிமை மீட்பு மாநாடு
சச்சார் கமிட்டி அறிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தல்
நெல்லை, ஜூலை 8-மேலப்பாளையத்தில் முஸ்லிம் உரிமைமீட்பு மாநாடு நேற்று தொடங்கி யது.இன்று 2-வது நாள் மாநாடு துவங்கியது.நெல்லை மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், நெல்லை, தூத்துக்குடி மாவட்ட முத்தவல்லிகள் சங்கம் ஆகியவை சார்பில் முஸ்லிம்கள் உரிமை மீட்பு மாநாடு மேலப்பாளைம் ஜின்னா திடலில் நேற்று தொடங்கியது. தாசிம்பீவி மகளிர் கல்லூரி தாளாளர் ரகமத்நிசா ரகுமான் தலைமை வகித்தார். காயல்பட்டணம் பேரூராட்சி முன்னாள் சேர்மன் நாச்சியார் தம்பி, கவுன்சிலர்கள் ரகமத்நிசா அப்துர் ரகுமான், சைபுன்னிசா, மீரான், ஜமீலா, சஹர்பானு ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலப்பாளையம் முஸ்லிம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பரக்கத் உம்மா வரவேற்றார். பள்ளப்பட்டி உஸ்வத்துன் ஹஸனா ஓரியண்டல் பள்ளி முதல்வர் பாத்திமாபீவி, கிரசண்ட் பெண்கள் கல்வி நிறுவன தாளாளர் ஷரிபாஅஜீஸ், தாசிம்பீவி மகளிர் கல்லூரி முதல்வர் சித்தி சுமையா ஆகியோர் நீதிபதி சச்சார் கமிட்டி அறிக்கையை நிறைவேற்ற வேண்டும் என்று பேசினர். மாநாட்டில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர். பேராசிரியர் ஆயிஷா ரகுமான் நன்றி கூறினார். இன்று காலை 10 மணியளவில் 2-வது நாள் மாநாடு துவங்கியது.

No comments:

Six C's of Character - Yasir Fazaga